*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, June 07, 2014

ஆதார உதடுகள்...

ஆதாரங்களின்றி
அழுதுகொண்டிருந்தன
சில எலும்புக்கூடுகள்
சில பூச்சிகளும் புழுக்களும்
போனால் போகட்டுமென
கொடுத்த பாதுகாப்போடு...

விதிகளைப் புரட்டிப்போட்டு
விதைத்துக்கொண்டிருக்கிறது
காலம்
ஒரு புழுவின் முதுகில்
சில குறிப்புக்களை
ஏற்றியபடி...

நிர்ப்பந்தங்கள் ஒன்றும் புதிதல்ல
அந்த எலும்புகூட்டுக்கு
ஆசைகள் களைந்த
மஞ்சள் காக்கைகள்
கரையுமிடத்தில்தானே
கரைந்தது இந்த உயிர்
அப்போ
ரகசிய அறைகளில்
பிரார்த்தனைகளும்.

அனிச்சையாய்
உதிர்ந்து கொட்டியது
புனித இரத்தம்
ஒவ்வொரு அலறலின்
இறுதியிலும்...

வாழ்வு அடங்கும்போது
உயிர்
சில இறுதிக் குறிப்புக்களை
இடத்திற்கிடம் செருகும்
அது உதட்டிலும்கூட...

இப்போதும் தேடும்
எலும்புக்கூடுகள்
ஆதார உதடுகளை
காணாத பெருங்கவலை
அவைகளுக்கு !!!

http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6208

ஹேமா(சுவிஸ்)

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இன்றை நிலை இதுதான் அருமையாகசொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

மீட்டு,மீட்டு.....................பெருமூச்சு ஒன்றே மிச்சம்!

Post a Comment