*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, April 07, 2013

காதல் துளிகள் (6)

காதல்....
இரவுகளைக் குழைக்க
உன்னால் மட்டும்தான்
சாத்தியமோ
ஏன்.......
என் இரவுகளையும்
சேர்த்தெடுத்துக் குழைத்துப்
பூசியிருக்கிறாய்
கருப்பா...!

உன்னைச் சுற்றும்
வண்ணத்துப்பூச்சி நான்
வானவில்லின்
பல நிறம் கொண்டவனே
என் நிறமறியாமல்
நீலத்தை வெள்ளையென்றும்
சிவப்பை இளமஞ்சளென்றும்
சொல்லி
கடைசியில்
கலவையில் குழம்பிய
நீ.....
அன்பு
கருப்பாய் இருப்பதாய்
கிறுக்க
நிறமற்றுக்கொண்டிருக்கிறது
என் இறக்கைகள் சுனாமியில் !

ஒரு உண்மை
சொல்ல'வா'...
உன் நினைவு
கண்ணை மறைக்க
சுட்டுக்கொண்டேன்
விரலில்
சுடவில்லை.....
உன் சொற்களைவிட
விரலும்
நானும்
உன்...
ஒற்றைச்சொல்லுக்காக
எரிந்தபடி !

ஒரு முறைக்கு மட்டுமே
ஏங்கும் மனம்
அதன்பின்
இன்னும் இன்னும்
எனத்
தணியாத தாகமாய்
தவிக்க வைக்கிறதே
உன் குரல்
ஞாபகத்தை அதிகமாக்கி
உரசிப்போகிறது
நீ....
முணுமுணுக்கும் பாடல்கள் !

மரமுதிர்த்த
மஞ்சள்
வீதி முழுதும்
உன் நினைவுகள்.

உன்னால்...
என் செல்லப் பெயர் எழுதிய
சருகொன்றைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...மரமுதிர்த்த
மஞ்சள்
வீதி முழுதும்
உன் நினைவுகள்.//

வழக்கம் போல அருமையான கவிதை....வாழ்த்துக்கள்...!

பால கணேஷ் said...

காதல் தென்றலாய் என்னை உரசிச் சென்றது! ரசனையான வார்த்தைகள் கொண்ட கவிதைகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

வலிகள் துலைந்து காதல்
வளம் பெற வேண்டும்
இருளைக் கடந்து வாழ்வில்
இன்பம் சேர வேண்டும் !
வாழ்த்துக்கள் தோழி இன்பக்
கவிதைகள் மட்டும் இனி இங்கே தவழ......

Post a Comment