*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, September 26, 2012

திலீபனின் நினைவோடு...


உன் கண்ணின் ஒளி
நல்லூர்க் கந்தனின் கண்ணில்
ஈமச்சுடராய்
இறுதி ஈழப்பாடலோடு
எமைப்பிரிந்தாய்...

கல்லறை தேசத்திலும்
அழுகுரல்கள்
உப்பில்லாக் கண்ணீரோடு
அந்தரங்க ஆகாயத்தில்
சில பறவைகளின்
மொழி பேசியபடி...

இலட்சியக் கனவுகளை
கை மாறக்கொடுத்துவிட்ட
சந்தோஷமானாலும்
சதைகள் எரியும்
மணத்தை சுவாசத்துள்
சுமந்துகொண்டு...

தாயை,தாரத்தை,தங்கையை
புணர்ந்த நரியொன்று்
எக்காளமிடுகிறது
காகிதப்புலிகளென...

பெண்ணின் பிணவாடையென
காட்டுகிறது தொலைக்காட்சி
பிசுபிசுக்கும் சிவப்பொளியில்
புண்ணான சிதையொன்றை...

மீண்டும் உயிர்க்கிறாய்
உணர்வுள்ள
ஒரு வீரத்தமிழச்சியின் கருவில்
காகங்கள் கரைந்து
சாபங்கள் ஆனதில்லை வரலாறு!!!

நமக்காக உயிர்நீத்த அத்தனை உயிர்களுக்கும் என் வீரவணக்கம்.

ஹேமா(சுவிஸ்)

21 comments:

பால கணேஷ் said...

உங்கள் மூலம் நான் என் வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன் ஃப்ரெண்ட்.

ராமலக்ஷ்மி said...

/மீண்டும் உயிர்க்கிறாய்/

துளிர்க்கும் நம்பிக்கை வெல்லும் ஓர் நாள். எங்கள் வணக்கங்களும் ஹேமா.

Unknown said...

பிண வாடையும் ரத்த கவுச்சையும் பிடித்தவன்கள் ரத்த காட்டேரிகள்..... இவர்களை வதம் செய்ய தெய்வ பிறவி வேண்டும் அல்லது அவ்வாறு செய்பவர் தெய்வம்...

Yoga.S. said...

உலகுள்ள வரை வாழும் ஆன்மா.மறந்தால் அல்லவோ நினைவு கூர????????

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

என் வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன் .

Seeni said...

urukkiya vari thaaye!

MARI The Great said...

பிறருக்காக தன்னுயிர் நீத்தவன் ஒரு நாளும் மறித்துப்போவதில்லை....

என்னுடைய வணக்கங்களும்!

Unknown said...



வீர வணக்கம்!

ராஜ நடராஜன் said...

காகங்கள் கரைந்து
சாபங்கள் ஆனதில்லை வரலாறு !

ஹேமா!மணியின் பின்னூட்டத்துக்கு இந்த வரிகளை இரவலாக வாங்கிக் கொண்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வீர வணக்கங்கள்...

குட்டன்ஜி said...

என் வணக்கங்கள்

Angel said...


நம்பிக்கை ..அதற்க்கு என்றைக்கும் அழிவில்லை தோழி.என்னுடைய வணக்கங்களும்.

அம்பாளடியாள் said...

என் வீர வணக்கமும் இதில் உள்ளடங்கட்டும் தோழி :(

தனிமரம் said...

ஈழத்தின் அஹிம்சை மூர்த்தி இவன் குரல் வரலாற்றில் உயிரோடு வாழும் என்றும் .

இந்திரா said...

//மீண்டும் உயிர்க்கிறாய்
உணர்வுள்ள
ஒரு வீரத்தமிழச்சியின் கருவில்
காகங்கள் கரைந்து
சாபங்கள் ஆனதில்லை வரலாறு!!!//

க்ரேட்..

ஸ்ரீராம். said...

உப்பு வற்றிப் போன கண்ணீராயினும் உயிர்க்கும் நம்பிக்கைகள்.

சசிகலா said...

சாபங்கள் ஆனதில்லை வரலாறு!!!

நமக்காக உயிர்நீத்த அத்தனை உயிர்களுக்கும் என் வீரவணக்கம்.

அருணா செல்வம் said...

இலட்சியக் கனவுகளை
கை மாறக்கொடுத்துவிட்ட
சந்தோஷமானாலும்
சதைகள் எரியும்
மணத்தை சுவாசத்துள்
சுமந்துகொண்டு...

ஓர் இலட்சிய வாதியின் மனக்குமுரல்
தீயால் எரியாது என்பதை எவ்வளவுஉணர்ச்சிப் புர்வமாக...

இலட்சிவாதிகள் சாவதில்லை...
கூடுவிட்டு கூடு மாறுகிறார்கள்.
என் வணக்கங்களும் இனிய தோழி.

K said...

திலீபன் அண்ணாவுக்கு வீர வணக்கம்!

உணர்வுகளைப் பிழிகிறது உங்கள் கவிதை ஹேமா!

ஆத்மா said...

வலிமிக்க வரிகள்

SELECTED ME said...

திலீபனுக்கு எம் வணக்கங்கள்!

Post a Comment