*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, August 07, 2012

பெரிதாய் சிறிதாய்...

நீண்டிருக்கும் அது
சிலசமயம்
பெரிதாயும் சிறிதாயும்.

தவறுகள்
தேவைகளுக்கேற்ப
கனவுகளை இழுத்துத் தகர்த்துவிடும்.
முன்னால் நிற்பவன்
அலுகோசா அன்பானவனா
நீதியானவனா நெறிகெட்டவனா
அதற்குத் தேவையற்றதாய்.

"உனக்கு நீயே கடவுள்"
தத்துவம் இங்கே பொய்யாகி
உயிரின் தீர்மானம்கூட
இன்னொரு கையிலாகிறது.

விஞ்ஞான யுகம் தந்த
வரங்களில் இதுவுமொன்று.
உயிருள்ளவை
உயிரற்றவை
விஞ்ஞானம்
பகுப்பாய்வு முடிவுகள்
சிரிப்பாயிருக்கிறது நினைக்க.

பிரபஞ்சத்தை
நிர்ணயிக்கிறதாம் செயற்பாடுகள்
ஹிரோஷிமா நாகசாகி
உலக யுத்த
அழிவிலும் ஆரம்பம்
இன்றைய யப்பான்.

பேச்சுள்ளவனை ஊமையாக்கி
அந்த ஊமையுடன்
பேச....
நட்புடன் சிரிக்க
நினைத்ததைச் சாதிக்க
சிலசமயம்
நீட்டிய முகத்துடன்
சிறிதாயும் பெரிதாயும்!!!

ஹேமா(சுவிஸ்)

35 comments:

Unknown said...

ம்ம்ம் ...எங்கு சென்றாலும் மறக்க முடியாதல்லவா? :-(

செய்தாலி said...

......ம் (:

ஸ்ரீராம். said...

அருமை ஹேமா.

Robert said...

நட்புடன் சிரிக்க ??!! :-(

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//தவறுகள் ...
கனவுகளை ... தகர்த்துவிடும்.//
உண்மை .

sathishsangkavi.blogspot.com said...

..நட்புடன் சிரிக்க
நினைத்ததைச் சாதிக்க
சிலசமயம்
நீட்டிய முகத்துடன்
சிறிதாயும் பெரிதாயும்!!!..

அருமையான வரிகள் ஹோமா...

பால கணேஷ் said...

பகுப்பாய்வு முடிவுகளை நினைக்க சிரிப்பாயிருக்கிறது என்கிற வரிகள் மிக நன்று. உயிரின் தீர்மானம் கூட இன்னொரு கையிலாகிறது. உண்மைதான். ஜடப் பொருளைப் பாடி மனஉணர்வில் பதியமிட்ட நற்கவிதை.

VijiParthiban said...

//பேச்சுள்ளவனை ஊமையாக்கி
அந்த ஊமையுடன்
பேச....//
அருமை அருமை கவிதை அற்புதம்....

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

MARI The Great said...

அருமையான கவிதை சகோ (TM 6)

ஆத்மா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்
நேற்றைய தினம்தான் அந்த நிகழ்வுகள் சுமார் 50 இற்கும் அதிகமான வருடங்களுக்கு முன் இடம்பெற்றது... பலர் மறந்திருப்பர் ஆனால் ஜப்பானியரால் மறக்க முடியாத மறக்க நினைக்காத நிகழ்வுதான் அது........

ஆத்மா said...

நீண்டிருக்கும் அது
சிலசமயம்
பெரிதாயும் சிறிதாயும்.//////

ஆமா யாருக்கும் தெரியாது தானே.........அழகான வரிகள் ரசித்தேன்

கோவி said...

அழகிய வரிகள்..

Yaathoramani.blogspot.com said...

நட்புடன் சிரிக்க
நினைத்ததைச் சாதிக்க
சிலசமயம்
நீட்டிய முகத்துடன்
சிறிதாயும் பெரிதாயும்!!!//

அருமை அருமை
இப்படி வார்த்தைகள் வந்து இயல்பாய் விழ
நிச்சயம்கலைவாணி அருள் வேண்டும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 7

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

சின்னப்பயல் said...

ம்

தனிமரம் said...

துப்பாக்கிக்கலாச்சாரம் நீண்டு செல்லும் உலகில் ம்ம் அருமையான , கவிதை!இப்போது அதிகம் தீர்மானம் இதன் மூலம்`தான்!ம்ம்

MANO நாஞ்சில் மனோ said...

விஞ்ஞான யுகம் தந்த
வரங்களில் இதுவுமொன்று.
உயிருள்ளவை
உயிரற்றவை
விஞ்ஞானம்
பகுப்பாய்வு முடிவுகள்
சிரிப்பாயிருக்கிறது நினைக்க.//

என்னத்தை சொல்ல...? வெற்று சிரிப்புதான் வருகிறது வெறுப்பாக...!

அருமையாக சுட்டி காட்டியுள்ளீர்கள் ஹேமா...!

கண்ணம்மா said...

அதாகவாவது பிறந்திருக்கலாமோன்னு தோனுது!! நீதி நேர்மை அநீதி இப்படி தரம் பிரிக்க யாருக்கு இங்கு நேரமும் மனமும் இருக்கு இந்த துப்பாக்கி மாதிரி தான் நாமும்!!!

அருணா செல்வம் said...

"உனக்கு நீயே கடவுள்"
தத்துவம் இங்கே பொய்யாகி
உயிரின் தீர்மானம்கூட
இன்னொரு கையிலாகிறது.“

எத்தனை உண்மை!!
தத்துவங்கள் எல்லாம்
அதன் முன்
வெறும் காற்றுதான்...

அருமையான வரிகள் என் இனிய தோழி ஹேமா...

நம்பிக்கைபாண்டியன் said...

"உனக்கு நீயே கடவுள்"
தத்துவம் இங்கே பொய்யாகி
உயிரின் தீர்மானம்கூட
இன்னொரு கையிலாகிறது.////

அழுத்தமான உண்மையான வரிகள்!

அனைவருக்கும் அன்பு  said...

புன்னகைக்கு நன்றி சொல்கிறேன்
கண்ணீருக்கும் சேர்த்து ..........

அருமையான வார்தையாடலில் உள்ளம் கவருகிரீர்கள் தோழி

நானும் கூட http://kovaimusaraladevi.blogspot.in

vimalanperali said...

நல்ல கவிதை,விஞ்ஞானம் தந்த கொடைகளுள் இதுவும் ஒன்றாய் உள்ளது.

இராஜராஜேஸ்வரி said...

அழிவிலும் ஆரம்பம்
இன்றைய யப்பான்.

ஊக்கம் தரும் கவிதை...

Athisaya said...

அறிவியல் சாபம் இது.வாழ்த்துக்கள் சொந்தமே!

அதிரா From அந்தாட்டிக்கா:) said...

நிஜமான உண்மையைச் சொல்லுது கவிதை. உருவாக்கியவருக்கு உழைப்பு, அதில் அல்லலுற்றோருக்கே வேதனை!!

மாதேவி said...

கவிதை அருமை ஹேமா.
படம்தான் பயமுறுத்துகின்றது.

Yoga.S. said...

நிகழ்வுகள் பிரபஞ்சத்தை நிர்ணயிப்பது உண்மை தான்,நம்மைப் பொறுத்த வரை!தெருக்கள் நிர்மாணித்தால் வடக்கில் ஹிரோஷிமாவும்,கிழக்கில் நாகசாகியும் மறந்து விடும்!

துரைடேனியல் said...

நல்லாருக்கீங்களா ஹேமா! வாழ்க்கை எப்படி போகிறது? பார்த்து ரொம்ப நாளாச்சு. கவிதை அருமை. என்ன ஒண்ணு. நாலு தடவை வாசிச்சாதான் புரியுது. (ஹி...ஹி...! கோச்சுக்காதீங்க!)

ராஜ நடராஜன் said...

துரைடேனியல்!பிகாசோ கவிதாயினி கவிதைகள் அப்படித்தானிருக்கும்:)

பேச்சுள்ளவனை ஊமையாக்கி
அந்த ஊமையுடன்
பேச....

தொடர் வரிகளும் எனது புரிதலுக்கேற்ப...

Asiya Omar said...

உண்மையான உணர்வுள்ள வரிகள் ஹேமா.

மின் வாசகம் said...

அருமையான வரிகள் சகோதரி !

அம்பாளடியாள் said...

குற்றமென்று எந்த வரைமுறையும் எனக்குக் கிடையாது.....ஆக அதற்குண்டான நியாயத்தைப் பற்றி சிந்திக்கிறவளும் நானில்லை.ஆனால் எதற்காகவோ தண்டிக்கப்படுகிறேன்.அன்பே கிடைக்காத காட்டில் திரிந்த வேளை தெரிந்த குட்டி மின்னலென வெளிச்சம் தந்து என்னைத் தன் கைக்குள் பொத்திய அந்த நிமிடங்கள்....!

நிச்சயம் இது ஆயுள் தண்டனை.இந்தத் தண்டனை....தன்னை மறந்துவிட்டேனா என என்னைப் பரீட்சித்த அந்த ஒற்றை உயிருக்கு மட்டுமே வெளிச்சம்!

மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள் சகோ .

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

ஆழமான கவிதை

Post a Comment