*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 23, 2012

காவலில்லா என் தேசம்...

தலைவனில்லா தேசத்தில்
யாரும் திரும்பா பூமியில்
நாங்கள் வசிக்கிறோம்
மண்ணையும்
உங்களையும் நேசித்தபடி
காவலே விழுங்கும்
காவல்கள் காக்க இங்கு.

யாரோ ஆள்வதாய்
உணர்கிறோம் எங்களை
ஒற்றைப் பருக்கையை
தாங்களே
பிச்சையிடுவதாயும்
சொல்கிறார்கள்
எங்கள் சமையலறைக்குள்
அவர்களின் சப்பாத்துக்கள்
துப்பாக்கி முனைகளில்
சந்தோஷங்கள் உறைய
உறிஞ்சும் எங்கள் நிம்மதி
அவர்கள் கைகளில்.

கார்த்திகையில்
நாய்களுக்குக்கூட சுதந்திரம்
அதுகூட....
எங்கள் சனங்களுக்கு
ஈழத்தமிழனுக்கு
இல்லாமல் போனது.

ஆர்ப்பாட்டங்களும் ஆயுதங்களும்
எம்மை ஆள்வதாயும்
அடங்காவிடில்
கிடங்குகள் காத்திருப்பதாயும்
நம் பலவீனங்கள்
பேய்களுக்குப் பிறந்தவர்களுக்கு
பேராயுதங்களாயும்.

கொல்லப்பட்ட என் பூமியில்
மிச்சம் இருக்கும்
எல்லாமே கொல்லப்படுகின்றன
போர் தின்று
விட்ட எச்சங்களுக்காய்கூட
காக்கைக்கூட்டம்போல அவர்கள்.

ஒன்றுமில்லாப் பரதேசிகளிடம்
எஞ்சியிருக்கும் கொஞ்ச
சுதந்திர உணர்வும்
பறிபோகிறது
தலைவன் இல்லா நிலத்தில்
அவர்களின் நாய் நரிகூட
எமக்கான தலைவர்களாம்
வாய்பூட்டுக்கள் இலவசமாய்
கேட்டுக்கேள்வியில்லா
மரணங்களும் இலவசமாய்.

கேட்கத் துணிந்த மனிதர்கள்
எம்மைக் காவல் காத்த
காவல் தெய்வங்கள்
இல்லா பூமியில்
எங்கள் சனங்களின் கதி....?!!!

ஹேமா(சுவிஸ்)

24 comments:

Yaathoramani.blogspot.com said...

கேட்கத் துணிந்த மனிதர்கள்
எம்மைக் காவல் காத்த
காவல் தெய்வங்கள்
இல்லா பூமியில்
எங்கள் சனங்களின் கதி....?!!!//

மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
என்ன சொல்வது எப்படிச் சொல்வது
எனத் தெரியவில்லை
கொடுமைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த
தலைவர்களை சகித்துக் கொண்டிருந்தவர்களின்
பாபங்கள் தீர வழியேது ?


Unknown said...


மாவீரர் வாரத்தில், வேதனையின் விளிம்பில் நின்று நீங்கள் வடிக்கும் கண்ணீரை மையாக்கி எழுதிய கவிதை கண்டு ரனம் வெதும்பியது! அமைதி கொள்க!

Athisaya said...

கேட்கத் துணிந்த மனிதர்கள்
எம்மைக் காவல் காத்த
காவல் தெய்வங்கள்
இல்லா பூமியில்
எங்கள் சனங்களின் கதி....?!!!//
:(

ஸ்ரீராம். said...

மனம் கனக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் (நிகழ்வுகள்) வேதனைப்பட வைக்கிறது...

மகேந்திரன் said...

கனமான வார்த்தைகள்
கொண்ட கவிதை சகோதரி....
சுதந்திரம் மட்டும்
கருவில் ஏற்றி
அகத்திலும் புறத்திலும்
வீரனாய் வாழ்ந்தோருக்கு
உரிய பாமாலை...

Admin said...

அவர்களின் ஆத்மாக்களுக்கு நாம் கட்டாயம் பதில் சொல்லியே தீரவேண்டும்..

வெற்றிவேல் said...

அனைத்து வலிகளும் ஒரு நாள் மாறும்... பொறுத்திருப்போம்...

”தளிர் சுரேஷ்” said...

//கொல்லப்பட்ட என் பூமியில்
மிச்சம் இருக்கும்
எல்லாமே கொல்லப்படுகின்றன
போர் தின்று விட்ட
எச்சங்களுக்காய்கூட
காக்கைக்கூட்டம்போல அவர்கள்.// வேதனை வரிகள்! அருமையான கவிதை!

Yoga.S. said...

விழ,விழ எழுவோம் வீறு கொண்டு!

ஆத்மா said...

அழுத்தமான வரிகள்
எதிர்பார்க்கவேயில்லை....

சாந்தி மாரியப்பன் said...

கண்ணீரைத்தவிர வேறெதும் இக்கவிதைக்குப் பதிலாய்த்தர இயலவில்லை ஹேமா.

சிவகுமாரன் said...

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.

வாய்மூடி அழப் பிறந்த இனத்தின் நிலையெண்ணி கனக்கிறது இதயம்.

அருணா செல்வம் said...

கவலை கரு கொண்டுள்ள நேரம் இது.
காலம் பிரசவிக்கும் புரட்சியாக....
காத்திருப்போம் என் இனிய தோழி ஹேமா.

அம்பலத்தார் said...

கொல்லப்பட்ட என் பூமியில்
மிச்சம் இருக்கும்
எல்லாமே கொல்லப்படுகின்றன
போர் தின்று விட்ட
எச்சங்களுக்காய்கூட
காக்கைக்கூட்டம்போல அவர்கள்//
விரட்ட வழியறியாது கைபிசைந்தபடி நாங்கள்.
கவிதையின் அத்தனை வரிகளும் பிரமாதம்

MANO நாஞ்சில் மனோ said...

மனதில் எழும் ரத்தக்கொதிப்பையும், வலியையும் யாரிடம் பகிர, தலையணையில் சிந்தும் கண்ணீரைத் தவிர...!

சத்ரியன் said...

மண்ணில் விதைத்த மாவீரர்களை மறவாது இளநெஞ்சங்களில் விதைத்தால் தான்
சுதந்திர விருட்சம் முளை விடும் - அது
சுதந்திர மூச்சை வெளிவிடும்.

இராஜராஜேஸ்வரி said...

காவலே விழுங்கும்
காவல்கள் காக்க இங்கு.

ஏங்கும் மக்கள் வாட்டம் தீர்வது எப்போது ???

Easy (EZ) Editorial Calendar said...

காவலே தேவையில்லை...பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மாலதி said...

ஈகா சாவடைந்து நினைவில் வாழும் மறவர்களுக்கு வீர வணக்கம் .

உலகின் எந்த விடுதலைப் போராட்டமும் தோற்றதாக வரலாறு இல்லை இல்லவே இல்லை

முனைவர் இரா.குணசீலன் said...

தலைப்பே கவிதையின் உட்பொருள் சொல்கிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைபடிக்கும்போது கண்கள் கலந்கத்தான் செய்கின்றன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைபடிக்கும்போது கண்கள் கலந்கத்தான் செய்கின்றன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைபடிக்கும்போது கண்கள் கலந்கத்தான் செய்கின்றன.

Post a Comment