*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 02, 2012

பொல்லாத கடவுள்...

கூரை பிய்வதாய் ஒரு கனவு...

வீட்டுத் தலைவனுக்குக் கூடாது
இது அம்மம்மா...

நாட்டுக்குத் தீங்கு
இது பெரியண்ணா...

பணம் கொட்டப்போகுது
இது தங்கை...

பேசிவைத்த திருமணமோ
இது அக்கா...

இருப்பிடப் பிரச்சனை
பல்லிக்கும் பாம்பிற்கும்...

அடுத்தநாள் கனவில் கடவுள்
எல்லாம் நல்லது
எல்லாமே நடக்குமென்றார்...

எது முதலில்
அக்காவினதா அப்பாவினதா
இருந்த நின்மதிக்குத்தான்
கால் முளைத்தது
தினம் தினம்...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!

ஹேமா(சுவிஸ்)

39 comments:

Unknown said...

தரவும்
பெறவும்
பழக்கிய கடவுளை
வேறென்ன செய்ய?...

சத்ரியன் said...

இருந்த நிம்மதியும் போச்சா?

சாந்தி மாரியப்பன் said...

//கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!//

வேடிக்கை காட்டுவதே இவர்களுக்கு வாடிக்கை :-)

Marc said...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!

அருமை உள்ளத்தை கிள்ளிச் செல்லும் வார்த்தைகள்

அம்பலத்தார் said...

அம்மாதாயே ஹேமா உங்க பக்கத்தையும் பிடிச்சு பொண்ணுங்க சமாச்சாரம் பெட்டியிலை போட்டிருக்கிறன் போய் பாருங்கோ. இப்பொழுது ஒருதடவை சந்தோசமாக சிரியுங்கோ பார்ப்பம்.

பால கணேஷ் said...

மன நிம்மதிக்கு கால் முளைத்தது தினம் தினம். கடவுளுக்கும் கனவுக்குமென்ன வந்தார்கள் சென்றார்கள். அழகான வாக்கியங்கள். கடவுள் என்பதை கொடுப்பவராக மட்டுமே பார்க்க நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம், இல்லையா...

Yaathoramani.blogspot.com said...

எது முதலில்
அக்காவினதா அப்பாவினதா
இருந்த நின்மதிக்குத்தான்
கால் முளைத்தது
தினம் தினம்...

அளவில் சிறியது ஆயினும்
அதிகம் சிந்திக்கச் செய்யும் பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்லாச் சொன்னீர்கள் ஹேமா:)!

இடி முழக்கம் said...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!

உண்மையா வரிகள்........ அருமை.

Anonymous said...

hahhaha கடைசி வரிகள் செம..வந்தார்கள் சென்றார்கள்..

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள்..

Kousalya Raj said...

என்ன சொல்ல, ஒரு சில வரிகளில் பெரிய விஷயத்தை பட்டுன்னு சொல்லிடீங்க...

படிச்சிட்டு யோசிசிட்டே இருக்கிறேன் ஹேமா... :))

ஸ்ரீராம். said...

கனவுகள் நம் (ஆழ்) மன ஆசைகளின் பிம்பங்கள்தானே...? கடவுள் என்ன செய்தார்?!!

ராஜ நடராஜன் said...

ஹேமா!மிக எளிதான வரிகள்.
கவிதை தெரியாத எனக்கே புரிகிறது:)

சில மேடைகளில் இப்படி எளிய நடையில் கவிதை வாசித்து விட்டு அதையும் இரண்டு தடவை அழுத்தம் கொடுத்து பாடி கைதட்டல் வாங்கிய கவிஞர்களைப் பார்த்திருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!

வென்றார்களா!!!!!!!!?????//

நிரூபன் said...

வணக்கம் அக்கா,


நம்பிக்கைக்குள் அகப்பட்டு, சிக்கித் தவிக்கும் மன உணர்வினை வெளிப்படுத்தி நிற்கிறது இக் கவிதை.

துரைடேனியல் said...

கடவுள் நல்லவர்தான் ஹேமா. மனிதர்கள்தான் பொல்லாதவர்கள். ஒரு நடுத்தரக்குடும்பத்தின் அவல நிலையைச் சொல்லும் அருமையான கவிதை. ஒரு கனவு எவ்வித விளைவுகளை உண்டாக்குகிறது அந்தக் குடும்பத்தில்.

Seeni said...

அந்த குடும்பத்தின்
நிலை கவலை கொள்ள செய்தது!

உங்கள் விளக்கமான
கவிதையால்!

கீதமஞ்சரி said...

நாளையப் பொழுதினைப் பற்றி அறியாதவரைதான் நிம்மதியான உறக்கம். எல்லாம் நடக்குமென்று சொல்லிப்போன கடவுளுக்கும் வேடிக்கைப் பார்க்கும் ஆவல் அதிகம்தான் போலும். மனம் நெகிழ்த்தும் வரிகள் ஹேமா.

Mahan.Thamesh said...

வணக்கம் அக்கா
//கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!//

நச் ஏன்னு இருக்கு . கடைசி வரி
எது முதலில்
அக்காவினதா அப்பாவினதா
இருந்த நின்மதிக்குத்தான்
கால் முளைத்தது
தினம் தினம்...
மிக அழகான வரிகள்

விச்சு said...

வந்தார்கள், சென்றார்கள் அனுபவிப்பது நாம்தானே. நல்ல சிந்தனை.

vimalanperali said...

நல்ல கவிதை ,வாழ்த்துக்கள்,
//கடவுளுக்கும் கனவுக்கும் என்ன வந்தார்கள்,சென்றாகள்//முடித்த வரிகளில் கவிதை திரும்பவுமாய் உருக்கொள்கிறது.

Anonymous said...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!
//
நிம்மதியை வந்து தொலைப்பவர்கள் எப்போதுமே...

இருப்பிடப் பிரச்சனை
பல்லிக்கும் பாம்பிற்கும்//

இடையே வித்தியாச சிந்தனை ஹேமா...


படமும் கவிதையும் அருமை...ரசித்தேன் சகோதரி...

Bibiliobibuli said...

நல்லாருக்கு ஹேமா!

Thooral said...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!

அருமை.....:)

தனிமரம் said...

கனவுகான்பதும் கனவைப்பலிக்க வைப்பதும் கடவுள் தான் வந்தார்கள் வென்றார்கள் ஆச்சரியமான கற்பனை ஹேமா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

மாலதி said...

இன்றைய நிலையல் தமிழர்கள் பெரும்பாலும் இந்த சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் இந்த நனவு கனவு இப்படி வீணே கலங்கடத்துகிரார்கள் சிறந்த பதிவு தொடர்க ...

யியற்கை said...

azhagaana nitharsanamaana kavithai hema. thodarungal , vaazhththukkal...

ananthu said...

நல்லதே நடக்கும் , நல்ல கவிதை !

அப்பாதுரை said...

லேசாய் புன்னகைக்க வைத்த கவிதை.

நம்பிக்கைபாண்டியன் said...

கடைசி வரிகள், நச்...

"பொல்லாத கனவு "இன்னும் பொருத்தமான தலைப்பாக இருந்திருக்கும்!

இராஜராஜேஸ்வரி said...

எனது பதிவில் விருது காத்திருக்கிறது தங்களுக்கு..

Kanchana Radhakrishnan said...

சிந்திக்கச் செய்யும் பதிவு.

கலா said...

பொல்லாத கடவுள்\\\\\\

தங்கமே! கடவுள்மேல் ஏன்! இத்தனை கோபம்?







கூரை பிய்வதாய் ஒரு கனவு...\\\\\\

இதற்கு! இவ்வளவும் நடக்குமா?

மிகவும் அர்த்தம் உள்ள கவிஹேமா,
சொல்லத்தான் எனக்கு நேரமில்லை...பேசும்போது பேசலாம்..

arasan said...

முடிப்பதாய் ஒரு கவிதை தொடங்கிற்று ..
வாழ்த்துக்கள் அக்கா ...

அ.முத்து பிரகாஷ் said...

:))

மனதை இலகுவாக்குகிறது தங்களின் கவிதை..

கடவுளை விட்டு விட்டு கொஞ்சம் வெளியே வந்து விட்டேன்.. கனவுகள் கடவுளுக்கும் சேர்த்து வாமனனாகி உயிர் தின்கிறது..

நாத்திகவாதியோ ஆத்திகவாதியோ ,கனவுலகினனோ ஜென்நியனோ.. அழகியலுக்காக கொண்டாத் தவற மாட்டார்கள் தங்கள் 'பொல்லாத கடவுளை..'

எனதன்புகள்!

மாதேவி said...

வந்தார்கள் சென்றார்கள் :)) ஆகா!

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
காணவாருங்கள்.

Post a Comment