*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, December 03, 2011

இல்லாத ஒன்றுக்கு...

உதறிவிட்ட கைகளில்
திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஒற்றை இறகோடு இலையான் ஒன்று
தோலைத் துளைக்க மறந்ததோ
இல்லை இயலாமையோ
இருக்கிறது அசையாமல்.

குப்பையாய்
கூட்டி அள்ளிய சொற்கூட்டம்
இலக்கியங்கள்
வல்லின மெல்லினங்கள்
யாப்பு தொகை தொடையென்று
கண்சிமிட்டியபடி
ஒற்றை இறக்கையாலேயே
கோர்த்து அடுக்கத் தொடங்க...

தலையணையோடு
சொட்டிக் காய்ந்த இரத்தக் கறை
உயர்த்திக் காட்டிய ஊனக்கைகளோடு
விளங்காமலே விழிக்கிறேன்
தலைமாட்டிலும் கொழுவியிருக்கிறது
யாரோ பரிசளித்த வீணையொன்று
கை இருக்குமிடத்திலோ
மொட்டுப்போல் ஒரு மழுங்கல்.

இறக்கை அசைத்து
படபட வென வட்டமிட்ட அது
தன் ஒற்றை இறகையும் உலர்த்தித் தர
பலமாய் சிரிக்கத் தொடங்கினார்கள்
வால் இல்லாக் கோணங்கிகள்!!!

ஹேமா(சுவிஸ்)

36 comments:

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
நல்லா இருக்கீங்களா

இன்னைக்கு கவிதை போட்டது சரியான டைம்மிங்!

நிரூபன் said...

பூடகமான சொல்லாடல் கவிதையின் உட் கருத்தினைக் கண்டறியும் தேடலுக்கு வழி வகுக்கிறது. நான்கு தடவை படித்தேன். இப்போது தான் கொஞ்சம் புரிகின்றது.

நிரூபன் said...

கட்டுக்களோடு மனிதர்களுக்கு கோடு போட்டு, வரம்பு கீறும் மனித இனத்தினது கீறல் பிடிகளினுள்ளுள் அமிழ்ந்து தன் சுயத்தினையும் தொலைத்து விட்ட ஓர் பறவையின் சிறகு அறுந்த நிலையினை கவிதை இல்லாத ஒன்றுக்கு ஆசைப்படும் பறவை- இறக்கை இழந்த பின்னும் பறக்க நினைக்கிறதே எனும் ஏளன உணர்வினை இறுதியில் காண்பித்து அர்த்தம் கற்பித்து நிற்கிறது!

ப்ரியமுடன் வசந்த் said...

//உதறிவிட்ட கைகளில்
திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஒற்றை இறகோடு இலையான் ஒன்று
தோலைத் துளைக்க மறந்ததோ
இல்லை இயலாமையோ
இருக்கிறது அசையாமல்.//

முதல் பாரா பேசும் வர்ணனை அனைவருமே உணர்ந்திருப்பார்கள் அருமை ஹேம்ஸ்

வால் இல்லா கோணங்கிகள் ஹிஹிஹி கோணங்கின்னாலே வால்த்தனம் பண்றவங்கதானே ஹேம்ஸ்?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

கீதமஞ்சரி said...

இறக்கை இழந்தால் என்ன, கை இழந்தால் என்ன, நம்பிக்கை இருந்தால் போதுமென்று சொல்லாமல் சொல்கிறதோ அந்த ஒற்றைச் சிறகு இலையான்! சிரித்துக்கொண்டிருக்கும் கோணங்கிகளும் ஒரு நாள் வாயடைத்துப்போவார்கள், சிலிர்த்தெழும் நம்பிக்கையோடு மீட்டப்படும் வீணையின் சுரம் கண்டு!

ஸ்ரீராம். said...

புரியவில்லை!
இயலாமையின் உச்சம்?

நட்புடன் ஜமால் said...

"இல்லாத ஒன்றுக்கு..."

always ...

http://thavaru.blogspot.com/ said...

உயர்த்திக் காட்டிய ஊனக்கைகளோடு
விளங்காமலே விழிக்கிறேன் ஹேமா...

ஆனாலும் சொற்கள் ஏதோ ஒன்றை சொல்லதான் செய்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.

முனைவர் இரா.குணசீலன் said...

இல்லாத ஒன்றைத் தேடும் கவிதை நன்று..

ananthu said...

கவிதை நன்று ...எனது பதிவில் தனிமை கவிதை ...http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_24.html

ராமலக்ஷ்மி said...

/உதறிவிட்ட கைகளில்
திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஒற்றை இறகோடு இலையான் ஒன்று
தோலைத் துளைக்க மறந்ததோ
இல்லை இயலாமையோ
இருக்கிறது அசையாமல்./

அருமை ஹேமா.

கவி அழகன் said...

Enkayo poyiddinka ponka

Unknown said...

உள்ளத்தில் ஏதோ ஒரு நெருடல்
அது கவிதை!
வெள்ளத்தில் வெளிவர இயலாத
நிலைமை!
தெள்ளத் தெளிவா வேண்டும்
எளிமை!

புலவர் சா இராமாநுசம்

அன்புடன் நான் said...

வணக்கம்.... சற்று கடின நடை....
ஆனால் சில புரிகிறது.

jayaram said...

கவிதை இந்த சிறிய மூளைக்கு புரிய வில்லை ..
புரிய முயற்சிகிறேன் ..
வார்த்தைகள் அருமை ..

meenakshi said...

ஸ்ரீராம் கேட்டிருப்பதுதான். இயலாமையின் உச்சம்தானே இது!
புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாக இருந்தாலும், வார்த்தை தேர்வுகள் பிரமாதம்!

சுதா SJ said...

அருமை அக்கா.... வார்த்தைகள் கோர்த்த விதம் கலக்கல்... மிக நன்று அக்கா...

சுதா SJ said...

இயலாமையின் தவிப்பு ரெம்ப கொடுமையக்கா... அதை அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலி தெரியும்.... உங்கள் கவிதையில் ரெம்பவே தெரிகிறது.....

துரைடேனியல் said...

Nice one Hema!

துரைடேனியல் said...

TM 10.

விச்சு said...

ஐந்து தடவைப் படித்துவிட்டேன். ஆறாவது தடவையாக புரிய முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...
நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Admin said...

தரமான ஒரு கவிதை படித்த மகிழ்ச்சி சகோதரி..உண்மையை சொல்கிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கவிதை

Anonymous said...

இல்லாத ஒன்றைத் தேடும் கவிதை நன்று...வாழ்த்துக்கள்...

ஓசூர் ராஜன் said...

எதுவோ தடுக்கிறது! வெளிப்படையாக பாராட்ட...,

rishvan said...

vanakkam... nandraaga irukirathu... www.rishvan.com

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

NILAMUKILAN said...

அருமை.

Unknown said...

புரிந்தும் புரியாமலும்...உங்க கிட்ட கவிதை கற்றுக்கொள்ள வேணும் போலிருக்கே!

moosa shahib said...

வணக்கம்..

பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

அன்புடன்
http://newjanatha-fancyjewellery.blogspot.com/

மாதேவி said...

"ஒற்றை இறகோடு இலையான்" அருமை.

ஹேமா said...

அன்று ஏதோ என் மனநிலையிலிருந்து எழுதியது.திண்ணையிலும் வெளியானது.கருத்துக்கள் சொன்ன உங்கள் எல்லோருக்குமே பாராட்டுக்களும் நன்றியும்.ஏனென்றால் கருத்துச் சுதந்திரம் உங்கள் உங்கள் மனநிலை அபிப்பிராயம்.ஒன்றாகத் எனக்குத் தெரியும் ஒன்று உங்கள் கண்ணுக்கு வேறாக.உங்கள் அன்புக்கு நன்றி நட்பின் கைகோர்த்தபடி !

Jaleela Kamal said...

கவிதை அரும்ை

Post a Comment