*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, February 22, 2013

மணிக்கு 300 கி.மீ...


காற்றின் இடுக்குகளில் புகுந்து
மிகவேகப் பயணம்
பசியின் கொடூர ஓசை
நடுவயிற்றுப்பகுதியில்
உருட்டிய தாயக்கட்டையாய்
உருண்டு திரும்பி
சிவப்பு மஞ்சளில்கூட
தரித்தலுக்கு நேரமின்றி...

வானம்
பரந்து விரிந்து
எல்லையற்றதென
படித்த ஞாபகம்...
ஒற்றை இறகைக்
கழற்றிவிட்டுப்
பறக்கிறதோர் பறவை...
தன் வாழ்வை உறுதிப்படுத்தியபடி
வானொலிச் செய்திகளேதும்
மகிழ்ச்சியாய் இல்லை...

பறக்கும் வேகத்தில்
எதிர்த்திசைக் காற்றில்
யாரோ.....
" 'ஓ' குறுப் இரத்தமாம்
சேமிப்பில் இல்லையாம்"
நிறுத்தல் தேவையற்று
ஓட்டம்
எங்கே.....ஏனெனத் தெரியாமல்...

பிந்திய இரவில்
கூட்டம் கலைந்து
ஓட்டம் ஓய்ந்து
கூடு வந்தடைய
செவி நுழைந்த செய்தியது
எனையறைந்து வெளிவர...

ஓ.........
'ஓ' குறூப்தான்
என் இரத்தம்....
கொடுத்தோ கேட்டோ
வந்திருக்கலாமோ !!!

ஹேமா(சுவிஸ்)

6 comments:

Seeni said...

unmaithaan....

ஸ்ரீராம். said...

புரிகிற மாதிரிதான் இருக்கிறது. நன்றாக இருக்கிறது ஹேமா.

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படித் தான் எனக்கும் தோணுது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தவறுகளும் தவறவிட்டவைகளும் பின்னால்தான் தெரிகிறது

மாலதி said...

வழமையாய் மயக்கவைக்கும் மின்னல் வரிகள் பாராட்டுகள்

Yoga.S. said...

ஓ.........
'ஓ' குறூப்தான்
என் இரத்தம்....
கொடுத்தோ கேட்டோ
வந்திருக்கலாமோ !!!////நாளைக்கு??????????????????????????????ஊஹும்!!!!

Post a Comment