*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 07, 2011

மனோபாவம்...

என் குழந்தையைவிட
முட்டாளாகவும்
பிடிவாதக்காரியாகவும்
நகம் வளர்க்காத
பிசாசாகவும்கூட நான்.

அவளிடம்
தோற்றுப்போகாமல்
செய்வதெல்லாம்
சொல்வதெல்லாம்
சரியென்றே வாதாடுகிறேன்
நம்பவைக்கக் கூச்சலுமிடுகிறேன்.

விடுவதாயில்லை அவளும் !

உதைந்துவிட்ட புத்தகப்பை
"படிக்கும் புத்தகங்கள் சாமி
தொட்டுக் கும்பிடு."

"இல்லை அம்மா....
சாமியறைக்குள் மாத்திரமே
சாமி"என்கிறாள்!!!
நிலாக்குட்டியின் பிறந்தநாள் வாழ்த்தோடு...மகளிர் தினமும் !

ஹேமா(சுவிஸ்)

66 comments:

எல் கே said...

உங்கள் மகளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கூடவே என் அன்பும்! :)

கொல்லான் said...

நிதரிசனமான உண்மை கொண்ட இனிய கவிதை.

எனது வாழ்த்துக்கள் கவியரசி..

தமிழ் உதயம் said...

நிலாக்குட்டிக்கு வாழ்த்துகள். கவிதை வாசிக்கும் போது, என் குழந்தையின் ஞாபகம் வந்து விட்டது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Ram said...

குட்டிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Angel said...

உங்கள் செல்ல நிலா குட்டிக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள்டா செல்லம்.

நீங்கள் சொல்வது கடவுள் தூனிலும் துரும்பிலும் என்று

நிலா சொல்வது அந்த தூனும் துரும்பும் கடவுளின் கட்டளைப்படியென்று.

நிலாவின் வாதமே சரி.

அம்பிகா said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

tamilbirdszz said...

நிலாக் குட்டி Wish your Happy Birth Day Have a nice Day ...

குட்டிப்பையா|Kutipaiya said...

வாழ்த்துக்கள் குட்டி ஹேமாவுக்கு :)

அன்பரசன் said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

thamizhparavai said...

வாழ்த்துக்கள் ஹேமா... நல்லா இருக்கு ‘நகம் வளர்க்காத பிசாசு’...:)

நிரூபன் said...

என் குழந்தையைவிட
முட்டாளாகவும்
பிடிவாதக்காரியாகவும்
நகம் வளர்க்காத
பிசாசாகவும்கூட நான்.//

வணக்கம் சகோதரி, மேற் கூறிய வரிகளில் இறுதி வரியில் கொஞ்சம் இடை வெளி விட்டிருக்கலாம்.

மழலைகளின் உலகம் அழகானது, அவர்களின் மொழி, அவர்களின் செயற்பாடுகள் இவை அனைத்தும் எம்மை ரசிக்க வைக்கும். அதிகம் படித்த மனிதர்களாலே சிந்திக்க முடியாத தர்க்க ரீதியான கேள்விகளை அவர்கள் கேட்பதும் ஒரு சில நேரங்களில் வியப்பினை ஏற்படுத்தும்.

அதே போலத் தான் இந்தக் கவிதையில் வரும் நிலாக் குட்டியும், நீங்கள் பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்விகளை அள்ளி வீசுவதையும், எங்களின் பழக்கவழக்கமான, காலந் தோறும் படிக்கும் புத்தகங்களை தொட்டுக் கும்பிடும் பழக்கத்திற்கு உடன்பாடில்லாத அவளின் புதிய தொரு உலகம் நோக்கிய, மாற்றமிகு சிந்தனையும் வரவேற்கத்தக்கதே,

வாழ்த்துக்கள் உங்களின் நிலாக் குட்டிக்கு.
வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது ஆன்றோர் வாக்கு!
அதற்கு உங்களின் நிலாக் குட்டியும் ஓர் சான்று!

நிரூபன் said...

இன்று மகளிர் தினம் ஆகையால் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.

- இரவீ - said...

நிலாக் குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அன்பு உ(ள்ள)ங்களுக்கு மகளீர் தின வாழ்த்துக்கள்.

வினோ said...

ஹேமா உங்கள் மகளுக்கு எங்களின் வாழ்த்துக்களும்...

நிலா என்பது உண்மையான பெயரா இருப்பின், இன்னும் கூடுதல் பாசத்துடன்.. :)

Chitra said...

Convey our birthday wishes to her... she is so cute and smart! :-)

சத்ரியன் said...

நிலா - வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

தாத்தாவின் முத்தங்கள்.

ஸ்ரீராம். said...

மகளுக்கு பிறந்த நாளா...எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சாமிக்கும் எல்லை வகுத்து விட்டாள் குழந்தை!

Anonymous said...

கடைசி மூன்று வரிகள்
முத்தான வரிகள்

வாழ்த்துக்கள்!

சக்தி கல்வி மையம் said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பெண்மையை போற்றுவோம்...

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய் ஹேமா... ஹேப்பி பர்த்டே டூ யுவர் டாட்டர்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மகளிர் தின வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

உங்கள் அம்முக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

நிலாக்குட்டிக்கு என் வாழ்த்துக்கள்

போளூர் தயாநிதி said...

உங்கள் மகளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

சுடும் உண்மை.
நீங்கள் சொன்னது என்னை சொன்னது போலிருந்தது.
நிலாவுக்கு வாழ்த்துக்கள்.

arasan said...

உங்கள் செல்லத்திற்கு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ....

சீமான்கனி said...

இப்போவே இப்படியா???குட்டிக்கு வாழ்த்துகள்...சொல்லிடுங்க ஹேமா..

Unknown said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

Unknown said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கலா said...

ஹேமுபாவம்.......
என் அன்புக்குட்டிக்கு!
என் அன்பான முத்தங்களுடன்....
இறைவன் ஆசியும் வேண்டி...

நிலாமகள் said...

நலமும் வளமும் நிலைபெற்று நீடு வாழ்க நிலாப்பெண்ணே...! மகளீர் தினமோடு உனக்கான புகழ் தினமாகவும் வரும் ஆண்டுகளின் மார்ச் -8 அமையட்டும்!!

குழந்தைமை மிளிர்ந்து பிரகாசிக்கிறது... நிலாவின் முகத்திலும், கவிதை வரிகளிலும்....

நம் குழந்தைகளே நமக்கான ஞான வாசல்களாய் பல நேரங்களில் ஜொலிக்கிறார்கள், இல்லையா தோழி...?

சுந்தரா said...

மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும்,
உங்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்களும் ஹேமா!

சாந்தி மாரியப்பன் said...

குட்டி ஹேமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..

Kanchana Radhakrishnan said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

http://thavaru.blogspot.com/ said...

உங்களை நாங்கள் விடுவதாயில்லை ஹேமா..

Pranavam Ravikumar said...

அருமை!

ராமலக்ஷ்மி said...

அருமை ஹேமா.

நிலாக்குட்டிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)!

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

சந்தான சங்கர் said...

வார்த்தைகளற்ற கவிதை நிலா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ஜெயா said...

நிலாக்குட்டிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இருவர் said...

cute nila kku many more happy returns of the day........

வாழ்க வளமுடன்.....

பித்தனின் வாக்கு said...

நிலாக் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கூடவே என் அன்பும்! :)

me too.
Many more return of this Day.

Muniappan Pakkangal said...

Convey my Happy B'Day wishes 2 Nila -Hema.

ஆனந்தி.. said...

வாவ்...வாவ்...செம ஹேம்ஸ்...அம்முகுட்டிக்கு பிறந்த நாளா....உங்க பொண்ணை இப்ப தான் பார்க்கிறேன் ஹேம்ஸ்...என் தாமதாமான வாழ்த்துகளை நிலாவிடம் சொல்லிடுங்க...:(

நட்புடன் ஜமால் said...

Hi Nila kutty

How u da ...

நட்புடன் ஜமால் said...

வருடம் ஒரு முறை மட்டுமே முகம் காட்டும் எங்கள் நிலா ...

Yaathoramani.blogspot.com said...

எந்த எந்த இடத்தில் எதை எதைவைக்க வேண்டும்
என இந்த வயதிலேயே ஞானம் பெற்ற செல்லக்குட்டிக்கு
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Asiya Omar said...

வாழ்த்துக்கள் மிக அருமை.

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

meenakshi said...

அழகான கவிதை! குழந்தைக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

கோவை நேரம் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

மனோபாவமும்., விலகாத உறவும் அருமை ஹேமா.. ரொம்ப சிந்திக்க வைத்தது..

இருவர் said...

எங்கள் புதிய பதிவின் முதல் பதிவு - நம்ம பணம் திருட்டுப்போச்சு...

Thulasi said...

Hello Periyamma,

Our Appamma is dead
Thulasi

ஹேமா said...

எல்லோருக்கும் நிலாக்குட்டியின் சார்பில் சந்தோஷமான நன்றிகள்.
கனடாவில் இருந்தபடி கையசைத்துத் தன் சநதோஷத்தைத் தெரிவித்துக்கொள்கிறாள்.

இப்போதுதான் தமிழ் மெல்ல மெல்ல அவள் அம்மாவிடம் படித்துக்கொள்கிறாள்.இன்னும் வாசிக்கத் தெரியவில்லை.வாசிக்கத் தொடங்கிய பின் அவளே பின்னூட்டமும் தருவாள்.

அன்பு உறவுகளுக்கு என் நன்றியும்.உங்கள் அத்தனைபேரின் அன்பான வாழ்த்து அவளுக்கு இன்னும் ஆரோக்கியத்தையும் அறிவையும் பண்பையும் கொடுத்து அவள் வாழ்வில் இன்னும் அதீத சக்தியைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையோடு, ஜமால் சொன்னதுபோல வருடத்துக்கொருமுறை முகம் காட்டும் நிலவாக அடுத்த பிறந்த நாளில் முகம் காட்டுவாள்.இன்னும் கொஞ்சம் வாலும் ஆளும் வளர்ந்திருக்குமாம் அவளுக்கு அப்போ !

yarl said...

happy birthday Nila, sorry I am late

Raja said...

உங்கள் மகளா ஹேமா? பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்...குட்டிநிலா உங்களை குடைந்து எடுத்துவிடுவாள் போலிருக்கே...

அப்பாதுரை said...

அந்தப்பிள்ளையின் அறிவைக் கடிவாளங்கள் பிடியாமல் இருக்கட்டும். அப்படியே வளரட்டும்!

Anonymous said...

அருமையான அறிவுபூர்வமானக் கவிதை.... சிந்திக்க வைத்து.

க.பாலாசி said...

எல்லாக்கவிதையும் இப்பதான் படிச்சிட்டு வந்தேன்.. நிலாக்குட்டிக்குயோ அல்லது குட்டி நிலாவோ என்னுடைய அன்பையும் சொல்லுங்கள் வாழ்த்துக்களும்கூட.

குழந்தையின் சொல்லில் எப்போதுமே ஒளிந்திருக்கும் நிதர்சனம்..

Bibiliobibuli said...

ஓர் அம்மாவின் அன்பும், அவஸ்தையும். கவிதை, கவிதையாய் குழந்தை, அழகோ அழகு.

Jaleela Kamal said...

நிலா குட்டி அழகு

Post a Comment