*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 02, 2014

சங்கமம்...

பிரளய அலறலை அடக்கி
உயர்த்தி
வாசித்துக்கொண்டிருக்கிறது
அடைமழை.

முழுதாய்ச் சங்கமித்து...

பறை கொட்டி
ஆண்டாளாய்க் கண்ணனை
உள்ளூர நிரப்ப....

கனவோடு
இதழால் இதழுறிஞ்சி
மணிச்சிகைக் கொடியாய்
துவள...

கொதித்து வியர்த்து
தவிக்கும் உடலுக்கு
மயிற்பீலி வருடி...

அங்கங்கே
சிறு சிறு துளி தூவி
அந்தரக் கனவுறை போர்த்தி
சறுக்கிக் கடக்கும்
ஈர ராப்பூச்சி
பெருமலைக் காட்டில்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

தனிமரம் said...

பறை கொட்டி
ஆண்டாளாய்க் கண்ணனை
உள்ளூர நிரப்ப....// அருமையான உவமை.

விச்சு said...

கனவோடு
இதழால் இதழுறிஞ்சி...
கொதித்து வியர்த்து
தவிக்கும் உடலுக்கு
மயிற்பீலி வருடி... ச்சே..ச்சே.. அது என்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை..இந்த மாதிரி வரிகள்தான் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தோணுது.

msuzhi said...

பிரமாதம்.

Post a Comment