*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 09, 2013

நிழல் சுருவம்...


சுருவங்களால்
ஆன வீடொன்று 
அடிக்கடி கனவில்
பச்சையம் தின்று 
காற்றைக் குடித்தவளிடம் 
ஏது இப்படியொரு வீடு
மீசை வைத்த 
ஒரு புள்ளி நகர்ந்து
பாரமாக்குகிறது நிகழ்வை.

சருகாகி வீழும்
இலையொன்றை 
ஏந்திப்பிடித்த அப்புள்ளி
தனக்கான 
கூரையின் இறப்பில்
செருகியும் கொள்கிறது
நான் பச்சையம் தின்று 
செத்த இலையாகவும் 
இருக்கலாம் அது.

உடைந்த நிலா 
நகரும்  வேளையில்
நம் உடல்கள் 
மெல்ல முளைக்க 
வெளிச்சத்தில்....
சவரக் கத்தி கண்டு 
கனகாலாமான ஒரு முகமும் 
தவளைகளை ஞாபகப்படுத்தும்
பச்சையம் தின்ற என் தோல்களும்.

புதிது புதிதான வாசனைகள் பரவ 
அனிச்சையான தொடுதல்கள்கூட 
அந்தரமாய்.....ஆசுவாசமாய்
நிச்சயமில்லா உறுதிகளைத் தர
இடைவெளிகளை 
பெருமூச்சால் நிரப்பி 
விலகிக்கொண்டிருந்தேன் 
தவளைத்தோல் செந்நிறமாக
சுருவங்களாலான வீடு 
அவனுடையதாகவுமிருக்கலாம்!!!


இறப்பு - வீட்டுக்கூரையின் கீழ்ப்பகுதி.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6096

ஹேமா(சுவிஸ்)

5 comments:

Anonymous said...

அர்த்தம் புரியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை…

வாழ்த்துக்கள் சகோதரி…

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை சகோதரி...
வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

குறீயீடுகள் அவலத்தைச் சொல்லுகின்றது!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி ஹேமா..
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வலைப்பக்கம் வருகை.
உங்கள் சொல்லாடல்களை படிப்பதே ஒரு தனி சுகம்.
நிழல்சுருவம் என் நெஞ்சிலும்
சுருவமிட்டு குடிலாகிப் போனது...

Post a Comment