*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, July 02, 2013

முத்தத் துளிகள் (2)

தேன் முத்தம்
தரும்
திருடன்
உன்னைத் தின்ன
என்னோடு
காத்திருக்கிறது
தேன் களவு கொடுத்த
வண்ணத்துப்பூச்சியுமொன்று !

ஒரு கன்னம் நிறைத்(ந்)தால்
மறு கன்னமும் காட்டு
சொல்லி வைத்தார்
சிலுவைச்சாமி
சரி சரி....
மறு கன்னத்தையும்
நிறைத்திவிடு
இது காதலர் தினம் !
இன்றெல்லாம்
சொன்ன உன் வார்த்தைகளை
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
போதவில்லை கவிதையாக்க....
உன் வெடிச்சிரிப்ப்பும்
போதாது....
ராத்திரி
மு...த்...த...ம் தர
விடிகாலை...
முழுக்கவிதையாகிவிடும்
பாரேன் !
நீ.....
தராத முத்தத்தால்
நிரவாமல் கிடக்கிறது
கன்னக்குழிகள்
என்.........
முழுமையடையாக்
கவிதைபோல !
உன்...
தீராக்கோபங்களால்
எனக்குள்....
கருக்கொள்கிறது
முத்தக்குஞ்சுகளாய்
தரப்போவதில்லை
இப்போதைக்கு
உன்னிடம் நான் !

ஹேமா(சுவிஸ்)

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காதலர் தினம் உட்பட அனைத்தும் ரசிக்க வைத்தது...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

Facebook Comment Box சரியில்லை... கவனியுங்கள்... நன்றி...

அப்பாதுரை said...

தேன் உங்கள் கவிதைக்கும் பொருந்துகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காதலின் முத்திரையான முத்தம் பற்றிய கவிதைகள் இனிமை

ராஜி said...

பிள்ளைங்க வீட்டில இல்லாத நேரத்துல...,
அட, கவிதை எழுதுங்கன்னு சொன்னேன்பா

MANO நாஞ்சில் மனோ said...

முத்தம் போதாதே சத்தம் போடாதே பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. முத்தமும் அன்பும் ஒன்றுதான் இல்லையா...!

'பரிவை' சே.குமார் said...

காதல் கவிதைகள் அருமை சகோதரி.

sathishsangkavi.blogspot.com said...

இராத்திரி முத்தம் காலையில் கவிதை... சூப்பர் ஹோமா... முத்தத்தை அழகா சொல்லிஇருக்கறீங்க..

மாதேவி said...

முத்தமழை கொட்டுகின்றது. அருமை ஹேமா.

Post a Comment