*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 26, 2013

அடங்காத் தமிழன்...

 
தமிழின் சொற்களுக்குள்
அடங்கா வீரன்
அண்ணா நீ....

வருவாய்....
இனம் வாழ்ந்து பெருக
காத்திருப்பின் காந்தள் பூக்களுக்குள்
மகரந்தம்
எடுத்துப் போயிருப்பாயென்ற
நம்பிக்கை.

கார்த்திகைப் பேரலையின்
கிளிஞ்சல்களை
கிழித்தெழுதிக் காத்திருக்கிறோம்
அழுத கண்ணீரோடு.

ஆதிக்க அழுத்தம்
எதுவரை அண்ணா
அடங்கியே போகிறோம்
அமுங்கிக் கிடக்கிறோம்
எல்லாம் சொன்னாய்
எல்லாம் செய்தாய்
இல்லாமல் போவேனென
சொல்லாமல் போனதென்ன
என் அண்ணா.

வருவாய்....
தளரா நம்பிக்கை
காலம் தவிர்த்தாலும்
வந்துவிடுவாய்
விடுதலைச் சூலமேந்தி
யாரோவாய்
வந்துவிடுவாய்...

எதிர்காலமாவது
தலை நிமிர்ந்து நடக்கட்டும்
உன்னைப்போல.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரபா அண்ணா
தம்பியண்ணா!!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு...

எனது வாழ்த்துக்களும்...

இளமதி said...

அடங்காத் தமிழன் அன்பிற்கியன்
எங்கள் அண்ணாவை நானும் வாழ்துகிறேன்!

'பரிவை' சே.குமார் said...

அருமை...
அடங்காத் தமிழன் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்களும்...

விச்சு said...

மாவீரர் நாள்... என் அண்ணனை நானும் வணங்குகிறேன்.
வருவாய்....
தளரா நம்பிக்கை
காலம் தவிர்த்தாலும்
வந்துவிடுவாய்
விடுதலைச் சூலமேந்தி
யாரோவாய்
வந்துவிடுவாய்...

Post a Comment