*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, August 23, 2009

செல்லமாய்...

பூக்களுக்கு
பூவின் வண்டுக்கு
வானுக்கு
வானின் பறவைக்கு
ஆற்றுக்கு
நீந்தும் மீனுக்கு
மலைகளுக்கு
காடுகளுக்கு
டீச்சருக்கு
தோழிக்கு
கோழிக்கு
ஊரும் எறும்புக்கு
என்று எல்லாவற்றிற்கும்
பட்டப் பெயர்
வைத்துவிட்டு,
உன்னை மட்டும் எப்படி
சும்மா விட முடிகிறது
என்னால் !
உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!

ஹேமா(சுவிஸ்)

48 comments:

S.A. நவாஸுதீன் said...

அழகா செல்லமா கொஞ்சி இருக்கீங்க ஹேமா

sakthi said...

உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!

பிடிச்சிருக்குன்னு தானே சொல்லியாகனும் வேற வழி

அழகு வரிகள் ஹேமா

Unknown said...

அய்யய்யோ.... . யார சொல்லுறீங்க..... ?? கூஜா பக்ஷ்வையா....? இல்ல அந்த ஆளுக்கு அண்டர் கிரவுண்டு ஹெல்ப் செஞ்ச சானியா மற்றும் கொலைஞ்கரையா....? இல்ல சும்மா சவுண்ட மட்டும் உட்டுபுட்டு சலாம் மகாராணி பாட்டு பாடும் கொய்.கபாலசாமியவா.......?

Anonymous said...

அழகான கவிதை

உங்கள் ராட் மாதவ் said...

நன்று ஹேமா. யாரை 'ஹிட்லர்' என்கிறீர்கள்?? பதிலையும் சொல்லியிருக்கலாமே?? :-)

Admin said...

கவிதை அழகு... யார் அந்தக் ஹிட்லர்... புரியவில்லை...

தமிழ் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

செல்லமாய்
சொல்வதாய் இருந்தால்
செல்லப் பெயர்
கிட்லர் மட்டும் தானா ??????????!!!!!!!!!!!!!!!!!!
இன்னும் எத்தனையோ..........

துபாய் ராஜா said...

எங்க ஊர்ல 'எம்டன்'ன்னு சொல்வாங்க... :))

- இரவீ - said...

ஹேமா, நடக்கட்டும் நடக்கட்டும் ...

எதிரிய கூட அன்பா தான் பாப்பீங்க போலிருக்கு.

அது சரி - யார் அந்த ஹிட்லர்?

என்ன கொடும சார் said...

உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

அத்திரி said...

Superb

நட்புடன் ஜமால் said...

பிடிச்சி தானே வச்சீங்க

அப்ப பிடிச்சி தான் ஆஹோனும்,

-------------

இந்த போஸ்ட் நான் முன்னாடியே பார்த்தேன் அப்புறம் டெலீட் ஆயிடிச்சி

...

சத்ரியன் said...

//உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!//

எனக்கு பிடிக்கல.போ...!

ஆ.ஞானசேகரன் said...

//என்னால் !
உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!//

ஹிட்லர் யார் என்று சொல்லவிட்டாலும் புரிந்துக்கொள்ள முடிகின்றது...

அருமை யோசிக்ககூடியது....

thamizhparavai said...

:-))
அக நாலாயிரத்தில் ஒன்றோ...?!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்ம்ம்!


யார் அந்த அழகிய ராட்சசன்!

Muniappan Pakkangal said...

Chellap peyar kavithaiyum Hitlerum azhagu Hema.

அன்புடன் நான் said...

அழகான ராட்சசியே...இதைவிட ஹிட்லர் மோசமில்லை.

ஆ.ஞானசேகரன் said...

தோழி உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்...

மே. இசக்கிமுத்து said...

இது பாராட்டா இல்லை வேறு வகையா? அதாவது வஞ்சபுகழ்ச்சி அணியா? குழப்பமடைஞ்சிருப்பார் அவர்!!

நீண்ட நாட்களுக்கு பின் வலை பூ பக்கம் வந்திருக்கிறேன்,எனது வலை பூவில் ஒரு பதிவும் போட்டிருக்கிறேன்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஹிட்லரையும் அன்பு செய்ய ஒரு மனம் வேண்டும் தானே தோழி. நடத்துங்க.
நல்லாயிருக்கு.

ஹேமா said...

நன்றி நவாஸ்,முதலாவதாக ஓடி வந்து கவிதையைக் கொஞ்சியதற்கு.

**********************************

//சக்தி...பிடிச்சிருக்குன்னு தானே சொல்லியாகனும் வேற வழி//
சக்தி,உங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்து இங்கே.அவருக்குப் பிடிக்கவில்லையாம்.நிறையக் கோவிச்சுக்கிறார்.ம்ம்ம்...

*********************************


//லவ்டேல் மேடி ...

அய்யய்யோ.... . யார சொல்லுறீங்க..... ?? கூஜா பக்ஷ்வையா....? இல்ல அந்த ஆளுக்கு அண்டர் கிரவுண்டு ஹெல்ப் செஞ்ச சானியா மற்றும் கொலைஞ்கரையா....? இல்ல சும்மா சவுண்ட மட்டும் உட்டுபுட்டு சலாம் மகாராணி பாட்டு பாடும் கொய்.கபாலசாமியவா.......?//

என்ன மேடி நீங்க வேற.வீட்ல பேர் வச்சா ஊரெல்லாம் போய்த் தேடுறீங்க.நான் காதல் சொன்னா நீங்க அரசியல்.சண்டே ஸ்பெஷல் காதல் மட்டும்தான் அரசியல் தடை.

ஹேமா said...

என்ன ஆனந்த் நீங்க.நான் மெனக்கெட்டு Photo shop ல
எல்லா ம் போட்டொ போட்டு அழகு படுத்திக் கவிதை போட்டா,ஒரு சின்னதா கவிதை அழகு.
அவ்வளவுதானா !

*******************************

//ரெட் மாதவ்...நன்று ஹேமா. யாரை 'ஹிட்லர்' என்கிறீர்கள்?? பதிலையும் சொல்லியிருக்கலாமே?? //

சரியாப்போச்சு மாதவ்.பட்டம் குடுத்ததுக்கே பெரும் பிரச்சனை.
சமாதானப்படுத முடியாம நான் இங்க.இதில யார்ன்னு வேற சொல்லவா நான் !

********************************

//சந்ரு ...
கவிதை அழகு... யார் அந்தக் ஹிட்லர்... புரியவில்லை...//

சந்ரு,உங்களுக்கும் அதே கவலையா ?கொஞ்சம் உட்க்கார்ந்து இருந்து யோசிச்சுப் பாருங்கோ.இலங்கைப் பதிவாளர் சந்திப்பு முடிச்சு இப்ப நீங்க களைப்பாய் இருப்பீங்க.

ஹேமா said...

//திகழ்மிளிர் சைட்...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

செல்லமாய்
சொல்வதாய் இருந்தால்
செல்லப் பெயர்
கிட்லர் மட்டும் தானா ????!!!!!
இன்னும் எத்தனையோ...//

திகழ் எங்கே தோழி உங்களை இந்தப் பக்கம் கன நாளாய்க் காணொமே.எல்லாப் பெயர்களையும் சொல்லக்கூடாதெல்லோ !

********************************

//துபாய் ராஜா ...
எங்க ஊர்ல 'எம்டன்'ன்னு சொல்வாங்க...//

ராஜா பொய் சொல்லதீங்க.ஊர்லயா இல்ல உங்க வீட்லயா....!

**********************************

//இரவீ ...
ஹேமா, நடக்கட்டும் நடக்கட்டும் ...

எதிரிய கூட அன்பா தான் பாப்பீங்க போலிருக்கு.

அது சரி - யார் அந்த ஹிட்லர்?//

ரவீ இங்க கவிதை மட்டும்தான்.
சந்தேகங்கள் எல்லாம் தீர்க்கப்
படுவதில்லை.ரவி எதிரியும் சிலசமயத்தில அன்பாய் இருக்கிறானே !

சாந்தி நேசக்கரம் said...

//திகழ்மிளிர் சைட்...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

செல்லமாய்
சொல்வதாய் இருந்தால்
செல்லப் பெயர்
கிட்லர் மட்டும் தானா ????!!!!!
இன்னும் எத்தனையோ...//

திகழ் எங்கே தோழி உங்களை இந்தப் பக்கம் கன நாளாய்க் காணொமே.எல்லாப் பெயர்களையும் சொல்லக்கூடாதெல்லோ !

********************************

//துபாய் ராஜா ...
எங்க ஊர்ல 'எம்டன்'ன்னு சொல்வாங்க...//

ராஜா பொய் சொல்லதீங்க.ஊர்லயா இல்ல உங்க வீட்லயா....!

**********************************

//இரவீ ...
ஹேமா, நடக்கட்டும் நடக்கட்டும் ...

எதிரிய கூட அன்பா தான் பாப்பீங்க போலிருக்கு.

அது சரி - யார் அந்த ஹிட்லர்?//

ரவீ இங்க கவிதை மட்டும்தான்.
சந்தேகங்கள் எல்லாம் தீர்க்கப்
படுவதில்லை.ரவி எதிரியும் சிலசமயத்தில அன்பாய் இருக்கிறானே !

August 24, 2009 11:05 AM
Blogger முல்லைமண் said...

//உன்னை மட்டும் எப்படி
சும்மா விட முடிகிறது
என்னால் !
உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!//

என்ன தோழி பிடிக்கேல்லையெண்டா அந்த மனதரை சும்மாவா விடப்போறியள் ?
பறவாயில்லை வையுங்கோ முசோலியெண்டு.
சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

இன்னும் நிறைய பெயர்கள் வைக்கலாம் ஹேமா மகிந்த கோத்தபாய பசில் சோனியா கருணாநிதித்தாத்தா......
சாந்தி

Admin said...

இலங்கைப் பதிவர் சந்திப்பு கலந்துரையாடல் முற்று முழுதான ஒலிவடிவம் http://n-aa.blogspot.com/2009/08/blog-post_23.html இங்கே

மேலதிக தகவல்களும் படங்களும் இப் பதிவுகளிலும்

http://shanthru.blogspot.com/2009/08/blog-post_23.html


http://ariyalion.blogspot.com/2009/08/blog-post_23.html

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7043.html

http://kadaleri.blogspot.com/2009/08/blog-post_23.html

http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_23.html

http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_23.html

http://vasanthanin.blogspot.com/2009/08/blog-post.html

http://kalamm.blogspot.com/2009/08/blog-post_23.html

ஹேமா said...

//என்ன கொடும சார் ...
உங்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...//

நன்றி சார்.
உங்க பெயர் ஏன் இப்பிடி?சரி சரி.
*******************************

வாங்க அத்திரி.புதுசாப் பதிவு ஒண்ணும் போடலியா?
********************************

//நட்புடன் ஜமால்...
பிடிச்சி தானே வச்சீங்க

அப்ப பிடிச்சி தான் ஆஹோனும்,
-------------
இந்த போஸ்ட் நான் முன்னாடியே பார்த்தேன் அப்புறம் டெலீட் ஆயிடிச்சி//


அதனே ஜமால் நான் பேர் வச்சா வச்சதுதான்.மாத்தமாட்டேன்.ஜமால் இந்த சண்டே ஸ்பெஷல் நீங்க அண்ணைக்குக் கேட்டதுக்காகத்தான்.

ஓம் ஜமால்.நீங்க சொல்றது சரி.இரவு போட்டிட்டு எடுதிட்டேன்.விடிஞ்ச அப்புறம் போடலாம்ன்னு.

ஹேமா said...

//சத்ரியன் ...
//உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!//

எனக்கு பிடிக்கல.போ...!//

சத்ரியன் நான் உங்களுக்கு வைக்கல.உங்களுக்குப் பேர் வைக்க எத்தனை பேர் இருக்காங்க.அட இந்த நேரம் பாத்து லீவில கலா போய்ட்டா !
**********************************

//ஆ.ஞானசேகரன் ...
//என்னால் !
உன் செல்லப் பெயர்
"ஹிட்லர்"தான்.
பிடிச்சிருக்கா !!!//

ஹிட்லர் யார் என்று சொல்லவிட்டாலும் புரிந்துக்கொள்ள முடிகின்றது...

அருமை யோசிக்ககூடியது....//

ஞானம் உங்க அறிவே அறிவுதான்.பாருங்க கண்டு பிடிச்சிட்டீங்க.அதுக்காக என்னை பாத்திட்டு நீங்களும் போய் பெயர் வைக்கிறதில்ல.ஆமா.
*********************************

//தமிழ்ப்பறவை ...
:-))
அக நாலாயிரத்தில் ஒன்றோ...?!//

அண்ணா நீங்களும் கிண்டல் பண்றீங்களா !

ஹேமா said...

டாக்டர் பிடிச்சிருக்கா.உங்களுக்கு வீட்ல என்ன பட்டப்பெயர் வச்சிருக்காங்க.

******************************
//சி. கருணாகரசு...
அழகான ராட்சசியே...இதைவிட ஹிட்லர் மோசமில்லை.//

நீங்க கவனிக்கலயா ?ஏற்கனவே ராட்சசன்னு பெயர் வச்சிட்டேன் ஒரு கவிதையில.

na.jothi said...

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும்
ஹிட்லரா ? நடத்துங்க !

சத்ரியன் said...

//எனக்கு பிடிக்கல.போ...!//

சத்ரியன் நான் உங்களுக்கு வைக்கல.உங்களுக்குப் பேர் வைக்க எத்தனை பேர் இருக்காங்க.//

எனக்கு பேர் வைக்க இன்னுமா இருக்காக? சர்தான்.அப்ப‌ நடத்துங்க...

//அட இந்த நேரம் பாத்து கலா லீவில போய்ட்டா !//

சொல்லவேயில்ல...! வரட்டும். கவ‌னிச்சிக்கறேன்.
(கலாவிற்கு விடுப்பும், பயணமும் இனிதாய் அமைய வாழ்த்துகள்.)

அரங்கப்பெருமாள் said...

அருமையான பெயர்...பட்டப்பெயர் வைப்பது எல்லோருக்கும் வாடிக்கைதான்.

மேவி... said...

romba late agiruchu pol irukke...so


present madam

(kavithai nantru)

சப்ராஸ் அபூ பக்கர் said...

அப்போ அவர் செல்ல ஹிட்லரோ?.....

நல்லா இருந்திச்சு ஹேமா அக்கா.... வாழ்த்துக்கள்.....

மேவி... said...

photo shop work nalla irukku ...

பா.ராஜாராம் said...

அருமையாய் சிணுங்குகிறது ஹேமா,கவிதை!
beutiful.keep going.

Xavier said...

Super :)

Hema, Whats your mail id ? Can you meet me in xavier.dasaian@gmail.com ?

ஹேமா said...

//இசக்கிமுத்து ...
இது பாராட்டா இல்லை வேறு வகையா? அதாவது வஞ்சபுகழ்ச்சி அணியா? குழப்பமடைஞ்சிருப்பார் அவர்!!//

வாங்க இசக்கிமுத்து.எப்பிடி அவர் நினைச்சாலும் எனக்கு OK தான்.
எனக்குப் பெரிய திருப்தி புதுசாப் பெயர் ஒண்ணு வச்சதுக்கு.

***********************************

//ஜெஸ்வந்தி... ஹிட்லரையும் அன்பு செய்ய ஒரு மனம் வேண்டும் தானே தோழி.நடத்துங்க.
நல்லாயிருக்கு.//

என் தோழி நீங்கதான் ஒத்துக்கிட்டு நடத்துங்கன்னு மனதார சொல்லியிருக்கீங்க.நன்றி ஜெஸி.

**********************************

//முல்லைமண் ...என்ன தோழி பிடிக்கேல்லையெண்டா அந்த மனதரை சும்மாவா விடப்போறியள் ?பறவாயில்லை வையுங்கோ முசோலியெண்டு.இன்னும் நிறைய பெயர்கள் வைக்கலாம் ஹேமா மகிந்த கோத்தபாய பசில் சோனியா கருணாநிதித்தாத்தா......
சாந்தி//

சாந்தியெண்டா சாந்திதான்.
பாருங்கோவன் எனக்கு ஞாபகம் வராத இல்லாட்டி நினைக்காத பெயர் எல்லாம் சொல்லித்தாறா.
சந்தோஷமாயிருக்கு.நன்றி சாந்தி.

ஹேமா said...

//சந்ரு ...
இலங்கைப் பதிவர் சந்திப்பு கலந்துரையாடல் முற்று முழுதான ஒலிவடிவம்//

நன்றி சந்ரு.சந்தோஷம்.

******************************

//ஜோதி ...
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும்
ஹிட்லரா ? நடத்துங்க !//

நன்றி ஜோதி.என்ன நீங்க சொல்றீங்க,ஹிட்லர்ன்னா அன்பில்லாதவரா என்ன !

********************************

//சத்ரியன்...//அட இந்த நேரம் பாத்து கலா லீவில போய்ட்டா !//

சொல்லவேயில்ல...! வரட்டும். கவ‌னிச்சிக்கறேன்.
(கலாவிற்கு விடுப்பும், பயணமும் இனிதாய் அமைய வாழ்த்துகள்.//

அட சத்ரியன் கலா இல்லாம எனக்குக் கையே முறிஞ்சமாதிரி.பாருங்க வருவா இன்னும் வீறாப்போட...!

*********************************

//அரங்கப்பெருமாள்...
அருமையான பெயர்...பட்டப்பெயர் வைப்பது எல்லோருக்கும் வாடிக்கைதான்.//

அப்போ உங்க வீட்ல என்ன பெயர் வச்சிருக்காங்க.ரகசியமா சொல்லுங்க.

ஹேமா said...

வாங்க மேவீ,நீங்க ஒரு ஆள்தான் நான் Photo shop ல கவிதையை அழகுபடுத்துனதை ரசிச்சு இருக்கீங்க.நன்றி மேவீ.

********************************

//சப்ராஸ் அபூ பக்கர் ...
அப்போ அவர் செல்ல ஹிட்லரோ?.....
நல்லா இருந்திச்சு ஹேமா அக்கா.... வாழ்த்துக்கள்.....//

அபூ,ஹிட்லரா இருந்தாலும் அன்பான ஹிட்லர்.செல்ல ஹிட்லர்.

*******************************

//பா.ராஜாராம் ...
அருமையாய் சிணுங்குகிறது ஹேமா,கவிதை!
beutiful.keep going.//

நன்றி ராஜா அண்ணா.

ஹேமா said...

நன்றி சேவியர் அண்ணா.
நிறைய நாட்களுக்குப் பிறகு என் பக்கம்.சந்தோஷமாயிருக்கு.

Arasi Raj said...

நீங்க திட்ட்னா கூட கவிதையா திட்டுவீங்களோ...அருமை ஹேமா

கொஞ்ச நாலா நெளிஞ்சு வளைஞ்சு இருக்குற ஆணி எல்லாம் புடிங்கிட்டு இருக்கேன்

உங்க பக்கம் நேரத்துக்கு வராம போனதுக்கு கோச்சுக்காதேங்க

முடிஞ்சா மெயில் பண்ணுங்க to : raj.ponnarasi@gmail.com

அரங்கப்பெருமாள் said...

//அப்போ உங்க வீட்ல என்ன பெயர் வச்சிருக்காங்க.ரகசியமா சொல்லுங்க//

உணமையைச் சொல்லுகிறேன்..
'தண்ணி கொடம்'
(தண்ணி அடிப்பதால் அல்ல,எதைப் போட்டாலும் கரையும் தண்ணீரில், அது போல எதைப் போட்டாலும் சாப்பிடுவேன்).
'பிரியாணி எப்பிடி இருக்கு தண்ணி கொடம்' - எனக் கேட்பதுண்டு.
அவள் பெயர் ' சண்டக் கோழி' (விளக்கம் தேவையில்லை)

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

Sanjai Gandhi said...

ipdi ellam kooda romance pannuveengalo? :)

Sanjai Gandhi said...

//முல்லைமண் said...

இன்னும் நிறைய பெயர்கள் வைக்கலாம் ஹேமா மகிந்த கோத்தபாய பசில் சோனியா கருணாநிதித்தாத்தா......
சாந்தி//

mathavanga ellam theriyuthu. yarunga intha shanthi. avangala mathiriye elangaila periya arasiyal thalaiviyo?

kanagu said...

arumaiya irukkunga Hema :))

Post a Comment