*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, October 02, 2009

முடிவிலி...


தொடர்புகள் அற்ற ஒரு பெருவெளி.

ஒரு யானை...
ஒரு குழந்தை...
ஒரு ஆறு...
ஒரு பிச்சைக்காரன்...
எனத் தொடர் தொடராய்.
முடிவில்லா ஒற்றைப் புள்ளியாய் !

யானை ...
தன் சுயமற்று
பாகனின் அங்குசத்தில்
அசைகிறது அது
அதன் மன உளைச்சலும்
தன் இனத்தைக் காணாத ஏக்கமும்
யாருக்குச் சொல்லும்
என்றாலும்....
ராஜாபோல கம்பீரமாய்
ஒரு தைரியத்தோடு
வாழ்ந்து கொண்டுமிருக்கலாம்!

யார் அந்தக் குழந்தை...
யார் அந்தப் பிச்சைக்காரன்...
ஆறு ....
என்னோடு ஏழேழு ஜென்மங்களில்
கை கோர்த்தவர்களோ !

கனவில் மட்டுமே முடிகிறது
கடவுளோடு
சண்டை போடவும்
கோபிக்கவும்
கொலை செய்யவும்
ஏன் ...
தற்கொலை செய்து கொள்ளவும் கூட!

பயண முறைகளில் மாற்றமில்லை
தெளிவாய் இருக்கிறேன்
பயணம் தூரம் என்பதால்
எல்லாவற்றையும்
சரி பார்த்துக் கொண்டேன்
குழப்பமில்லை

ம்ம்ம்...
பொழுதும் விடியும்
பயணமும் தொடங்கும்
இன்னொரு விடியலை
கடப்பது என்பது ? !!!

ஹேமா(சுவிஸ்)

28 comments:

ஹேமா said...

விடுமுறை - சின்ன விடுப்பு முடிஞ்சு வந்தாச்சு.எல்லாரும் சுகம்தானே.

இனி...!

விஜய் said...

கனவில் மட்டுமே முடிகிறது
கடவுளோடு
சண்டை போடவும்

நிதர்சன வரிகள்.

விடுமுறை ஜாலியா?

பாலா said...

அட
நல்லா இருக்கே
இன்னொரு விடியலைக்கடப்பதென்பது நிச்சயம் கேள்விக்குறியாய்ப்போகாது ஹேமா

நேசமித்ரன் said...

சுகம்

சுகம்தானே ?


ஐயோ கவிதை கவிதை கவிதை !!!

கவிக்கிழவன் said...

கனவில் மட்டுமே முடிகிறது
கடவுளோடு
சண்டை போடவும்

அன்பு கொண்டு ஆளும் நெஞ்சு அனைவரையும் வென்றிடும்

Ashok D said...

ஹேமா..இந்த நடை மற்றும் கவிதை பிடிச்சிருக்கு.

Thenammai Lakshmanan said...

nice one Hema
payanangkal ungal manathil erpaduththiya pathivu arumai

//ennodu eezu genmangkalilum vanthavargal thaanee //

naanum kuudannu ninaikuren hema

மேவி... said...

innum oru 4 murai padithu vittu comment podugiren hema....


naan sugam thaan. leave ellam eppudi irunthuchu???

(naanum intru oru padivu pottu irukkiren)

thamizhparavai said...

//ஹேமா..இந்த நடை மற்றும் கவிதை பிடிச்சிருக்கு.//
ரிப்பீட்ட்டிக்கிறேன் ஹேமா...

பா.ராஜாராம் said...

புதுசா இருக்குடா ஹேமா,இந்த நடை.அருமையாய் வந்திருக்கு!வீட்டில் யாவரும் நலமா?நல்ல முதிர்வான நடை!

Unknown said...

சுகம்..! சுகம்..!

கவிதையும் ரொம்ப சுகம்...!!

துபாய் ராஜா said...

முடிவிலா முடிவிலிகள்.....
முடியும்வரை முயன்றிடுங்கள்...

Gobenath said...

கவிதை நன்றாக இருந்தது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சுகம் தான் ஹேமா. கவிதை நன்றாக வந்திருக்கிறது. அதில் வலி இருக்கிறது.

நசரேயன் said...

//பயண முறைகளில் மாற்றமில்லை.
தெளிவாய் இருக்கிறேன்.
பயணம் தூரம் என்பதால்
எல்லாவற்றையும்
சரி பார்த்துக் கொண்டேன்.
குழப்பமில்லை.//
வரை படத்தை எடுத்திட்டு போங்கோ ..
எம்புட்டு தூரம் இருக்கும்?

அரங்கப்பெருமாள் said...

நம்பிக்கைதானே வாழ்க்கை..

சத்ரியன் said...

//யார் அந்தக் குழந்தை...
யார் அந்தப் பிச்சைக்காரன்...
ஆறு ....
என்னோடு ஏழேழு
ஜென்மங்களில் கை கோர்த்தவர்களோ !//

ஹேமா,

கவிதை உங்களை ஞானியாக்கி கொண்டிருக்கிறது.எல்லாவற்றிலும் தன்னைக் காண்பது ஞானமாமே!

கவிதை, அடிக்கன்னல்!!!

ஆ.ஞானசேகரன் said...

//ம்ம்ம்...
பொழுதும் விடியும்.
பயணமும் தொடங்கும்.
இன்னொரு விடியலைக்
கடப்பது என்பது ? !!!//

கவிதை நன்று..
விடுமுறை எப்படி கழித்தீர்கள்?

Jerry Eshananda said...

கவிதையில் புதிய பரிணாம வளர்ச்சியை காண்கிறேன்.

சந்தான சங்கர் said...

விடுமுறையிலும் தொடரும்
நடைமுறை எண்ணங்கள்..
முடிவிலி..
வானம் வெளித்தபின்னும்
பெய்த மழை..

நலமா ஹேமா...

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு ஹேமா

rvelkannan said...

உங்களுக்கு புதிய நடை என எண்ணுகிறேன்
நல்ல இருக்கு ஹேமா
//கனவில் மட்டுமே முடிகிறது
.......தற்கொலை செய்து கொள்ளவும் கூட!//
//பயண முறைகளில் .....குழப்பமில்லை.//
இவை ஒவ்வொன்றுமே தனி தனி கவிதை ஹேமா

முகமூடியணிந்த பேனா!! said...

ஒவ்வொரு வார்த்தையுமே கனமாக இருக்கிறது....

கனவுகள் - எனக்கு மிகவும் பிடித்த அதிகம் சிந்தித்து கொண்டே இருக்கிற தளம்... இந்தக் கவிதை நிறைய சொல்கிறது எனக்கு.

சிறப்பு.

அப்துல்மாலிக் said...

//பொழுதும் விடியும்.
பயணமும் தொடங்கும்.
இன்னொரு விடியலைக்
கடப்பது என்பது ? !!!//

நிச்சயம்

கனவில் மட்டுமே முடிகிறது இது நிதர்சன வரி

ஹேமா said...

எல்லாரும் நல்ல சுகமா இருக்கீங்க.
நான் கண்டுபிடிச்சிட்டேன்.விடுமுறை எனக்கும் சந்தோஷமாகவே இருந்தது.இந்தக் கவிதையில் இரண்டு புதிய அறிமுகத் தோழர்களும்.

1)கோபிநாத்

2)என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை?

இரண்டு பேரையும் தோழமையோடு வரவேற்றுக் கொள்வோம்.

இன்னொன்று இந்த நசரேயன் பாருங்க ஒவ்வொரு கவிதையிலயும் என்னைக் கலாய்ச்சுக்கிட்டே இருக்கார் !

அன்புடன் நான் said...

கனவில் மட்டுமே முடிகிறது
கடவுளோடு
சண்டை போடவும்.
கோபிக்கவும்
கொலை செய்யவும்
ஏன் ...
தற்கொலை செய்து கொள்ளவும் கூட

ப்ரியமுடன் வசந்த் said...

//பொழுதும் விடியும்.
பயணமும் தொடங்கும்.
இன்னொரு விடியலைக்
கடப்பது என்பது ? !//

அது இறைவன் கைகளில்தான் இருக்கு....

ப்ரியமுடன் வசந்த் said...

சிரிக்கிறதுக்குமா வசதி வேண்டும்?

அடப்பாவி...பாவம்பா...

Post a Comment