*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, March 21, 2013

திரண்ட தமிழ்...இருப்பு......
இருப்பவர்க்கல்ல
அது இல்லாதவர்க்கே
அந்த இருப்பின் வலி தெரியும்.

இருப்பை மாற்றினால்தான்
வாழ்வென்றால்
அதை எதிர்ப்பது
புரட்சியென்றால்
செய்திடலாம்
அதைப் பலமுறை
மகிழ்ச்சியோடு.

ஈழம்....
என் தாயின் பிரசவம்
நமக்கான வலி
தலை சிதறிப் போனாலும்
எம் தலைமுறைகள்
மறவாது
பிணங்கள் தாண்டிய
இரத்தம் தோய்ந்த
எம் கால்களும் கூட.

எம் கால் பட்ட புழுதிகள்
காத்திருக்கும்
எமக்கான தேசத்தில்
இன்றும்....
இன்னும்....
வித்தாகிப் போனவர்கள்
வீரத்தைத் தந்தே போனார்கள்
இப்போதெல்லாம்
மரணங்கள் பயமில்லை
சலிப்புத்தான்.

குண்டுகள் விழுந்த தேசம்
குயில் கூவும் தேசமாகும்
சாவுகள் கண்ட பூமியில்
புதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்
என் தாய்க்கு
நித்தவிடியலில் விலாசமெழுதும்
நம் ஒற்றுமை.

கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தனித்தமிழ் தாயகம் !!!

ஹேமா(சுவிஸ்)

19 comments:

Seeni said...

konthalippaana varikal...!

விச்சு said...

சாவுகள் கண்ட பூமியில்
புதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்
என் தாய்க்கு
நித்தவிடியலில் விலாசமெழுதும்
நம் ஒற்றுமை//

ஸ்ரீராம். said...

ரத்த பூமியின்
துக்கம் குறையட்டும்.
புழுதிகள்
அகன்று
புன்னகை மலரட்டும்.

பால கணேஷ் said...

கனவுகளுக்கு உயிரூட்வோம், தமிழனின் தலை நிமிரும்- நம்புவோம். அந்த நம்பிக்கைதான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. சோகங்கள் மறைந்து புன்னகை மலரும் அந்த தினத்தை எதிர்பார்க்கலாம் ஹேமா!

திண்டுக்கல் தனபாலன் said...

வெற்றி பெறவும் வேண்டுவோம்...

சின்னப்பயல் said...

இல்லாதவர்க்குத்தெரியும் அந்த இருப்பின் வலி///

Unknown said...

வித்தாகிப் போனவர்கள்
வீரத்தைத் தந்தே போனார்கள்

Anonymous said...

கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்

Unknown said...

கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்

எள்ளவும் ஐயமில்லை! ஈழம் மலரும்!

Yoga.S. said...

கை கோர்ப்போம்!!!!!!

அப்பாதுரை said...

நிழல் போல் நாங்களும்..

இளமதி said...

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தனித்தமிழ் தாயகம் !!!

தாரகம் மந்திரம் எந்தன் உணர்விலும்....

http://thavaru.blogspot.com/ said...

வாங்க..ஹேமா..உங்களின் ஆதரவு ...ஒன்று திரண்ட ஆதரவை தருவோம்.

வெற்றிவேல் said...

போராட்டம், கண்டிப்பாக வெற்றி பெரும் ஹேமா... நம்புவோம்.

காட்டான் said...

கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்.!!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தனித்தமிழ் தாயகம் !!!

jgmlanka said...

///கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்/// நிச்சயமாக தோழி..

Anonymous said...

உணர்வுகள், வீராவேசம் எல்லாத்தையும் விட ஒற்றுமையும், விவேகமும் முக்கியம் விடுதலைக்கு ..

இராஜ முகுந்தன் said...

///குண்டுகள் விழுந்த தேசம்
குயில் கூவும் தேசமாகும்
சாவுகள் கண்ட பூமியில்
புதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்/// அருமை அக்கா.

Post a Comment