*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, November 14, 2009

பழுத்தல் இலை...

புதிய தளிர்கள் பூப்படைய
பழுத்தல் இலையாய்.
தாங்கிய காம்பு தளர்ந்து உலர
இறுக்கிப் பற்றிய
என் தாய் கரம் தவற விட
வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய் நான்.

தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.

வாகன நெரிசலுக்குள்
வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !
வெப்பக் கற்கள் கோர்த்து
கொத்தனார்கள் கூடிக் கட்டிய
கட்டிடக் காடுகளின் நடுவிலா !
ஈக்களும் கொசுக்களும்
கொஞ்சி கதை பேசி விளையாடும்
குப்பைகள் சேரும் கும்பலிலா !
கரையோடும் தரையோடும்
உரசி நெளிந்து ஓரத்துப் புற்களோடும்
முந்தியோடும் மீன்களோடும்
போட்டி போடும் ஓடுகின்ற தண்ணீரிலா !
மனிதனின் உணவுக்காய்
மேய்கின்ற மாடுகளின் உணவுக் கூடத்திலா !
காடும் மலையும் காதலிக்க
வானம் பார்த்துக் கூச்சம் கொள்ளும்
கானகக் கரைகளிலா !
இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற
ஓவியப் புத்தகத்திலா !

காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!

ஹேமா(சுவிஸ்)

43 comments:

Ashok D said...

துக்கத்திற்குதான் போய்க்கொண்டுயிருக்கிறேன் :(

மேவி... said...

சொல்ல வார்த்தைகள் இல்லை. மனசை ஏதோ பண்ணுகிறது இந்த கவிதை. என்னன்னு தெரியல

மேவி... said...

சருகாய்????

S.A. நவாஸுதீன் said...

பழுத்தல் இலை - இனம் புரியாத ஒரு வேதனையைத் தருகிறது ஹேமா

tamiluthayam said...

புதியதாய் எத்தனை பெற்றாலும், இழந்ததன் வலியையும், அந்நாளில் மகிழ்ந்த சந்தோஷங்களையும் மறக்க முடியுமா.. நின்றால், நடந்தால், சிரித்தால், அழுதால், படுத்தால் என்று எல்லாப் பொழுதும் அந்த வலி இருக்குமே. கவிதை உங்களை சற்றே வலியை மறக்க கற்று கொடுத்ததோ.

V.N.Thangamani said...

///தாங்கிய காம்பு தளர்ந்து உலர
இறுக்கிப் பற்றிய
என் தாய் கரம் தவற விட
வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய் நான்.///

சருகாய், உரமாய் மீண்டும் முளைத்து விருட்ச்சமாவோம். உருதியோடிறு தோழி

கவி அழகன் said...

நன்றாக உள்ளது மனதை தொட்டுவிட்டது தொட்டுவிட்டது சந்தொசமாக ஒரு கவிதை எழுதுங்கள்

மாதேவி said...

"வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய்"

கவிதை கவலை கொள்ள வைக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

அருமைங்க

ஒரு இலையின் ஆதங்கம்...

சிறப்பா சொல்லியிருக்கீங்க...

பா.ராஜாராம் said...

//நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.//
மனசை என்னவோ செய்யும் வரிகள்.வலிகள்..

Admin said...

//தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.//

அருமையான வரிகள்

இராகவன் நைஜிரியா said...

// காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!! //

மனது கனக்கின்றது இந்த வரிகளைப் படித்தவுடன்

M.S.R. கோபிநாத் said...

ஹேமா, கவிதை அருமை.

Kala said...

ஒரு தாய் பிள்ளையின் வாழ்வை
மரம்,இலை,சருகுடனும்...
மனிதர்கள் இயற்கையுடன்
இல்லாமல்,செயற்கையுடன்
அல்லல்லை,,விழுந்து வரும்
இலை சொல்லும் விதம்
மிக நன்றாக இருக்குதடி தோழி.

கடசிவரிகள்....பட்ட கஷ்ரங்கள்
எல்லாம் போதும் மீண்டும்
என்னை தாய் மடிக்கே அனுப்பி விடு....
தாயின் அன்பும்,அரவணைப்பும்,மடியும்
எவ்வளவு தேவை என்பதை புரிய
வைக்கிறது நன்றி.

Kala said...

ஒரு தாய் பிள்ளையின் வாழ்வை
மரம்,இலை,சருகுடனும்...
மனிதர்கள் இயற்கையுடன்
இல்லாமல்,செயற்கையுடன்
அல்லல்லை,,விழுந்து வரும்
இலை சொல்லும் விதம்
மிக நன்றாக இருக்குதடி தோழி.

கடசிவரிகள்....பட்ட கஷ்ரங்கள்
எல்லாம் போதும் மீண்டும்
என்னை தாய் மடிக்கே அனுப்பி விடு....
தாயின் அன்பும்,அரவணைப்பும்,மடியும்
எவ்வளவு தேவை என்பதை புரிய
வைக்கிறது நன்றி.

சத்ரியன் said...

//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!//

ஹேமா,

நான் படித்த "ஹேமாவின் கவிதைகளில்" எனக்கு மிகவும் பிடித்திருக்கும் கவிதை இது ஹேமா.

Santhini said...

Wonderful Poem.
Never read a poem, expressing this clearly and simply the feel of Mother, Native place and mother country.
Hema, you got a gift!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் உள்ளத்தின் வலி இந்தக் கவிதையிலும் வெளிப்படுகிறது தோழி.. :-((

நட்புடன் ஜமால் said...

காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!]]

வரிகள் வலிகள் ...

விஜய் said...

பழுத்த மரம் தான் கல்லடி படும் அதுபோல பழுத்த இலை படும் பாடு - வலி

வாழ்த்துக்கள்

விஜய்

thamizhparavai said...

நல்லா இருக்கு ஹேமா...
பழுத்தல் இலையின் புலம்பல்....
பிரமிளின் ‘பறவையின் இறகு’ பற்றிய கவிதையும் என்னுள் மின்னிச் சென்றது...
ரசித்தேன்...

ஆ.ஞானசேகரன் said...

//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!//

மனதை புரட்டி போடும் வரிகள் ஹேமா... கவிதையும் அதற்கான படமும் மிக அருமை...
என்றும் என் வாழ்த்துகளுடன்
ஆ.ஞானசேகரன்

ஸ்ரீராம். said...

பழுத்த இலையாய் இல்லாமல் உயிரில்லா உதிர்ந்த இலையாய் இல்லாமல் விதையாய் விழுந்து, விழுந்த இடத்தில் எல்லாம் புதிதாய் முளைக்க வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

படிப்பவர் மனதை
பழுத்த இலையாய்,
காய்ந்த சருகாய்
பறக்க வைக்கும் கவிதை...

Kala said...

ஹேமா நான் கொடுக்கும் இடையூறுக்காக..
மன்னிப்பு வேண்டி.....
அரசுவின் பின்னோட்டத்தில்{துக்ககரமான செய்தி}
உங்களுக்கெல்லாம் {நகைசுவையுடன்}
பின்னோட்டம் இடும்{திரு.அரங்கப்பெருமாள்}
உடைய சகோதரர் மரணமடைந்ததாகப் பார்த்தேன்

மகிழ்சியில் பங்கேற்காமல் போனாலும் பரவாயில்லை,
துக்கத்தில் நாம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
அவர் மன ஆறுதலுக்காக...உங்கள் அன்பான
வார்த்தைகள்.........சென்றடைய வேண்டி...
உன் அன்புச் சகோதரி.

vinthaimanithan said...

//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!//

மனம் ரொம்பவும் தவிச்சிப்போய் கிடக்கு தோழி....

சந்தான சங்கர் said...

//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!//

பழுத்த இலையின்
கனத்த பயணங்கள்,
உதிர்ந்த சிறகின்
முதிர்ந்த நினைவுகள் போல்...


நல்லாயிருக்கு ஹேமா..

பித்தனின் வாக்கு said...

ஒரு இலை உதிர்வதற்க்கு இவ்வளவு நல்ல கவிதையா? சூப்பர் ஹேமா.
எப்படி சிந்திக்கின்றீர்கள். நன்று.
நன்றி ஹேமா, அருமையான கவிதை இது.

க.பாலாசி said...

//மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.//

மிக ஆழ்ந்த வரிகள்...கவிதையின் வலிகளை தேக்கி நிற்கும் வரிகளாய் உணர்கிறேன்.

நல்ல கவிதை....

தமிழ் நாடன் said...

//நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை//

வாழ்க்கையின் கோலத்தை அடிக்கோடிடும் வரிகள்! என்ன செய்வது விதிக்கப்பட்டது இதுதான்!

Rajan said...

வார்த்தைகளில்லை ஹேமா

தேவன் மாயம் said...

தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.

இன்றுதான் பறப்பதைப் பற்றி யோசித்தேன்!!! உங்கள் சிந்தனையில் கட்டாயமாகப் பறப்பதின் வேதனை தெரிகிறது!!

புலவன் புலிகேசி said...

ஹேமா...என்ன ஒரு அழகான விவரிப்பு..நேற்றே படித்து விட்டேன். பின்னூட்டமிட தாமதம்.......இலைச்சருகு குழந்தையாகவும் மரம் தாயாகவும்...உங்களைப் போன்ற கவிஞர்களால் தான் முடியும்..

Thenammai Lakshmanan said...

//இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற
ஓவியப் புத்தகத்திலா !//

இவ்வளவு துன்பியலிலும் இந்த வரி நிறைவை கொடுக்கிறது ஹேமா

நசரேயன் said...

//அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!//

எங்கே ச்விச்ஸ் லயா?

jgmlanka said...

நண்பர் பா. ராஜாராம் என் கவிதையொன்றுக்கான கருத்தில் “மற்றொரு ஹேமா?” என்று வினா எழுப்பியதன் பயன்… யாரந்த ஹேமா என்ற என் தேடலின் விளைவு… அழகிய அர்த்தமுள்ள கவி வரிகளின் பக்கங்களுடன் சங்கமித்தது.

// காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!! //

இது மானத் தமிழனின் ஆத்ம தாகம்….
யதார்த்தத்துக்கும் தத்துவத்திற்குமிடையே வரிகள் வலியோடு லப்…டப்….லப்… டப்..
வாழ்த்துக்கள் சகோதரி… தொடர்வேன் உங்கள் பக்கங்களை

V.N.Thangamani said...

அன்பு ஹேமா ( இது பதிவுக்கு அல்ல )
எங்கே காணோம் நான்கைந்து
நாளா ?

அன்புடன் மலிக்கா said...

manam mikavum kanakkirathu hema..

அன்புடன் நான் said...

மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.//

ந‌ல்ல‌ கண‌மான‌ வ‌ரிக‌ள்...க‌விதை அருமை!
விர‌க்தியை ம‌ட்டுமே சும‌ந்தால்... வீரிய‌ம் வ‌லிமைழிழ்ந்து விடும் ஹேமா.

பிற‌கு... ந‌ல‌ம்தானே? கொஞ்ச‌ நாள் எங்கும் வ‌ர‌யிய‌ல‌வில்லை!

அரங்கப்பெருமாள் said...

ஹேமா,நான் அழுதே விட்டேன்.என் மனதை ஏதோ செய்கிறது. மிகவும் அருமையானக் கவிதை. எனக்கென்று எழுதியது போல இருக்கிறது.

தோழி கலா அவர்களே, உங்களைப் போன்றவர்களால் என் உள்ளம் அமைதியடைகிறது.மிகவும் நன்றி உடையவனா இருப்பேன்.

மீண்டு(ம்) வந்தேன். தொடருவேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

//காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!
//
ம்ம்ம் அற்புதமான முடிவு
//தளிர்கள் பூப்படைய//
வார்த்தை ஆளுமை அருமை

//வாகன நெரிசலுக்குள்
வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !
வெப்பக் கற்கள் கோர்த்து
கொத்தனார்கள் கூடிக் கட்டிய
கட்டிடக் காடுகளின் நடுவிலா !
ஈக்களும் கொசுக்களும்
கொஞ்சி கதை பேசி விளையாடும்
குப்பைகள் சேரும் கும்பலிலா !
//
ஆமாம் பவம் அது ....என்ன செய்யும்

Unknown said...

முதல் முறை உங்கள் கவிதை படித்தேன் . உங்கள் கவிதை கண்ணீர் விட செய்கிறது superb

Unknown said...

எல்லா மனிதனுக்கும் இருக்கும் இழந்துவிட்ட வலியை இந்த கவிதை கண்டிப்பாக ஞாபக படுத்தும்...
பாராட்டுக்கள்...

Post a Comment