*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, April 15, 2015

சாயும் சாயல்...

பிறவிச்சுழல் தொலைக்க
என் காலைச் சுற்றியே
மீண்டும் மீண்டும்
முளைத்தெழா ஆழக்குழி.

அதிதியொன்றின்
அநாகரிக வரவு.

கோளகையாய்
கோழையாய்
எரிச்சலாய்
என்னைப்போலவே
எனைச்சுற்றி
முன்னும் பின்னுமாய்...

தோற்றல் விதி
இழப்பும் விதி
வெறியாடும் வேக்காடு விதி
கதியின் விரைவும் விதியென
விருந்தும் பசியுமாய்
தன் நிழலே தன் கழுத்திறுக்க...

தொலைப்பது தோல்வி
தவிர
புதைக்க முடிகிறது
அது சாய்ந்த என் நிழலை
என் காலின் கீழ்.

என் குருதிக்கு
நீயே பொறுப்பெனக் கை நீட்டுமுன்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

2 comments:

தனிமரம் said...

நிழல் கொடுமை போலத்தான் சில நேரத்தில். அருமையான கவிதை.

தனிமரம் said...

என்னைப்போலவே
எனைச்சுற்றி
முன்னும் பின்னுமாய்...// நிழல் எப்போதும் அருமைதான்.

Post a Comment