*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, May 24, 2011

ஒரு சொல்...

நீ சொன்னாய்
நீயா சொன்னாய்
நீதான் சொன்னாய்
நீதானா சொன்னாய்
நீயேதான் சொன்னாய்
நீயும் சொன்னாய்.

மாற்றி மாற்றி
நீ....
சொன்னதை மாற்றிட
நினைக்கிறது உள் மனம்
சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.

சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

48 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒற்றைச் சொல்லுக்காய் எதிர்பார்த்திருந்த பருவங்களும் உண்டு.இல்லையா ஹேமா?

வேறொரு ஒற்றைச் சொல் உயிர் குடிக்கிறது இப்போது மனதைத் துளைத்தெடுத்து.

முனைவர் இரா.குணசீலன் said...

சொல்லுக்குள் சொல்லாய்.
உணர்வுக்குள் உணர்வு கலந்து.

கவிதை அருமை.
:héhé:

ராமலக்ஷ்மி said...

அத்தனை வரிகளும் அற்புதம்.

//சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.

சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!//

மிக அருமை ஹேமா.

கொல்லான் said...

மனதை வலிக்கச் செய்யும் கடைசி வார்த்தைகள்.
அருமை.

கீதமஞ்சரி said...

நாவினால் சுட்ட வடு! ஒற்றை வார்த்தை தைத்த காயத்துக்கு மருந்திட விரைந்து வரக்கூடும் வசியக் களிம்புகள். எதற்கும் தயாராய் இரு மனமே, இன்னொரு கவிதையும் படிக்க!

சொல்லாடல் வெகு நன்று ஹேமா.

Unknown said...

இறுதி நான்கு வரிகள் அருமை!

Anonymous said...

///மாற்றி மாற்றி
நீ....
சொன்னதை மாற்றிட
நினைக்கிறது உள் மனம்
சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்/// கொட்டிய வார்த்தைகளை மீள பெற முடியாது தானே..... நல்ல வரிகள் சகோதரி

தமிழ் உதயம் said...

அழகான கவிதை - சற்றே வார்த்தை விளையாட்டுகளுடன், சற்றே வலிகளுடன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒற்றைச் சொல்லுக்குள் உயிர் பெற்று வாழ்கிறது கவிதை...
வாழ்த்துக்கள்..

logu.. said...

\\சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.\\


குட்டியாய் ஒரு ப்ரளயம்.

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான கவிதை.
அழகான உணர்வுகளின் வெளிப்பாடு?

சிசு said...

//சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.//

யதார்த்தத்தின் வலி.

//சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!//

வலிகளை மென்று விழுங்கும் பாவனை.

ஒரு சொல் - ஒரு உணர்வு...

sathishsangkavi.blogspot.com said...

சொல்லுக்கு சொல்லாய் அழகாய் சொன்னாய்...

Yaathoramani.blogspot.com said...

இயல்பில்லா ஒரு பொய்....
படைப்புக்கு சுருதி சேர்க்கும்
அருமையான வார்த்தைப் பிரயோகம்
நல்ல பதிவு

Chitra said...

சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.


..... ஒற்றை சொல் - மனதுக்குள் ஒரு பூகம்பம்!

இராஜராஜேஸ்வரி said...

சொன்ன ஒற்றைச் சொல்
மனம் துளைக்கும் துயரம.

சந்தான சங்கர் said...

சொல்லை நினைக்கவில்லை
சொல்லியதை நினைக்கின்றது
சொல்லாமல் இருந்திருந்தால்!!!

விழுந்த சொல் பதிந்ததே...


அருமை தோழி..

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

எத்தனை தரம் உச்சரித்தாலும் கிடைக்காத சொல் சிலநேரங்களில் தோழி!

ராஜ நடராஜன் said...

மீண்டும் சொல் விளையாட்டு ஹேமா!

நசரேயன் said...

என்னன்னு எனக்கு தெரியும்

ப்ரியமுடன் வசந்த் said...

பியூட்டிஃபுல் ஹேமா :)

Bibiliobibuli said...

ஹேமா, சரியான முடிவு. எதற்கு பொய்களில் வாழவேண்டும்.

சத்ரியன் said...

நான் பொய் சொல்ல விரும்பவில்லை.

எனக்குப் புரியலை.
யார் என்ன சொன்னார்கள்?

ஸ்ரீராம். said...

நல்ல வார்த்தை விளையாட்டு. மாற்றிப் பேசுவது நல்லதில்லைதான்...ஆனால் கடைசி வரை என்னதான் சொன்னார்கள் என்று சொல்லவே இல்லையே....!

பத்மா said...

romba pidichurukku hema

http://thavaru.blogspot.com/ said...

கொஞ்சம் உள்வாங்கினால் என்னமோ செய்யுது ஹேமா..

arasan said...

நெஞ்சத்தை பிழியும் வரிகள் ..

Anonymous said...

உயிர் கொல்லும் ஒற்றை வரி...ஹேமா டச் கவிதையில்..

மாதேவி said...

ஒற்றைச் சொல்லு மனதை வதைக்குது.

meenakshi said...

மிகவும் அருமை ஹேமா! சொன்னது நீதானா, சொல் என் உயிரே என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

நீங்கள் நலம்தானே!

Kanchana Radhakrishnan said...

கவிதை அருமை.

Madumitha said...

ஒற்றைச் சொல்
ஆயிரம் மெளனங்களை விட
வலிமையானது.

Angel said...

//சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!//

//சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.//
அருமையான் கவிதை ஹேமா
இதைதான் கல்லால் அடித்தாலும் தாங்கலாம்,சொல்லால் அடித்தால் உயிர் வரை பாயும் என்பார்கள் .

மதுரை சரவணன் said...

சொன்னது சொன்னது தான். அருமை.. வாழ்த்துக்கள்

மோகன்ஜி said...

//சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!//

கவிதையின் கனம் உணர்த்தும் வரிகள்... அருமை ஹேமா.. அருமை

நிலாமகள் said...

சொல்லாத‌ ஒரு சொல்லால் சொந்த‌ம் தொட‌ர‌வும், சொல்லிய‌ ஒரு சொல் ப‌ந்த‌ம் அறுக்க‌வும்... வார்த்தைக‌ளே வாழ்க்கையாகும் விந்தை. இறுதி வ‌ரிக‌ள் உறுதி குலையாத‌ இத‌ம் த‌ரும்ப‌டி இருக்கிற‌து தோழி.

நிரூபன் said...

ஒரு சொல்லின் வலிகளைக் கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள். காத்திருப்பின் பின்னரான ஒரு சொல்லில் ஏமாற்றம் என்றால் அதன் வேதனைகளை எழுத்தில் வடிக்க முடியாது. அதே போல காத்திருப்பின் பின்னரான சொல்லில் நிறைவான பதில் என்றால் அது மகிழ்ச்சியை வரவழைக்கும்.

இந்தச் சொல் கொடுஞ் சொல்லாக கவிதையில் வந்து விழுந்திருக்கிறது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஒரு சொல் கவிதை
ஒரே சொல்லில் ”அருமை”

எல் கே said...

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம்

அருமை ஹேமா

கவி அழகன் said...

வித்தியாசமான எழுத்து நடை சிறுக சொல்லி பெருக விளங்கப்படுத்துது உங்கள் கவிதை முயற்ச்சிகள் தொடரட்டும்

கலா said...

ஹேமா “அந்தச்சூரியன்”
ரொம்பத்தான் சுட்டுவிட்டானோ!
இவ்வளவு கோபம்?

உங்கள்மேலும் தப்பிருக்கலாம்...
எதையாவது
நீங்கள்துருவித்துருவிக் கேட்டால்
பாவம் அவர் தப்பிப்பதற்கு ஒரு
பொய் சொல்லிருக்கலாம் அல்லவா!
இந்தக் காலத்தில் அரிச்சந்திரர்களைக்
காணமுடியாது ஹேமா


அதோ.........சூரியன் முனுமுனுப்பது
என்காதுகளில்,நீங்களும் காதை”மட்டும்”
கொடுத்துக் கேளடி தங்கம்

“நிலவுக்கு என்மேல் என்னடி
கோபம் நெருப்பாய் எரிகிறது....”

மாலதி said...

நானும் சொல்கிறேன் அக்கா எப்போது நல்ல சேதி சொல்லபோகிறீர்கள் உங்களவர் முகவரிதருங்களேன் நான் உங்களுக்காக பேசுகிறேன் உங்களின் ஆக்கம் அதைத்தானே உணர்த்துகிறது இந்த ஆக்கத்தை படித்துமா அவர் நல்ல பதிலை சொல்லாமளிருப்பர் ?

போளூர் தயாநிதி said...

//நீ சொன்னாய்
நீயா சொன்னாய்
நீதான் சொன்னாய்
நீதானா சொன்னாய்
நீயேதான் சொன்னாய்
நீயும் சொன்னாய்.//ஒற்றைச் சொல்லுக்காய் எதிர்பார்த்திருந்த பருவங்களும் உண்டு......

அப்பாதுரை said...

'சொன்னது நீ தானா' என்று ஒரு தமிழ் சினிமா பாட்டு இத்தனை நாள் புரியாமல் இருந்தேன்...

ஹேமா said...

சுந்தர்ஜி...இப்பல்லாம் முதல்ல வந்து கருத்துச் சொல்றீங்க.சந்தோஷமா இருக்கு.அப்பிடியே சரி பிழையும் சொல்லிடுங்க.திருந்திக்குவேன் !

குணா...நன்றி...அதுசரி
என்ன சிரிப்பு !

ராமலஷ்மி அக்கா...
ஒற்றைச்சொல்தான்.
அதன் வீரியம் அதிகம்தானே !

கொல்லான்...மறக்காமல் வருகிறீர்கள்.நன்றி.நல்லதொரு
பதிவு போடுங்களேன் !

கீதா...மருந்தாய் இன்னொரு கவிதையா...நிச்சயம்
இடையிடை வரும் !

ஜீ...நன்றி நன்றி.வேறு மொழிப்படங்களை எதிர்பார்க்கிறேன் !

கந்தசாமி...ஒற்றை வார்த்தையில் உயிரையே எடுப்பவரும் இருக்கிறார்கள் !

தமிழ்...உண்மைதான் தமிழோடு சிலநேரங்களில் விளையாடுவேன் விருப்பமாய் !

சௌந்தர்...ஒற்றைச்சொல்தான்.
உயிருள்ளவரை மறக்கமுடியாதே !

லோகு...குட்டிப் பிரளயம்.
அழகான வார்த்தை !

கருன்...அன்புக்கு நன்றி நண்பா !

சிசு...ஒற்றைச் சொல் எந்தத் தருணத்திலும் வாழவும் வைக்கும் சாகவும் வைக்கும் !

சங்கவி...ஒரே பிஸியாயிட்டீங்க.
ரொம்ப நாளாக் காணோம் !

ரமணி...நிறைவானவர்களின் கருத்து இன்னும் திருத்தும் என்னை !

சித்ரா...பூகம்பம் தந்தவர்கள் நின்மதியாக இருப்பார்களே இதே சொல்லால் !

இராஜேஸ்வரி...சொல் தந்த துயரமும் சந்தோஷமாகும் கவிதை வெளியில் !

சங்கர்...வாங்கோ வாங்கோ.எப்பாச்சும் தலை காட்டுறீங்க.விஜய் எங்கே !

ரத்னவேல் ஐயா...அன்புக்கு நன்றி !

ஹேமா said...

நேசன்...உச்சரிக்க உச்சரிக்க சில சொற்கள் சந்தோஷமாகவும் உயிர் எடுக்கவும் !

நடா...நீங்கதான் சொல் விளையாட்டுன்னு சொல்றீங்க.நசர்ஜி என்னமோ தெரியுமாமில்ல.என்ன தெரிஞ்சுபோச்சாம் அவருக்கு.பாவம் இப்பல்லாம் கும்மியெல்லாம் அடிக்காம திருந்திட்டார்.கவின்குட்டி திருத்திட்டார்போல !

நசர்...எல்லாருக்குமே ஒரு சந்தேகத்திலதான் பின்னூட்டம் தாறாங்க.உங்களுக்கு தெரிஞ்சிருக்கேன்னு என்னவா இருக்கும்ன்னு யோசிக்கிறாங்க பாருங்க !

வசந்தா...எனக்கொரு உண்மை சொல்லணும்.உண்மையாவே அழகா இருக்கா கவிதை !

ரதி...கை குடுங்க.நீங்கதான் நான் !

சத்ரியா...எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம்.உங்களுக்கும் எனக்கு சண்டைன்னு கலா சொல்றா !

ஸ்ரீராம்...ஆசை தோசை.
நல்ல ஆள்தான் !

தவறு...உண்மைதான் சில ஒற்றை வார்த்தைகள் நொறுங்க வைக்கும் வாழ்க்கையையே !

அரசன்...நிச்சயம் இப்படியான வார்த்தைகளில் அனுபவப்பட்டிருப்பீர்கள் !

தமிழரசி...எங்கே கவிதைகள் !

மாதேவி...விட்டுத்தள்ளிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான்.ஆனாலும் !

மீனும்மா...எங்க கனநாளாக் காணோம்.நான் நல்ல சுகம் நீங்களும்தானே !

காஞ்சனா...வீட்டு வேலைகளுக்கு நடுவிலும் வருகிறீர்கள்.நன்றி.
ஐயாவுக்கு என் வணக்கங்கள் !

ஏஞ்சல்...சில ஒற்றைச் சொல் வாழ்வின் திசையையே மாற்றிவிடும் !

சரவணன்...சொற்களை வெளிவிட்டால் அதன்பிறகு அது எங்களுக்குச் சொந்தமில்லை என்பார்கள் !

மோகண்ணா...இதெல்லாம் சும்மா சும்மா.நான் சந்தோஷமாவே இருக்கேன் !

நிலா...பொய்யான வாழ்வில் என்ன சந்தோஷம்.அதுதான் இறுதி வரிகளால் முடித்திருக்கிறேன் !

நிரூ...நிறைவான புரிந்துணர்வு உங்களுக்கு !

பிரஷா...நன்றி.உங்கள் கவிதைகளை விட இதொன்றும் நல்லதில்லை தோழி !

எல்.கே...உங்கள் கவித்திறன் கண்டு வியந்துபோயிருக்கிறேன் நான் !

யாதவன்...ஒற்றைச்சொல்லில் கவிதை முழுமையடைய வேணும் என்றே எழுதினேன்.வரவேற்புக் கிடைத்திருக்கிறது !

கலா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!

மாலதி...இப்பல்லாம் முகவரி தேவையில்லை.கைபேசிதான்.தரவா !

தயா...சொற்கள் தவறுவது பருவம் பார்த்தல்ல.எப்போதும் நிகழலாம் !

அப்பாஜி...இந்தக் கவிதை அந்தப் பாட்டை நினைவு படுத்துகிறதா.
மீனம்மாவும் சொல்றா !

சி.பி.செந்தில்குமார் said...

>>சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!

நச் லைன்

ஹேமா.. இந்த கவிதையை இன்னும் சுருக்கி இருக்கலாம் ,, ஆரம்பத்தில் வரும் வரிகளை இன்னும் ட்ரிம் பணி எடிட் பண்ணீ இருக்கலாம்

Post a Comment