*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 29, 2014

'கண்ணா'மூச்சி ஏனடா...

நீ...
என்பது பொய்யாகி
இருளிலும் என்னோடிருக்கும்
நிழல்போல.

கருமுகில் கசியும்
ஈரம் விரட்ட
பொத்திய அன்பின்
பௌத்திரப் பொதியில்
கதகதக்கும்
உன் பெயரிலொரு
கருப்பு டெடிபியர்.

பாட்டுப் பாரதி
கண்ணம்மாவின் காதல்
மீராவின் வீணை
சாம்ராஜ்ய கருப்பு ராஜாக்களின்
சரித்திர முத்தங்களை
உருக்கி உருவேற்றி
கொலுசாக்கி
நமக்காய்
சிணுங்கும் கனவுக்குள்
புகுத்திக்கொள்ளேன் பூக்கருப்பா.

நிலையில்லா ஆணவம்
அதிகாரம்
கர்வம்
திமிர்
ஆதியிருப்புச் சடங்குகள்
இனி எதுக்கு?

ஒட்டகக் கொம்பாய்
கனவுயரங்களின் லாவகம்.

ஏறு ஏறு
அம்பாரியில் ஏறு
நானே கிரீடமாக
நீயே முத்தங்களாகு
கரியின் கருநிறத்தில்.

கருக்கொண்ட தீ உறையும்
மீண்டும் அத்தீக்குள்ளேயே!!!

குழந்தைநிலா(ஹேமா)

1 comment:

விச்சு said...

கருப்பு கண்ணழகனோ..! ஆமா.! பொண்ணோட கை மட்டும் ரொம்பவும் வெள்ளையா இருக்கு. நிழல்போல் தொடரட்டும் அவனும் அவனது காதலும். கவிதை அருமை.வாழ்த்துக்கள்..

Post a Comment