*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 04, 2010

62 வருட சுதந்திரமாம்...

கம்பி வேலிகளுக்குள்
பசியின் அரட்டல்கள்
பசி உணர்வோடு
நீட்டிய கையில்
வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய் !

இது ஓர் சுதந்திரமாம்.அதுவும் அறுபத்திரண்டாம் !

செருகிய கிடுகு வேலிக்குள்
வேண்டுகோள்கள் விருப்பங்கள்
விண்ணப்பங்களாகி
பத்திரமாய்
கரையானுக்கும்
கணவனுக்கும் காட்டாமல்
இமைவரை அழுத்தி மை பூசி
மறைத்தபடி
சுதந்திர தேசத்து அதிர்வில்
அடுப்படிப் பாத்திரங்கள்
உருண்டு விழ
"சத்தம் கேட்டால் எழும்பிக் கத்துவார்"
மனதிற்குள் முணகியபடி
உணர்வுகள் முடங்க முறிய
சத்தங்களை சு(ச)கித்து
தொட்டிலோடு சேர்ந்தாடும் சுதந்திரப் பெண் !

இதுவும் ஓர் சுதந்திரம் !!!

வாழ்த்துக்கள் மனங்கள் நினைத்தபடி வாழ்வும் அரசியலும் நகர !

ஹேமா(சுவிஸ்)

22 comments:

sathishsangkavi.blogspot.com said...

//கம்பி வேலிகளுக்குள்
பசியின் அரட்டல்கள்
பசி உணர்வோடு
நீட்டிய கையில்
வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய் !//

மனது ஏனோ அமைதியாகிறது எதுவும் பேச இயலாம்....

கவிதை...............

க.பாலாசி said...

//வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய்//

இந்த நிலை என்று மாறுமோ??

சத்ரியன் said...

ஹேமா...................... ஏம்மா?

விஜய் said...

வன்முறை காமுகனிடம் பெண்மை அடைபட்டு கிடக்கும் சுதந்திரம்

வேலியின் வலி

விஜய்

Jerry Eshananda said...

வாழ்த்த வார்த்தைகள் இல்லை..

ரிஷபன் said...

துயரின் வலிகளுக்கு எல்லை எதுவரை?

கலா said...

ஹேமா !!
நாட்டுக்கும்,பெண்ணுக்கும் சுதந்திரம்
இந்த ஜென்மத்தில் கிடைக்காது.......
அடுத்து வந்தாலும் தொடர்கதைதான்!!
.
\\\\\ கம்பி வேலிகளுக்குள்
பசியின் அரட்டல்கள்
பசி உணர்வோடு
நீட்டிய கையில்
வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய் !\\\\\\

ஹேமா நீங்கள் இவைகள் அனைத்தையும்
அனுபவிக்காமல்....
உணர்ந்தவை! அனுபவித்தவர்களுக்கு...!!
ஏன்?பிறந்தோம்! அதிலும்... தமிழினமாய்!அதிலும்...
ஈழத்தில்! அதிலும்..பெண்ணிணமாய்!!

அண்ணாமலையான் said...

நல்லது சீக்ரம் நடக்கட்டும்...

துபாய் ராஜா said...

வலி தந்த வரிகள்... :((

நேசமித்ரன் said...

அடர்த்தியான சோகம் நெஞ்சில் அப்பிக் கொள்கிறது

சின்னப் பையன் said...

:-((((

ஸ்ரீராம். said...

என்ன திடீரென இப்படி ஒரு கவிதை ஹேமா?

கண்ணகி said...

வேதனை வரிகள்.

ஜெயா said...

”கம்பி வேலிகளுக்குள்
பசியின் அரட்டல்கள்
பசி உணர்வோடு
நீட்டிய கையில்
வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய்”

இது ஓர் சுதந்திரமாம் அதுவும் அறுபத்திரண்டாம்......

காலத்தின் தேவைக்கு ஏற்ற பதிவு.

ஹேமா said...

இன்று இலங்கையின் சுதந்திர தினம்.இலங்கை அரசியல் அல்லது எங்கள் அரசியல் பேசப் பிடிக்கவில்லை இப்போ எல்லாம்.ஏதோ நினைவில் மட்டும் நிற்கிறது சில சம்பவங்கள் அல்லது அந்தத் தினங்கள்.

அதனாலேயே இந்தக் கவிதைக்குள் இலங்கையின் சுதந்திரத்தையும் கலா சொன்னதுபோல என்னதான் பேசிக்கொண்டாலும் என்றுமே சுதந்திரம் கிடைக்கப்பெறாத பெண்ணையும் இணைத்துக்கொண்டேன்.

இதில் யார்மீதும் கோபம் இல்லை எனக்கு.பெண்ணைப் பொறுத்த மட்டில் தேவையான இடத்தில் தனக்காகக் கதைத்து தானும் சுயகட்டுப்பாட்டில் வாழும் ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் யாருமே கொடுக்கவும் வேணாம்.வாங்கவும் வேணாம் என்பதாய்த்தான் என் கருத்து.

சங்கவிக்கு நன்றியும் சந்தோஷமும்.

நன்றி பாலாஜி.சில மாற்றங்கள் மாறாது இலங்கையில் !

சத்திரியன்... ஏம்மான்னா என்ன?தெரியும்தானே !

விஜய் வாழ்த்துச் சொல்ல வேண்டிய தினத்தில் வலியோடுதானே !

ஜெரி....வாழ்த்த என்ன கிடக்கு.விடுங்க !

ரிஷபன்...ஈழத் தமிழனுக்கு துயரம் எல்லை கடந்தது !

கலா...என் மண்ணின் வேதனை அனுபவிக்காவிட்டாலும்
உணர்கிறேன்.வலி முழுமையாய் உணர்கிறேன் தோழி.

நன்றி அண்ணாமலை.சீக்கிரமா...எங்கே !

வாங்க ராஜா.வலியோடுதானே வாழ்க்கை ஈழத்தமிழனுக்கு !

நேசன்....என் சோகம் உங்களை அப்பிக்கொள்ளாமல் இருக்கணும்.உங்க கவிதைகளைச் சந்தோஷமா வாசிக்கணும்.

சின்னப்பையா...என் பக்கம் நடந்து வந்தீங்களா தவழ்ந்து வந்தீங்களா ?இன்னும் பேச்சு வரலியா !
வந்ததுக்கு நன்றி !

ஸ்ரீராம்....பாத்தீங்களா எங்க நாட்டுச் சுதந்திர தினமே உங்களுக்குத் தெரில.ஒண்ணும் திடீர்ணு இல்ல !

கண்ணகி எதுக்கு வேதனை.
விடுங்க.பாக்கலாம் எதுவரைன்னு !

ஜெயா...எங்கள் உணர்வோடு மரத்துவிட்டாலும் மனதோடு புரையோடிருக்கும் வலிதானே
எங்கள் வாழ்வு !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

படித்தேன் ஹேமா. என்ன தான் சொல்வது ?முடிவு தெரியாமல்...

Anonymous said...

சுதந்திரம்னா அது அவங்களுக்கு மட்டும்தானே. தமிழர்களுக்கு இல்லியே
:(

செந்தில் நாதன் Senthil Nathan said...

வாழ்க்கையின் உண்மை வலியை அழகாய் சொல்கிறது கவிதை..

இதை இறந்த காலத்தில் எழுதும் நாள் வரவேண்டும்...வருமா?

Ashok D said...

வாழ்க சுதந்திரம் :(

பித்தனின் வாக்கு said...

சுதந்திர கவிதைகளில் கூட எவ்வளவு சூட்சமான வார்த்தைகள். ரொட்டி கொடுக்கும் கைகளில் கூட காமம் என்பது கொடுமையான விசயம். கடவுளின் கேவலம் இது.

மேவி... said...

:(

மதுரை சரவணன் said...

ungkal vali viraivil theerum. vidiyal orunaal undu nanbikkai than namakku marunthu. marnathu irunthu vidaamal parthuk kollungkal. suthanthiram viraivil ... ungkalai ponru vidiyalukkaaka ...

Post a Comment