*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, June 03, 2014

நெய்தலும் நிலாக்காலமும்...


வாளெடுத்த வேந்தன் கையில்
மலைசரித்த மாவீரன் மார்பில்
கடலும் திணறும்
மூச்சு வெப்பத்துள்
தனம் அழுந்த
விழிவேர்க்க
சுனையாக் கரும்பாகி....

வேர்ப்பலாக்கொடியிடையென
விரல் விலக்கி
வேர்க்கும் விழியில்
விழிசெருகி
பனையோலைக்கை வளைத்து
தொன்னையாக்கி
தானே ’கள்’ளென்னும்
கோ கள்வன்...

தங்க வட்டிலில்
தேனும் தினையும்
கறியும் கூழுமாய்
குழைத்தவன் கையில்
வாழையிலையென
வளையுமென் தேகம்....

சிம்மாசனச் சிங்கம்
கிளியாகி
கௌவிய சொண்டு கடித்து
நானா இல்லை நீயாவென
வம்பிழுத்து
சன்னதமாடிக் களைத்து
பின்
ஓடத்தில்
நானும் கூட...

யானை காதில் மந்திரமோதி
சிறையிட்ட நிறைகோலன்
மஞ்சன அறை தாழிட்டு
தாவடமறுத்த வெற்றுமேனியன்
தானே கைதியாகி...

தாவணிக்கும்
வாசனையுண்டோவென
வெள்ளந்தியாய் வினவி
விடியாக் கட்டளையிட்டு
இரவடைத்து
விளக்கில்
கொடியேற்றுவிழா...

அற்புத இரவு விடிகையில்
கொடியே போர்வையாகி...!!!

(தாவடம் + உருத்திராட்ச மாலை )

ஹேமா(சுவிஸ்)

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதை புனைந்த விதம் சிறப்பு.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான உவமைகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

வழக்கம் போல சுவையான கவிதை வாழ்த்துக்கள்...!

Unknown said...

நன்று!

Post a Comment