*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, October 19, 2014

கண்ணா...

குழல் துவாரங்களில்
கண்ணீர் நிரப்பியபின்னும்
மொழி கலைந்து
உமிழ் நீருடன் சமித்த பின்னும்
இளைத்த உடல் களைத்த பின்னும்
இடைமெலிந்து
ஊண் மறந்து நோன்பிருந்த பின்னும்
புகட்டுவாய் பாலெனக் காதல்
பரிந்துண்பாய் இதழ் முத்தமென
காத்திருந்த பின்னும்
கண்ணா....
செய்யா தயவிது ஏன்
தாயுமானவனே
இதுவோ பேரன்பு ?!

படம் - தோழி பூங்கோதை செல்வன் 

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

3 comments:

தனிமரம் said...

கேள்வியை தொக்கி நிக்கும் கவிதை அருமை.

தனிமரம் said...

ஓவியம் காதல் போதையை சொல்லியிருக்கு போல.

ரிஷபன் said...

இதுவோ பேரன்பு ?!

இல்லை.. இல்லை.. !

Post a Comment