*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, January 29, 2011

கொட்டியாவா கோத்தாவா...

ஒவ்வொருமுறையும்
சொன்னார்கள்
"நாங்கள் இல்லை அதுதான்"என
"அது என்றால்"
தம் மொழியில்.
"கொட்டியா கொட்டியா(புலி)"என்றார்கள்.

"அட இவர்கள் நல்லவர்கள்"
கொடுத்தார்கள் ஆயுதம்
அவர்களிடமே
"கொட்டியாவைப் பிடியுங்கள்
தாருங்கள் எங்களுக்கும்"என்றார்கள்.

"நாங்கள் போதி மரத்தடியில் பிறந்து
புத்தனின் அன்புப் பால் குடித்தோம்".
கணக்குப் போடுகிறோம்...
"கணக்கெழுத
தாளும் கோலும்கூட தாருங்கள்"
என்றார்கள்.

ஒன்று...இரண்டாக
எண்ணிக்கையின் போக்கோடு
கேட்டபோது
கணக்கும் சொன்னார்கள்
அப்போது
"மோடையா(மடையா)"
என்றார்கள் இவர்கள்.

"மடப்புலி"என்றே சொல்லி
இல்லாமல் ஆக்க
இன்னும் கொடுத்தார்கள் அவர்கள்.

இன்னும் கொஞ்ச நாள் போக
"கொட்டம் அடக்கினோம்
கொட்டியாவை அடியோடு
கொன்றேவிட்டோம்"என்றார்கள்.

ஆனாலும்...
மாறா நிலைமை
கேள்விகள் கேட்க
கையைமட்டும் காட்டுகிறார்கள்
யாரையோ...
"மடையர்கள்"என்றபடி!!!


ஈழத் தமிழருக்காய் தன்னுயிர் தந்த முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது நினைவு தினத்தோடு இன்றைய கொடுமைகளையும் சுமந்தபடி....

ஹேமா(சுவிஸ்)

39 comments:

தினேஷ்குமார் said...

ரணங்கள் எங்கும் மிகுந்துள்ளது தோழி குணப்படுத்தும் மருத்துவன் பிறந்திருக்கானோ உதித்துவருவானோ நம்மில் புகுத்து விரைவானோ

Anonymous said...

தாய் தேசத்தின் சார்பில்...இந்த வரிகள் கண்கலங்க வைக்கிறது ஹேமா..கவிதைக்கு பின்னுட்டம் இட முடியவில்லை.காரணம் சாதாரண வலிக்கே அழுபவள் நான். உணர்வுகளுக்கு தலைவணக்குகிறேன்.

ராமலக்ஷ்மி said...

//மாறா நிலைமை//

ஆமாம் ஹேமா:(!

நட்புடன் ஜமால் said...

:( onnum solla yelalai

நசரேயன் said...

ம்ம்ம்

கோநா said...

ஹேமா, உணர்வுகள் கலங்கவைக்கின்றன, கவிதையின் புதிய நடை மிகவும் அருமை.

தமிழ் உதயம் said...

நாங்கள் இன்னும் எத்தனை காலம் கஷ்டப்படவேண்டும்.

வினோ said...

யார் மடையார்கள் என்று தெளிவா புரிய வைக்கறாங்க....

'பரிவை' சே.குமார் said...

மனதின் வலியை அழகாய் இறக்கி வைத்துள்ளீர்கள்...
ரணங்கள் ஆறாமல் ஆட்களை கொல்பவவைதானே...

Jerry Eshananda said...

hema i salute you.

ஸ்ரீராம். said...

யார் மடையர்கள் என்று சொல்லவில்லை..காட்டி விட்டார்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமை

Raja said...

வலிகளில் கொடுமையானது ஏமாற்றப்பட்டதின் வலி...வலிக்கவே செய்கிறது...

பவள சங்கரி said...

ஒரு நாள் கட்டாயமாக மாறும் நிலைமை ஹேமா......

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ரணங்களை தாங்கிய வரிகள்..
மனதின் வலியை இறக்கி வைத்துள்ளீர்கள்...எம் அவலம் பற்றி எனது தளத்திலும் ஒரு பதிவிட்டுள்ளேன் அக்கா..

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா நாங்கள் எங்கே எல்லாம் அர்த்தம் தெரியாமல் திண்டாடுப்\வோம் என அறிந்து அங்கங்கே நீங்களே பொழிப்புரை அழித்ததற்கு நன்றி.. சவுக்கடி சாட்டையடி வரரிகள்

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, நினைவு மீட்டலாய் கவிதை. எல்லோரும் எம் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள் என்பதனை கவிதையில் உணர்த்தியுள்ளீர்கள்.

சுந்தரா said...

உள்ள நிலைமையைத் தெளிவாகச் சொல்லியிருக்கீங்க...

கும்மாச்சி said...

இன்றைய நிலைமையை சரியாக சொல்லியிருக்கீர்கள்.

நிரூபன் said...

மடப்புலி"என்றே சொல்லி
இல்லாமல் ஆக்க
இன்னும் கொடுத்தார்கள் அவர்கள்.//


இக் கவிதை பற்றி பல் வேறு கோணங்களில் கருத்துக்களால் விமர்சனங்கள் தூவலாம். மடப் புலி என்று சொல்லி அள்ளிக் கொடுத்தத் எல்லாம் இறுதியாக தமது தலையிலே தாங்கள் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானதாக ஆகிவிட்டது. இடை நடுவில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் அன்றாடங்காய்ச்சிகள், அப்பாவி மீனவர்கள் தான் பாவம். எல்லை மீறும் பயங்கரவாத கடற்படையை கட்டுப்படுத்த முடியாத அளவில் வல்லரசு திண்டாடுகிறது. இனி சொல்லுவார்கள் கொட்டியாவும் இல்லை, கோத்தாவும் இல்லை, கடல் பூதம் என்று. கலைஞர் அடுத்த கடிதம் எழுதி விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் கடற் பூதம் தான் மீனவர் கொலைகளுக்கு காரணம் என்று போலி அறிக்கையும் விடுவார். இந்த அரசியல் வாதிகளுக்கெல்லாம் எங்கே புரியப் போகுது மனித உயிர்களின் வலி!

ஜோதிஜி said...

ஹேமா நிரூபன் முடித்த கடைசி வரி உங்கள் கவிதையைப் போல அற்புதம். இவர்களுக்கு எந்த காலத்திலும் புரியாது. புரிந்தால் அரசியல் கண்க்கு சரியாக வராது.

எனக்காக இந்த கருப்பு பின்புலத்தை மாற்றக்கூடாதா?. தரவிறக்கம் முடிந்து முழுமையாக படிக்க ஐந்து நிமிடம் ஆகின்றது.

சிவகுமாரன் said...

அவர்கள் மடையர்கள் என்று கைகாட்டுவது எங்களைத்தானே தோழி. காலங்காலமாய் பொய் வாக்குறுதிகளையும், தேன் தடவிய வார்த்தைகளையும் நம்பி .... அன்று கடல் கடந்த எம்மவரை , இன்று கரையோரத்தில் எம்மவரை என்று பறி கொடுத்துக் கொண்டிருக்கிறோமே நாங்கள் மடையர்கள் தான் .

தாராபுரத்தான் said...

மெளனம்..

VELU.G said...

இன்னும் வலிகளைச் சுமந்தபடிதான்இருக்கிறோம்

ஆதவா said...

அன்பு சகோதரி,

தமிழ் என்றால் எதிரி என்று அர்த்தம் கொண்டிருப்பவர்களிடம் ”பேசி”க் கொண்டிருந்தால் அர்த்தமில்லை..
தமிழ் எல்லாவற்றையும் வரவேற்கும்....
மரணமும்?????

போளூர் தயாநிதி said...

//ஆனாலும்...
மாறா நிலைமை
கேள்விகள் கேட்க
கையைமட்டும் காட்டுகிறார்கள்
யாரையோ...
"மடையர்கள்"என்றபடி!!!//
ரணங்கள் எங்கும் மிகுந்துள்ளது.
தாய் தேசத்தின் சார்பில்...இந்த வரிகள் கண்கலங்க வைக்கிறது

போளூர் தயாநிதி said...

Blogger நிரூபன் said...

மடப்புலி"என்றே சொல்லி
இல்லாமல் ஆக்க
இன்னும் கொடுத்தார்கள் அவர்கள்.//


இக் கவிதை பற்றி பல் வேறு கோணங்களில் கருத்துக்களால் விமர்சனங்கள் தூவலாம். மடப் புலி என்று சொல்லி அள்ளிக் கொடுத்தத் எல்லாம் இறுதியாக தமது தலையிலே தாங்கள் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானதாக ஆகிவிட்டது. இடை நடுவில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கும் அன்றாடங்காய்ச்சிகள், அப்பாவி மீனவர்கள் தான் பாவம். எல்லை மீறும் பயங்கரவாத கடற்படையை கட்டுப்படுத்த முடியாத அளவில் வல்லரசு திண்டாடுகிறது. இனி சொல்லுவார்கள் கொட்டியாவும் இல்லை, கோத்தாவும் இல்லை, கடல் பூதம் என்று. கலைஞர் அடுத்த கடிதம் எழுதி விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் கடற் பூதம் தான் மீனவர் கொலைகளுக்கு காரணம் என்று போலி அறிக்கையும் விடுவார். இந்த அரசியல் வாதிகளுக்கெல்லாம் எங்கே புரியப் போகுது மனித உயிர்களின் வலி!thriyum aiya orunal

ராஜவம்சம் said...

வலியுடனே வாசித்தேன்.

ஆனந்தி.. said...

வலி...யை ஒரே கவிதையில் கொண்டுவந்திட்டிங்க ஹேமா....

logu.. said...

unarvugal...

ellorum sirikkum naal viraivil varum.

ஆயிஷா said...

மிகவும் அருமை.

Bibiliobibuli said...

தமிழர்கள் எல்லாருமே மடையர் என்று எங்களை சுற்றி என்னென்னவெல்லாமோ நடக்குது.

ரெண்டு மூன்று நாடகளுக்கு முன் வெள்ளை வான் மர்மம் துலங்கிட்டுது எண்டு சொல்லிச்சினம். பிறகு அது அப்பிடியே அமுங்கிப்போச்சு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களின் வலியின் வீர்யம்..
என்னையும் ஆட்கொண்டது..
உணர்வை கொட்டி கவிதை படைத்திருக்கீங்க.. :(

arasan said...

தங்களின் வரிகளை படிக்கும் போதே மனம் பதைத்து போய்விட்டது ...
இந்த நிலைக்கு நம்மை ஆழ்த்திவிட்டு ஆட்சி கட்டிலில் காலாட்டும் இவர்களை என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை ...

Thenammai Lakshmanan said...

புது மாதிரி இருக்கு .. ஆனா வலி மட்டும் ஹேமான்னு காமிக்குது..

மோகன்ஜி said...

உன் வலியில் என் கண்களும் கண்ணீரை உகுக்கின்றனவே என் தங்கையே!

ஹேமா said...

நண்பர்களுக்கு நன்றியும் வணக்கமும்.இணையத்தளங்கள் சோர்வுற்றுக் கிடக்கின்றன. மனங்களும் கூட.உன்னி எழும்பினாலும் மனதால் எதுவும் முடியவில்லை.முயற்சிப்போம்.

தொடர்ந்த பின்னூட்டங்களுக்குக் கூட பதில் சொல்லவில்லை.நன்றி மட்டுமே.நேரமும் ஒரு பிரச்சனையாகிறது.எல்லோர்ர் மனதிலும் ஒரே எண்ணம்.
ஒற்றுமைப்படுவோம் தோழர்களே !

ராஜ நடராஜன் said...

//ஒற்றுமைப்படுவோம் தோழர்களே ! //

ஹேமா!எல்லோருக்கும் காயங்களும்,வலிகளும் மனதிற்குள் இருக்கின்றன.ஆனால் அதனை வெளிப்படுத்தும் போது மட்டும் தனித்தனி குழுக்களாகப் போய் விடுகிறார்கள்.எனக்கு இது இன்னும் புரியாத புதிர்.

இணையத்தில் புனைப்பெயர்களில் நிறைய பேர் பதிவிடுகிறார்கள்.யார்,என்ன பின்புலம் என்று அறிய இயலாமையினால் அவற்றிற்கான பின்னூட்டங்கள் கூட இல்லாது போய் விடுகின்றன.

குழு குழுவாகப் பயணித்தாலும் ஏதாவது ஒரு ஒற்றைக்கோட்டில் சந்தித்துக்கொண்டால் ஒழிய உணர்வுகளுக்கு விடிவில்லை.

ஒன்றுபடும் சூத்திரம் இன்னும் தெரியாமலே நானும் நிகழ்வுகளின் பார்வையாளனாக.

ஹேமா said...

நடா....இதுவே எனக்குள்ளும் இருக்கும் கேள்வியானாலும் ஆழ யோசித்துப் பார்த்தால்....இதைத்தான் கெமிஸ்ரி என்கிறதைப்போல ஒற்றையுணர்வு ஆகுமோ.

கொள்கையில் மாற்றமில்லை.ஆனால் போகும்வழி தவறு.முயற்சியின் வழி தவறு.இதனாலேயே குழுக்கள் பிரிந்து செயற்படும் காரியங்கள் வித்தியாசமாகவும் தவறாகவும் பார்வைக்குப் படுகிறது.இதில்தான் ஒற்றுமையில்லை.இங்கு ஆலோசித்து ஒற்றுமைப்பட்டாலே பாதி வெற்றி எமக்கு !

Post a Comment