*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, July 17, 2014

உள்பெட்டி இரகசியம்...

உள்பெட்டிச் சீனிச்சரையில்
ஊர்ந்து உரசும்
சிட்டெறும்பொன்று கடிக்கிறது
வலிக்காமல்.

சொல்லிக்கொண்டிருக்கிறேன் பதில்...

வாழ்க்கை இதுதான் என்றானபிறகு
மனம் மரத்துவிடுகிறது
ஏக்கமில்லை
கவலையுமில்லை
அதேநேரம் சந்தோஷமுமில்லை
என்கிறேன்.

பிரார்த்தனைகள் உனக்காக
என்கிறது பிறகும்...

பிரார்த்தனைகளால்தான்
கொஞ்சமாய் மிஞ்சிக்கிடக்கிறோம்
மிஞ்சாமலே போயிருக்கலாம்
முணுமுணுக்கிறேன்
பல்லும் இதழும்
ஒட்டாப்பொழுதில்.

சமை கொஞ்சம்
தேநீர் பருகலாம்
என்கிறது
இமைக்க மறுக்கும்
வாஞ்சையோடு!!!

ஹேமா(சுவிஸ்)

2 comments:

தனிமரம் said...

மனம் மரத்துவிடுகின்றது// அழகான வரிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அழகிய கவிகண்டு மகிந்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment