*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 18, 2011

முகிழ்ப்பு...

red rose love romance 3 pictures, backgrounds and images
அவிழ்த்துவிட்ட கூந்தலுக்குள்
குறுந்தாடி புதைய
ஒற்றைக்குச்சியென
ஒடிந்து கிடந்த தேகத்துள்
பிரியங்களோடு அணைக்கிறது
ஒரு சேகுவேரா டீசேர்ட்.

சந்தன மணம் பரப்பிய
சாதுர்யங்களின் தகிப்பில்
கலந்த மையிருட்டோடு
மெய்தேடிக்களைத்து
முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.

சிகரெட்டின் வாசனைக்குள்
ஈரமுத்தம் சகித்த இதழோடு
குயவன் கையில் களிமண்ணாய்
தேகம் ஒத்துழைக்க
சலிப்பற்றுப்போகிறது முகிழ்ப்பு.

எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!

ஹேமா(சுவிஸ்)
நன்றி உயிரோசை பங்குனி இதழ்.

74 comments:

ஹேமா said...

என் இனிய அத்தனை உறவுகளுக்கும் அன்பு வணக்கம்.எல்லோரும் சுகம்தானே.நிறைவாகவே ஓய்வு எடுத்துவிட்டேன்.இனிக் கைகளைக் கோர்த்தபடி வழமைபோலத் தொடர்ந்துகொள்வோம் !

Ashok D said...

அட... :)

(வாசிக்க)

Yaathoramani.blogspot.com said...

குயவன் கையில் நெகிழ்ந்த களிமண் போல்
கவிதைக்குள் வார்த்தைகள் எப்படித்தான்
தன்னை இயல்பாக இணைத்துக் கொள்கிறதோ
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
ஒரு படைப்பேனும் இப்படித் தரவேணும் என்கிற
ஆசையை மட்டும் அடக்க முடியவில்லை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

ஹேமா!நலம் தானே!நான் காணாமல் போயிட்டேனே அல்லது உங்களை தமிழ்மணம் தேடுகிறதா:)மேலே குடுகுடுன்னு ஓடும் மனம் விட்டுப்பேசுங்கள் அன்பு பெருகும் எழுத்துக்கள் வசீகரிக்கின்றன.

அம்பலத்தார் said...

நீண்ட நாட்களின்பின் மீண்டும் உங்கள் வரவும் கவிதையும் மனமகிழ்வு தருகிறது. அடுத்த உங்கள் பதிவிற்காய் ஆவலுடன்........

தமிழ் அமுதன் said...

நலம் தானே ஹேமா..! ;)

Angel said...

Welcome back Hema

Angel said...

வருக வருக ஹேமா .சுகமாக இருக்கிறீர்களா.மாயா உலகில் பார்த்ததும் ஓடோடி வந்தேன் .

Angel said...

//எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!//

எவளவோ கவிதை படித்தாலும் .ஹேமாவின் பேனா எழுதிய வரிகளுக்கு வலிமை அதிகம் .

ப்ரியமுடன் வசந்த் said...

:)

கவிதாயினியே வருக வருக !!

arasan said...

வாங்க அக்கா .. வாங்க...

பலத்த கைதட்டல் உங்கள் கவிதைக்கு ...

நேசமித்ரன் said...

வாவ் !

நிலாமகள் said...

முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.//


எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!

வாங்க‌ ஹேமா... விடுமுறை இனிதே க‌ழிந்த‌தா? வார்த்தைக‌ளுள் ஒளி(ர்)ந்து கிட‌க்கும் அர்த்த‌ங்க‌ள் அனேக‌ பிர‌ம்மிப்பை முகிழ்க்க‌ச் செய்வ‌தாய் இருக்கின்ற‌ன‌.

ஸ்ரீராம். said...

நீண்ட விடுமுறையை இனிதாய்க் கழித்து விட்டு வந்தீர்களா...நல்லதொரு கவிதையோடு ஆரம்பித்திருக்கிறீர்கள். நலம்தானே...

Shanmugam Rajamanickam said...

ம். எல்லாம் நல்லாதான் இருக்கு.

Aathira mullai said...

அன்பு ஹேமா,
குயவன் கையில் களிமண் போல எதிர்த்தலில்லாமால் ஏற்றுக்கொண்டு... அருமையான உவமை.. ஆழமான கவிதை... அழகு.. அழகு...

ராமலக்ஷ்மி said...

நல்வரவு ஹேமா!

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப நாளைக்கு பிறகு....

கவிதை வலிமை அழகு...!!!

ம.தி.சுதா said...

அக்காச்சி சேமம் எப்படி?

ம.தி.சுதா said...

ஃஃஃஃசிகரெட்டின் வாசனைக்குள்
ஈரமுத்தம் சகித்த இதழோடுஃஃஃ

ஒவ்வொரு வரியின் பின்னாலும் ஒடுக்கப்பட்ட ஓதோ ஒரு உணர்வு தெரிகிறது..

சித்தாரா மகேஷ். said...

//எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!//
நீண்ட நாட்களின் பின்னர் ஓர் சிறந்த கவிதை படித்த திருப்தி.நன்றி அக்கா.

தேடிப் பெற்ற சிதறல்கள்.

ananthu said...

அருமையான வரிகள் ...

Anonymous said...

நீண்ட நாட்களின் பின் நல்லதொரு கவிதையோடு ஆரம்பித்திருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்

தனிமரம் said...

நலம்தானே தோழி உங்களின் மீள்வருகை கவிதையோடு வந்துள்ளீர்கள்.

தனிமரம் said...

எதிர்ப்பில்லாமல் கரைந்து போகின்றதின் பின்னே குறியீட்டைச் சொல்லி சிந்திக்க வைக்கின்றீர்கள்.

காட்டான் said...

வணக்கம் சகோதரி நீண்ட லீவு முடிச்சாச்சா..

அடித்தாடுங்கள் தொடர்வோமென...

தனிமரம் said...

சேகுவாரோ எல்லாருக்கும் ஏதோ ஒரு குறீயீட்டைக் கொடுத்துப் போய்விட்டார். அழகான கவிதை.
 .விடுமுறையில் ரசித்த பயணங்களையும் சொல்லுங்கள் தோழி நாங்களும் இனி மேல் பார்க்கனும் இல்ல பல தேசங்களை.

meenakshi said...

மனம் கலந்து உடல் கலந்தால் உயிர் கரையும் காதலில். அழகான கவிதை.
வாங்க ஹேமா! வந்தாச்சா, வந்தாச்சான்னு எட்டி எட்டி பாத்துண்டு இருந்தேன். :)

அப்பாதுரை said...

குயவன் கையில் களிமண் - மெல்லக் கரையும் உயிர்
இவை நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் படிமங்கள்.
விடுமுறைக்குப் பின் நல்ல தொடக்கம், welcome back!

Unknown said...

குயவன் கையில் களிமண்ணா
ஹேமா கையில் கவிப்பெண்ணா
இயலும் வகைபல உருவாகும்
இயல்பாய் வந்திட கருவாகும்
பயிலப் பயில மலர்ந்திடுமே
பலரின் மனதைக் கவர்த்திடுமே
குயிலின் குரலாய் இனித்திடுமே
கொடுத்த கவிதை ஹேமாநீர்

புலவர் சா இராமாநுசம்

துபாய் ராஜா said...

சுகம்தானே ஹேமா...

மீள்வருகைக்கு வரவேற்புகளூம், கவிதைக்கு வாழ்த்துக்களும்....

கீதமஞ்சரி said...

அடிமைப்பட்டுப் போவதிலும் சுகங்காணும் மனம் இருக்கும்வரை இதுபோன்ற முகிழ்ப்புகள் தொடர்ந்துகொண்டேதானே இருக்கும் ஹேமா? வார்த்தைகளால் வசப்படுத்திவிடுகிறீர்கள் ஹேமா.

சி.பி.செந்தில்குமார் said...

வழக்கமாக சில கவிதைகள் ஹேமா எழுதும்போது பாதி புரியாது... ஆனால் இந்தக்கவிதை சாதாரண வாசகனுக்கும் புரியும்படி மிகத்தெளீவாக ,அழகாக எழுதப்பட்டிருக்கிறது.. இடைவெளிகள் மனிதனுக்கு நிறைய கற்றுத்தருகின்றன்

'பரிவை' சே.குமார் said...

வாவ்...
அழகான காதல்...

நலம்தானே சகோதரி...
நிறைய எழுதுங்கள்.

மாய உலகம் said...

தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது...

மாய உலகம் said...

முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.//

ஆழமான உணர்வுகளில் அற்புதமான வார்த்தை ஆராய்ச்சிகள்...

மாய உலகம் said...

அறிவு பூர்வமான வார்த்தைகளில்... நேசித்து எழுதிய உணர்வு வரிகள்... கவிதையை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
இடைவெளிகள் மனிதனுக்கு நிறைய கற்றுத்தருகின்றன்

மாய உலகம் said...

தொடர்ந்து கலக்குங்கள்.... ம்ம்ம்ம்ம் அசத்துங்கள்... பதிவுலகமெங்கும் உங்கள் புரபைல் சின்னம் போட்டாவை இனி காணலாம்.... :-)

முனைவர் இரா.குணசீலன் said...

அழகான முகிழ்ப்பு..

நிரூபன் said...

ஹேமா said...
என் இனிய அத்தனை உறவுகளுக்கும் அன்பு வணக்கம்.எல்லோரும் சுகம்தானே.நிறைவாகவே ஓய்வு எடுத்துவிட்டேன்.இனிக் கைகளைக் கோர்த்தபடி வழமைபோலத் தொடர்ந்துகொள்வோம் !
//

ஆய் அக்காச்சி வந்திட்டா.
வணக்கம் அக்கா,
நலமா?
ஹாலிடே எல்லாம் எப்பூடி?

நிரூபன் said...

முகிழ்ப்பு: அவன் வளைக்க,
அதுவாய் வளைந்து கொடுக்கும் உயிரின் பரிபாடலாக இங்கே பரிணமித்துள்ளது.

நல்லதோர் கவிதை.

சத்ரியன் said...

(வருகைக்கு) வணக்கம்.

சத்ரியன் said...

//முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.//

ம்!
குருதியைக் குளிரேற்றும் கவிதை லயம் பிரமிக்க வைக்கிறது.

காதல் துவம்சம் (கவிதையில் மட்டும்) தொடரட்டும்.

பாராட்டுக்கள்.

கலா said...

எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!\\\\

ம்ம்ம....பெண்ணாய்ப் பிறந்தாலே ...
நீங்கள கவிதையாய்ப் பிழிந்தவார்த்தைகளால்....ஆவியில் வெந்துதான் ஆகவேண்டும் இது நியதி
ஹேமா,கவிதையைவிடப்..பூவும் ,பூவையும் சொல்லும் க{வி}தை அதிகமாய்த் தெரிகிறது

நட்புடன் ஜமால் said...

கவிதை பற்றி சொல்லிட இன்னும் என்ன இருக்கு ...

ஹேமா நலம் தானே, நிலாகுட்டி எப்படி இருக்காங்க ...


உங்கள் கைகோர்த்து நடக்க எங்கள் கைகளும் நீண்டபடியே ...

எழுதுங்குள் இன்னும் இன்னும் ...

Anonymous said...

வந்ததும் ஹிட் கவுண்டர் ஆரம்பிச்சாச்சா? ஹேமா.வெறுமை வெளி இனி உங்க கவிதையால் நிரப்பப்படும்..

Thenammai Lakshmanan said...

குயவன் கை மண் போல நெகிழ்ந்து விழுந்திருக்கிறது கவிதை. ஹேமா.:)

மாலதி said...

படைப்புகள் உள்ளத்தில் இருந்து இயல்பாக மனிதத்தில் உள்ள வற்றை மிக துல்லியமாக காட்டக் கூடியன அந்த வகையில் உங்களின் இந்த இடுகை உங்களின் விடுப்புக்கான காரணகளையும் சூழையும் துல்லியமாக படம் பிடித்து கட்டுகிறது ம் ...வாழ்த்துகள் ...கவிதைக்கு .

போளூர் தயாநிதி said...

விடுப்பு நாளில் எல்லாம் கூட சிந்தித்து எழுதப்பட்டதுபோல தேக்கி வைக்கப்பட்ட அனை உடைந்ததுபோல பொங்கும் பிரவாகம் தன் பணியை துல்லிதமாக முடித்துகொண்டதுபோல் .. இன்னும் சிறப்பான அம்சங்களுடன் உங்களின் ஆக்கம் பாராட்டுகள் வாழ்த்துகள் ....

Bibiliobibuli said...

ஹேமா, விடுமுறை முடிந்து மீண்டும் வந்திருக்கிறீர்கள். நல்வரவு!

Anonymous said...

மீள் வருகைக்கு நன்றி அக்கா ...

இராஜராஜேஸ்வரி said...

குயவன் கையில் களிமண்ணாய்
தேகம் ஒத்துழைக்க
சலிப்பற்றுப்போகிறது முகிழ்ப்பு/

கருத்தில் முகிழ்த்த கவிதை அருமை. பாராட்டுக்கள்.

சிவகுமாரன் said...

குயவன் கையில் களிமண்
கரையும் உயிர்.
ஆகா
அழகிய படிமங்கள்.
அருமை.

M.R said...

வார்த்தை நயம் அருமை ,முயக்கத்தில் உள்ள துல்லியமான மகிழ்வுகள் கவிதையில் வார்த்தைகளாய் ,அருமை

ஜெயா said...

வணக்கம் ஹேமா..கவிதை அழகு..

rajamelaiyur said...

//
சந்தன மணம் பரப்பிய
சாதுர்யங்களின் தகிப்பில்
கலந்த மையிருட்டோடு
மெய்தேடிக்களைத்து
முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.
//
அருமையான வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

பா. ம. க சின்னம் மாறுகின்றதா?

தூயவனின் அடிமை said...

நலம் தானே சகோதரி.

Asiya Omar said...

நிறைய நாளாச்சு பார்த்து,தொடர்ந்து எழுதுங்க..

Kanchana Radhakrishnan said...

நல்வரவு ஹேமா! கவிதை... அழகு.

Mahan.Thamesh said...

அக்கா நலமா ,? நீண்ட இடைவேளையின் பின்னர் வந்துளீர்கள். கலக்கல் கவிதையுடன்

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் தோழிக்கு.
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் தோழிக்கு.
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

ஹேமா said...

உங்களது அத்தனை வேலைகள் நடுவிலும் எனக்கும் ஊக்கம் தரும் அத்தனை என் அன்பு உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி !

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Angel said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள் hema

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

சுந்தரா said...

அருமையான கவிதை ஹேமா!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மாதேவி said...

அருமை.

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஹேமா.

விச்சு said...

வார்த்தைப் பிரயோகம் நல்லாயிருக்கு...

V.N.Thangamani said...

ada namba hema....
ninaivirukkirathaa ennai?
vaalga valamudan.

ரிஷபன் said...

எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!

ம்ம்.. என்ன சொல்ல. புரட்டிப் போடும் வரிகள்.

Post a Comment