*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 20, 2014

தேவை ஒரு நாயார்...


நிலவு பார்த்து நித்தம்
குரைத்துக்கொண்டிருக்கிறது
எப்போதும்
நான் பார்க்கும் அந்த நாய்.

கடிக்காவிட்டாலும்
குரைப்பதென்பதே
அடையாளமாய்
ஆக்கப்பட்டிருக்கிறது
அதற்கு.

கடிக்காவிட்டாலும்
குரைக்காத நாயை
நாயென்று சொல்வீர்களா
நீங்கள் ?

கடித்தும் குரைத்தும்
நாயின் சாகசங்களோடுதான்
மனிதன் இப்போ
என்றாலும்....

வாலில்லாமலோவென்று
நினைத்துச் சிரித்ததுண்டு
நிமிர்த்தமுடியாததாலோ !

கடித்தால் பாசிசமாம்
குரைத்தால் ஜனநாயகமாம்
இரண்டுமாய் 
இருப்பான் மனிதன்
அவன் அடையாளம் அது.

கடிக்காவிட்டாலும்
குரைக்கும் நாயொன்று
இருத்தல் நல்லது
என்னால்
குரைக்கவோ கடிக்கவோ
முடியவில்லை.

யார் வந்தாலும்
வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்
என் இயல்போடு
இன்றளவும் நான்!!!

 http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6122

ஹேமா(சுவிஸ்)

12 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அற்புதம்
பாசிச ஜனநாயக விளக்கம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

Seeni said...

அருமை....

அம்பாளடியாள் said...

என்றோ ஒரு நாள் இந்நிலையும் கடந்து போகும் தோழி .
காத்திருபுக்களின் எல்லைவரைக் கற்றுக் கொள்ளும்
பாடமானது பெறுதற்கரிய செல்வமாகி விடுகிறது !
வாழ்த்துக்கள் தோழி சிறப்பான படைப்பிற்கும் தொடரவும் .

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

நன்றியையும் கற்றுக் கொள்ள வேண்டும் அதனிடம்...!

ஸ்ரீராம். said...

உவமை அழகு...

வாலில்லாமலோ... :)))

பால கணேஷ் said...

நாய் ஒன்றினை வைத்து கம்பேர் பண்ணிச் சொன்ன விஷயங்கள் பிரமாதம்.

அகலிக‌ன் said...

கடிக்காவிட்டாலும்
குரைக்கும் நாயொன்று
இருத்தல் நல்லது

உதாரணமாய் கம்யூனிஸ்டுகளை சொல்லலாம் என எஇனைக்கிறேன். அவர்கள் இருக்கப்போய்தான் இந்தியா இன்னும் முயுமையாய் விற்க்கப்படாமல் இருக்கிறது. மேலும் நாய் ஒன்று இருப்பதைவிடவும் நாய்கள் ஜாக்கிரதை பலகையே பல கொள்ளைகளை தடுத்துக்கொண்டிருக்கிறது. கவிதை அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமை, ஹேமா.

Unknown said...

இறுதிக் கணத்தில் கடிக்கும்/கடிக்க வேண்டும்.அப்போது தான் அது.......நாய்(யார்)!

பித்தனின் வாக்கு said...

யார் வந்தாலும்
வாலாட்டிக்
கொண்டிருக்கிறேன்
என் இயல்போடு
இன்றளவும் நான்!!!

paravayillaiye ennai mathiriye irukka hamu.

Unknown said...

வார்த்தைகள் எல்லாம் அன்பின் வெளிப்பாடாய்...
தொடரட்டும்

Post a Comment