*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 27, 2012

பாதையும்...பாசமும் !

கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில் அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத பாதைகளிலும் 
பயணிக்க முடியும் 
முடிவில்லா 
 உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன் 
அம்மா நீ.... 
தாங்கியாய்த் தாங்குவேனென 
நம்பிக்கை வார்த்தையொன்றை 
சொல்லிவிட்டால்!!! 

ஹேமா(சுவிஸ்)

64 comments:

Anonymous said...

ஹேமா..பிடியுங்கள் முதல் பரிசை...
அத்தனை படக்கவிதைகளையும் தூக்கி சாப்பிட்டுவிட்டன இந்த ரெண்டும்...

உண்மையை சொல்லுங்கள்...ஒரு வாரமாய் ரூம் போட்டு யோசித்து எழுதி முடித்துவிட்டு...
எங்களையெல்லாம் சில நிமிடங்களில் எழுத சொன்னீங்களோ...?

நல்லா வந்திருக்கு...

Admin said...

"முடிவே தெரியாத பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்"

உண்மை பாசத்தால் எதையும் செய்யமுடியும்..அருமை..

கூடல் பாலா said...

உங்ககிட்ட போட்டி போட முடியாது....

சாந்தி மாரியப்பன் said...

கலக்கல் ஹேமா..

Yaathoramani.blogspot.com said...

படமும் அதற்கான கவிதையும் அற்புதம்
வாழ்த்துக்கள்

Anonymous said...

அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எப்பு டி இருக்கீங்க

Anonymous said...

ஹேமா..பிடியுங்கள் முதல் பரிசை...
அத்தனை படக்கவிதைகளையும் தூக்கி சாப்பிட்டுவிட்டன இந்த ரெண்டும்...

உண்மையை சொல்லுங்கள்...ஒரு வாரமாய் ரூம் போட்டு யோசித்து எழுதி முடித்துவிட்டு...
எங்களையெல்லாம் சில நிமிடங்களில் எழுத சொன்னீங்களோ...?////////
நானும் ரே ரீ அண்ணாக் கேள்விக்கு சேம சேம் பின்ச்

saravanan said...

//முடிவே தெரியாத பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.//

great!!

விச்சு said...

படமும் அதற்கேற்ற வார்த்தைகளால் கோர்த்த கவிதையும் அற்புதம்.

ஸ்ரீராம். said...

அங்கேயே சொல்லி விட்டேன்...இங்கும் சொல்கிறேன்.... அருமை!

ஸ்ரீராம். said...

//உண்மையை சொல்லுங்கள்...ஒரு வாரமாய் ரூம் போட்டு யோசித்து எழுதி முடித்துவிட்டு...
எங்களையெல்லாம் சில நிமிடங்களில் எழுத சொன்னீங்களோ...?//

நல்ல கதையா இருக்கே....ஹெமாவோடு போட்டி போட முடியுமா என்ன?

ஸ்ரீராம். said...

ஹேமா என்று வாசிக்கவும் கூகிள் குறும்பை கவனிக்காமல் பின்னூட்டமிட்டதற்கு என் மன்னிப்புகள்!

அருணா செல்வம் said...

பாசத்தின் பாதையை அழகாய் உணர்த்தியுள்ளீர்கள் ஷேமா.
வாழ்த்துக்கள்.

முக்கியமாக... என்னை மாதிரி பாமரர்களும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியமைக்கு மிக்க நன்றிங்க ஷேமா.

ம.தி.சுதா said...

///அந்த ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க..////

இன்று அல்ல என்றும் தான் அக்கா..

நிரஞ்சனா said...

Excellentக்கா! சான்ஸே இல்ல... பாதைக்கு நீங்க எழுதின கவிதை நல்லாருக்கு. பட், அதை தூககிச் சாப்பிடுது நிலாவுக்கு எழுதின கவிதை! (நீங்க நிலாவுக்கே அம்மாவாச்சே!)

பால கணேஷ் said...

ம்ஹும்... தனியா ரூம் போட்டு யோசிச்சாலும் நான் உங்க மாதிரி எழுத முடியாது ஃப்ரெண்ட! நீங்க நீங்கதான்!

Angel said...

இரண்டு கவிதைகளுமே அருமை .இரண்டாவது எனக்கு மிகவும்ம் பிடித்து இருக்கு

MARI The Great said...

அருமையான கவிதை ..!

Anonymous said...

அக்கா எப்புடி இருகிங்க நலமா ..........ரொம்ப பிஸி யா


உங்களோடு கதைச்சி ரொம்ப நாள் ஆகுது அக்கா ...மாமாவும் அதன் சொன்னாங்க .....முடிந்தால் வாங்கோ க்கா

செய்தாலி said...

//முடிவே தெரியாத
பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.//
அந்த நிலைவில்
கலங்கம் இல்லாததைபோல்
பாசத்திலும் மாசு இல்லை என்றால் ம்ம்ம்ம்ம் ......

நம்பிக்கைபாண்டியன் said...

////பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!////
நத்தையின் தடத்தைவிட மென்மையான காதல் என்ற சிந்தனை அருமை!

இரண்டும் நன்று

Yoga.S. said...

இரவு வணக்கம்,மகளே!நலமா?கவிதை வந்து இருபத்திரண்டு கமெண்ட்சும் வந்திருக்கு!மௌனமா இருந்தா என்ன அர்த்தம்?கோபம் இருந்தால் சொல்லி விடுங்கள்.தீர்த்துக் கொள்ளலாம்.கவிதை வரிகள் அருமை!மற்றையோர் விமர்சிக்காததையா நான் விமர்சித்து விடப் போகிறேன்?பெருமைப்படுவது நான் தானே????

Seeni said...

unmaiyil!
menmaiyil-
variyaanathu-
oru kavithaiyil!

ஹேமா said...

அப்பா...காலை மாலை வணக்கம் எப்போதும் உணர்வோடு உங்களுக்கு.யாருக்கு யார்மீது கோபம்.கொஞ்சம் வேலைக்களைப்பு.மிகுந்த மனக்களைப்பு.அவ்வளவும்தான்.எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.இணைய நண்பர்களின் ஆதரவும் கைகோர்ப்பும் இருக்கும்வரை பிந்தினாலும் பதிவுகளோடு சந்திப்பேன்.உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி தாண்டிய வார்த்தைகள் வேண்டி மிகுதியான ஆசீர்வாதங்கள் வேண்டிக்கொள்கிறேன் !

கலையம்மா....நான் நல்ல சுகமடா.நீங்களும் சுகமா இருக்கவேணும்.பேசுவோம் நிறைய !

ராமலக்ஷ்மி said...

அழகான படங்களுக்கு மிக அற்புதமான வரிகள்!

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
இரண்டு படங்களுக்கும் ஏற்றாற் போல இயைவான வார்த்தை கொண்டு கவிதை அழகாக மலர்ந்திருக்கிறது.

ரசித்தேன்.

கலா said...

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில் அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க\\\\\\\\



அருமையான வரிகள்..
..
ஹேமா இங்கு மின்மினிப் பூச்சியை
நான் பார்க்கவில்லை..அதனால்....??
நாங்க “பாதையில” காதல் செய்யவிலையடி
அப்புறம் பாதிவழிபோகுபோது தவறித்
தண்ணீரில் விழுந்தால்..! தண்ணியில கண்டமாம்!
அதுதான் கொஞ்சம் பயம்.

கலா said...

மற்றையோர் விமர்சிக்காததையா நான் விமர்சித்து விடப் போகிறேன்\\\\\

ஹேமா,தெரியாவிட்டால் தெரியாதுஎன்று சொல்வதுதானே!
அதை விடுத்து என்னாஆஆஆஆஆ...
ஒரு சாக்குப்போக்கு உங்கப்பாவுக்கு!

கலா said...

முடிவே தெரியாத பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.\\\\\\
நிலாவுடன் “நிலாவுக்கும் சேர்த்து
ஊட்டடி...தன்னம்பிக்கையை! நிலாவே!
நாம் யார்யாருடன் பழகுகின்றோமோ!
அத்தனைபேரிடமும் உண்மையாக
வரவேண்டிய ஒருசொல் இந்தப்பாசம்

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!அதெல்லாம் ஒன்றுமில்லை,வயதாகி விட்டால் சஞ்சலம் வருவது இயல்பு தானே?மன்னித்துக் கொள்ளுங்கள்.உங்கள் நிலை தெரியாததல்ல.இடைவெளி அதிகம் போல் தோன்றியது..........................!

Yoga.S. said...

கலா said...

மற்றையோர் விமர்சிக்காததையா நான் விமர்சித்து விடப் போகிறேன்\\\\\

ஹேமா,தெரியாவிட்டால் தெரியாதுஎன்று சொல்வதுதானே!
அதை விடுத்து என்னாஆஆஆஆஆ...
ஒரு சாக்குப்போக்கு உங்கப்பாவுக்கு!///வணக்கம் கலா அக்கா!(முன்பே சொல்லியிருக்கிறேன்,எனக்கு நேரே மூத்தவர் பெயர்)என்ன செய்ய,அறளை பெயர்ந்து விட்டாலே இப்படித்தான்!புரியாததை அப்படி,இப்படி என்று ஏதாவது சொல்லி சடைந்து விடுவது தான்!நல்லாயிருக்கீங்களா?இரவு நல்ல தூக்கமா?இல்ல,என்னை வம்புக்கு இழுத்ததில் ஒரு திருப்தி இருந்திருக்கும் இல்லையா?அதான்,ஹ!ஹ!ஹா!!!!!!

கலா said...

என்னங்கடா..இது இந்தப்புள்ளைக்கு
வந்த சோதனை, எல்லோரும் ரூம்போட்டு,
ரூம்போட்டு யோசித்ததா?என்கிறார்களே!
கைதவறிப்போட்டதா? இல்லை அது
தானாகவே.........??
கை,கால் ஒன்றும் சேதமாகவில்லையே!
பாத்துப்புள்ள போட்டுப்போட்டு யோசிக்காதே!

K said...
This comment has been removed by the author.
K said...

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில் அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க.../////

ஹேமா....., கவிதைகள் எழுதுவதில் உங்களுக்கு இன்பமோ இல்லையோ, அதற்குப் பொழிப்புரை எழுதுவதில் எனக்குப் பேரின்பம்!

மேலே உள்ளவரிகளில், ஒரு காதலை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்? ஒரு காதல் ஜோடி வந்து அந்தப் பாதையில் நின்று, அந்தக் கல்லுக்கு அருகில் இரவிரவாகக் காதல் செய்துவிட்டுப் போய்விட்டார்கள்!

அவர்கள் இருவருடைய காதலையும் பார்த்துதான், காற்றுக் கூட காதலைக் கற்றுக்கொண்டது என்கிறீர்கள்! அட....., என்ன ஒரு கற்பனை?

அதுபோக அங்கே இருக்கும் அந்தக் கல் கூட காதலின் ஈரத்தைச் சேமித்து வைத்திருப்பதாக வேறு சொல்கிறீர்கள்! அடடா.....!!

மேலும், அந்தப் பாதைகள் இரண்டும் கூட, அவர்களின் காதலின் உச்சத்தை ரகசியமாக ரசிக்குதாம்! இப்படி யாரோ இருவர் ரகசியமாக, அதுவும் இரவு நேர மின்மினி வெளிச்சத்தில் அவர்கள் பாட்டுக்கு வந்து காதல் செய்துவிட்டுப் போக, அங்கே இருக்கும் கல்லும், காற்றும், தெருவும் காதலின் உச்சத்தை அனுபவித்தன என்கிறீர்கள்!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! மனிதர்களின் காதலைப் பார்த்து, ஜடப் பொருட்களுக்கே “ காதலின் உச்சம்” புரிந்திருக்கிறது என்றால், அப்போ அந்த காதலனும் காதலியும் எவ்வளவு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவித்திருப்பார்கள்! - இதுதான் ஹேமா!

அப்புறம் இன்னொன்று இனிமேல், “ இருட்டுத்தானே, யாரும் இல்லைத்தானே” என்ற நினைப்பில் காதலே செய்யக்கூடாதுங்கோ! ஏன்னா, களவாகப் பார்த்து ரசிப்பதற்கு இத்தனை பேர் இருக்கிறார்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!

சரி சரி நாலுபேரைப் பார்க்கவைத்து காதல் செய்வதும் ஒரு ரசனை தானே :-))))

மிக அழகான / அருமையான கவிதை!

நேரமிருப்பின் இரண்டாவது கவிதை பற்றிய எண்ணங்களுடன் மீண்டும் வருவேன்! நன்றி!!

சத்ரியன் said...

அழகிய கவிதைகள்.

கலா said...

என்ன செய்ய,அறளை பெயர்ந்து விட்டாலே
இப்படித்தான்!புரியாததை அப்படி,இப்படி
என்று ஏதாவது சொல்லி சடைந்து
விடுவது தான்!\\\\\\\
எனக்கா....!..?வயசு என்னவோ எண்பதுதான்!
மனசு எப்போதும் இருபதுதான்!!
வயசாகினதென்று நான் எப்பவுமே
காட்டிக்கொள்வதிலடாஅம்பி
அலட்டிக்கொள்வதுமில்லை.
இனிமேல்...வயசுகியசு என்று ஒருசொல்லு
வந்திது........வந்திருவன்
பாரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ்சுக்கு......


நல்லாயிருக்கீங்களா\\\\\\
எனக்கென்ன குறைச்சல் ஜயா!
உடலும்,உளமும் நலமே!அஃதே அனைவருக்கும்!
அடிக்கடி நினைக்காதேங்கோ தூங்கம்
கொஞ்சம் குழம்பித்தான் போகுது......

Yoga.S. said...

ஹும்!!!!!!!!!!!!!!!!!என்ன செய்ய?பாட்டிங்களுக்கு எழுதிக் கூடப் புரிய வைக்க முடியாம இருக்கு.கண்ணும் போச்சுப் போல,ஹ!ஹ!ஹா!!!!!

மாதேவி said...

அழகு...அழகு கவிதையும்,படமும்.

Anonymous said...

akkaaa நீங்கள் ரொம்ப மௌனமாய் ...........


நான் நினைக்கிரதேல்லாம் மாமாவேக் கேட்டு விட்டாங்க ...





சிக்கிரம் வாங்க அக்கா ...

வி மிஸ் யு அக்கா

கலா said...

கண்ணும் போச்சுப் போல\\\\


ஆமாய்யா!எல்லோரும் கண்ணு..கண்ணு என்று இந்தக் கண்ணுமேல கண்ணுபோட்டா...கண்ணுபட்டுப்போச்சு சுத்திப்போட்டாச் சரியாயிடுமாம் ஹேமாதான் சொன்னார்

Anonymous said...

அருமை அருமை அருமை
மிகவும் ரசித்து படித்தேன் உங்கள் கவிதையி​னை.

வாழ்த்துக்கள்
நாகு
www.tngovernmentjobs.in

சித்தாரா மகேஷ். said...

//தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.//

உண்மைதான் அக்கா.அன்புள்ளவர்கள் அருகிலிருந்தால் ஆகாதது ஏதுமில்லை.இனிமையான உணர்வு.வாழ்த்துக்கள் அக்கா.

Yoga.S. said...

கலா said...

கண்ணும் போச்சுப் போல\\\\


ஆமாய்யா!எல்லோரும் கண்ணு..கண்ணு என்று இந்தக் கண்ணுமேல கண்ணுபோட்டா...கண்ணுபட்டுப்போச்சு சுத்திப்போட்டாச் சரியாயிடுமாம் ஹேமாதான் சொன்னார்.////ஐய்யய்யோ!என்னடா இது வம்பாப் போச்சு?நான் எப்போ உங்களைக் கண்ணு,கண்ணு என்று கண்ணு போட்டேன்?என்னோட "தங்கமணி"மட்டும் இதைப் பார்த்தால்?குடும்பத்தில குழப்பத்த உருவாக்கிடாதீங்க.ஐயகோ தலை சுத்துதே!கருக்குமட்டை கனவில வரப்போகுதே!அம்மா தாயே என்னைய விட்டுடுங்க!நீங்க இருக்கிற பக்கம்?தல வச்சுக் கூடப் படுக்க மாட்டேன்!

Yoga.S. said...

மாலை வணக்கம்,மகளே!சுகமா இருப்பீங்க எண்டு நம்புறன்.

தனிமரம் said...

ஹேமா..பிடியுங்கள் முதல் பரிசை...
அத்தனை படக்கவிதைகளையும் தூக்கி சாப்பிட்டுவிட்டன இந்த ரெண்டும்...

உண்மையை சொல்லுங்கள்...ஒரு வாரமாய் ரூம் போட்டு யோசித்து எழுதி முடித்துவிட்டு...
எங்களையெல்லாம் சில நிமிடங்களில் எழுத சொன்னீங்களோ...?

நல்லா வந்திருக்கு...

27 April, 2012 15:04
//ரெவெரி சொன்னதையே நானும் மீளச் சொல்லுகின்றேன்.
ம்ம்ம்ம் காற்றும் கற்றுக்கொண்டதே அன்றுதான் காதலை பிடித்தவரிகள் அற்புதம் ம்ம் ஹேமா  ஆனால் இப்படி எல்லாம் நான் செய்யவில்லை நான் சின்னப் பையன்!

தனிமரம் said...

தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.
//தாயின் பாசம் முன் இருந்தால் எந்த விடயத்தையும் நிச்சயம் செய்யலாம் பாசம் அந்த உணர்வை இப்படி கவிதாயினியால் தான் செதுக்க முடியும்.

தனிமரம் said...

நத்தைக்கும் காதல் வாசம் பிடிக்குமோ கல்லுக்குள் பதுங்கியது ஜோடிகளை ம்ம்ம்ம் !வேலையில் இருப்பதால் அதிகம் கிறுக்க முடியாது.

கலா said...

!அம்மா தாயே என்னைய விட்டுடுங்க!நீங்க இருக்கிற பக்கம்?தல வச்சுக் கூடப் படுக்க மாட்டேன்!\\\\\\\\
இது...இது..இதே......................இவ்வளவு..இவ்வளவு============
இருக்கட்டும்!
{கோடிட்ட இடங்களை நிரப்புக}

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//முடிவே தெரியாத பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.//
நன்று!நன்று!

vimalanperali said...

நல்ல கவிதைகள்.வாழ்க்கை வலிமை மிகுந்த கவிதைகள்.நன்றாகயிருக்கிறது.
வாழ்த்துக்கள்.

Unknown said...

படமும் பாடலும் பொருத்தம்-முன்பே
படித்ததாய் நினைத்தேன்! வருத்தம்
உடனே வரவில்லை என்றே-இன்று
உணர்ந்தேன் வந்தேன் நன்றே

புலவர் சா இராமாநுசம்

Yoga.S. said...

கலா said...

!அம்மா தாயே என்னைய விட்டுடுங்க!நீங்க இருக்கிற பக்கம்?தல வச்சுக் கூடப் படுக்க மாட்டேன்!\\\\\\\\
இது...இது..இதே......................இவ்வளவு..இவ்வளவு============
இருக்கட்டும்!
{கோடிட்ட இடங்களை நிரப்புக.////காலை வணக்கம் பாட்டிம்மா!கோ..... ...... ...க.அது தெரிஞ்சா இங்க (பிரான்சில)ஏன் வந்து எஸ்.ஐ (நன்றி:அதிரா)ஆ இருக்க வேணும்,ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S. said...

காலை வணக்கம்,மகளே!ஆட்கள் இல்லா நேரம் அடுத்த வீட்டுக்குப் போய் ................... இன்றைக்காவது(லீவு தானே?)தங்கையுடன் பேசுவீர்களா?

Anonymous said...

அக்கா சொல்லுங்கள் மாமா கேக்குராங்கள்ள இண்டைக்காவது வருவீர்களா ...

Anonymous said...

மாமாஆஆஆஆ என்ன நடக்குது இங்க ....

பவள சங்கரி said...

அன்பின் ஹேமா,

மிகத்தனிப்பட்ட ஒரு நடை, சிந்தனை, கோணம்... மொத்தத்தில் அழகு! வாழ்த்துகள் தோழி.

அன்புடன்
பவளா.

ஆத்மா said...

தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.//////

அருமையான வரிகள்....

அன்புடன் மலிக்கா said...

படமும் அதற்கான கவிதைகளும் உணர்வுப்பூவமாக இருந்தது மிகவும் அருமை தோழி..

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

Yoga.S. said...

காலை(லீவு)வணக்கம்,மகளே!!!!!

கண்ணம்மா said...

உங்களுக்கு மட்டும் இந்த பாசம் பாதை அமைச்சி கொடுத்துடுது இப்படி கவிதை எழுதுங்கன்னு சொல்லி..

// நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!
//

வியக்காமல் இருக்க முடியவில்லை ஹேமா இந்த வரிகளுக்கு.. நத்தையும் கீறுமா?.................தமிழ்

இராஜராஜேஸ்வரி said...

தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத பாதைகளிலும்
பயணிக்க முடியும்
முடிவில்லா
உன் பாசமிருந்தால்.


நிதர்சன வரிகள் மனதில் சிம்மாசனமிடுகின்றன..
பாராட்டுக்கள் தோழி..!

பால கணேஷ் said...

தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html

Unknown said...

நத்தை கீறிச் செல்லவில்லை. காதலில் ஊறிச் சென்றது. "செவ்வி தலைப்பட்ட" கவிதை சிறப்பு.

வெற்றிவேல் said...

அழகு கவிச்சக்கரவர்த்தினி....

Post a Comment