*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 03, 2011

காதல் கள்வன்...

கேட்டுக் கேள்வியில்லை
முன்னறிவித்தலில்லை
அனுமதியில்லை.
புகுந்ததும் தெரியவில்லை
காவலுக்குக் கதவு
கள்வனுக்கு உதவ
யன்னல்.

எச்சரித்த திரைச்சீலை
மெல்லிசையாய்
காதில் ஜில்லென்று
புகுந்த தென்றல்
புரியவில்லை.

நித்தம் வரும் தென்றலென்று
இமையோடு படபடக்க
கண்ணிமைக்கும் கணத்தில்
விளக்கணைய
பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்.....

மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு!!!

ஹேமா(சுவிஸ்)

59 comments:

ஆதவா said...

படிக்க ரொம்ப மென்மையாக இருந்தது சகோதரி.
காதலை அதன் குணத்தோடே சொல்லியிருப்பது மிக்க நன்று!
///மெல்லாமாய்/// ???

கோநா said...

மனங் கவர் (கவிதை)கள்வன், ஹேமா. வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமை அருமை :)

VELU.G said...

நல்ல கவிதை

கள்வனுக்கு (மனக்) கதவுகளே உதவும் போது யன்னல் உதவாதா என்ன

sathishsangkavi.blogspot.com said...

//மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு!!!//

ரசித்தேன் உங்கள் கவிதை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை அருமை

ஹேமா said...

கொஞ்சம் மைண்ட் மாத்திப் பாக்கலாமேன்னுதான் காதல் கவிதை ஒண்ணு.சேமிச்சு வச்சிருக்கிற கவிதைகளைப் பாத்தா அரசியலோ வாழ்வோ சோகமாவே இருக்கு !

Anonymous said...

//பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்.....//


மென்மையான வரிகள்..

நிரூபன் said...

சகோதரி காதல் கள்வன் மென்மையாய் வந்த தடயத்தின் விம்பமாய், சாட்சியாய் கவிதை. அழகு தமிழ் கொஞ்சும் அமுதக் கவிதையூடு கலவி அமுதையும் மென்மையாய் சொல்லியிருப்பது அருமை.

தூயவனின் அடிமை said...

//கேட்டுக் கேள்வியில்லை
முன்னறிவித்தலில்லை
அனுமதியில்லை.
புகுந்ததும் தெரியவில்லை//


உங்கள் வித்தியாசமான சிந்தனை, அருமை.

Anonymous said...

//பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்.....

மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு!!!//

ஹேமா....என்னை எழுத வைக்காதே..

தமிழ் உதயம் said...

காதல் உணர்வு அழகிய கவிதையாக, காதல் வலையில் சிக்காத மானுட மீன்களே இல்லை என்று சொல்லலாமோ.

அப்பாதுரை said...

தென்றல் போலவே சுகமான கவிதை..

Anonymous said...

இதமாய் விழும் பின்மாலைச் சாரல் போல ஒரு ப்ரிய கவிதை! :)

க.பாலாசி said...

கலக்கல்..கலக்கல்..ஹேமா.. அந்த கள்வனுக்குதவும் யன்னலும், மறைந்த ரகசியம் கெக்கலிக்கப்பதும் இன்னும் அழகு..

சாய்ராம் கோபாலன் said...

ஹேமா, கவிதை அருமை அருமை. வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

காதலிலும் வீரியம்தான்.... கள்வன் கவருகிறான்!.

Ramesh said...

வாவ் இதுவும் கலக்கலே. மாறுதல் அவசியம்

Yaathoramani.blogspot.com said...

தென்றலாய் நெஞ்சை வருடிப்போகும் வார்த்தைகள்
அதுவும் குறிப்பாக " கள்வனுக்கு உதவும் ஜன்னல்"
சொற்பிரயோகம் அருமை.தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

பாராட்டுக்கள் ஹேமா..

Chitra said...

simply superb!

சிவகுமாரன் said...

மலரினும் மெல்லிது காதல் என்பதை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

ராஜவம்சம் said...

காதல் போதையா அருமை.

மதுரை சரவணன் said...

காதல் கவிதையில் அருமை. வாழ்த்துக்கள்

Riyas said...

nice poem hema akka...

நசரேயன் said...

ம்ம்ம்

Kousalya Raj said...

ஹேமா கவிதை மனதை நிறைக்கிறது...சோகத்தின் நடுவே இந்த மாதிரியும் அதிகம் எழுதுங்களேன். காதல் (கவிதை) படிப்பவர்களையும் காதலிக்க வைத்துவிடும்.

அழகு.

arasan said...

மிக மெல்லிய வரிகளில் அற்புதமாய் கவி படைத்த உமக்கு நன்றிகள்

அன்புடன் மலிக்கா said...

தோழி
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் வாருங்கள்..http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_04.html

Raja said...

///பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்///

///மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு///

காதல் வெறி கொள்ளச் செய்யும் வரிகள்...வாழ்த்துக்கள் ஹேமா...

விருதுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதே ...அப்படியா???

Ashok D said...

:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஹேமா-ஹேமா.

புரிஞ்சுக்கவே முடியலை உங்களை.

ஒண்ணு பனிமலை இல்லை எரிமலை.இதற்கிடையில் உங்களைத் தேடியலைகிறேன்

சாய்ராம் கோபாலன் said...

//ஹேமா said...

கொஞ்சம் மைண்ட் மாத்திப் பாக்கலாமேன்னுதான் காதல் கவிதை ஒண்ணு.சேமிச்சு வச்சிருக்கிற கவிதைகளைப் பாத்தா அரசியலோ வாழ்வோ சோகமாவே இருக்கு ! //

Chill out a bit Hema

எல் கே said...

புரிந்தும் புரியாமலும். ஆனால் கவிதை அருமை ஹேமா

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்.....

மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு!!!///

...ரொம்ப ரசித்தேன் இவ்வரிகளை..!

மெல்ல உன் பெயர் கேட்டு..
செல்லமாய் நான் சிணுங்கினேன்னு சூப்பர்-ஆ சொல்லிட்டீங்க.. :)

சு.செந்தில் குமரன் said...

விழுமிய கவிதை . நன்று

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை ஹேமா அக்கா..

Admin said...

வழக்கம்போல் அனைத்து வரிகளும் அருமை.

ஸ்ரீராம். said...

மென்மையான, துள்ளலான, இளமையான, பரவசக் காதல் கவிதை.

சத்ரியன் said...

யப்பா.....!

சத்ரியன் said...

”காதல் கள்வன்”

மனதைக் களவாடுபவர்கள் கேள்வியுற்றிருக்கிறேன்.

”காதலைக் களவாடுபவன்”- புதுசா இருக்குங்க.

logu.. said...

\\மறைத்த ரகசியம்
கெக்கலிக்க
வெட்கித்துக் கிடக்கிறேன்
இறுக்கிய உன் மார்போடு!!!\\


Hayyoda..
moochadaikuthu.

மாதேவி said...

ஆகா...:) மனங்கவர் கள்வன்.

ராஜ நடராஜன் said...

ஹேமா!கவிதைங்கிறது பிகாசோ ஓவியம் மாதிரி.பார்க்கிறவங்க கோணத்தில் கவிதையின் பொருள் படியும்.இதற்கு உதாரணமா ஒரு பரிபாடல் வருகிறது உங்கள் கவிதைக்கு.

யார்பிரிய,யார்வர,யார்வினவ,யார் செப்பு?
நீர் உரைசெய் நீர்மைஇல் சூள் என்றி நேரிழாய்!
கய வாய நெய்தல் அலர்,கமல் முகை மண நகை
நய வரு நறவு இதழ்,மத்ர் உண்கண்;வாள் நுதல்
முகை முல்லை வென்று,எழில் முத்து ஏய்க்கும் வெண்பல்
நகை சான்ற கனவு அன்று;நனவு அன்று நவின்றதை......

இப்படிப்போகும் எதிர்க்கவிதை.ஆனால் பரிபாடலின் பொருள் கேட்டுப்பாருங்கள் புலவர்களை.ஆளுக்கு ஒவ்வொரு உரைநடை சொல்வர்.எனவே கவிதையோடு கருத்தும் சொல்லிட்டா புரிய எளிதாக இருக்கும்:)

ப்ரியமுடன் வசந்த் said...

@ ராஜ நடராஜன் சார் வணக்கம்

ஒரு கவிதையை வாசிக்கும் வாசகன் கட்டவிழ்ந்த மனசோட படிக்கிறப்போ புதிய பார்வைகளையும் புதிய விமரிசன கோணங்களையும் விளைவிக்க முடியும்

கவிதையின் சாத்தியங்களை படிப்பவன் தான் வரையறுக்கிறான் அது எந்த அளவுக்கு ஆழமும் அகலமும் கொண்டு விரிய வேண்டும் என்பதையும் வாசகனின் மனசுதான் வரையறுக்க வேண்டும்.

கவிதையை எதிர் கொள்வது வாழ்க்கையோட முக்கியமான காலகட்டத்தை சந்திப்பதற்க்கு ஒப்பானதாகும்.கவிதையை வாசிக்கும்பொழுது சொற்களை தாண்டி காலம் காட்டி நிற்கும் படிமங்கள் கடந்து ஆழ்ந்த அக அனுபவமாக விரியக்கூடியது கவிதை.

வாசகன் கவிதையை புரிந்து கொள்ள வேண்டியதில்லை கவிதை எழுந்து விரியும் லயத்திற்க்கும் சுரத்திற்கும் அது தனக்குள் எழுப்பக்கூடிய அதிர்வுகளை உள்வாங்கி கொள்ளும் படியாக தன் மனதை சுருதி சேர்த்து வைத்து கொள்ள வாசகனின் மனம் தயார் கொள்ள் வேண்டும்.

உண்மையில் பாடல்களோ சங்கீதமோ கேட்கும்போது இதுதான் நடக்கிறது.சங்கீதத்தை பெரும்பாலானோர் கற்றதில்லை ஆனால் உள்வாங்கி கொள்கிறோம்.கவிதை வாசிப்பிலும் அப்படியே இருக்க வேண்டும்.

கவிதையை உங்கள் மனது விரும்பிய படிமங்களாக வடிவங்களாக நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

பிகாசோ ஓவியங்கள் கியூபிஸ வகையை சார்ந்த பின்நவீனத்துவம் வாய்ந்தவை எளிதில் யாருக்கும் புரியாது...

ஒரே பொருள் ஏக காலத்தில் பல்வேறு கோணங்களில் பார்க்கப்படும் தன்மையுடையது..ஹேமாவின் இந்த கவிதை மாதிரி

விஜய் said...

இறுகிய மனமும் இளகும் கவிதை

வாழ்த்துக்கள் ஹேமா

விஜய்

Prabu M said...

அட‌.. வ‌ச‌ந்த‌மாய் ஒரு மென்மையான‌ காத‌ல் க‌விதை!
வ‌ழ‌க்க‌ம் போல‌ அழ‌கு அக்கா வார்த்தைக‌ளும் விஷ‌ய‌மும்...
மாறுத‌லாக‌ இந்த‌ பேனாமுனையிம் கூர்மையின்றி ம‌யிலிற‌கில் மைதொட்டு எழுதியிருக்கும் கைவ‌ண்ண‌ம் க‌ணிணித்திரையில்! ர‌சித்துப் ப‌டித்தேன் :)

சி.பி.செந்தில்குமார் said...

>>>பயந்தணைத்த தலையணைக்குள்
மெல்லமாய்
உன் பெயர் சொன்னதால்.....

nice line hema..

mostly in yr rhyme conitent may b sad. noe love .. m m

மோகன்ஜி said...

மென்மையான பூப்போன்ற கவிதை ஹேமா!மயிலறகாய் வருடுகிறது.

Thanglish Payan said...

அருமை அருமை :)

ஹேமா said...

நிறைய நாளா சந்தோஷமா ஒருத்தருக்கும் பதில் சொல்றதில்ல இப்பல்லாம்.ஏனெண்டா வேலையும் கூட.அதோட ம்ம்ம்....எப்பவும் போல.

எல்லாரும் சுகமா இருக்கிறீங்கள்தானே.சுகமா இருப்பீங்கள்.அதானே காதல் கவிதைக்குச் சந்தோஷமா எல்லாரும் சொல்லி வச்சிருக்கிறிங்கள்.சரி எல்லாரோடையும் கொஞ்சம் கதைச்சுப் பாப்பம் !

கனகாலத்துக்குப் பிறகு ஜமால் வந்தவர்.அவர நான் தெரிஞ்சவைட்டயெல்லாம் தேடிக் களைச்சுப்போட்டன்.அவருக்கு நன்றி சொல்லவேணும்.ஜமால்...நிலா உங்களுக்குச் சுகம் சொல்லச் சொன்னவ.
நீங்களும் சுகம்தானே ஜமால்!

ஹேமா said...

ஆதவா...வாங்கோ வாங்கோ.
இடைக்கிடை வாறிங்கள்.பிறகு காணாமப் போறீங்கள்.தொடர்ந்து எழுதுங்கோ ஆதவா.திருத்திட்டேன் !

கோநா...வாங்கோ.கள்வன் என்றாலே மனம் கவர்ந்தவன்தானே !

ஜெ.ஜெ...காதலும் அருமை !

வேலு...சரியாச் சொல்லிட்டீங்கள்.
மனக்கதவையே மூடி வைக்கமுடியேல்ல !

சங்கவி...ரொம்பக் காலத்துக்கு அப்புறம் காதலின் பக்கம்.சந்தோஷம் !

ராதாகிருஷ்ணன் ஐயா...உங்கள் குட்டிக் கவிதைகளுக்கு நான் ரசிகை !

இந்திரா...வாங்கோ.நன்றி.

நிரூபன்...வாங்கோ உங்கட கவிதைல நான் அசந்து போனன்.இன்னும் எழும்பேல்ல !

தூயவன்...அன்புக்கு நன்றி.உங்கள் கவிதைகள் இப்பவெல்லாம் நல்ல அழகு !

தமிழரசி...சொன்னதோட விடாம அவருக்குத் தூதுவிட்டுக் கவிதை எழுதிட்டீங்களே !

தமிழ்...காதலிக்காத உயிர்களே இல்லைன்னுதான் சொல்லணும்.
ஆனால் காதல் இல்லாவிட்டால் எங்கும் சூன்யம்தானே !

அப்பாஜி...இப்பிடிப் பயமுறுத்தாம கதையும் எழுதணும் நீங்க !

பாலா...வாங்க.காதலுக்கு நேரகாலம் தேவையில்லை.எப்போதும் அதுவே காலமும் நேரமுமாய் !

வசந்தா...என்ன...
சிரிச்சீங்களாக்கும் !

பாலாஜி...வாங்க.சுகம்தானே.
அன்புக்கு நன்றி !

சாய்...வாங்க சந்தோஷம்.

அரசு...காதலில் வீரியம் களவுதான் !

றமேஸ்...மாறுதலுக்கான கவிதை பிடிச்சிருக்கு உங்களுக்கும் !

ரமணி...நன்றி நன்றி அன்பான கருத்துக்கு !

செந்தில்...நடுவில சில கவிதைகள் பிடிக்கேல்லப்போல !

சித்ரா...நன்றி தோழி !

சிவகுமாரன்...இறுக்கமான மனதிற்குள்ளும் எப்படியோ புகுந்துகொள்கிறது மெல்லிய காதல் !

ராஜவம்சம்...காதலே ஒரு போதைதானே !

சரவணன்...உங்கள் வரவுக்கு நன்றி.அடிக்கடி வரணும் !

ஹேமா said...

ரியாஸ்...அன்புக்கு நன்றி !

நசர்...என்ன ம் ம் ம்.அர்த்தம் சொல்லுங்கோ !

கௌசி...காதலும் அதே வீரத்தோடு.
அதுதான் கவிதைகளும் சோகம் வீரத்தோடு !

அரசன்...கருப்பனுக்கும் எழுதவேணும் கவிதை உங்களைப்போல !

மல்லிக்கா...என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
பார்த்தேன் நன்றி !

ராஜா...நன்றி நன்றி.விருப்பதோடு தரும் விருதுகள்தான் என்னை இன்னும் எழுதவைக்கிறது.
பாருங்களேன் நீங்கள் எங்கும் போவதில்லை என் பக்கம்
வருவதே விருதுதானே !

அஷோக்கு...சந்தோஷமா இருங்க.
ஏதாச்சும் பதிவு போடலாம்ல !

சுந்தர்ஜி...நான் பனிமலையா எரிமலையான்னு எனக்கே தெரில.இரண்டுக்கும் நடுவில தத்தளிக்கிறேனோ !

சாய்...எத்தனை அக்கறை என்னில்.நெகிழ்வோடு கை கோர்த்துக்கொள்கிறேன் !

எல்கே...ரொம்ப நாளாக் காணோம்.எனக்குச் சிரிப்பாயிருக்கு.
இவ்ளோ கவிதை எழுதிற உங்களுக்குப் புரியலயா!

ஆனந்தி...அருமையா ரசிச்சிருக்கீங்க.நன்றி தோழி !

செந்தில்குமரன்...முதல் வருகைக்கு மிக்க நன்றி !

பிரஷா...கிண்டல்தானே...உங்க காதல்கவிதைகளை என்னால் வெல்லமுடியுமா !

சந்ரு...உங்கள் கலங்கலான நிலைமைக்குள்ளூம் வந்திருக்கிறீர்கள் என் பக்கம் நன்றி !

ஸ்ரீராம்...நன்றி.எங்கே மீனு !

http://thavaru.blogspot.com/ said...

ரொம்பவும் யோசிக்க வைக்கிறீங்க ஹேமா...நல்லாருங்க...

ஹேமா said...

சத்ரியா...என்ன யப்பா....உங்க காதல் கவிதைகளை விட அதென்னன்னா...காதலை களவெடுக்கிறதுன்னா....அடுத்த கவிதைல சொல்றேன் !

லோகு...பொய் சொல்லாதீங்க உங்க காதல் கவிதைகள்ல மூச்சடைக்கிறது எங்களுக்குத்தான்.

மாதேவி...உங்க மனம் கவர் கள்வன் சுகம்தானே நீங்களும் !

நடா....கன காலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம்.உங்களுக்கும் ஜோதிஜிக்கும் கண்ல பூஞ்சணம் வருது சொல்லி என் கருப்பு டெம்லேட்டையே மாத்தச் சொல்றீங்க.எனக்குப் பிடிச்ச நிறம்.இது போட எவ்ளோ சண்டை போட்டிருப்பேன்னு இலண்டன்ல இருக்கிற 2 பேருக்கு மட்டுமே தெரியும்.சரி உங்களுக்காக மாத்தினாலும் அப்புறம் எல்லாக் கவிதைகளின் போட்டோக்கள் எழுத்துக்களின் நிறம் எல்லாமே மாத்தணுமே ...என்ன செய்ய நடா !

நடா...நிறையப் படிச்சிச்சு என்கிட்ட பரிபாடலா உளறுறீங்க.நீங்களே சொல்றீங்க பிகாசோசோன்னு.அப்போ பாக்கிறவங்க எப்பிடி நினைக்கிறாங்களோ அப்பிடித்தானே புரியும்.வசந்த் அழகா விளக்கம் தந்திருக்கார்.உங்க பதிவில விளக்கம் தந்திருக்கேன்.அதோட விளக்கம் குடுத்தா சுவாரஸ்யம் குறைஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்!

வசந்து...மிகவும் ரசிச்சேன் உங்க ரசனையை !

ஜீ...நன்றி என் ஊர்க்காற்றோடு வந்த்ததுக்கு !

விஜய்...காதல் வந்தாலே மனம் இலகுவாய்த்தானே ஆகுது !

பிரபு...நீங்க அக்கான்னு சொல்றப்போவும் சகோதர
அன்பு மனம் மிகவும்
சந்தோஷப்படும் எனக்கு !

சிபி...உங்கள் பின்னூட்டங்கள் எப்பவும் என்னைத் திருத்துகிறது.நன்றி!

மோகண்ணா...உங்களுக்குத் தெரியாத காதலா !

தங்கிலிஸ் பையா...ஆண்டுக்கு ஒரு பதிவு போடுறது.அப்ப மட்டும் வந்து உள்ளேன் ஐயா சொல்றது.அடிக்கடி வாங்கப்பா.பதிவும் போடுங்க !

போளூர் தயாநிதி said...

//எச்சரித்த திரைச்சீலை
மெல்லிசையாய்
காதில் ஜில்லென்று
புகுந்த தென்றல்
புரியவில்லை.//
அருமை அருமை.

கவி அழகன் said...

நல்ல கவிதை

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment