*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, May 27, 2011

நிகழ்வுகள்...

உடைந்த‌ தாழியின் ஓர‌த்தில்
ஒட்டியிருக்கும்
ஒற்றைப் ப‌ருக்கைக‌ள்
க‌ழுவ‌ப்ப‌டாம‌ல் காத்திருப்போடு.
காக்கைக‌ளும்
கழிவகற்றும் கைகளும்
தம் அவ‌ச‌ர‌த்துள்.

காட்சி மாறும் திசையில்
ப‌சி ம‌ய‌க்க‌த்து
தெருவோரச் சிறுமியை
அள்ளி எடுத்த‌படி சூரியக்க‌திர்.
விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.

கொல்லைப்புற
ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி
மெல்ல‌ நுழைகிறது.
நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!

ஹேமா(சுவிஸ்) நன்றி - உயிரோசை.

34 comments:

sathishsangkavi.blogspot.com said...

/விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.
//

அற்புதமான வரிகள்...

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

Anonymous said...

////நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!//// அர்த்தமான வரி அழகான கவிதை....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

காக்கைக்கும் தெருவோரச் சிறுமிக்கும் எலிக்கும் துரத்தும் கைகளுக்குமிடையே மறைந்துபோய்விட்டதோ கருணையின் அமிர்தம்?

யதார்த்தமான கனக்கும் கவிதை ஹேமா.

முனைவர் இரா.குணசீலன் said...

நிலங்கள் மாறலாம்..
நிகழ்வுகள் மாறுவதில்லை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொல்லைப்புற
ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி
மெல்ல‌ நுழைகிறது.
நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!

எலிகள் களைத்து விட்டன என்பது உண்மைதான்! இனி நலிந்தோற்கு நற்காலம்!

அருமையான கவிதை ஹேமா!

கூடல் பாலா said...

வசந்தம் வரும் விரைவில் !

Unknown said...

இடத்தை தேடியலையும்
உயிர் பயம்...

சிசு said...

கழுவப்படாமல் காத்திருக்கும் பருக்கைகளுக்கும், தெருவோரச் சிறுமிக்கும் இடையே ஊடாடும் ஒத்திசைவை உணரமுடிகிறது.

கொல்லைப்புற ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி ஊழல் பெருச்சாளிகளை(யும்) நினைவூட்டுகிறது..

அர்த்தம் "பொதிந்த" கவிதை...

ஜோதிஜி said...

தொடர்கின்றேன்.

Yaathoramani.blogspot.com said...

யதார்தத்தை மிக இயல்பாகச்
சொல்லிச் செல்லும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

கவிதை வழமை போல அருமை சகோதரி!!!
புரிந்தது...ரெண்டாம் தடவை வாசித்த போது!!

சந்தான சங்கர் said...

நிகழ்வுகளின்
நிதர்சனங்கள்
சிந்திக்க வைக்கிறது.


அருமை தோழி.

தமிழ் உதயம் said...

நன்றாக உள்ளது ஹேமா.

ப்ரியமுடன் வசந்த் said...

//சிசு said...
கழுவப்படாமல் காத்திருக்கும் பருக்கைகளுக்கும், தெருவோரச் சிறுமிக்கும் இடையே ஊடாடும் ஒத்திசைவை உணரமுடிகிறது.

கொல்லைப்புற ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி ஊழல் பெருச்சாளிகளை(யும்) நினைவூட்டுகிறது..

அர்த்தம் "பொதிந்த" கவிதை...//

thank you சிசு :))

தூயவனின் அடிமை said...

நல்ல வரிகள்.

ஸ்ரீராம். said...

எந்த ஒரு கடினச் சூழ்நிலைக்கும் பொருந்தும் கவிதை. படிப்போருக்கு அவரவர்கள் சூழ்நிலைக்கேற்ப அர்த்தம் உண்டாக்கும் வரிகள். அருமை ஹேமா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை ஹேமா. //நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!// அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

கொல்லான் said...

கவியரசி கவியரசி தான்.
இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

நிரூபன் said...

புரிந்தும், புரியாமலும் இருக்கும் வண்ணம் கவிதையின் குறியீடுகள் ஒவ்வோர் மனங்களையும் வெவ்வேர் சிந்தனைக்கேற்றாற் போலக் கட்டிப் போடும் வேளையில்,

எனது பார்வையில் இக் கவிதை!

//உடைந்த‌ தாழியின் ஓர‌த்தில்
ஒட்டியிருக்கும்
ஒற்றைப் ப‌ருக்கைக‌ள்
க‌ழுவ‌ப்ப‌டாம‌ல் காத்திருப்போடு.
காக்கைக‌ளும்
கழிவகற்றும் கைகளும்
தம் அவ‌ச‌ர‌த்துள்.//

அவசரப் புணர்ச்சிக்கான நியதிகளைக் கவிதையின் முதற் பந்தி சொல்கிறது என நினைக்கிறேன். தம் சுகம் தீர்ந்தால் சரியென நினைக்கும் காக்கைகளாக இங்கே...காமுகர்கள் சித்திரிக்கப்பட்ட்டிருக்கிறார்கள்.

//காட்சி மாறும் திசையில்
ப‌சி ம‌ய‌க்க‌த்து
தெருவோரச் சிறுமியை
அள்ளி எடுத்த‌படி சூரியக்க‌திர்.
விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.//

இவ் இடத்தில், காமப் பசிக்கு சிறுவர்களும் துன்புறுத்தப்படுவதும், துஷ்பிரயோகம் செய்யப்படும் நிகழ்வுகளும் அழகான குறியீட்டு வடிவின் மூலம் விளக்கியிருக்கிறீர்கள்.

//

கொல்லைப்புற
ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி
மெல்ல‌ நுழைகிறது.
நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!//

ம்....வலியன வெல்லும், மெலியது நசியும் எனும் தத்துவத்தை இவ் வரிகள் விளக்கி, வியம்பி நிற்கின்றன சகோ.

நிரூபன் said...

நிகழ்வுகள்; வெறியர்களின் நிஜ முகத்தை அழகாகச் சுட்டி நிற்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!//
நிதர்சன நிகழ்வுகள்!!

கீதமஞ்சரி said...

வார்த்தைகளின் வீரியம் வரிக்கு வரி வியக்கவைக்கிறது ஹேமா. பன்முகம் காட்டும் கவிதை.

arasan said...

நேர்த்தியான வார்த்தைகளில் அற்புத கவிதை ..

Bibiliobibuli said...

ஹேமா, புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் இருக்கு. எப்படியோ, சில சம்பவங்கள், நிகழ்வுகள் அவரவர் வாழ்க்கையின் சந்தோசங்களை, வலிகளை மீட்டிப்பார்க்க வைக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.

போளூர் தயாநிதி said...

//காட்சி மாறும் திசையில்
ப‌சி ம‌ய‌க்க‌த்து
தெருவோரச் சிறுமியை
அள்ளி எடுத்த‌படி சூரியக்க‌திர்.
விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.//
அருமை....................

ம.தி.சுதா said...

ஃஃஃஃநலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்ஃஃஃஃ

அக்கா நிகழ்வுகளில் ஒரு ஒரு நல்ல நிகழ்வை சுட்டிக் காட்டியுள்ளீர்கள் மிக்க நன்றி..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

Ram said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html

Kanchana Radhakrishnan said...

அருமையான கவிதை.

சி.பி.செந்தில்குமார் said...

>>/விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.
//

நீட்

http://thavaru.blogspot.com/ said...

ஹேமா...எல்லாம் இல்லாமையும் இயலாமையும் தான் போல....

தினேஷ்குமார் said...

மாற்றமுமிலா ஏற்றமுமிலா மாண்டு போகும் மூடிமறைக்கப் பட்ட வாழ்வுகள் வரிகளுக்குள் மறைந்து கிடக்கின்றன தோழி........ எவரரிவாரோ அவைதனில் வாழ்வளிக்க...

அன்புடன் மலிக்கா said...

நிகழ்வுகளின் உண்மைகளை உள்ளடக்கிய வரிகளாய் வெளிப்பட்டு
நிற்கிறது கண்முன்னே காட்சிகளாய்..

அருமை தோழி..

http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.html

Post a Comment