*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, March 07, 2015

நிலவுக்கொரு வாழ்த்து...

அழகாய்
என் நிலவு
கடலாடி
மீண்டும் புதிதாய்
பிறக்கிறது இன்று.

பெருமதிப்பிற்குரிய
கடவுளே
என் தேவதைக்கு
என் சுட்டுவிரல்
வாழ்த்துகள்
செல்ல வேண்டுகிறேன்.ஒளி அளவு
உயர்கிறது ஒன்பதாய்.

வாழ்வை
சுகமாய்
மகிழ்ச்சியாய்
எதிர்கொள் செல்லப்பூவே.

பிடித்த மணிக்கூடு
வடிவான சப்பாத்து
உன் அறைச் சித்திரங்கள்
தோள் தேடும் பொம்மைகள்
கடந்த நிமிடங்கள்
கடக்கும் நிமிடங்கள்
உன் அதிகாலைச் சேட்டைக்காய்
காத்திருக்கும்
பிறந்தநாள் பாடலோடு.

காவல் கோடுகள் தாண்டி
கைகளில்லாக் கடவுளிடம்
உனக்கான முத்தத்தையும்
சின்னப் புன்னகையும்
அனுப்பி வைக்கிறேன்
வாங்கிக்கொள்
என் சின்னவளே.

மிடுக்கற்ற
கர்வமற்ற
திமிரற்ற
அன்பான
எள்ளுப்பூவாய் சிரித்திரு
தமிழாய் நிலைத்திரு
ஆழப் புதைந்து
செழித்து வளர் தாயே!!!

4 comments:

ராமலக்ஷ்மி said...

அழகு நிலா. எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளும்!

துபாய் ராஜா said...

சுட்டி நிலாவிற்கு வாழ்த்துக்கள்...

புதியவன் said...

வளர்பிறையென வளர
நிலாவிற்கு
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்...

ஹேமா said...

மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் சொல்கிறாள் நிலா...

முத்தக்கா...

ராஜா...

புதியவன்...

Post a Comment