*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 27, 2009

புதிதாய் ஒரு பூ...

நொந்த தருணங்கள் நொடிந்து விழ
எண்ணச் சிலந்திகளை கடித்துப் துப்ப
அந்தகார அரூபங்களாய் எரி பூச்சிகள்.

பகலவனுக்குப் போட்டியாய் எரிக்க
என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.
தீயின் அகோரம்
என் பசப்புச் சிரிப்பை
அம்பலப் படுத்தி
எரித்துக்கொண்டே விரட்டுகிறது.

கோடை விடைதர
வாடைக் காற்றில்
பூமி மஞசள் நிறத்தில்
நாகரீக உடையோடு.
எனக்குப் பிடிக்காவிட்டாலும்
அரிதாரம் இட்டுக்கொள்கிறேன்
அடையாளம் காட்ட.
வேற்று நிறங்களை பூமி ஏற்றுக்கொள்ள
வேறுபட முடியாமல்
ஒத்துழைத்துத் திரும்புகையில்
வாழ்வின் உண்மைகளில் ஒரு வெறுமை.

பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.

நான்கு சுவர்களுக்குள் பயணித்த உணர்வு
மொழி கடந்து தூரம் கடந்து
பதிலில்லாக் கேள்விகளோடு
நெடும் பாதையில் விரைகிறது.
பாதைகள் திசை சிதறிப் போனதா.
இல்லை...
என் உணர்வுகள் கலைந்து போனதா.

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!

ஹேமா(சுவிஸ்)

46 comments:

Ashok D said...

nice one hema.. கலக்கிட்டீங்க... தொடர்ந்து கலக்குங்க.

Nathanjagk said...

//பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்// மனதை பட்டாம்பூச்சியாக்கிக் ​கொள்கிறேன் இவ்விடம்!
அருமை ​ஹேமா!

Nathanjagk said...

//பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.//

ஒரு பெயர் சூட்ட​லைக் கூட தாங்கமுடியாத மென்மையிலும் வெகு ​மென்மையான பூவாக அது பூத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
பெயரில்லாத சுவாரஸியமாக அந்த பூ இருந்துவிட்டுப் போகட்டுமே?

மணிஜி said...

அருமை சகோதரி..வாழ்த்துக்கள்

Kala said...

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!/


இந்தக் கவிதையின் அழகே இவ்வளவு
வரிகளுக்குளளும்தான்,"அடக்கம்"
ஹேமா புரியுமென நினைக்கின்றேன்.

வேல் கண்ணன் said...

புரியாத மென்சோகம் மனம் கிடக்கிறது ஹேமா

Rajan said...

//என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.//

//எனக்குப் பிடிக்காவிட்டாலும்
அரிதாரம் இட்டுக்கொள்கிறேன்
அடையாளம் காட்ட.//

கூரிய வரிகள்.... நன்றாக இருக்கிறது...

அன்பின் ராஜன் ராதா மணாளன்

ஈரோடு கதிர் said...

//பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்//

கண்ணுக்குள் விரிகிறது கவிதை

அருமை

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இந்தக் கவிதை கதவிடுக்கினால் வராமல் தென்றலாக வீசுகிறது ஹேமா.

க.பாலாசி said...

//பகலவனுக்குப் போட்டியாய் எரிக்க
என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.//

//நான்கு சுவர்களுக்குள் பயணித்த உணர்வு
மொழி கடந்து தூரம் கடந்து
பதிலில்லாக் கேள்விகளோடு
நெடும் பாதையில் விரைகிறது.//

உங்களின் இந்த கவிதையில் நான் மிக ரசித்த வரிகள் தோழியே. வார்த்தைகளின் கோர்வை மிக அழகாக இருக்கிறது.

//பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!//

நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன்.

நல்ல கவிதை....

சொல்லரசன் said...

//பாதைகள் திசை சிதறிப் போனதா.
இல்லை...
என் உணர்வுகள் கலைந்து போனதா.//

பாதைக‌ள் ப‌ல‌திசை போனாலும்,உண‌ர்வுக‌ளை க‌லையாம‌ல் பார்த்துகொள்ளுங்க‌ள்.

பித்தனின் வாக்கு said...

// புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!//
வாழ்த்துக்கள், புது உறவில், பயணத்தில் வசந்தங்கள் வீச.

S.A. நவாஸுதீன் said...

//பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.//

அருமை ஹேமா.

கார்த்திகைப் பாண்டியன் said...

புரிவதற்கு சற்றே கடினமாக இருந்தாலும் வார்த்தைகள் வசீகரிக்கின்றன தோழி..

விஜய் said...

"நொந்த தருணங்கள் நொடிந்து விழ
எண்ணச் சிலந்திகளை கடித்துப் துப்ப
அந்தகார அரூபங்களாய் எரி பூச்சிகள்"

ரொம்ப அழகா வந்திருக்கு ஹேமா

விஜய்

வேந்தன் said...

கவிதை நல்லாயிருக்கு...:)

பா.ராஜாராம் said...

தண்டோரா ...... said...
அருமை சகோதரி..வாழ்த்துக்கள்

அதேதாண்டா...ஹேமா!

அ.மு.செய்யது said...

ஆங்காங்கே தென்ப‌டும் உருவ‌க‌ங்க‌ளை ர‌சித்தேன் ஹேமா...ந‌ல்ல‌ க‌விதை !!

Jerry Eshananda said...

hemaaji, i smell the flower with the fragrance of bliss.

விஜய் said...

டைரி படிக்க வாங்க

விஜய்

ப்ரியமுடன் வசந்த் said...

படம் ரசனையான தேர்வு ஹேமா

கவிதை அதற்க்கேற்ற பொருளோடு ...

//ஒரு பெயர் சூட்ட​லைக் கூட தாங்கமுடியாத மென்மையிலும் வெகு ​மென்மையான பூவாக அது பூத்திருக்கிறது //

அப்படி ஒரு பூ இருக்கிறதா?

ப்ரியமுடன் வசந்த் said...

ஏன் கருப்பு பொண்ணு படமும் வெள்ளை பையன் படமும் கிடைக்கலியா?

ஆண்களை மட்டம் தட்டுவதற்க்காகவே பெண்கள் கங்கனம் கட்டி திரிகிறீர்கள் இருக்கட்டும் இருக்கட்டும்...

சும்மா டமாசு...

:)))))))

நேசமித்ரன் said...

பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்


ரசித்தேன் மிக ரசித்தேன்

சந்தான சங்கர் said...

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
//நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!//

நெருப்பின் பெருவெளிச்சம்
நட்பின் பேராதரவில்
பசப்பு சிரிப்பையும்
வேற்று நிறமிகளையும்
வண்ணமாக்கி
வளமாக்கும்..

அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி..

புரியாத வேளையும்
புரியும் நேசம் நிறைந்த
மலரின் வாசனையில்..

நசரேயன் said...

//பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.//

கதவை திறந்து வையுங்க நல்லா காத்து வரும்

ஸ்ரீராம். said...

மனதில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருக்கும்போது வாழ்க்கையின் இயல்பான சந்தோஷங்களைக் கூட ரசிக்க முடியாமல் போகிறது. நல்ல வெளிப்பாடு.

Nathanjagk said...

இது பிரியமுடன்.. வசந்த் ​சொன்னதுக்கு..
////ஒரு பெயர் சூட்ட​லைக் கூட தாங்கமுடியாத மென்மையிலும் வெகு ​மென்மையான பூவாக அது பூத்திருக்கிறது //

அப்படி ஒரு பூ இருக்கிறதா?//

ஆமா அப்படி ஒரு பூ இருக்கு.. ஆனா அதுக்கு பேருதான் தெரியாது!

பின்னூட்டத்துக்கே பின்னூட்டமான்னு ​​மேடம் கோவிச்சுக்கக் கூடாது.. நாங்கெல்லாம் எல்கேஜியிலிருந்தே எடுபட்ட பயலுக!

வெண்ணிற இரவுகள்....! said...

//உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன்னால்
மட்டுமே முடியும்.
உயிர்ப்பித்தாய்
உயிரையும் எடுக்கிறாய்.
//
நல்ல வரிகள்

சத்ரியன் said...

//பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.//

ஹேமா,

பூட்டிய "இமைகளின்" கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.

வீசட்டும் ...வசந்தமாய். வாழ்த்துகள்!

தமிழ் நாடன் said...

எற்கனவே எல்லாரும் பிரிச்சு மேஞ்சு ரசிச்சதனால............ நான் ரொம்ப நல்லாருக்கு அப்படீன்னு மட்டும் சொல்லி .................எஸ்கேப்!

மா.குருபரன் said...

//பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்//

நல்லா இருக்குங்க ஹேமா!

பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்:- சுகமான வலி மெதுவாய் ஊடுருவுகிறது...

புலவன் புலிகேசி said...

//பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.//


அருமை ஹேமா.......

அன்புடன் நான் said...

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!//

புதிய‌ ஓட்ட‌ம் மீண்டும் மீண்டும் ப‌டித்தேன்... அருமை. க‌டைசி வ‌ரிக‌ள் அருமை.

துபாய் ராஜா said...

அழகான படம். அருமையான வரிகள். வாழ்த்துக்கள் ஹேமா..

மேவி... said...

ஹேமா பல முறை படித்து விட்டேன். ஆனால் இன்னும் எனக்கு இந்த கவிதையின் பொருள் முழுமையாக புரியவில்லை. ஆனால் அழகாய் இருக்கிறது .... புரிந்த பின் இன்னொரு பின்னோட்டம் போடுகிறேன்

மேவி... said...

வழக்கம் போல் ஏதோ ஒரு வெறுமை இருப்பது போல் உணர்கிறேன் இந்த கவிதை படிக்கும் பொழுது

மேவி... said...

kadasi varigal nalla irukku

அன்புடன் மலிக்கா said...

தெரியாமல் காத்திருப்பதிலும் ஒரு சுகம். அருமையான கவித ஹேமா

சந்தான சங்கர் said...

ஒரு பாடல்
எழுதியிருக்கின்றேன்
வந்து பாடிட்டு இல்ல
சாடிட்டு போங்க..

Thenammai Lakshmanan said...

நேற்றைய இரவில்...
சேமித்த கணங்களில் ...
புதிதாய்ப் பூத்த பூ ...

எல்லாமே நல்லா இருக்கு ஹேமா ...

ஒரு மாதமாக ஷார்ஷா அபுதாபி துபாய் சென்று வந்தேன் என் சகோதரன் வீட்டுக்கு ...

எனவே எழுத்தில் தொய்வு... தற்போது தொடர்கின்றேன் ஹேமா

Muniappan Pakkangal said...

Pahalavanukku potiyaai erikka- kobam innum kuraiyalaiyaa Hema.

விஜய் said...

வலைச்சரத்தில் ஒருவாரம் ஆசிரியர் ஜீவன்

http://blogintamil.blogspot.com/2009/10/blog-post_28.html

உங்களை பதிவை இணைத்து உள்ளார்

பாருங்கள்

thiyaa said...

நல்ல கவிதை
நல்ல படம் போட்டிருக்கிறிங்கள்

விஜய் said...

புதிய பதிவு பாருங்கள் ஹேமா

விஜய்

NILAMUKILAN said...

/புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!/

அற்புதமான சிந்தனை ஓட்டம். உங்கள் கவிதைகளின் மெருகு கூடிக்கொண்டே போகிறது ஹேமா.

Anonymous said...

hi vanakkam.i like to talk with your.about your cute blogs.pls mail me at pari.invent@gmail.com

Post a Comment