*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, August 15, 2009

ஏன் இப்படி...

பெருமழையில்
சிக்கிக்கொண்டிருக்கிறேனோ ஒரு வேளை.
கட்டிடங்கள்
இடிந்து விழும் அபாயம் வரலாம்.
அறிக்கை சொல்கிறது.
மண்வீடு கட்டி விளையாடிய வேளை
அழுததைவிட
அழுகை அழுகையாய் வருகிறது.

கனவில் காக்கா கரைகிறது.
அப்போ..யாரோ வரத்தான் போகிறார்கள்.
நம்பிக்கையோடு தலைவாழையிலை
வெட்டி வைக்கலாமோ.
பாதை நெடுகிலும் பரிமாற
நிறையக் கேள்விகளும் கதைகளும்
தேக்கி வைத்திருக்கிறேன்.
ஓ...கேட்பதும் கதைப்பதும் பிடிக்காதோ !

சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!

ஹேமா(சுவிஸ்)

47 comments:

சி.கருணாகரசு said...

விடிவதை விரும்பாதாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்//
ஏன் இப்படி?

ஹேமா said...

கருணாகரசு,ஏன் அப்பிடின்னா அப்பிடித்தான்.முதல் முதலா வந்திருக்கீங்க.வியாபாரம் சரியா நடக்கணும் உங்க புண்ணியத்தில.
விடுமுறை சந்தோஷமா இருக்கட்டும்.

சி.கருணாகரசு said...

ஹேமா, உணர்வுள்ள கவிதைங்க உங்களோடது ...கருத்துரைக் கட்டாயம் குவியும், விடுமுறையும் மகிழ்வால் நிறையும் .

Anonymous said...

அருமையான கவிதை ஹேமா. புரிவதற்கு தான் கொஞ்சம் சிரம்ம்.

துன்பம் ஒன்று வந்தால் மகிழ்ச்சி ஒன்று வந்து தான் தீரும். கவலையை மறப்போம்...மகிழ்ச்சியை வரவேற்பபோம்.

ஹேமா said...

ஆனந்த்,ஏன் புரிலன்னு சொல்றீங்க.
2-3 தடவை படிச்சுப் பாருங்க.புரியும்.உண்மையா புரிலன்னுதான் நினைக்கிறேன்.
கவிதை கவலை இல்ல.குழப்பம்.

துபாய் ராஜா said...

//கனவில் காக்கா கரைகிறது.
அப்போ..யாரோ வரத்தான் போகிறார்கள்.
நம்பிக்கையோடு தலைவாழையிலை
வெட்டி வைக்கலாமோ.
பாதை நெடுகிலும் பரிமாற
நிறையக் கேள்விகளும் கதைகளும்
தேக்கி வைத்திருக்கிறேன்.
ஓ...கேட்பதும் கதைப்பதும் பிடிக்காதோ !//

அருமை.அருமை.

//சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!//

அட்டகாசம்.

ஏன் இப்படி,இனிக்கும் கருப்புக்கட்டி.

சத்ரியன் said...

//சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.//

ஹேமா,

"கவிப்பேரரசு" வின் "காதலித்துப் பார்" மீண்டும் ஒருமுறை மனதுக்குள்!
உங்களின் "காதல் கவிதைகள்" ; 'கள்'. நீங்'கள்' அப்படி வடிக்கும்போது,

நான் காதல் மன்னனாம்...?! இத தட்டிக்கேக்க யாருமே இல்லியா?

//என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!//

அந்தப் பெயரை எனக்கு மட்டும் சொல்லிடுங்கோ...யாரெண்டு.

- இரவீ - said...

ஹேமா,
ஒரு மாத விடுமுறைக்கு - பதில் விடுமுறையா?
தலைவாழையிலை போட்டு அதில் மிக்சரும் - பிச்சாவுமா?
பாவம் விடுங்க...

கதைக்க போகினமா - மாட்டறரிக்கை வந்திருக்கும்
நோக்கினம் .

Muniappan Pakkangal said...

Paathai neduhilum parimaara niraiya kelvihalum kathaihalum-super Hema.

nila said...

//சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.//

அடடா... அருமை அருமை...
அழகான கவிதை ஹேமா...

ப்ரியமுடன் வசந்த் said...

//சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.//

சூரியனுக்கே காவலா?

ம்ம்? சுட்டெரிக்கறவங்க பொண்ணுங்கன்றது உண்மைதான்

மேவி... said...

"பெருமழையில்
சிக்கிக்கொண்டிருக்கிறேனோ ஒரு வேளை.
கட்டிடங்கள்
இடிந்து விழும் அபாயம் வரலாம்.
அறிக்கை சொல்கிறது.
மண்வீடு கட்டி விளையாடிய வேளை
அழுததைவிட
அழுகை அழுகையாய் வருகிறது."

ஏனுங்க ........ மண் வீடு கட்டிய சந்தோஷமே தனி தான் அதற்க்கு நிகர் எதுவும்
இல்லைங்க .....

சிறு வயதின் ஏமாற்றத்தை நீங்க எப்படி சம வயது ஏமாற்றத்துடன் compare பண்ணலாம் ........

இங்கு பெரும் மழை என்பதை பெரும் கவலை என்று எடுத்துக்கலாமா ????

ஹேமா said...

மேவி அது காதல் பெரு மழை.
இடிஞ்சு போகுமோன்னு பயம் அதான் அழுகை.சின்னபிள்ளைக் காலத்து அழுகையை விட வேதனையான அழுகை.அவர் வருவதாய் கற்பனை.நிறையக் கேள்விகள் சேர்த்து வச்சிருக்கேன்.கேக்கணும்.
ஆனா அவருக்கு நிறையப் பேசப் பிடிக்காது.குருவி கூட என்னைக் கிண்டல் பண்ணுது.பயத்தில இரவு விடியாமல் இருக்க சூரியனைத் தூங்க வைக்கிறேன்.என்றாலும் அவர் பெயரிலேயே ஒரு காதல்.அந்தப் பெயரை நினைசாலே, என் குழப்பங்களை எல்லாம் தூக்கிப் போகிறது அந்தப் பெயர்.

நட்புடன் ஜமால் said...

ஹேமா! ரொம்ப நேரமா கருத்து சொல்ல தெரியாமா பார்த்துகிட்டே இருக்கேன்.

-------------------


விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.]]


காதலின் ஆழம் உணர்ந்தேன் இவ்வரிகளில்

மாதேவி said...

"சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு" அருமை.

சிட்டுப்போல் மகிழ்ந்து திரிந்திடுவோம்.

na.jothi said...

பெருமழை பெய்தாலே
நண்மை தான்

சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.

இந்த வரிகள் மிக அழகு

விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.

இதுவும் அழகான கற்பனை

சென்ஷி said...

:-)

நல்லா இருக்குங்க.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதியிருக்கலாமோன்னு தோண வைக்குது!

சென்ஷி said...

//வானம் வெளித்த பின்னும்...//

இதுக்கு என்னங்க அர்த்தம்!?

வானம் வெளுத்த பின்னும் கேள்விப்பட்டிருக்கேன். வெளித்த பின்னும் அப்படின்னா சுத்தமா புரியலை!

S.A. நவாஸுதீன் said...

சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.

அந்த சிட்டுபோலவே சிரமங்களை சிலிர்ப்பு உதறிவிட்டு சிறகடித்துப் பறக்கணும் ஹேமா.
****************************
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!

அழகு, ரசித்தேன்

Kala said...

ஹேமா இதைத்தான் காதலின் அவஸ்தை என்கின்றதோ!

நான் காதல் மழையில் நனைந்து விட்டேன் நீ இன்னும்
நனையவில்லையா?என்று சிட்டு திரும்பிப் பார்த்திருக்கும் ஹேமா.

இரவே..இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே......
என்று ஹேமா படியது எனக்கும் கேட்டதுதான்.

பதட்டங்களை பொ{ஒ}த்தியெடுத்து போகுமளவுக்கு
பைத்தியமாக்கியது யாருடா செல்லம்.


ஹேமா ஒவ்வொருவரிகளும் ஒவ்வொரு கதை சொல்லும்
கவி ஆழ்ந்து பார்த்தால் ஆழம் புரியும் .

சப்ராஸ் அபூ பக்கர் said...

////பாதை நெடுகிலும் பரிமாற
நிறையக் கேள்விகளும் கதைகளும்
தேக்கி வைத்திருக்கிறேன்.
ஓ...கேட்பதும் கதைப்பதும் பிடிக்காதோ !///

ரொம்பப் பிடித்த கவி வரிகள்....

வாழ்த்துக்கள்.....

பா.ராஜாராம் said...

//சுவரோரச்செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரை சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை
பார்த்துகொள்கிறது//
அழகான பார்வை!

உங்கள் ராட் மாதவ் said...

//விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!//

அருமை அருமை...

sakthi said...

சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!


கொஞ்சம் தாமதமாய் வந்ததால் உங்கள் கருத்துரையுடன் சேர்ந்து படித்ததால் கவிதை எனக்கு புரிந்து விட்டது ஹேமா....

அழகான கவிதை

புது முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

// கனவில் காக்கா கரைகிறது.
அப்போ..யாரோ வரத்தான் போகிறார்கள்.
நம்பிக்கையோடு தலைவாழையிலை
வெட்டி வைக்கலாமோ. //


இதோ...... கிளம்பீட்டோமுள்ள..... நாளைக்கு உங்க வீட்டுக்குத்தான் சாப்பிட வர்றோம்....!! ...................................கிளப்புங்கள் லாரியை.......!!




அழகுக் கவிதை.....!!!

manjoorraja said...

கவிதை நன்று.

ஆமாம். உங்கள் பதிவில் தலைப்பு:

வானம் வெளுத்தப் பின்னும்
என இருக்கவேண்டுமோ!

சும்மா ஒரு சந்தேகம்!

ஹேமா said...

வாங்க துபாய் ராஜா.மனங்கள் கனக்கிறபோது கவிதையென்கிற பெயரில் ஏதோ ஒன்று வரும் நன்றி.

***********************************

//சத்ரியன்...அந்தப் பெயரை எனக்கு மட்டும் சொல்லிடுங்கோ...யாரெண்டு.//

சொல்ல மாட்டேனே.சொன்னா கண்டு பிடிச்சிடுவீங்களே !

ஆ.ஞானசேகரன் said...

//விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!//

ஏன் இந்த குழப்பம்..
ஏன் இந்த பதற்றம்...

ஹேமா said...

//இரவீ...மிக்சரும் - பிச்சாவுமா?
பாவம் விடுங்க...

கதைக்க போகினமா - மாட்டறரிக்கை வந்திருக்கும்
நோக்கினம் .//

இரவீ...யழ்ப்பாணத் தமிழ் கொலை எண்டு யாராவது என்னைக் கொலை செய்யப் போகினம்.

என்ன பிட்சா..மிக்சர்?எல்லாத்தையும் சொல்லக் கூடாதெல்லோ.

ஹேமா said...

டாக்டர் கவிதை பிடிச்சிருக்கா.
சிலநேரம் நீங்க தாற மருந்தைவிட எழுத்து நோயைத் தீர்க்குது,அதுதான் கவிதை மாதிரி இப்பிடி.

***********************************

நன்றி நிலா.வாங்க .அடிக்கடி வரலாமே !

*********************************

//பிரியமுடன்.........வசந்த்...
சூரியனுக்கே காவலா?

ம்ம்? சுட்டெரிக்கறவங்க பொண்ணுங்கன்றது உண்மைதான்//

வசந்த்,எப்பவுமே பொண்ணுங்க நிலவு மாதிரி குளிர்மையா இருப்பாங்க.
சூரியனா ஆக்குறவங்களே உங்களைப்போல ஆண்கள்தானே !

ஹேமா said...

ஜமால்,சுகமா.உடனேயே ஓடி வருவிங்க.காணோம்ன்னு யோசிச்சேன்.

********************************

ஜமால்,சுகமா.உடனேயே ஓடி வருவிங்க.காணோம்ன்னு யோசிச்சேன்.
*********************************

மாதேவி,பயித்தங்காயும் பிலாக்கொட்டைக் கறியும் சூப்பரோ சூப்பர்.கவிதையிலும் விட.

*******************************
ஜோதி,இவ்ளோ நாளும் உங்களைக் காணலியே.இனி வாங்க.நன்றி இன்று வந்ததுக்கு.

ஹேமா said...

//சென்ஷி ...
நல்லா இருக்குங்க.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதியிருக்கலாமோன்னு தோண வைக்குது!//

வாங்கோ சென்ஷி.எனக்குப் பிடிச்ச நாகேஷ் படத்தோட எப்பவும் நான் பாத்திருக்கேன்.நீங்க பெரியவங்க.ஏன் இத்தனை கவிதைகள் எழுதியிருக்கேன்.என் பக்கம் வரல.
சரியோ தப்போ சொல்ல ஒருதரமும் வரல நீங்க.இண்ணைக்கு வந்தீருக்கீங்க சந்தோஷமா இருக்கு.இப்பிடி அடிக்கடி என் தப்பும் சொல்லணும்.எனக்குத் தெரியணும்.

இன்னும் யோசிச்சு இருக்கலாம்ன்னு சொல்றீங்க.அந்த நிமிடத்தில் என் மனநிலையில் பட்டது.ஒருவேளை இன்னும் அழகுபடுத்தியிருக்கலாமோ !எப்படி ?

//சென்ஷி said...
//வானம் வெளித்த பின்னும்...//

இதுக்கு என்னங்க அர்த்தம்!?

வானம் வெளுத்த பின்னும் கேள்விப்பட்டிருக்கேன். வெளித்த பின்னும் அப்படின்னா சுத்தமா புரியலை!//

நான் தளம் தொடங்கிய வேளை என் நாட்டின் நினைவாகவே மனதில் பட்டதை வைத்தேன்.வெளித்து -வெளுத்து கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதானே.வானம் வெளிச்சமான பிறகுகூட எங்கள் நிலைமை இருள்தானே.மாற்ற விருப்பம் இல்லை.விட்டுவிட்டென்.ஏன் சரில்லையா ?

ஹேமா said...

நவாஸ் வாங்க.நன்றி வந்தமைக்கு.
**********************************

//Kala said...
ஹேமா இதைத்தான் காதலின் அவஸ்தை என்கின்றதோ!

நான் காதல் மழையில் நனைந்து விட்டேன் நீ இன்னும்
நனையவில்லையா?என்று சிட்டு திரும்பிப் பார்த்திருக்கும் ஹேமா.//

கலா உங்களுக்கும் சத்ரியனுக்கும் சரியான ஆர்வம்.பெயர் தெரிய வேணுமோ.ரகசியமா பிறகு சொல்றேன்.சரியோ.குருவி அப்பிடி சொல்ல இல்ல.குருவி என் அவஸ்தை பாத்து கிண்டலும் பண்ணியிருக்கலாமே !

ஹேமா said...

வாங்க ராஜாராம்.தொடக்கப்
பள்ளியைத் தொடக்கிவிட்டு வராமல் போனா எப்பிடி.உங்களை முட்டுக்காலில் விட எல்லாரும் காத்திட்டு இருக்கோம்.இன்னும் வரல நீங்க.உங்க வாழ்த்து வேணும்.எங்கே சித்தப்பா.சுகம்தானே.

***********************************
சப்ராஸ் அபூ பக்கர் ...உங்கள் கவிதைகளும் பார்த்தேன்.
தனிமையின் பிரிவின் வலியோடு இருக்கிறது.அருமை.

ஹேமா said...

மாதவ்,இதற்கு முன்னைய பதிவில் உங்களுக்கான பின்னூட்டம் பாத்தீங்களா ?

*******************************

சக்தி எத்தனையோ என் கவிதைகள் நான் எழுதுவது ஒன்றாயும் படிப்பவர்களின் கருத்து வேறாயுமே இருக்கிறது.அது என் தப்பா.இல்லை கவிதை என்றாலே அப்படித்தானா என்று புரியவில்லை.
கருத்துக்கு நன்றி தோழி.

ஹேமா said...

//லவ்டேல் மேடி...இதோ...... கிளம்பீட்டோமுள்ள..... நாளைக்கு உங்க வீட்டுக்குத்தான் சாப்பிட வர்றோம்....!! ...................................கிளப்புங்கள் லாரியை.......!! //

வாங்க மேடி.எப்போ இருந்து சுவிஸுக்கும் இந்தியாவுக்கும் லாரி விடுறாங்க.அப்போ யாழ்ப்பாணமும் போகலாம்தானே !கண்டிப்பா வாங்க.வந்து சொல்லணும்.

**********************************
வாங்க மஞ்சூர் ராசா.தளம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது.
இன்று "வானம் வெளித்த பின்னும்...."இரண்டு பேருக்குச் சந்தேகங்கள்.உண்மையில் அக்கறையோடு கவனிப்பதையிட்டு சந்தோஷமாயிருக்கு.

வெளுத்த -ப் வரவேணுமா.எனக்கு வரணும்ன்னு நினைக்கல.தெரில.
தப்பா.சொல்லுங்க.

***************************

வாங்கோ ஞானம்,எங்கே போய்ட்டீங்க.முன்னைய பள்ளிக்கூடத்திலயும் கணோம்.ஞானம் குழப்பமும் பதற்றமும் எங்குதான் இல்லை.நாங்களாகவே எங்களைக் குழப்பிக் கொள்கிறோமோ சிலசமயம் !

kuma36 said...

///சுவரோரச் செடியில் ஆடிய சிட்டு ஒன்று
சொட்டிய மழை நீரைச் சிலிர்ப்பிவிட்டு
என்னையும் ஒருமுறை பார்த்துக்கொள்கிறது.
விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.
என் அத்தனை பதட்டங்களையும்
பொத்தி எடுத்து போகிறது
உனது பெயர் !!!///

அக்கா எங்கிருந்து தான் வரிகள் வருகிறதோ உங்களுக்கு மட்டும்! சூப்பர்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஒரு வாரமாய் ஊரில் இருக்கவில்லை ஹேமா , அதுதான் தாமதமாக வந்து படிக்கிறேன்.
உங்கள் கவிதை காதலின் வேதனையை அழகாக படம் பிடிக்கிறது. திரும்பத் திரும்பப் படித்தேன். நன்றாக இருக்கிறது.

nila said...

//நன்றி நிலா.வாங்க .அடிக்கடி வரலாமே !//

உங்க கவிதைகள் தான் என்னை இழுக்குதே... வராம போயடுவென......

இப்படி அழகா எழுதுற வித்தைய எனக்கும் கொஞ்சம் கத்துக்குடுங்களேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசி வரிகள் அருமை..:-)))

ஹேமா said...

கலை எங்க அடிக்கடி காணாமப்போறீங்க.சுகம்தானே.

*******************************

ஜெஸி,விடுமுறை விட்டு வந்து என்னப் பார்க்க ஓடி வந்ததுக்கு சந்தோஷம் தோழி.

**********************************

//நிலா...இப்படி அழகா எழுதுற வித்தைய எனக்கும் கொஞ்சம் கத்துக்குடுங்களேன்...//

நிலா இந்த ரகசியம் எல்லாம் சொல்லித் தரலாமோ !நிலா பகிடிக்கு.மனசில நல்லதோ கெட்டதோ- வலியோ சுகமோ சொல்ல யாரும் இல்லை.அதைக் கிறுக்குகிறேன்.அதை அழகு
படுத்துகிறேன்.
அவ்வளவும்தான் தோழி.

NILAMUKILAN said...

//விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.//
அற்புதமான சிந்தனை. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.

சாந்தி நேசக்கரம் said...

ஹேமா கவிதையோடு கதையொன்றின் கனதி சுமக்கிறது வரிகள்.

பாராட்டுக்கள்.

சாந்தி

Raju said...

கவிதை நல்லாருக்கு..!

ஹேமா said...

நிலா முகிலன் ...
//விடிவதை விரும்பாத இரவுக்காய்
சூரியனையே தூங்கவைத்துக்
காவல் இருக்கிறேன்.//
அற்புதமான சிந்தனை. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்.//

வாங்க முகிலன்.காதல்ன்னு நினைச்சா அப்பிடியே நிறையக் கற்பனை வருது.
***********************************

//முல்லைமண் ...
ஹேமா கவிதையோடு கதையொன்றின் கனதி சுமக்கிறது வரிகள்.//

சாந்தி,வாங்கோ.என்னைத் திட்டுவீங்களோ தெரியாது.இப்பிடியெல்லாம் கவிதை எழுத எப்பிடித்தான் மனசு வருதோ எண்டு.என்ன செய்ய சாந்தி.
மனசுக்கும் மருந்து வேணுமே !

***********************************
வாங்க டக்ளஸ்.இப்போவாச்சும் குழந்தைநிலா கண்டு பிடிச்சீங்களே.சந்தோஷம்.

thamizhparavai said...

ஹேமா ... ரொம்ப அழகான கவிதை.. எனக்குப் பிடிச்சிருந்தது.. ரொம்ப நாளைக்கப்புறம் உங்களின் கவி வரிகள் கவர்ந்தது...

ஹேமா said...

//தமிழ்ப்பறவை ...
ஹேமா ... ரொம்ப அழகான கவிதை.. எனக்குப் பிடிச்சிருந்தது.. ரொம்ப நாளைக்கப்புறம் உங்களின் கவி வரிகள் கவர்ந்தது...//

அண்ணா,இருந்து இருந்து வந்தாலும் சந்தோஷமாயிருக்கு.சுகம்தானே.
அப்போ கொஞ்ச நாளா என்னோட கவிதைகள் ஒன்றும் சரில்லை என்கிறீர்கள்.சும்மா...

Post a Comment