*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, January 17, 2012

உலரும் பருக்கைகள்...

கத்திரிவெயிலிலும்
சிரிக்க மறப்பதில்லை
பொய்க்காத பூக்கள்
மாறாத வண்ணங்களோடு.

ஒற்றை விடயம்
மாறுபட்ட பதில்கள்
ஒருவருக்கொருவராய்
மாறித் தெறிக்கும்
அடர் வார்த்தைகள்.

பிதிர்க்கடனெனத் தெளிக்கும்
எள்ளும் தண்ணீரும்
சிதறும் வட்ட வட்ட
திரவத் துளிக்குள்
சிரார்த்த ஆன்மாக்கள்.

சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!

ஹேமா(சுவிஸ்)

42 comments:

பால கணேஷ் said...

எள்ளும் தண்ணீரும் | சிதறும் வட்ட வட்ட | திரவத்துளிகக்குள் | சிரார்த்த ஆன்மாக்கள்.
-எவ்வளவு பவர்ஃபுல்லான வரிகள்! சம்பிரதாயத்துக்காகச் சொல்லவில்லை... நிஜமாகவே கவிதையின் சாரத்தை உள்வாங்கி ரசித்தேன் ஹேமா... வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//கத்திரிவெயிலிலும்
சிரிக்க மறப்பதில்லை
பொய்க்காத பூக்கள்
மாறாத வண்ணங்களோடு.//

இங்கு பொய் புன்னகையோடு நிறைய மனிதர்கள் மலராய் பிறந்து தொலைத்திருக்கலாம்..

Anonymous said...

ஹேமா...நல்லா வந்திருக்கு இந்த கவிதை...வார்த்தைகளோடு விளையாடி இருக்கிறீர்கள்...மலராய் பிறந்திருக்கலாமோ இம்மானிடம்..?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்.

நிரூபன் said...

வணக்கம் அக்கா, ஒன்றைச் சார்ந்தும், சாராமலும் வாழ நினைப்பவர்களையும்,
ஒட்டியும், ஒட்டாமலும் சம்பிரதாயங்களுக்காக வாழ நினைப்போரையும் நாசூக்காய் கடிந்து செல்கிறது இக் கவிதை.

அனுஷ்யா said...

இறந்த பின்னும் அமைதி அறுக்கப்படுமோ...
அருமை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை அருமை.

\\சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!\\\

உண்மையான வரிகள். உணமையை நிழலில் தொலைத்து விட்டு தேடும் நிஜங்கள். நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

ஹேமா கவிதை ரொம்ப நல்லாருக்கு.

ஸ்ரீராம். said...

சம்பிரதாயங்களைச் சாடும் கவிதை அருமை.

சாந்தி மாரியப்பன் said...

அற்புதமான கவிதை ஹேமா..

Unknown said...

வழக்கம் போல் இதிலும் சோகச்
சுவடுகள் வாழ்க்கைப் பாதையில்
கவிதைக் கால் பதிய வரிகள் வந்
துள்ளன!
சொற்களின் அழுத்தம் சொல்ல வந்த பொருளுக்கு மேலும் வலிமை சேர்க்கிறது! நன்று!

புலவர் சா இராமாநுசம்

Bibiliobibuli said...

ம்ம்ம்... அந்த கடைசியாய் சொல்லப்பட்ட சங்கடங்களும், சந்தோசமும் யதார்த்தம்.

அறியது தள படம் அருமையாய் பொருந்துது :)

தமிழ் உதயம் said...

கவிதையின் கடைசி பகுதி - உங்கள் வளமான கற்பனைக்கு சாட்சி ஹேமா. திடுக்கிட வைத்த உண்மை. நல்ல கவிதை.

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா ...எதார்த்தம் நிறையவே வாழ்க்கையோடு...

மகேந்திரன் said...

யதார்த்தத்தை பதார்த்தமாக சொல்லும் அழகிய வரிகள் சகோதரி.

logu.. said...

அருமையான பகிர்வு.
நன்றி.

Unknown said...

நல்ல சாடல்...

இந்திரா said...

தலைப்பே பதிவைப் படிக்க தூண்டுகிறது.
அருமையான தேர்வு.
வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

"..முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்...."

அருமையான வரிகள்.

"..சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்.."
மூழ்கி மனம் ஆறுபவர்களும் ஏராளம்.

சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.

சசிகலா said...

சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!
அருமையான வரிகள்

Madumitha said...

மனதை உலுக்கும் வரிகள்.

விச்சு said...

இறந்தாலும் நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க.எள்ளும் தண்ணீரும் | சிதறும் வட்ட வட்ட | திரவத்துளிகக்குள் | அருமையான வார்த்தைகள்.மிகவும் ரசித்தேன்.

ananthu said...

#சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!#

யோசிக்க வைக்கும் வரிகள் ...
இறந்த பின்னும் நிம்மதி அடையாத ஆன்மாக்கள் நிறைய , இங்கு நடைபிணமாய் வாழ்பவர்களும் நிறைய ...!

அம்பலத்தார் said...

ஹேமா, சமூக முரண்களை தீர்க்கமான வார்த்தைகளில் தெளிவாக சொல்லியிருக்கிறியள்.

கீதமஞ்சரி said...

இறந்தவர்களை திருப்திப்படுத்தும் முனைப்பில் இருப்பவர்களை அதிருப்திப்படுத்தும் முயற்சிகள். சாத்திரமும் சம்பிரதாயங்களும் சங்கடங்களை உருவாக்காதவரை சந்தோஷமே.

நீங்கள் நினைப்பதையெல்லாம் எழுத்துக்களாய் மாற்றும் வல்லமையைப் போற்றிப் பாராட்டுகிறேன் ஹேமா.

Kanchana Radhakrishnan said...

உண்மை தான்.

ஹேமா கவிதை super.

Unknown said...

அருமையானபகிர்வுக்கு நன்றி தல

நட்புடன் ஜமால் said...

படம் மிக அருமை ஹேமா!

முன்பு போல் ஒன்றி படிக்க இயலவில்லை,

பிதிர்க்கடனென, சிரார்த்த - இரண்டு முறை கவணித்தேன் இவ்வார்த்தைகளை ...

ஒற்றை விடயம்
மாறுபட்ட பதில்கள் - இது தானே இயல்பு

பித்தனின் வாக்கு said...

\\சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!\\\

yaar itrantha pinnum enru sollavillai. namma than ticket vangi viduvom illaiya.. appuram enna panna namakkenaa?.

nalla irukku.

Prem S said...

அன்பரே உங்கள் தளம் adware ஆல் பாதிக்க பட்டிருக்கிறதா ?இல்லை நீங்கள் எதுவும் ads use பண்றீங்களா .உங்கள் தளத்தின் கருத்து பெட்டியை திறக்கும் பொது வேறொரு விண்டோ திறக்கிறது விளம்பரமாக கவனிக்கவும்

Anonymous said...

// பெண்ணே நீயும் பெண்ணா? //


சிந்தனையை தெளித்தெடுத்து சேகரித்த வார்த்தைகளா ஹேமா?

ராஜி said...

சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
>>>>
கடைசி பயணத்துக்கும் கூட எவ்வளவு சடங்கள் என்று நான் நொந்த அனுபவங்கள் நிறைய உண்டு.

Asiya Omar said...

உங்கள் கவிதை எப்பவும் தனித்துவம் மிக்கதாய், விடயத்தை புரிந்து கொள்ள தான் சிரமம் எனக்கு.

Yaathoramani.blogspot.com said...

சம்பிரதாயங்களுக்குள்ளும்
சமூகச் சடங்குகளுக்குள்ளும்
குறுக்கு மரச் சட்டங்களுக்குள்ளும்
முங்கி அமிழ்ந்து திணறுகின்றன
சங்கடங்களும்
சந்தோஷங்களும்
இறந்த பின்னும்கூட!!!//

அருமையான படைப்பு
உருவமற்று வெட்டவெளிக்குப் போனபின்னும்
சட்டத்திற்குள்ளும் சடங்குகளுக்குள்ளும்
திணரும் ஆத்மாககளை சொல்லிப் போனவிதம்
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

//ஒற்றை விடயம்
மாறுபட்ட பதில்கள்
ஒருவருக்கொருவராய்
மாறித் தெறிக்கும்
அடர் வார்த்தைகள்.//

அருமை.

இறுதியாகச் சொல்லியிருப்பது மறுக்க இயலாத உண்மை.

Prem S said...

அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும்
சிறந்த கவிதை தளங்கள்

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

இடி முழக்கம் said...

இப்படியும் தமிழில் வார்த்தைகளை கொர்க்கமுடியுமா? அருமையான வரிகள்........

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்திக்கவேண்டிய உண்மை..

பட்டிகாட்டு தம்பி said...

அருமை

நம்பிக்கைபாண்டியன் said...

கவிதையை அழகாக முடித்திருக்கிறீர்கள், கடைசி வரிகள் அருமை!

arasan said...

புது புது வார்த்தைகளில் கவிதை மிளிர்கிறது அக்கா...

எல் கே said...

அருமை ஹேமா

Post a Comment