*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 24, 2012

இன்னுமொரு புலம்பல்...

வாழ்வைக் கேள்விகளோடு ரசிப்பவள் நான்.இப்படித்தான் என ஏற்றுக்கொள்வதுமில்லை. எப்படியும் இருந்துவிடட்டும் என்று விட்டுப் போவதுமில்லை.வாழ்வின் அனுபவம் கேள்விகளைத் தந்துவிட்டுக் காவலிருக்கிறது.பதில்கள் தாமதமாகலாம்.வாழ்வின் அவசர நாட்காட்டியும்,கடிகாரமும் அப்படித்தான்.வாழ்வைச் செலவழிக்க பணத்தேவைகளும் கூடி மொய்க்கிறது.

தமிழ் தடுமாறும் சில வல்லின மெல்லினங்களாய் எத்தனை மனிதர்களைச் சந்திக்கிறோம்.ஒற்றைச் சொல்லில் தடுமாறிச் சாய்வது எந்தப்பக்கம்.ஆசையால் அல்லாடும் மனம் இதுதான் என நிரந்தரமாகாத ஏதோ ஒன்றை நினைத்து.இதைவிட இதைவிட இன்னும் இதைவிட என்று அதிக ஆசையோடு நடிப்பையும் உண்மையையும் அறியாமல் மயங்கிப்போகிறது....கிலுகிலுப்பைப் பக்கம் சரிந்து பார்த்துச் சிரிக்கும் குழந்தையாய்.நடிப்பெனத் தெரிந்தாலும் சலிக்காமல் தொடரும் மாயை நோக்கி.உண்மையோ குந்தியிருந்து அலறும் தன்னை ஒரு முறை விசாரிக்கச்சொல்லியும் மீள் பரிசோதனை செய்யச்சொல்லியும்.

திறக்காத கதவுகளோடு இருள் சிநேகிதம் கொள்ளும்.இருளோடு இருந்துகொள்(ல்)வது கொடுமை.திறக்காத கதவுகள் காத்திருக்கும் திறக்கும் கைகளுக்காக....வெளிச்சத்தைப் பொத்தி வைத்துக்கொண்டு....!

நூறு இல்லை ஆயிரம் இல்லையில்லை அதற்குமேலும் எனக்கு இறகுகள்.வேண்டாம் விபச்சாரியாய் ஒரு உரசல்........மூளை சொன்னாலும் மனம்.......!

ஹேமா(சுவிஸ்)

22 comments:

இளமதி said...

அன்புத் தோழியே...
//.கிலுகிலுப்பைப் பக்கம் சரிந்து பார்த்துச் சிரிக்கும் குழந்தையாய்.நடிப்பெனத் தெரிந்தாலும் சலிக்காமல் தொடரும் மாயை நோக்கி.//
உண்மைதான்...:) என்ன செய்வது. நாமும் அந்தச்சுழலில் தானே..:)

எனக்குத்தெரிந்தது ஒன்றே...

‘நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை’

இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்!!!

கவியாழி said...

திறக்காத கதவுகளோடு இருள் சிநேகிதம் கொள்ளும்.இருளோடு இருந்துகொள்(ல்)வது \\கொடுமை.திறக்காத கதவுகள் காத்திருக்கும் திறக்கும் கைகளுக்காக....வெளிச்சத்தைப் பொத்தி வைத்துக்கொண்டு....!

நூறு இல்லை ஆயிரம் இல்லையில்லை அதற்குமேலும் எனக்கு இறகுகள்.வேண்டாம் விபச்சாரியாய் ஒரு உரசல்........மூளை சொன்னாலும் மனம்.......!//

உங்களின் மனதின் வலி புரிகிறது ஆனாலும் நமது வாழ்க்கைக்கு நாம் வாழ்த்துதான் ஆகவேண்டும் அட்த்தவர் நம்மீது அக்கறை கொள்ளும்வரை .பெருபாலானோர்கள் விபச்சாரியை விட கேவலமாய் உள்ளார்கள் கேடுகெட்ட செயலை செய்பவர்கள் உள்ளார்கள் இவர்களுக்கு சாதி ,மதம் ,ஏன் மனதுகூட இல்லை என்ன செய்ய ? இந்த உலகில் நாமும் வாழத்தான் வேண்டும் டாலருக்காக?

Yaathoramani.blogspot.com said...

யதார்த்தச் சூழலில் நம் மனம் படும் பாட்டை
இதைவிட அருமையாக கவித்துவமாகச்
சொல்வது கடினமே
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Anonymous said...

அருமை ஹேமா! புலம்பலிலும் உங்கள் எழுத்தை மிகவும் ரசிக்கிறேன். :) பல வரிகளில் மனம் மொய்த்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் மீண்டும் ரசித்து படிக்கிறேன்.
வேண்டியவர்களிடம் புலம்பும்போது அதில் ஒரு சுகம் இருக்கிறது. ஆறுதலும் கிடைக்கிறது.


உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ஹேமாவிடமிருந்து ஒரு வித்யாசப் பதிவு.

Seeni said...

unarthiyathu....

இராஜராஜேஸ்வரி said...

வாழ்வின் அனுபவம் கேள்விகளைத் தந்துவிட்டுக் காவலிருக்கிறது.


புலம்பத்தான் முடிகிறது ...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புலம்பல்கள்தான் கவிஞர்களின் பொழுதுபோக்கு.

'பரிவை' சே.குமார் said...

புலம்பல் என்பது தொடரும் ஒன்றுதான்....
கவிதாயினியின் புலம்பல் கவிதை போல இருக்கிறது...

V.N.Thangamani said...

ஏன் ?

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

ஹேமா என்ன ஹேமா.. அன்று நிரூபன் ரேடியோவில் வாசிச்ச உங்களின் கவிதை மடல் போலவே இதையும் எழுதியிருக்கிறீங்க.. துன்பம் எனப் புரிகிறது ஆனால் புரியவில்லை.. இனிய கிரிஸ்மஸ்.. புதுவருட வாழ்த்துக்கள் ஹேமா.

அருணா செல்வம் said...

“வேண்டாம் விபச்சாரியாய் ஒரு உரசல்........மூளை சொன்னாலும் மனம்.......! “

மனம் ஒரு குரங்கு தானே ஹேமா...
அது கிளையிருக்கும் வரையில் தாவிக்கொண்டே தான் இருக்கும்.

(க்யுபிச கவிதைகளின் ராணி (ராஜா) என்று பட்டமே தரலாம் உங்களுக்கு. ஏன் உங்களின் பாணியில் எழுதவில்லை...?)
த.ம.5

ஆத்மா said...

திறக்காத கதவுகள் காத்திருக்கும் திறக்கும் கைகளுக்காக....வெளிச்சத்தைப் பொத்தி வைத்துக்கொண்டு....!
///////////////
சிறியதொரு அசைவில் கண்டுகொள்ளலாம் வெளிச்சத்தை

Unknown said...

பெண் மனத்திற்கேயுண்டான வலி வரிகளில்!

விச்சு said...

எனக்கு புரியவில்லை. ஆனால் ஏதோ துன்பமடல் போல் தெரிகிறது. கடைசிவரியில் மனம் கனக்கிறது. இது யாருக்கான பதில் எனவும் தெரியவில்லை. கருப்பனுக்கோ!

அன்புடன் மலிக்கா said...

மனவலியில் வெடிக்கும் சில உணர்வுகளை விவரிக்கத் திணரும் வேளை வந்துவிழும் அருவியால் சிலபல வரிகள், ஆழ்ந்த மனதுக்குள் குடிகொண்டிருக்கும் சிலரணங்கள் சிதறி சிலவரிகளாய்..

மனதிடம் கொண்டு விரட்டு மாயை எல்லாம் மறையும் தோழியே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் தடுமாறும் சில வல்லின மெல்லினங்களாய் எத்தனை மனிதர்களைச் சந்திக்கிறோம்.//

Excellent

சசிகலா said...

திறக்காத கதவுகள் காத்திருக்கும் திறக்கும் கைகளுக்காக....வெளிச்சத்தைப் பொத்தி வைத்துக்கொண்டு....!
என்னவோ செய்கிறது வரிகள்.
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

குட்டன்ஜி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

VOICE OF INDIAN said...

டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
, வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
நன்மக்களே!
வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
www.vitrustu.blogspot.in
balasubramanian
voice of indian
9444305581

Post a Comment