*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 11, 2013

யுகம் மாறாதவர்கள்...


அடித்துடைக்கும்
ஏழையின் தகரவீடென
வார்த்தைச் சிதறல்களைப் பொறுக்கி
சமாதான முயற்சியில்
வீட்டெறும்புகள்.

இறுக்கிக் கட்டும்
வார்த்தைகளை முறித்து
நொருக்கி
மிதக்கும் தக்கைக்கு
காரணம் தெரிந்தும்
விளக்கவியலா ஆணதிகாரம்
'மிதக்கிறது
அவ்வளவேதானென' அறிவிக்கும்.
அகங்கார கர்வம்.

இருள் கிழித்தெரிக்கும்
அக்கினியை
நிமிடங்களில் கையேந்தி
தட்டிலும் கட்டிலிலும்
தன்னை நிரப்பி
தடம் மாறி
சுயம் கடக்கும் பெண்மை
பார்வையிருந்தும்
பார்வையற்றவனைக்
கடக்கும் பாவனையில்.

யூகத்தில் கடக்கும்
ஆயிரம் ரகசியக் கேள்விகளை
"எல்லாம் என் விருப்பம்
வாதமிடாதே
சொல்வதைக் கேள்"
எதிர்க்கேள்விகள் இல்லா
பிரேதப்பெட்டியின் மூடியென
அடங்கும் பதில்களற்று.

கைகுலுக்கும் வெள்ளைச் சமூகத்தில்
படிப்பும் பொருளாதாரமும்
நிறைத்தாலும்
மனமென்னவோ
பெண்ணுக்கு ஆணியறையும்
ஆணாதிக்க சமுதாயத்தில்
ஆனாலும்....
உணர்வுகளை மதிக்கும்
மனிதராய்.

இயலாமையை
ஏங்கும் அன்பை
நசித்து புசிக்கும் பசியோடு
ஒரு வாழ்க்கைப் புரிதல்.

அன்றிலிருந்து இன்றுவரை
ஆதிக்க வர்க்கம்
இப்படியாகத்தான்
புதிரறுக்கும் சொற்களை
அவிழ்க்கும் அவளிடம்
சட்டென்று பறித்திழுக்கும்
உரிமையை .

பிரியங்கள்
வன்மையின் காயங்களைச் சரிசெய்யும்
நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும்
நிலைமை அதுவேதான்.

சொற்பமாவது பேசவிடுங்களேன்
புரிதலின் காற்று உள்வரட்டும்....!!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

ராஜி said...

சொற்பமாவது பேசவிடுங்களேன்
புரிதலின் காற்று உள்வரட்டும்....!!
>>
ரொம்ப பேசுறமேன்னுதான் நம்மை பேசவே விட மாட்டேங்குறாங்க!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள்...

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யுகங்கள் தாண்டியும் மாறாதவைகள்...

அழகிய கவிதை... ஏக்கத்தை சுமந்துக்கொண்டு...

Seeni said...

unmai...!

மகேந்திரன் said...

ஊறிவரும் உணர்வுகளை
நெம்புகோல் கொண்டு
உந்திவிட வேண்டுமே அல்லாது...
மதகிட்டு தடைசெய்தல்
ஞாயமோ??
என்று உரைத்து நிற்கும்
சொற்பொருள் கவிதை.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

Post a Comment