*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, January 17, 2014

அச்சம் எழுகிற தருணங்கள்...

மௌனப் பெருவெளி பிரித்து
நாசித்துவார இடுக்கில்
நுழையும் தாழம்பூ மணமென
சில நினைவுகள்
மறந்தாலும் மறக்காமலும்.

உந்தி எம்பி
வெளிவந்து மூச்சிழுத்து
உள்ளிழுக்கும் நீருக்கும்
'சற்றுப் பொறு' சொல்லி
காற்றுவாங்கும் மீனென
பிரதின்மையாகும்
புரவி வேகத்தில் எல்லாமே.

மனப்பரப்பெங்கும்
அரவம் கொத்திப் படரும்
நஞ்சின் நீலமாய்
துரோகிக்கும் மனித மனதின்
பல வர்ணக் கேள்விகளை
பெரும்பாறை
இறுகிச் சிதறும் மணல்துகளென
மாறி மாறி
விழியிழுத்து வெளிதாண்டி
வழி காட்டும்
அகத்தெளிவின் உண்மைகள்.

சரிவாய்
நீளமாய்
குவிந்து
கவிழ்ந்த இரவின் இருளில்
மெல்லப் புதையும் நான்.

சுவாலை வீச
கன்னம் நனைத்து
காது சிவக்க
கண்வழி கசியும் நீர்
உணர்த்தி வெளியேறும்
போன ஜென்மத்துக்
கடன்களை!!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

Anonymous said...

வணக்கம்
மனதை நெருடிய கவிதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

பயமுறுத்தும் படம்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ...!

'பரிவை' சே.குமார் said...

படம் வித்தியாசம்...
கவிதை மனதை வருடிய... நெருடிய... அழகிய கவிதை.

Seeni said...

Urukkiyathu kavithai..

தனிமரம் said...

அருமையான கவித்துளி!

Post a Comment