*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, June 03, 2012

அவள் அப்படித்தான்...

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்.
வேம்புக் குயில்
மூங்கிலுக்குள் சாரம் அனுப்ப
சுவைத்தவன் நாக்கில்
ஒட்டிக்கொள்கிறது கசப்பு.

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...

சகாயங்களேதும் செவிநுழையா
சஞ்சாரப் பொழுதுகளில்
வெள்ளைச்சுருட்டு
சுட்டுப் புகைக்கிறாள்
சூரியக் கண்களில்.

மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும்
பின் அவனுக்குமாய்!!!

ஹேமா(சுவிஸ்)

55 comments:

தனிமரம் said...

மூக்கு அடைத்திருப்பவனிடம் எப்படி மணங்கள் பற்றி பேசலாம் !ம்ம்ம் நிஜமும் ஆதங்கமும் ஒரே வார்த்தையில்!ம்ம்ம்

தனிமரம் said...

மாத்திரைகள் பலநேரம் பாதைகள் மாற்றிவிடுகின்றது! அருமையான குறீயீடுகள் ஹேமா!

தனிமரம் said...

தலைப்புக்கூட ஒரு கவிதைதானே ஹேமா

Anonymous said...

ஹேமா அக்கா கவிதை சூப்பர் ...


ஆனா எனக்கு புரியல ...

Asiya Omar said...

எனக்கும் ஹேமாவின் கவிதைகள் பலமுறை வாசித்தால் தான் புரியும்..

பால கணேஷ் said...

விதிகளை நிர்ணயிக்கும் நவீன மாத்திரைகள் - ஆம். பல சமயங்களில் மாற்றித்தான் விடுகின்றன நம் வாழ்க்கையை. உள்ளீடாக கருத்தைச் சொன்ன கவிதை நல்லாருக்கு ஹேமா!

ராஜ நடராஜன் said...

இது ரொம்ப பழைய படமாச்சே!

சின்னப்பயல் said...

அருமையான கவிதை வாழ்த்துகள்.

விச்சு said...

விதியை நிர்ணயிக்கும் நூதன மாத்திரைகள் கிடைத்தால் சொல்லுங்கள்... எனக்கும் தேவைதான்.

அப்பாதுரை said...

விச்சு சொல்வதே.
விச்சு: நூதனத்துக்குப் பெயர் single malt :)

Yoga.S. said...

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாய்த் தேவையென........................ பிழியும் வார்த்தைப் பிரயோகம்,..ம்...........!!!!!

MARI The Great said...

கவிதையை கவிதையாய் ரசித்து ரசித்து வடிப்பீர்கள் போல ...,

சில சமயம் என்னை போன்ற பாமரனுக்கு புரிவதில்லை ..!

செய்தாலி said...

.....ம்(:

ஸ்ரீராம். said...

விதியை நிர்ணயிக்கும் நூதன மாத்திரைகள்... என்ன ஒரு கற்பனை? அவள் அப்படித்தான் என்றதும் 'உறவுகள் தொடர்கதை' என்று மனதில் வரிகள் ஓடியது!

செய்தாலி said...

ம்ம்ம்ம்.... என்ன சொல்ல ம்ம்ம்.....
என்னமோ..... .....துக்குது ம்ம்ம் ..... ம் (;

Athisaya said...

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...மிகவே நியாயம்.வாழ்த்துக்கள் அக்கா.....!

நட்புடன் ஜமால் said...

மாத்திரைக்கும்
பின் அவனுக்குமாய்!!!

இங்கன இருக்கு ...

வேர்கள் said...

கலை...
அப்படியே என் இனம் நீங்கள்.....

ஹேமா...
பல நாள் உங்கள் கவிதைகளை படித்து, தமிழை நீங்கள் கையாளும் விதம் ரசிக்க வைக்கும் ஆனால் முழு கவிதை எதை சொல்கிறது என்று புரியாமல் ஏதும் சொல்லாமல் சென்றுவிடுவேன்...
இப்போதும் அப்படிதான் தோன்றியது....
ஆனால் கலையின் வழியில் நானும் சொல்கிறேன்

கவிதை சூப்பர் ...


ஆனா எனக்கு புரியல ...

vimalanperali said...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைதான்.சில விஷயங்களில்/

Seeni said...

mmmm....

இராஜராஜேஸ்வரி said...

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத்தான வேண்டும் !

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஅ.... கவித.. கவித.. கவித...

கவிதை வழமைபோல அழகாக இருக்கு ஹேமா.. ஆனா அதென்னமோ தெரியேல்லை, என் சிஷ்யை யைப்போல எனக்கும் பெரிதாகப் புரியவில்லை:)).

ஊ.கு:
திருக்குறளும் கருத்தும்போல, இனிக் கவிதையோடு கீழே கருத்தையும் போடுங்கோவன் ஹேமா.. ஆ... இதுக்கும் முறைப்போ?:))))

ஹேமா said...

அதிரா...வாங்கோ...கவிதை விளங்கேல்லையோ.பூஸாருக்கு எப்பிடியாம்...கருவாச்சிக்கு தத்தைத்தமிழ்ல நான் ஒரு கவிதை எழுதவேணுமெண்டு நினைச்சிருக்கிறன்.இதெப்பிடி !

உங்கட கேள்வியோட கவிதையின் கருவைச் சொல்றன்.ஆரம்பத்திலேயே சொல்லிட்டா கவிதைக்கு அழகில்ல அதிரா.அவரவருக்கும் பல கோணத்தில விளங்கும்.அதைக் குழப்பக்கூடாதெண்டுதான் முன்னுக்கே சொல்றதில்ல.சிலசமயம் சொல்றதேயில்லை.கருத்துக்கள் வாசகர்களுக்கே சொந்தம் !

மணி சில சமயம் சொல்லிவைப்பார்.அவரின்ர கருத்துக்காகவே சிலர் காத்திருப்பினம்.இண்டைக்கு அவருக்கே விளங்கேல்லையோ என்னமோ !

கவிதை ஒரு விபச்சாரம் செய்யும் பெண் பற்றினது.அங்கு போகும் ஒரு ஆணுக்கு நோய் அவளிடமிருந்து தொற்றிக்கொள்கிறது....இப்போ படித்துப் பாருங்கள்.விளங்கும்.

வெள்ளைக்கரப் பெண் - அவனுக்கு நோய் முற்றிக் கண் சிவந்து கிடப்பதையும் அந்தக் கண்ணில் அவள் சிகரெட் பற்றவைத்துக்கொள்வதாகவும்...!

K said...

ஹேமா! உங்கள் விளக்கத்தை மனசில் வைத்துக்கொண்டு கவிதையைப் படித்தேன்! அருமையாக இருக்குது!

இதில் நீங்கள் கையாண்டுள்ள வார்த்தைப் பிரயோகங்கள் ரொம்பவே ஆச்சரியப்பட வைக்குது! நிஜமாகவே அழகான கவிதை!!!

ஸ்ரீராம். said...

அருமை. பொருள் புரிந்து இன்னும் ரசிக்க முடிந்தது. ஐடியா மணியின் நோட்சுக்கு காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்தான். முன்பெல்லாம் விளக்கமாக வரி வரியாகப் பிரித்துப் பொருள் சொல்வதற்கு கலா மேடம் வந்து விடுவார்கள் . அவர்கள் சொல்வதில் மாறுதல் இருந்தால் நீங்கள் விளக்கி விடுவீர்கள்.அவர்களும் இப்போது அதிகம் பொருள் சொல்வதில்லை :))

Unknown said...

விளக்கதால் கவிதை விளக்கமாகியது
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Bibiliobibuli said...

ஹேமா, இந்தக்கவிதை சொல்லும் கரு ‘உயிர்கொல்லி நோய்’, சரிதானே! அப்பாடா ஏதோ ஒரு கவிதையாச்சும் விளங்கிச்சு எனக்கு :)

மேவி... said...

பரவலையே ...நான் சொல்லி குடுத்த மாதிரியே கவிதை எழுதிகிட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கள்

மேவி... said...

"மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்..."

மூக்குலையே குத்துவான் ....

மேவி... said...

"விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை
விழுங்கியிருந்தாள் அவள்."

டாகடர் சொன்னதை கேட்காம இவங்களா சாப்பிடுறாங்களே

Unknown said...

மதியின் சக்தியால் விதியையும் மாற்றலாம்தானே அக்கா...

எப்படி சுகங்கள்??????

Unknown said...

ஆஹா,,,

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!நலம் தானே?

சசிகலா said...

விதிகளை நிர்ணயிக்கும்
நூதன மாத்திரைகளை பிரமாண்ட வரிகள் வியந்து நிற்கிறேன் ஹேமா .

ஆத்மா said...

மெடம் யு ஆர் கிரேட்...:)

ஆத்மா said...

நூதன மாத்திரைகளை...??

புது வசனம்..:)

மகேந்திரன் said...

அன்பு சகோதரி,
உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதைகளில் தான்
இத்தனை நுணுக்கமான உவமைகளை காண முடியும்...

உவமைகளை கையாள்வது மிகக் கடினம்..
விளையாடி இருக்கிறது உங்களிடம்...

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதை ஹேம்ஸ்.. உங்க விளக்கத்தோட வாசிச்சப்புறம் இன்னும் ஜூப்பர்..

அருணா செல்வம் said...

என் இனிய தோழி ஹேமா...
“அவள் அப்படித்தான்” - கவிதை விளக்கம் கிடைத்ததால் உண்மையில் சூப்பர்ங்க.

பல முறை படித்து ரசித்தேன்.
இதே போல் தான் மற்ற கவிதைகளும் நன்றாக இருந்திருக்கும். விளக்கம் அறியாததால் கவிதையின் அழகை மட்டும் தான் ரசித்திருந்தேன்.

நன்றிங்க தோழி. வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!!!நலமே இருக்க வல்லான் துணையிருப்பான்!

கலா said...

முன்பெல்லாம் விளக்கமாக வரி வரியாகப் பிரித்துப் பொருள் சொல்வதற்கு கலா மேடம் வந்து விடுவார்கள் . அவர்கள் சொல்வதில் மாறுதல் இருந்தால் நீங்கள் விளக்கி விடுவீர்கள்.அவர்களும் இப்போது அதிகம் பொருள் சொல்வதில்லை :))\\\\
ஓஓஓஓ,,...எனை தேடுறீகளா?
ராம் மிக்க நன்றிய்யா.கொஞ்சம் அதிக வெளிச் சுற்றலால்...படிக்க ,எழுத முடியவல்லை நேரமின்மைதான் சீக்கரம் வருகிறேன்....

கலா said...

மூக்கடைத்திருப்பவனிடம்
மணங்கள் பற்றிக் கேட்டால்...\\\\\\

வாவ்,,, {சில}ஆண்க{ளுக்கு}ளின் மூக்குடைத்த வரிகள பிரமாதம் ஹேமா
எவ்வளவொரு ஆழம் இச்சொல்களில்

கலா said...

மூங்கிலிசைத் துவாரம்
நொதித்து நிறம்மாற
நோய் எதிர்ப்புச்சக்தி
அதிகமாய்த் தேவையென
முறைப்பாடு வைக்கிறாள்
மாத்திரைக்கும்
பின் அவனுக்குமாய்!!!\\\\\

ஹேமா,எப்படிச் சொல்ல...மிக அருமைடா இதன் இவ்வரிகளின் புரிதலை அப்பட்டமாகச் சொல்ல முடியவில்லை
நேரம் கிடைக்கும் போது பேசலாம்....

மாலதி said...

ஒரு நல்ல ஆக்கம் மாத்திரைகள் மனிதனின் நோவை நீக்குவதர்க்கனது அனால் இன்று அதே நோயாகிப் போனது யார் கண்டார் நோய் அல்லது நல்லது என்பதை உண்மைகள் ஒருபக்கம் மீளாதுயிலில் கிடக்கிறதோ என்னவோ கவிதை சிறப்பு ....

Thenammai Lakshmanan said...

arumai Hema..:)

Anonymous said...

கவிதைக்கு விளக்கம் தந்து என் புரிதலை பொய்யாக்கிய கவிதாயினி ஒழிக...

Unknown said...

மூங்கிலுக்குள் வேம்பு குயில் சாரம் கசக்கவில்லை. இனிக்க்கவுமில்லை. நினைவில் மணக்கிறது.

Unknown said...

மூங்கிலுக்குள் வேம்பு குயில் சாரம் கசக்கவில்லை. இனிக்க்கவுமில்லை. நினைவில் மணக்கிறது.

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா !நலமே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.///// ரெவெரி said...

கவிதைக்கு விளக்கம் தந்து என் புரிதலை பொய்யாக்கிய கவிதாயினி ஒழிக.../////வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி,ஹ!ஹ!ஹா!!!

மாதேவி said...

"விதிகளை நிர்ணயிக்கும்....
மிக அருமையான கவிதை ஹேமா.

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!நலம் தானே?

Yoga.S. said...

காலை வணக்கம்,ஹேமா!

சத்ரியன் said...

ம்ம்! நல்ல கரு பொதிந்த கவிதை.

விபச்சாரத்தால் ( கொள்ளை, போர், ஜாதி இவைகளையும் உள்ளடக்கிக் கொள்ளலாம்) என்னென்ன தீங்கு நேரும் என்பதை மனிதன் நன்கு அறிந்த போதும் அவைகளில் இருந்து மனிதன் மீளவேப் போவதில்லை ஹேமா.

Kanchana Radhakrishnan said...

கவிதை சூப்பர் ...

நந்தினி மருதம் said...

கவிதையும் பட்மும் மிக அருமை

Post a Comment