*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 01, 2011

இருக்கை...

இயல்பை விடுத்து
இப்போ...
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
பறந்துகொண்டிருக்கலாம்.

நாளை...
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்...
இடப்புறச் சங்குக்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்...
பிணங்கள் புதைக்கும்
இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)

46 comments:

Anonymous said...

yes hema..

//மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

தன்னிலையில் இருத்தல் முக்கியம்..அதனடிப்படையில் அது அதுவாய் இருத்தல் அழகே..

Kousalya Raj said...

உண்மை ஹேமா. கவிதை இயல்பா மனதை தொட்டுவிட்டது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

யாவரும்.. மற்ற எதுவும் தன்னுடைய சயத்தில் இருந்துவிட்டால் நல்லதுதான்...


அழகிய கவிதை...

தனிமரம் said...

எனக்கு மட்டும் பால்கோப்பி தோழி ஹேமா கையால்  வாங்க முடியாவிட்டாலும் இன்று மூன்றாம் இடம்!

தனிமரம் said...

நான் பின்னூட்டம் எழுதும் நேரத்தில் கவிதை வீதி வடையைக் கொண்டு போட்டார் ராமா???

தனிமரம் said...

இயல்பில்லாத இடத்தில்
 பறந்துகொண்டிருக்கலாம். உண்மை ஹேமா சிலதை மறந்து நத்தை போல் இருக்கின்றேன் கவிதை மனதைக் கனக்கவைக்கின்றது !
எப்படி உங்களால் இப்படி வார்த்தைகளை சிறை பிடிக்கமுடியுது தோழியே !!!!

தனிமரம் said...

மனசு உங்கள் கவிதையைச் சுற்றிப்பறக்கின்றது நன்றி தோழி ஹேமா! 

Anonymous said...

படிமக்கவிதை ......

தமிழ் உதயம் said...

எத்தனை உருவமெடுத்தாலும் - இயல்பை கொல்லாது அதாக வாழ்வதே அது. நல்ல கவிதை.

rajamelaiyur said...

//
காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.
//
அருமையான வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

ராமலக்ஷ்மி said...

//முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

ஆம் ஹேமா. கவிதை மிக நன்று.

சக்தி கல்வி மையம் said...

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.// அசத்தலான வரிகள் சகோ..

Anonymous said...

அது அதுவாகவே இருத்தல் மட்டுமே...//

உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...மற்றுமொரு தரமான படைப்பு...

வாழ்த்துக்கள்..

Radhakrishnan said...

சிறப்பான கவிதை ஹேமா. அருமை.

MANO நாஞ்சில் மனோ said...

நான் நானாக இருக்கவேண்டும், நீ நீயாக இருக்கவேண்டும்....சரியாக சொன்னீர்கள் கவிதையாக ரியலி சூப்பர்ப்.....!!!

விச்சு said...

அது.. அது.. அதுவாகவே இருக்க வேண்டுமென உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

இருத்தலின் நிமித்தம்
அழகாய் ஒரு கவிதை....
வார்த்தைகள் சித்திரம் பேசுகின்றன
சகோதரி

அம்பாளடியாள் said...

அருமையான கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ .......

Angel said...

//இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//


அருமை ஹேமா .இயல்பு மாறாமல் அது அதுவாக இருப்பது தான் நல்லது

கீதமஞ்சரி said...

சுயத்தை இழக்காத சூட்சுமம் தொக்கி நிற்கிறது கவிதையின் பிடிக்குள். வசீகரிக்கும் கவிதை ஹேமா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹேமா..உங்களை எப்படி பாராட்ட...??!!

சத்ரியன் said...

ஹேமா,

சுயத்துடன் இருத்தல் அத்தனை எளிதானதல்ல.

இருக்க முயல்வதும் பிழையல்ல.

சுற்றியிருப்பதில் எல்லாம் லயித்து போவதும் சுகம் தான்.

meenakshi said...

அருமையான கவிதை ஹேமா. சுயமாக வாழ்வது எளிதல்ல என்பதுபோல் சுயத்தை இழந்து வாழ்வதும் எளிதல்லதான்.

Anonymous said...

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

மிக அழகாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள்... நீ நீயாக இரு என்பதை நயமாக சொல்லி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

உண்மை தான்... இயல்பாக உள்ள திறமைகளையும், லட்சியங்களையும், ஆசைகளையும் அடக்கி சூழ்நிலைகைதிகளாக வாழவேண்டிய நிர்பந்தம் நிறைய பேருக்கு அமைந்துவிட்டது ... மாற்ற முயற்சி செய்யலாம்.. அமைவது ஆண்டவன் மனசு வைக்க வேண்டும்.

Anonymous said...

கவிதையில் உங்கள் திறமை மிளிர்கிறது... ஒன்றுக்கு மூன்று முறை படித்த பிறகே அதில் நிறைய விசயங்கள் அடங்கி இருப்பது தெரிகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Asiya Omar said...

அது என்னவோ ஹேமா உங்கள் கவிதையை படித்து புரிந்து கொள்ள தனித்திறமை தான் வேண்டும்,
எப்பவும் நாம் நாமாக இருப்பது நன்று...

நிரூபன் said...

வண்க்கம் அக்கா,
நலமா?

இருக்கை: நாளாந்தம் மாற்றமுறும் வாழ்வியலை நத்தை எனும் உவமைப் பொருளாக அழகுறச் சொல்லி நிற்கிறது.

Kanchana Radhakrishnan said...

கவிதை அருமை.

ஸ்ரீராம். said...

அருமை ஹேமா.

மாலதி said...

உங்களின் பா இது மிகவும் இயல்பாக சிறப்பாக பாராட்டும் படியாக எல்லாவற்றையும் விட எல்லோருக்கும் புரியும் படியாக ஆக சிறந்த ஆக்கமாக விளங்குகிறது பாராட்டுகள்

Ashok D said...

அட... அட.. :)

இராஜராஜேஸ்வரி said...

முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!


"இருக்கை..." அழகுபெறும்
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

பாராட்டுக்கள் அருமையான பகிர்வுக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே
>>
எல்லா உயிரினத்திற்கும் பொருந்தும் நச் வரிகள்

அப்பாதுரை said...

உண்மை. கவிதை நன்று. font color இதம்.
இயல்பை இயல்பென்று பிடித்துக்கொண்டிருப்பதா விடுவதா என்பதும் பெருஞ்சிக்கலான கேள்வி. வண்ணத்துப்பூச்சி புழுவின் இயல்பைப் பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?

ப்ரியமுடன் வசந்த் said...

பருக்கை..!

இயல்பை விடுத்து
இப்போ...
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
வெந்துகொண்டிருக்கலாம்.

பாத்திரத்தில்...
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்...
இடப்புறக் கைகளுக்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்...
குப்பை போடும்
இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

சாப்பாடாய் வெந்து
நீராகரமாக கரைத்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

அம்மா பசிக்குது...!

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல வரிகளால் கவிட்தை அழகுறுகிறது, மனதை பற்றி எழுதியதாகவும் உணரலாம்!

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

arasan said...

மெல்லிய பிணைப்புகளில் அழகிய கவி மாலை ..
மிகச்சிறப்பு அக்கா .. வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
எதுவாகினும் அதுவாக அங்கு இருத்தலை அடைந்தாலதான்
முதிர்ச்சி கொண்டவர்கள் ஆகி விடுவோமே
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

சிறப்பான உண்மையில் எளிமையான ஆக்கம் பாட்டுகள் எங்குமே இயல்பை விடுத்து விலகுதல் சிக்கலைத் தரலாம் தனது இயல்பில் விழைவுகளுடன் வெற்றிபெறுவதே மனிதம் பாராட்டுகள் நன்றி

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

மனதை வருடும் கவிதை!!

தினேஷ்குமார் said...

மனதில் ஆழ்ந்து பயணப்படுகின்றன கவிதை வரிகள் தோழி........

ஹேமா said...

இருக்கையை உணர்ந்துகொண்ட,உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.இருந்தாலும் அப்பாஜி கேட்டதும் மனதில் கேள்வியாகிறது.

//இயல்பை இயல்பென்று பிடித்துக்கொண்டிருப்பதா விடுவதா என்பதும் பெருஞ்சிக்கலான கேள்வி. வண்ணத்துப்பூச்சி புழுவின் இயல்பைப் பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?//

வண்ணத்துப்பூச்சி புழுவாவது அதுதான் அதன் இயல்பென்றும் சொல்லலாம்தானே அப்பாஜி !

வசந்து....ம்ம்ம் எதிர்க்கவிதையா !மக்களே பாத்துக்கோங்க.எனக்குக் கோவம் வரல.கரு மாறாமல் வேறு ஒரு ஒரு பொருளை வச்சு கிண்டலா கவிதையை மாத்தி எழுதியிருந்தாலும் கவிதை நல்லாத்தான் இருக்கு.
பரவால்ல.பொழைச்சுப் போங்க !

ரிஷபன் said...

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

வார்த்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு கவிதைக்குள் அடைபடும் ஜாலம்.. எப்போதும் போல ஆச்சர்யம்

Post a Comment