*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 23, 2010

மா(ற்)றாத கவிதை...

"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு ​தொ​லைத்த வானம்
அ​ழைப்புக்கு ஏங்கும் ​தொ​லை​பேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்​டோ
எழுத மறந்த கவி​தை

ம்ம்ம்.....
மறந்த கவி​தை​யே இன்று
என்னிடம்
கவி​தை வாசிக்கப் பணிக்கிறது.
முகமற்ற அல்லா-வாக
முதலில் இருந்தாள்.
நான் முஸ்லிமாக
அவ​ளைத் ​​தொழு​தேன்.

இன்று.....
முகில் சுமந்த ம​ழையாக
எந்த மதத்தில்
என்​னைச் ​சேர்க்க என்று ​தெரியாமல்
அவளின் ​பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகி​றேன்.

ஒற்றை எழுத்துக்கூட மா(ற்)றாமல்
எழுதுகிறேன் உன் வரிகளை
மா(ற்)றிக்கொண்ட
உன்னை நினைத்து!!!

ஹேமா(சுவிஸ்)

41 comments:

Ashok D said...

நல்லாயிருக்குங்க... முதல் பத்தி மிகவும் நன்று :)

நட்புடன் ஜமால் said...

முகமற்ற அல்லா-வாக
முதலில் இருந்தாள்.
நான் முஸ்லிமாக
அவ​ளைத் ​​தொழு​தேன்.]]

விளங்கலையே ...

நட்புடன் ஜமால் said...

எழுத்துகள் இருண்ட என் சாட் விண்டோ

அருமை ஹேமா!

நேசமித்ரன் said...

:)

காதல் சொட்டுது முதல் பத்தியில்

சௌந்தர் said...

யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு ​தொ​லைத்த வானம்
அ​ழைப்புக்கு ஏங்கும் ​தொ​லை​பேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்​டோ
எழுத மறந்த கவி​தை

கவிதை சூப்பர்...

ஸ்ரீராம். said...

எழுதாத கவிதை முகமற்ற அல்லா ஆனால் எழுதப் பட்டபின் அதை வகைப் படுத்தப் பார்க்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்...இப்படிதான் எனக்குப் புரிகிறது..முகில் சுமந்த மழை போன்ற வரிகள் கவர்கின்றன.

தமிழ் உதயம் said...

கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் புரிந்து கொள்ள முடிகிறது.

Ahamed irshad said...

நல்லாயிருக்கு ஹேமா...

பா.ராஜாராம் said...

அற்புதம் ஹேமா! ரொம்ப பிடிச்சிருக்கு.

ரிஷபன் said...

யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு ​தொ​லைத்த வானம்
அ​ழைப்புக்கு ஏங்கும் ​தொ​லை​பேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்​டோ
எழுத மறந்த கவி​தை
முதல் பத்தி சூப்பராய் ஆரம்பித்து ஸேஃபாய் லேண்ட் ஆகிவிட்ட கவிதை..

Ramesh said...

முதல் பகுதி அருமை
மற்றயது விளங்கல ஏன் என்று
கவிதை கவிதையாகிறது

அத்திரி said...

present

Jerry Eshananda said...

ஹேமா,இங்க கோடம்பாக்கத்துக்கு வந்து கவிஞர் தாமரைக்கு போட்டியா நீங்களும் எழுதலாமே.

settaikkaran said...

ம்! நல்லாயிருக்கு! :-)

கவி அழகன் said...

நல்லாயிருக்கு ஹேமா!காதல்பத்தி

Unknown said...

//என்​னைச் ​சேர்க்க என்று ​தெரியாமல்//

ஒரு காதல் தடம் மாறியபோது ..
வலிகள் மாறுமோ.. ?

- இரவீ - said...

அப்பா......டா... ரொம்ப பேருக்கு புரியல... எனக்கு மட்டும் புரியலனு எவ்லோ முறை வாங்கி கட்டிக்கிறது...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான கவிதை

rajasundararajan said...

முதல் பத்தி உண்மையிலேயே அருமை! கவிதையும் அங்கேயே முடிந்துவிட்டது.

//முகமற்ற அல்லா x முகில் சுமந்த மழை// ?!

'அவன் கருணை மிக்கவன்' என்று முடியும் வசனங்களே திருக்குர்ஆனில் மிகுதியும்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நல்லாயிருக்குங்க

meenakshi said...

//அழைப்புக்கு ஏங்கும் என் தொலைபேசி
எழுத்துக்கள் இருண்ட என் சாட் வின்டோ//
ம்ம்ம்ம்.... கலக்கறீங்க! எப்படிதான் இந்த மாதிரி உங்களுக்கு எழுத தோன்றதோ! சில நேரம் ரொம்பவே பொறாமையா இருக்கு ஹேமா, நீங்க கவிதை எழுதற அழகை பாத்து.

கலா said...

"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு தொலைத்த வானம்
அழைப்புக்கு ஏங்கும் தொலைபேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்டோ
எழுத மறந்த கவிதை\\\\\\\\\


ஹேமா புரிகின்றது,புரிகின்றது அதைப்
பின்னோட்டத்தில் இட மாட்டேன்
தனியாகப் பேசிக்கிறேன்.

“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான்
பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ
போய்த் தூது சொல்ல மாட்டாயோ!

கலா said...

முகமற்ற அல்லா-வாக
முதலில் இருந்தாள்.
நான் முஸ்லிமாக
அவளைத் தொழுதேன்\\\\\\\


அவள் முகம் ஒரு அழகான பிறை
நிலவாய்த்தான் தோன்றியது{அதில்
முகம் தெரியவில்லை}
அந்த அழகில்,வியப்பில்,தெய்வீகத்தில்
கடவுளை அங்கு கண்டேன்.
அப்படியிருந்தவளிடம்.........


இன்று.....
முகில் சுமந்த மழையாக\\\\\
சோகமோ,பிரிவோ,வேதனையோ,உயிர்ப்
பலியோ..இன்று இப்படியொரு
மாற்றம் ஏற்பட..உன் வதனவிழிகளிலிருந்து
வழிவது!? எதனால்??


எந்த மதத்தில்
என்னைச் சேர்க்க என்று தெரியாமல்
அவளின் பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகிறேன்\\\\

அன்று தெய்வமாய்த் தோன்றினாள் வணங்கினேன்
{பாச..பக்தியுடன்}
இன்று திக்கற்றவளாய்ச்...சிதைந்து நிற்பவளை,
எந்த மத அடையாளங்களும் இன்றி
இருப்பவளைப் பார்த்து நான் குழப்பத்தில்
திணறுகிறேன்.......

மா(ற்)றிக்கொண்ட
உன்னை நினைத்து\\\\

ஹேமா உன் எழுத்துக்கு என் கற்பனை
“இது எப்படி இருக்கு”???

Nathanjagk said...

கவிதை நல்லாயிருக்குங்க ஹேமா!

அதிலும் காதலி பெயரில் புதிதாக மதம் தொடங்குவேன் என்று முழங்குகிறார் பாருங்கள்..
அங்கே ஜெயிக்கிறார் காதலர்!!
நானும் கூட மதம் மாறலாமா என்று யோசிக்கிறேன் :))))
வாழ்த்துக்கள்!

சிவாஜி சங்கர் said...

ஹேமா :)))

ஹேமா :?

ஹேமா :)

ஹேமா :))

சுந்தர்ஜி said...

மாறாக் காதல் பற்றிய மாறும் மொழிக்கவிதை.சபாஷ் ஹேமா.

பித்தனின் வாக்கு said...

Good and interesting

ஜெயா said...

யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு தொலைத்த வானம்
அழைப்புக்கு ஏங்கும் தொலைபேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் விண்டோ
எழுத மறந்த கவிதை.......

அழகான கவி வரிகள். இது உங்களால் மட்டும் தான் முடியும் ஹேமா. வாழ்த்துக்கள்..

சத்ரியன் said...

குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன் ஆண்ட்ட்டி!

நசரேயன் said...

//"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு ​தொ​லைத்த வானம்
அ​ழைப்புக்கு ஏங்கும் ​தொ​லை​பேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்​டோ
எழுத மறந்த கவி​தை//

படிக்க மறந்த வாசகர்கள்
பின்னூட்டம் போட மறந்த விமர்சகர்கள்
ஆட்டோ அனுப்பிய அன்பர்கள்

//
ம்ம்ம்.....
மறந்த கவி​தை​யே இன்று
என்னிடம்
கவி​தை வாசிக்கப் பணிக்கிறது.//

ஏன்னா எனக்கு வேற வேலை இல்லை ?

//
இன்று.....
முகில் சுமந்த ம​ழையாக
எந்த மதத்தில்
என்​னைச் ​சேர்க்க என்று ​தெரியாமல்
அவளின் ​பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகி​றேன். "//

அந்த மதத்துக்கு பேரு கீழ்பாக்கமா ?

//
ஒற்றை எழுத்துக்கூட மா(ற்)றாமல்
எழுதுகிறேன் உன் வரிகளை//

நான் ஒரு பையித்தியம் என்றா ?

VELU.G said...

//எந்த மதத்தில்
என்​னைச் ​சேர்க்க என்று ​தெரியாமல்
அவளின் ​பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகி​றேன்.
//

இன்னொரு மதமா நாடுதாங்காது சாமி

கவிதை அழகு

Madumitha said...

அவளின் பெயரில் புதிதாய்
ஒரு மதம் தொடங்குகிறேன்.

நன்றாக இருக்கிறது ஹேமா.

விஜய் said...

நல்லா இருக்கு ஹேமா

அதான் பின்னூட்ட சுனாமி எல்லாமே சொல்லிட்டாங்களே

நான் என்ன சொல்ல

வாழ்த்துக்களுடன் விஜய்

பத்மா said...

மறந்த கவி​தை​யே இன்று
என்னிடம்
கவி​தை வாசிக்கப் பணிக்கிறது.

இது இது தான் உச்சம்
வாழ்த்துகள் ஹேமா !
அனைத்திற்கும்

நிலாமதி said...

பூக்கள் மறந்த தாவரம்..

இனிக்க மறந்த கரும்பு ..
.மலர விரும்பும் அரும்பு......
..அழகான் கவித்துவமான கவிதை

அன்புடன் நான் said...

சத்ரியன் said...
குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன் ஆண்ட்ட்டி!//

குழம்பிப்போய் ... மறுபடியும் வர்ரேன்... அக்கா.

ஹேமா said...

அஷோக்....முதல் வருகைக்கு நன்றி லோகிக் குட்டிக்கு.


ஜமால்...உருவமற்ற
கடவுள்போல காதலி !


நேசன்...காதலின் ரசிப்பு பின்நவீனத்திடமும்


சௌந்தர்...வருகைக்கு நன்றி


ஸ்ரீராம்...ஓரளவு புரிந்திருக்கிறீர்கள் என்னை...கவிதையை.


தமிழ்...என்ன தமிழ்.இதுதான் காதல்


இர்ஷாத்...அன்புக்கு நன்றி.


பா.ரா.அண்ணா...இந்தக் கவிதையைப் பிடிச்சிருக்கு சொன்னீங்களே !


ரிஷபன்...அழகாச் சொன்னீங்க.


றமேஸ்...போகப்போக
விளங்குமடா தம்பி.


அத்திரி...எங்கே ஆளயே காணோம்.உங்க ஆனந்த்தும் தான்.


ஜெரி....கிண்டல்.இருங்க இருங்க.


சேட்டை...இது சேட்டையல்ல காதல்.முதல் வருகை.நன்றி.


யாதவன்...நன்றி என் ஊர்க்காற்றுக்கு.


செந்தில்...காதல் முகம் தெரியாத வரைக்கும் குழப்பம்தான்.


ரவி...குழப்பம் = இரவீன்னு
சொல்லி ரொப்பக் காலம்.


ஸ்டார்ஜன்...குழப்பமில்லத ஒரு ரசிகன் நீங்க.


ராஜ சுந்தரராஜன்...உங்கள் வருகைக்கே என் சந்தோஷம்.
அன்புக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.நேசனின் கவிதைக்கும் என் கவிதைக்கும் எட்டாத் தூரம்.


நண்டு...தொடர்ந்த அன்புக்கு
என் நன்றி தோழரே.


மீனு...உங்க ஓவியத்தைவிடவா
என் கவிதை அழகு.


கலா...கலா வத்தி வைக்கதீங்க.
பிறகு ஊதுவத்தி கலா வாயிடுவீங்க.
சொல்லிட்டேன்.அபாரம்
மொழிபெயர்ப்பு.
புரிதல் என்ன சொல்வேன்.


ஜே...மதம் மாறணும்ன்னா வீட்ல சொல்லணும்.சொல்லியாச்சா.
கவிக் கைகளுக்கு நன்றி.


சிவாஜி...உங்களைக் கண்டு நான்தான் பிரம்மிக்கிறேன்.
என்னிடம் என்ன !


சுந்தர்ஜி...உங்கள்
ஆசீர்வாதங்கள் என்றும் எனக்கு.


சுதா...பித்தன் இன்னும் லீவு முடியலயா.என்றாலும் மறக்காத அன்புக்கு நன்றி.


ஜெயா...உங்கள் அன்புக்கு என் எழுத்துக்கள்தான்.உப்புமடச் சந்தி இப்போ வஞ்சகமில்லாமல்.
சந்தோஷமா தோழி.


சத்ரியா...நான் ஆண்டியா.கண்ணை நோண்டி காக்காக்கு போட்டிருவேன்.
காதல் கருவாயனுக்கு கவிதை விளங்கலியாம்.


நசர்....சொல்ல ஒற்றைச்சொல் கூட இல்ல.அவ்வளவு அருமை உங்க பழிப்புரை.எப்பிடித்தான் முடியுதோ !


வேலு...எங்க அப்பா பெயர்.
உங்களுக்கு தனிப்பட்ட மரியாதை.


மது...ஒற்றை வரியில் நீங்கள் சொல்லும் கவிதைகளும் அருமைதானே.


விஜய்...என்னாச்சு இவ்ளோ தாமதமா !


பத்மா...அன்பின் உச்சத்தில் வார்த்தைகள் உண்மையாயிருக்கும் !


நிலா....காதல் தத்துவம் வாழ்வின் முக்கியமும் கூட.


அரசு...எப்ப இருந்து நான் அக்காவானேன் .சரி சரி தம்பி.
கவிதை புரியலன்னு சொல்றதுக்கு அக்கா.....ஆண்டி !

கலா said...

சத்ரியா...நான் ஆண்டியா
கண்ணை நோண்டி காக்காக்கு
போட்டிருவேன்.
காதல் கருவாயனுக்கு கவிதை
விளங்கலியாம்\\\\\\

ஜய்யோவ் இது உனக்குத் தேவையா?
இதுதான் குடுத்து வாங்கிறது
சின்னஞ் சிறுசுகளை போய்
ஆன்டி,மான்டி என்றுகிட்டு...

இந்தக் கண்ணைப் புகழ்ந்த வாயால்..
இப்படியொரு இனிப்பான,புகழ்சியான
மொழியைக் கேட்டு இன்று மிகமிக
மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
என் அருமைத் தோழியே!

உங்களுக்கு வடை,பாயாசத்துடன்
சாப்பாடு ஹேம்ஸ்.....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ஹேமா... அழகான வார்த்தை கோர்வை..அதிலும் அவளின் ​பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகி​றேன். ரெம்ப அழகா இருக்கு....

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

அன்புடன் மலிக்கா said...

காதலே மாயம் அப்படியா தோழி..

விருது கொடுத்திருக்கேன் வந்து வாங்கிக்கோங்க..http://niroodai.blogspot.com/2010/06/blog-post_02.html

Post a Comment