*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, November 07, 2010

தென்றல் சொன்ன தூது...

ஆர்ப்பாட்டமில்லாத
உன் அன்பை
சொல்லிப் பாடிக்கொண்டிருக்கிறது
உன்னிடமிருந்து வந்த
அந்தத் தென்றல்

இன்னும் உன் கனவுகள்
ஆழ்மனதின் அபிலாசைகள்
அனுபவங்கள் பற்றியும்
வாய் ஓயாமல் சொல்லி
உன்னைப் பற்றிய
என் கனவுகளை
நீட்டி வைக்கிறது.

கனவுகளுக்குள்
நித்தம் வரும் கனவு நீதான்
என்பதைச் சொல்லாமலே
அகலத் திறந்த கண்களுக்குள்
உன் கனவுகளை
இன்னும் சேமிக்கிறேன்.

வாய் வலித்த தென்றல்
பறந்த பின் தான்
புரிந்துகொண்டேன்...

சொல்லாமலே
ஊர் போன உன்னை!!!

ஹேமா(சுவிஸ்)

55 comments:

ஹேமா said...

என் அன்பு நண்பர்களுக்கு வண்க்கமும் நிறைவான தீபஒளி வாழ்த்துகளும்.

நீண்ட இடைவெளி.சுகம்தானே எல்லோரும்.

தீபாவளிக் களைப்பில் நீங்கள் இருக்க மீண்டும் ஒரு காதல் கவிதையோடு தொடர்கிறேன் நான்.

என்னை அன்போடு விசாரித்தும் தீபஒளி வாழ்த்தும் சொன்ன உறவுகளின் அன்போடு கை கோர்த்துக்கொள்கிறேன் !

எல் கே said...

/கனவுகளுக்குள்
நித்தம் வரும் கனவு நீதான்
என்பதைச் சொல்லாமலே
அகலத் திறந்த கண்களுக்குள்
உன் கனவுகளை
இன்னும் சேமிக்கிறேன்.///

அருமை ஹேமா.. நாந்தான் இங்க வராம விட்டுடேனொன்னு நினச்சேன்..

Kousalya Raj said...

welcome back hema...

தமிழ் உதயம் said...

வழக்கம் போல் ஒரு அருமையான கவிதை.

'பரிவை' சே.குமார் said...

அருமை ஹேமா.

Welcome.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை ஹேமா
welcome Back

கானா பிரபா said...

தீபாவளி வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

vaanga tozi

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

dheva said...

வாங்க ஹேமா எப்டி இருக்கீங்க.....? GREAT WELCOME....!

கவிதை வழக்கம் போல சாரலடிப்பது போல அடித்து ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லி சென்றிருக்கிறது. தொடர்ந்து வரும் படைப்புக்களுக்காக வெயிட்டிங்....!

தீபாவளி வாழ்த்துக்கள்....!

மாதேவி said...

நல்வாழ்த்துக்கள் ஹேமா.

அஹ‌ம‌து இர்ஷாத் said...

வாங்க‌ ஹேமா வ‌ந்த‌தில் ம‌கிழ்ச்சி.. க‌விதை நல்லாயிருக்கு..

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

தீபாவளி வாழ்த்துக்கள் ஹேமா!

அன்பரசன் said...

//இன்னும் உன் கனவுகள்
ஆழ்மனதின் அபிலாசைகள்
அனுபவங்கள் பற்றியும்
வாய் ஓயாமல் சொல்லி
உன்னைப் பற்றிய
என் கனவுகளை
நீட்டி வைக்கிறது.//

நல்லதொரு கவிதையோடதான் வந்திருக்கீங்க.

மோகன்ஜி said...

மீண்டும் ஹேமாவின் கைவண்ணம் பார்ப்பதில் சந்தோஷம்!
//கண்களுக்குள்
உன் கனவுகளை
இன்னும் சேமிக்கிறேன்//.

அழகான வரி ஹேமா! இனமே லீவு கிடையாது ! சொல்லிட்டேன்....

பவள சங்கரி said...

வாருங்கள் ஹேமா....மகிழ்ச்சி. அருமையான கவிதையுடன் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

மீண்டும் ஒரு அற்புத படைப்பு! வாழ்த்துக்கள்!

RVS said...

அட்டகாசம் ஹேமா.. மோகன்ஜி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு... ;-)

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா வெல்கம் பேக்.

கவிதையின் கடைசி லைன் நல்ல பன்ச்சிங்க்.ஒரு எழுத்துப்பிழைகூட இல்லாமல் நீட்டாக உள்ளது,சூப்பர்

பத்மா said...

கனவுக்குள் கனவு கனவு காணும் கவி மனம் வாழ்க

விஜய் said...

காதல் வருகையா ?

வாழ்த்துக்கள்

விஜய்

அம்பிகா said...

கவிதை அருமை ஹேமா.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

எளிமையான இனிமையான கவிதை. மக்கள் வந்ததும் சொன்னார்கள்.

கொல்லான் said...

கவியரசி,
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளி வந்த கவிதை ...
அதிலும் கடைசி வரிகள் நெஞ்சில் இன்னும் நிலைக்கிறது.
அருமை.

ராஜவம்சம் said...

வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு காதல் கவியோடு கலம் வந்ததர்க்கு.

Jerry Eshananda said...

விசாரிப்புக்கு நன்றி ஹேமா.

அப்பாதுரை said...

நல்வாழ்த்துக்கள்.
கனவுகளைச் சேமிப்பது.. நயம்.

சத்ரியன் said...

ஹேமாவுக்கு,

வாழ்த்துகளும், வரவேற்பும்...!

மீண்டுமொரு காதல் கவிதை...!

(தென்றலே என்னைத் தொடு...சும்மா சேட்டை.அவ்வளவுதான்!)

Anonymous said...

வாங்க ஹேமா!...
அருமையான காதல் கவிதையோட வந்திருக்கீங்க...
சூப்பர் :)

நசரேயன் said...

//சொல்லாமலே
ஊர் போன உன்னை!!!//

சொன்னா அதுக்கு நாலு கவுஜ எழுதுவீங்கன்னு பயந்து ஓடிப் போய் இருப்பார்

நசரேயன் said...

//நீங்கள் இருக்க மீண்டும் ஒரு காதல் கவிதையோடு தொடர்கிறேன் நான்.//

நீங்க எழுதுறதிலே பாதிக்கு மேல காதல் கவுஜ தானே, இதை தனியா வேற சொல்லனுமா ?

ஸ்ரீராம். said...

மீண்டு(ம்) வந்த தென்றல்...அழகிய கவிதை.

கிடைத்த இடைவெளியில் ஏகப் பட்ட ஸ்டாக் கையில் சேமித்து வைத்திருப்பீர்கள்...)சேமித்த நினைவுகள்!) வரிசையாக அணிவகுக்கும் என்று நம்பலாம்.

Prabu M said...

கவிதை அழகு :)

அப்புறம் நான் தாங்க உங்களுடைய 300ஆவது ஃபாலோயர்!! :)
வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

நீண்ட நாட்களின்பின் கண்டதில் மகிழ்ச்சி ......கவி பாடும் குயிலுக்கு வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எளிமையான இனிமையான கவிதை. Welcome back Hema.

நேசமித்ரன் said...

உங்களுக்கும் வாழ்த்துகள் :)

கவிதை வழமை போல் நன்று !

மீள்வருகைக்கு மகிழ்வு

சீமான்கனி said...

நான் நல்ல நலம் நீங்களும் நலமா???

சேமித்த கனவுகளும்,வாய் வலித்த தென்றலும் அழகான சொல்லாடல் ஹேமா வாழ்த்துகள்...

தினேஷ்குமார் said...

வணக்கம் தோழி
இரண்டு நாட்களாக என் கணினி என்னிடம் இல்லாமல் போனாதல் சொந்தமாக பின்னூட்டம் இட முடியவில்லை தோழி

தோட்டத்து
தென்றலும்
தோகைவிரித்தாடும்
மாமரக்குயிலும்
கூவியழைத்திடும்
தங்கள் வருகை
என்றும் தொடர
இனித்திடும்
கவிதை படைத்திட
வாரீர் தோழி
வாரீர்........
சொல்கொண்டு
வாரீர்........

http://marumlogam.blogspot.com/2010/11/blog-post_08.html

Anonymous said...

நல்லா இருக்கு...

குட்டிப்பையா|Kutipaiya said...

lovely..vazakam pola!

vaazhthukkal ungalukkum...

yarl said...

வாருங்கள் ஹேமா. உங்களுக்கும் குட்டி நிலாக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீங்கள் நலம் தானே?
அன்புடன் மங்கை

ஹேமா said...

வாங்க கார்த்திக்.நான்தான் பதிவு போடாம உங்களையெல்லாம் தவறவிட்டிட்டு இருந்திட்டேன்.
இனித் தொடரலாம் !


நன்றி...சந்தோஷம் கௌசி !


தமிழ் வாங்க...சந்திச்சதில சந்தோஷம் !


வாங்க குமார்.நன்றி !


ராதாகிருஷ்ணன் ஐயா வரணும்.அன்புக்கு நன்றி !


பிரபா...வாங்கோ வாங்கோ.அடிக்கடி இல்லாவிட்டாலும் என்னைக் காணாவிட்டால் கண்ட சந்தோஷத்தில ஓடி வந்து ஊக்கம் தந்திட்டுப் போவீங்க.நிறையச் சந்தோஷம் !


தினேஸ்...வாங்க.வந்திட்டேன்.
இனித் தொடரும் தோழமை !


தேவா...சந்தோஷம்.நான் நல்ல சுகம்.நீங்களும் சுகமா இருக்கணும் !


மாதேவி...வாங்கோ வாங்கோ.தீபாவளி எப்பிடிக் கொழும்பில !


இர்ஷாத்...வந்தாச்சு வந்தாச்சு.இனி....!

லக்ஷ்மி அக்கா...சந்தோஷம்
உங்க வாழ்த்துக்கு !


அன்பு...அன்புக்கு நன்றி !

ஹேமா said...

மோகண்ணா...இனி இப்போதைக்கு இந்த வருட லீவும் அலுவலகத்தில கிடைக்காது.அடுத்த வருடம்தான் !


நித்திலம்...நன்றியும் சந்தோஷமும் !


எஸ்.கே...நன்றி அன்போடு !


ஆர்.வி.எஸ்...சரி சரி.இனி லீவு எடுக்கல.திடீர்ன்னு லீவு தேவைப்பட்டா என்ன செய்றது ?


செந்தில்குமார்...வாங்க.உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும்
எப்போதும் என் நன்றி.


பத்மா...கனவுக்குள் கனவு காண்பதலாயே வாழ்வு கொஞ்சம் சந்தோஷமாயிருக்கு எனக்கு !


விஜய்...காதலால் கவிதை வருகை.ஆரம்பமே சோகமா கவிதை போட்டா அடி விழுமோன்னும் பயம்.அதான்...!


அம்பிகா...நன்றி தோழி உங்கள் அன்பு வாழ்த்துக்கு !


ஜோதிஜி...குட்டி ஜோதிஜி அச்சேற்றினாள்.சந்தோஷம் !


கொல்லான்...சொல்லாம ஊருக்குப் போனா இப்பிடிக் கவிதையெல்லாம் எழுதலாமான்னு ஒரு முயற்சிதான் கவிதை !


ராஜவம்சம்...வந்தேன் வந்தேன் களத்திற்க்கு.இப்போ களத்தில் போட்டிகள் அதிகம் !


ஜெரி...நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.நீங்களும் தேடியிருந்தீங்க.
அன்புக்கு நன்றி ஜெரி !

அப்பா...நன்றியும் சந்தோஷமும்.
கனவுகளைச் சேமிப்பது நல(ய)ம் !


சத்ரியா...என்ன சேட்டை.
இருக்கட்டும் இருக்கட்டும் !


பாலா...வாங்க.
காதல்ன்னாலே சூப்பர்தானே !


நசர்...இருங்க இருங்க.அடுத்த கவிதைக்கு எப்பிடி நக்கலுரை எழுதுறீங்கன்னு பாத்துக்கிறேன்.
காதல்தானே வாழ்க்கைல சந்தோஷம்.வாழ்வை நகர்த்துறதே காதல்தானே !


ஸ்ரீராம்...நிறைய இடைவெளி கிடைத்தாலும் சேமிக்கன்னு எதுவுமில்லை.எப்பவும்போல மனக்கிடக்கைகள்தான்.தொடரலாம் !


பிரபு...முதல் வருகைக்கும் 300 ஆவது தொடர்கைக்கும் என் சந்தொஷம்.இன்னும் தொடர்ந்துகொள்வோம் !


நிலாமதி...உங்கள் கவிதையும் பார்த்தேன்.அசத்தலான வரிகள் !


ஜெஸி... வாங்கோ வாங்கோ.சுகம்தானே !


நேசன்...உங்க அன்புக்கும் என் நன்றியும் மகிழ்ச்சியும் !


சீமான்...வாங்க.வார்த்தைகள் மன வலியையும் கொஞ்சம் குறைக்கும் !


பிரேம்குமார்...ரசித்த உங்களுக்கும் நன்றி.உங்கள் பக்கமும் வந்தேன் !


குட்டி...வாங்க.இனி அடிக்கடி சந்திப்போம் !


மங்கை...நானும் குட்டி நிலாவும் நல்ல சுகம்.நீங்களும் சுகம்தானே.
உங்கள் அன்பு என்னை இதமாகுக்கிறது
"யாழ்" என்னும் பெயரில் !

மே. இசக்கிமுத்து said...

சுகமான கனவுகள், நினைவுகள் என்றும் ஆனந்தம் தான்!

தீபாவளி வாழ்த்துகள் ஹேமா!!

நிலாமகள் said...

வாங்க வாங்க ஹேமா... நலம்தானா? உங்க காதல் கவிதை அழகு.
'இரவில் கனவும்
பகலில் நினைவும்
சிறகுகளாகின்றன
உன்னிடம் நான் பறந்து வர
நீ என் கனவின் கனவு '
என்ற அப்துல் ரஹ்மானின் கவிதை வரிகள் இணையாக நினைவில் எழுகின்றன.

Ashok D said...

:)

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

Raja said...

ஹேமா...உங்கள் அன்புள்ளத்துள் பிரபஞ்சமே உறையும்...வாழ்த்துக்கள்

thamizhparavai said...

தீபாவளி வாழ்த்துக்கள் ஹேமா...தென்றலாய் இதம் தந்த கவிதை:)

meenakshi said...

அப்பாடி வந்துடீங்களா!
தென்றல் திரும்பி வரும் என்ற நம்பிக்கையோடு, சேமித்த கனவுகளுடன் கனவுலகில் சஞ்சரிப்பதும் ஒருவித சுகம்தான்.

sakthi said...

அழகியதொரு படைப்பு ஹேமாவின் கைவண்ணத்தில்!!!!

தீப ஒளி நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

அரு்மையான கவிதை ஹேமா..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நல்லா இருக்கீங்களா?ரொம்ப நாளாச்சு ஹேமா.இத்தனை நாள் காத்த நான் இன்னொரு கவிதைக்குக் காத்திருக்கிறேன்.இடைவெளிக்குப் பின் என் முதல் கவிதையும் இப்படித்தான் உணர்வூட்டியது.

logu.. said...

mm...

romba nalla irukunga..

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க ஹேமா... முடித்த இடத்தில் கொடுத்த டச்சப் அருமையாயிருக்குங்க..

வாங்க.. வணக்கம்.. நானும் நலமே..

விச்சு said...

//கனவுகளுக்குள்
நித்தம் வரும் கனவு நீதான்
என்பதைச் சொல்லாமலே
அகலத் திறந்த கண்களுக்குள்
உன் கனவுகளை
இன்னும் சேமிக்கிறேன்.// அருமையான வரிகள் ஹேமா...

Post a Comment