*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, July 30, 2010

மேக நிறப் பூவொன்று...

மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.

என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல.
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
பேசிய வார்த்தைகள்
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்.

தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.

சேமித்த ஞாபக மிட்டாய்களின் இனிப்பை
நாவு மீண்டும்
இரை மீட்டிச் சுவைத்தபடி
தூவானமாய்
மனம் சிணுங்கிக் கொண்டாலும்
எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்.

என் வீட்டு பல்கனிப் பூக்கள் மட்டுமே
என் தவிப்பைச் சொல்ல
தலை அசைத்து முயற்சிக்கும்.

தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

60 comments:

எல் கே said...

//தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!///

nalla ioruku hema.. romba anubavichu eluthi irukeenga

sakthi said...

தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாயந்து.

என்னது பல்கனி யா

sakthi said...

தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!


நல்ல உவமை ஹேம்ஸ்

சத்ரியன் said...

//எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்...? //

ஹேமா,

பிடித்த வரிகள்.

sakthi said...

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.


இதுல வேதாளம் எங்கப்பா வந்துச்சு

VELU.G said...

//தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!
//

சோகமான ஏக்கமான வரிகள்

அருமை

sathishsangkavi.blogspot.com said...

//சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.//

ஏனோ பிடிச்சிருக்கு இவ்வரிகள்...

Unknown said...

எனக்கும் ஒரு கவிதை உண்டு...
வர'வே மாட்டாயா நீ..?..

அன்புடன் நான் said...

//தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!///

ஏன் சண்டையா?

அன்புடன் நான் said...

//எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்...? //

அலை பேசியில முயற்சித்து பாருங்களேன்.

அன்புடன் நான் said...

sakthi said...

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.


இதுல வேதாளம் எங்கப்பா வந்துச்சு//

இது சக்தி கேள்வியில்லை.... சக்திமிகு கேள்வி!

ராஜவம்சம் said...

வலமைப்போல் வலிகல் நிறைந்த ஏக்கங்கள் .

Ahamed irshad said...

No words Hema...

ஆதவா said...

மிக நீடித்த மெளத்தோடே படித்தேன் சகோதரி, இருமுறை படிக்கத் தூண்டியிருக்கிறது கவிதை.
முதல் பாராவில் முழுமையான கவித்துவம் பருகினேன்.
துடித்தேயிருப்பதால் இதயம் மெளனத்தில் அடங்காது. ஆயின் இதயமே மெளனமெனும் பொழுது அறையின் நிசப்தம் உணரமுடிகிறது.

”பாயந்து” வார்த்தையை மட்டும் ய் யன்னாவை போட்டு வைக்கவும்.

கவிதை அழகு. அது சொன்னவிதத்திலும்.

நேசமித்ரன் said...

கவிதை அழகு

ஆனால் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் ஹேமா

vinthaimanithan said...

தனிமைத்துயரில், துரோகநெருப்பில் வாடிக்கொண்டிருக்கையில் என் இதயம் பிழிந்து எழுதப்பட்டதாய் இருக்கின்றன உங்கள் வரிகள்...

அம்பிகா said...

//தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!///

ஏக்கத்தை வெளிப்படுத்தும்
அழகான கவிதை.

கொல்லான் said...

//என்றாலும்
வரமாட்டாய் நீ!!!//

நம்பிக்கை வேண்டும் ஹேமா.

வினோ said...

உன் பிஞ்சு விரல் அவன் பிடித்து நடக்க ஆசையா தோழி ?

அழகான கவிதை... மிக்க நன்றி

தமிழ் உதயம் said...

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!

நாங்கள் வந்து விட்டோமே நல்ல கவிதை வாசிக்க.

Ashok D said...

:)

நசரேயன் said...

//மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று//

இந்த கவுஜையைப் படித்தால் பாம்பு கடிக்கும்

//என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல.//

இதயம் மவுனமா இருந்தா மண்டையப் போட்டுரோவோம்.

//
தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.//

குழந்தையைப் பார்க்கம கவுஜ எழுதினா

//
தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!.//

வந்தா இப்படி கவுஜை எழுதுதியே காலி பண்ணிடுவீங்கன்னு தெரியும் போல

ஜோதிஜி said...

கருப்பை இருட்டு
படிப்பை பார்த்த பயந்த காலம் இருட்டு
வாழத் தொடங்க இருட்டு
வந்து பழகிய மனிதர்களும் இருட்டு
குருட்டு உலகமடா என்று தேற்றி
வானம் வெளித்து விட்டது
என்று ஒவ்வொரு முறையும் உள்ளே வர பின்னும் இருட்டாய்
முன்னும் இருக்கிறது?

ஏன் தோழி?

சௌந்தர் said...

தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!//

ஹேமா இப்படி கவிதை எழுதியும் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்

சிநேகிதன் அக்பர் said...

ஏக்கம் கவிதையில் தெரிகிறது ஹேமா.

Karthick Chidambaram said...

//தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!///

உங்கள் கவிதைகள் இதயத்திற்கு மிக நெருக்கமாய் உள்ளன. மீண்டும் அழகான கவிதை.

Riyas said...

ம்ம்ம்ம் நன்றாக இருக்கிறது...

//சேமித்த ஞாபக மிட்டாய்களின் இனிப்பை
நாவு மீண்டும்
இரை மீட்டிச் சுவைத்தபடி// அடடா..

இந்த மிட்டாய் எங்கல்லாம் பயன்படுகிறது..

நீ.. திருவிழா
உன் மிட்டாய்களுக்காய்
அடம்பிடிக்கிறது
குழந்தை மனசு.. இது நான் எப்பவோ கிறுக்கியது உங்க கவிதைய பார்த்ததும் இது ஞாபகத்திற்கு வந்தது.

சீமான்கனி said...

//தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!.//

இந்த உவமையும் கவிதை பயணிக்கும் விதமும் அழகோ அழகு வாழ்த்துகள் ஹேமா...

Chitra said...

சேமித்த ஞாபக மிட்டாய்களின் இனிப்பை
நாவு மீண்டும்
இரை மீட்டிச் சுவைத்தபடி
தூவானமாய்
மனம் சிணுங்கிக் கொண்டாலும்
எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்.


..... sweet!!!!!!! ரசித்தேன்!

ReeR said...

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!
==========

மன ஆழத்தில் பதிந்து போன வரிகளோ?




படுகை.காம்

பா.ராஜாராம் said...

தலைப்பையே சுத்தி சுத்தி வர்றேன் ஹேமா. எவ்வளவோ நிறங்கள் இருக்கலாம். மேக நிறம்!

கொஞ்சூண்டு கடன் தாப்பா.

கோவை குமரன் said...

//என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல.//

நல்ல வரிகள் ...

ஸ்ரீராம். said...

வரி வரியாய் ரசிக்க முடிந்தது...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி முகம் கவிழ்க்கிறது வேதாளம்./

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வருகிறேன் ஹேமா. இனித்தான் உங்கள் முன்னைய பதிவுகள் படிக்க வேண்டும். பாடசாலை விடுமுறை, விருந்தினர், பயணம் என்று பல சோலிகள் இணையப் பக்கம் வர விடவில்லை. இந்தக் கவிதை பிடித்திருக்கிறது. ஆனால் இந்த வேதாளம் திரும்பத் திரும்ப முருங்க மரம் ஏறுவது தான் பிடிக்கவில்லை. ஒரேயடியாய் அதைத் துரத்தப் பாருங்கள். முகம் கவிழ்க்கிறது வேதாளம்./

கலா said...

மீண்டும் விரல் கடித்துப் போனது
எறும்பு ஒன்று.\\\\\\\
முதல் வலியையே தாங்க,மறக்க...
முயற்சிக்கும் போது..
மீண்டும் வலிதர முயற்சிக்கும்....!!?


என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல\\\\\
{ஹேமா இம் மூன்று வரிகளுமே!
மூவாயிரம் கதை சொல்லும் போது}

நம் இரு கை இணைந்த அந்தநேரம்....
நடந்ததை, மறந்த நீ
இப்போது நான் எது சொன்னாலும்
நடந்தவைகளை மறந்து நீ
ஆடும் நாடகத்தைப் பார்த்து ....
எது பேசியும் பயனில்லையென்று...
பேசாமல்,ஊமையாய்...
என் இதயம் இருக்கப் பழகிவிட்டது

{எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
பேசிய வார்த்தைகள்
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்}
இவ்வரிகள் வெறும் வர்ணனைதான்!

கலா said...

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.\\\\
வாவ்....
திரும்பவும் வருவாய்,கிடைப்பாய்
என.. நான் நினைக்காமல் இருந்தாலும்,
உன்னை நினைத்த, நினைக்கும்
பாழாய்ப் போன மனது
திரும்பவும் வருவாயென.........


முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.\\\\\\\
பகலொரு வேஷம்,இரவொரு வேஷம்
மாறிமாறி{நினைக்காதே,நினை}
என் மனதில் தொங்கி ஆடுகிறது
உன் நினைவு

Anonymous said...

//உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
பேசிய வார்த்தைகள்
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்//

kagitham mattumey kasangum varthaigal mudangi thaan erukum muzhithukollum kathu iru thozhi.....

ஜெயா said...

தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.

அத்தனையும் அழகு வரிகள்......

Thenammai Lakshmanan said...

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.//

இது அருமை ஹேமா.. மேலும் நேசன் சொன்னதுபோல அத்தம் இருந்து இருக்கலாம்..

பிரபாகர் said...

பால்கனிப்பூக்கள் தவிப்பைச் சொல்லல் அருமை...

பிரபாகர்...

ரிஷபன் said...

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்
ஆஹா!

விஜய் said...

மீண்டும் மனம் கடித்துப் போனது
ஹேமாவின் கவிதை ஒன்று.

விஜய்

மாதேவி said...

"என் வீட்டு பல்கனிப் பூக்கள் மட்டுமே
என் தவிப்பைச் சொல்ல
தலை அசைத்து முயற்சிக்கும்".

அருமை ஹேமா.

தூயவனின் அடிமை said...

சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.

என்ன சொல்வது, எல்லாவற்றிக்கும், ஒரு தீர்வு உண்டு. மிக்க அருமை.

Muniappan Pakkangal said...

Nice Kavithai with nice photo Hema.

பித்தனின் வாக்கு said...

good. i like it very much.

அ.முத்து பிரகாஷ் said...

மீண்டும் மீண்டும் ஸ்க்ரோல் செய்து படித்துக் கொண்டே இருக்கிறேன் ...
உங்கள் வரிகள் என்னுள்ளிருக்கும் தனிமையை மேலும் மேலும் அடர்த்தியாக்குகின்றன...
அடர்த்திகள் அதிகரிக்க அதிகரிக்க அதை தூக்கி எறிவதும் எளிதாயிருக்கிறது ...
எனது நன்றிகள் தோழர் !

மேவி... said...

ஹேமா உண்மையை சொல்லவேண்டுமானால் கவிதை எனக்கு புரியவில்லை ..ஒருவேளை பொறுமையா படித்தால் புரியும்ன்னு நினைக்கிறேன்

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

பித்தனின் வாக்கு said...

Still not come out of this stress???.

Why?.

thamizhparavai said...

kavithai super hema../.. rasithaen

ReeR said...

உங்களது சுதந்திர தாகக் கவிதையின் பின்னுட்டம் எமது வலை தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது...

பார்க்க : http://forum.padukai.com/post8012.html#p8012

இவன்
படுகை.காம்

சுஜா செல்லப்பன் said...

அருமையான கவிதை....உண்ர்வுகளைக் கொட்டும் வரிகள்.......

அப்பாதுரை said...

பிரமாதம்..உங்கள் கவிதையும் ஞாபக மிட்டாயாக இருக்குமென்று நினைக்கிறேன்..

ஜோதிஜி said...

ஹேமா ஒரு பெரிய ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் இடுகைக்கு வரும் அத்தனை பின்னோட்டங்களும் மின் அஞ்சல் வாயிலாக படித்துக் கொண்டே இருக்கின்றேன். நீங்கள் 15 நாளைக்கு ஒரு முறை பதிவு எழுதினாலே போதுமானது. மக்கள் சலிக்காமல் வந்து கொண்டு பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தாக்கம் அதிகம்
நட்புகளும் அதிகம்.

வேறென்ன வேண்டும் உங்கள் ஆளுமைக்கு.

என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் கவிதைகளை விட அந்த சரளமான எழுத்து நடை தான் பெரிதாக தெரிகின்றது.

பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் (?) புரிகின்றதா?

முனியாண்டி பெ. said...

//ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்.//

எல்லா காதலிலும் நிறையே காகிதம் கசந்கியிருக்கும் அதை அழகாக கோடிட்டது அருமை
நான் உங்களை தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.

http://adisuvadu.blogspot.com/2010/08/blog-post_07.html

ராமலக்ஷ்மி said...

அருமை ஹேமா.

பத்மா said...

வாராமல் இருக்கும் இடத்தை தான் தேடி அலையும் மனம் ..வாழ்கையின் விசித்திரம்.. பூவோடு மனமும் மலரட்டும் ஹேமா

கவிநா... said...

""தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!""

அருமை அருமை தோழியே...

logu.. said...

\\தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.

என்றாலும்
வரமாட்டாய் நீ!!!\\

Rasithen..

Post a Comment