*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, February 12, 2010

க.க.க.போ காதல்...

புரியாத்தனமும் எழுத்துப்பிழைகளுமே
உன்னிடம் என்னைத் தந்துவிட்டுப் போயின.
உன் விரட்டும் விரல்களைப்
பற்றிக்கொள்வதற்காகவே
வந்து வந்து சேட்டை செய்யும்
பிள்ளைப்பூச்சியாய் ஒளிந்துகொள்கிறேன்
உனக்குள்ளே.

என்னை வழி நடத்தும் தாயாய்
கை பிடித்துச் செல்லும்
குழந்தையாய் உன் நிழல்.
அதற்குள்....
முகம் காணத் தவித்திருந்த தருணத்தில்தான்
மழையும் முகிலும்
உன் நிழலை ஏந்திக் கலை(ந்)த்தன

ம்ம்ம்....
பார்த்தபோதும்
வார்த்தைகள் வரப்போவதில்லை.
வெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.
அப்புறம் எப்பிடி !
இருந்தும் பகல்களும் சில இரவுகளும்
என்னோடு உன் கதை பேசி விழித்தபடி.

மௌனம் உலர்ந்து
கை தொட நினைக்கையில்
மீண்டும் அந்த முகிலோ மழையோ
நனைத்து மறைத்து வைக்கலாம்
உன்னை.
உன்னையும் என்னையும் பிரிக்கும்
சதிக்கூட்டத்தை
கொலை செய்யக்
காத்திருக்கையில்தான்
எப்போதும்போல உன்னுடனான
அந்தச் சண்டை வலுத்துக்கொண்டது.

என்றாலும்
நீ....
என்னைத் திட்டித் திட்டி
தப்பு தப்பாய் சுழிகள் குறைந்த
ன்...ண் க்களும்
முற்றில்லாக் குற்றுக்களுமாய்
எழுதிய கவிதையே
அந்தக் கொலைகளை
காப்பாற்றிப் போயின.

வளரும் எம் காதல் போலவே
மீண்டும் மீண்டும் தொடரும்
அழகான உன் எழுத்துப் பிழைகள்.
இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!

ஹேமா(சுவிஸ்)

43 comments:

Ashok D said...

யாரது ஹேமா? எனக்கு மட்டும் சொல்லவும்...

ஒன்னு தெரியுமா இது நல்லாயிருக்கு... அட நெசமாலும்தான்

சுண்டெலி(காதல் கவி) said...

///நீ....
என்னைத் திட்டித் திட்டி
தப்பு தப்பாய் சுழிகள் குறைந்த
ன்...ண் க்களும்
முற்றில்லாக் குற்றுக்களுமாய்
எழுதிய கவிதையே
அந்தக் கொலைகளை
காப்பாற்றிப் போயின.///


pattaasu...

துபாய் ராஜா said...

//ம்ம்ம்....
பார்த்தபோதும்
வார்த்தைகள் வரப்போவதில்லை.
வெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.
அப்புறம் எப்பிடி !
இருந்தும் பகல்களும் சில இரவுகளும்
என்னோடு உன் கதை பேசி விழித்தபடி.//

//வளரும் எம் காதல் போலவே
மீண்டும் மீண்டும் தொடரும்
அழகான உன் எழுத்துப் பிழைகள்.
இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!//

க.க.க.போ காதல்... :))

அருமை ஹேமா. இது...இது.. இதைத்தான் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்ககிட்டே.....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாயிருக்கு ஹேமா. புடிச்சிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை ஹேமா

Anonymous said...

எழுத்து பிழையினுடே பிழைத்த பிழையில்லாக் காதல் பிடிச்சிருக்கு ஹேமா....

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தல் கவிதை...

யாரந்த அதிர்ஷ்டசாலி ஹேமா?

- இரவீ - said...

க.க.க.போ :))

அருமை ஹேமா.

தமிழ் உதயம் said...

எல்லோருக்குமே எழுத்து பிழைகளுடன் தான் காதல் கடிதம் வருகிறதோ... உங்கள் காதலும், கவிதையும் வாழ்க ஹேமா.

நேசமித்ரன் said...

கவிதை நல்லாயிருக்கு !!

கும்மாச்சி said...

வளரும் எம் காதல் போலவே
மீண்டும் மீண்டும் தொடரும்
அழகான உன் எழுத்துப் பிழைகள்.
இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!


காதலர்தின கவிதை நன்றாக உள்ளது.

மணிஜி said...

நல்ல கவிதை ஹேமா!

அத்திரி said...

அழுத்தமான வரிகள்.....................

சரி யாருங்க அது?

ஜெயா said...

பார்த்தபோதும்
வார்த்தைகள் வரப்போவதில்லை.
வெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.
அப்புறம் எப்பிடி!
இருந்தும்பகல்களும் சில இரவுகளும்
என்னோடு உன் கதை பேசி விழித்தபடி.

அசத்தலான காதல் கவிதை ஹேமா***

meenakshi said...

அழகான கவிதை ஹேமா!

வசந்த், உங்களின் 'நானும் நீயும் மழையும்' வசனகவிதை, படத்துடன் மயக்குகிறது. உங்கள் பதிவுகள் அருமை. பின்னூட்டங்கள் எழுத அவ்வளவாக நேரம் கிடைப்பதில்லை, மன்னிக்கவும்.

நசரேயன் said...

//உன்னையும் என்னையும் பிரிக்கும்
சதிக்கூட்டத்தை
கொலை செய்யக்
காத்திருக்கையில்தான்
எப்போதும்போல உன்னுடனான
அந்தச் சண்டை வலுத்துக்கொண்டது.//
அடி கையாலையா இல்லை பூரி கட்டை அடியா?

Chitra said...

கவிதை அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

M.S.R. கோபிநாத் said...

நல்ல கவிதை ஹேமா

புல்லட் said...

நல்லாருக்கு கவிதை.. காதல் உருகி ஓடுது? :P

உங்க பூவுக்கு நான் வருவேன் ஆனா சரியான கூட்டமா இருக்கும்.. அதால உள்ளுக்க ரசிச்சிட்டு சொல்லிக்கொள்ளாம திரும்பிபோயிடுவேன்.. குறைப்பட்டுக்காதீங்க.. :)

Thenammai Lakshmanan said...

//வளரும் எம் காதல் போலவே
மீண்டும் மீண்டும் தொடரும்
அழகான உன் எழுத்துப் பிழைகள்.
இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!//

இது யார் ஹேமா
அருமையான பிழையில்லாத காதல் ஹேமா

பா.ராஜாராம் said...

விடுபட்டு போயிருந்த இரண்டு கவிதைகளும் வாசித்தேன் ஹேமா,

அருமையான நேர்கோட்டு பயணம்.மேல் நோக்கி..

வாழ்த்துக்கள்டா!

அரங்கப்பெருமாள் said...

பிப்ரவரி 14 ஸ்பெஷலா?
அருமை...

Anonymous said...

அழகு ஹேமா

புலவன் புலிகேசி said...

//இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்//

காதலில் பிழை கூட அழகாகத் தெரியுமோ? ரசித்துப் படித்தேன்

ஸ்ரீராம். said...

எழுத்தில் பிழை இருந்தாலும் கருத்தில் பிழை இல்லாக் காதல் போலும்..
கலக்கல் காதல் கவிதைதான்...
மௌனமான கணங்களில் மனதின் பாரங்கள் குறைய காதலின் அருகாமை தேவை.
அருமையான கவிதை ஹேமா

மேவி... said...

சபாஷ் ...நான் சொல்லி கூடுத மாதிரியே கவிதையை எழுதிடிங்களே ???


நல்ல வேளை...இந்த கவிதை எனக்கு புரியாதோ என்று பயந்தேன் ..... பிறகு அந்த என்ன வித்தயாசமான தலைப்பு ??????

மதுரை சரவணன் said...

nalla kavithai . arumaiyaaka vanthullathu

கலா said...

க.க.க. போ காதல்

கனவில்
கண்டதும்
கலங்க வைக்காமல்
போ காதல்.

கண்ணீரால்...
கனவுகளைக்....
கரைக்காமல்..
போ காதல்கண்டு பிடித்து விட்டேனல்லவா?
உங்கள் இரகசியத் தலைப்பை!!

குடந்தை அன்புமணி said...

அழகு... வார்த்தைகளும் வரிகளும்...
உங்களுக்கு எனது வாழ்த்துகளும்...

கலா said...

புரியாத்தனமும் எழுத்துப்பிழைகளுமே
உன்னிடம் என்னைத் தந்துவிட்டுப் போயின.
உன் விரட்டும் விரல்களைப்
பற்றிக்கொள்வதற்காகவே
வந்து வந்து சேட்டை செய்யும்
பிள்ளைப்பூச்சியாய் ஒளிந்துகொள்கிறேன்
உனக்குள்ளே\\\\\\\\\

உனை நான் பார்த்தில்லை,குழந்தைத் தனமும்
நீ அனுப்பும் செய்திகளில் காணும் எழுத்துப்
பிழைகளும்,அதிகாரத்துடன்...அதில்அன்பும்
கலந்த ஆணைப் பிறப்புகளாலும்..
பாவமாய்..வாய் பேசத்தெரியாமல் இருந்த
நான் உன்னன்பால் உன் உள் நான்
ஒளிய முற்படுகிறேன்.


\\\\\என்னை வழி நடத்தும் தாயாய்
கை பிடித்துச் செல்லும்
குழந்தையாய் உன் நிழல்.
அதற்குள்....
முகம் காணத் தவித்திருந்த தருணத்தில்தான்
மழையும் முகிலும்
உன் நிழலை ஏந்திக் கலை(ந்)த்தன\\\\

ஒருவரொருவரைப் பார்க்காமல்தான்..


நல்லது கெட்டது கூறி ஒரு தாய்யாய்...
அழும் சமயங்களில் தடவி அள்ளும்
குழந்தையாயும்.....
என்னை வழிகாட்டி நீ நடந்து
கொண்டிருக்கும் வேளையில்....
உன் முகம் பார்கவும் ஏங்கியது
என் மனம்! நீ அனுப்பிய நிழல் படத்தில்..
உனைப் பார்த்த்தும்........என கற்பனை
கலைந்தது எனக்குத் தோதாய் இல்லை.

na.jothi said...

நல்லாயிருக்கு ஹேமா

க.பாலாசி said...

//ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!//

ஓ,... அப்படியா.......

மிக ரசிக்கிறேன் காதல் கோர்த்தெழுதிய இக்கவி வரிகளை...

வார்த்தைகள் பொறுக்கி வடிவங்கள் கொடுத்து எப்படியேனும் காதலுக்காய் அதை தொடுக்கும்போது அழகாய்த்தான் மலர்கிறது...இக்கவிதைபோல...

கலா said...

ம்ம்ம்....
பார்த்தபோதும்
வார்த்தைகள் வரப்போவதில்லை.
வெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.
அப்புறம் எப்பிடி !\\\\\\\\
பார்க்க {முதல்}தொலைபேசியிலோ..
மின்னஞ்சலிலோ பரிமாறப்பட்ட..........!!
உதடு மெளனம்.
அப்புறம் எப்படிக் கொடுக்க முடியும்??இருந்தும் பகல்களும் சில இரவுகளும்
என்னோடு உன் கதை பேசி விழித்தபடி.மௌனம் உலர்ந்து
கை தொட நினைக்கையில்
மீண்டும் அந்த முகிலோ மழையோ
நனைத்து மறைத்து வைக்கலாம்
உன்னை\\\\\\\\\

கலா said...

உன்னையும் என்னையும்
பிரிக்கும்
சதிக்கூட்டத்தை
கொலை செய்யக்
காத்திருக்கையில்தான்
எப்போதும்போல
உன்னுடனான
அந்தச் சண்டை
வலுத்துக்கொண்டது.\\\\\\

இருவருக்கும் சில..பல..வித்தியாசங்களால்..
{வயது,சாதி,நாடு,எற்ற சோடி..}சேர
முடியாமல் விதி சதி செய்யும் வேளையில்....

நானும் ,நீயும்---உனக்கு புரிய வைக்க நானும்..
புரியாமல் நீயும் {புரிந்து கொண்டாலும் நான்
சொல்பவைகளை ஏற்க மறுக்கும் உன் குணத்தாலும்
சண்டைகள் அதிகம்.

கலா said...

என்றாலும்
நீ....
என்னைத் திட்டித் திட்டி
தப்பு தப்பாய் சுழிகள் குறைந்த
ன்...ண் க்களும்
முற்றில்லாக் குற்றுக்களுமாய்
எழுதிய கவிதையே
அந்தக் கொலைகளை
காப்பாற்றிப் போயின.\\\\\\என்னைத் திட்டித் திட்டி குத்திக் காட்டும்
உன் எழுத்து வரிளும்...பேசும் பேச்சுக்களும்
தான் அந்தச் செயலிலிருந்து {நடக்கமுடியாத
நடக்கக் கூடாத }என்னைக் காப்பாற்றின.

வளரும் எம் காதல் போலவே
மீண்டும் மீண்டும் தொடரும்
அழகான உன் எழுத்துப் பிழைகள்.
இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!\\\\\\

உன் அன்பு வேண்டும் ஆனால்...காதலில்லை
எல்லாம் செய் வழமையாய்..காத்திருக்கிறேன்...
காதல் என்ற வேலைமட்டும் இல்லாமல்...!!

ஸ்ரீராம். said...

ஓ...இப்படி வேற ஒரு புதிர் போட்டி இருக்கா! நானும் ட்ரை பண்றேன் கலா..

க.க.க. போ.

கண்ணால் (மட்டும்) கண்டு கரைந்து போன காதல்...
களவும் கற்று கலைந்து போன காதல்...
கடலை..கடலை..கடலை போடும் காதல்.

எப்படி...?

கமலேஷ் said...

ரொம்ப பிடிச்சிருக்கு...மிகவும் ரசித்து படிக்க முடிகிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

மாதேவி said...

கவிதை நன்றாக இருக்கிறது.

தமிழன்-கறுப்பி... said...

ம்ம் நடக்கட்டும்.. :)

Muniappan Pakkangal said...

Nice Hema.

ஜெயா said...

ஹேமா உப்புமடச்சந்திப் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க....

ரிஷபன் said...

பிழைகளற்ற நேசிப்பு..

Nathanjagk said...

நல்லாயிருக்கு..!
பிழை திருத்துவதை விட இலக்கணத்தை உபதேசித்து விடுவது உத்தமம் அல்லவா!

Post a Comment