*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, September 30, 2010

ப்ரியமானவனே...

புரிதலில் பூக்கிறது வாழ்வு !

பிரிந்து போகிறது
பகிர்ந்துகொண்ட உறவு !

சொல்லவில்லை
என்னைப்
புரியவில்லையென்று...
புரியவைத்திருப்பேன் !

திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி !

சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !

என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !

புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!

ஹேமா(சுவிஸ்)

49 comments:

Anonymous said...

அன்பின் மௌனம் மிகக் கொடூரம்..
புரிதல் இல்லா பிரிதல் ரணம்..
இரண்டும் கவிதையில் சிறப்பாய் வந்திருக்கிறது ஹேமா!

//திருகிக் கொல்வதும் சரி//
வலிகள் சொன்னாலும் வார்த்தைக் கோர்ப்பு அருமை..

சத்ரியன் said...

//புரிதலில் பூக்கிறது வாழ்வு !//

இந்த ஒருவரி போதும்.!

meenakshi said...

//புரிதலில் பூக்கிறது வாழ்வு !//
பூத்தது வாடுவதும் வாழ்க்கைதான்.

Kousalya Raj said...

//புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!//

வலி தெரியும் வரிகள் ஹேமா....

வினோ said...

/ எனை கடந்து போகிறாய்
எனை கலைத்து போகிறாய்
என்னுள் உணர வைக்கிறாய்
பிரிதலின் புரிதலை... /

வரிகளில் வலி தெரியுது ஹேமா...

பவள சங்கரி said...

பிரிவுத் துயரை அழ்காக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் ஹேமா. வாழ்க்கையில் புரிதல் போலியாகிப் போனால், பிரிதல் என்பதை எளிமையாகக் கூறியிருக்கிறீர்கள் ஹேமா, வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

தோல்வியுற்றவர்களுக்கு வரியின் வலிகள் தெரியும்

எனக்கு புரிகிறது நான் உணருகிறேன் உங்கள் வலியை.

Anonymous said...

இது கவிதையாக இருப்பின் சரி படிக்கும் போதே நடுக்கம் ஹேமா...

எல்லா வரியும் உணரும் பட்சம் காதல் என்றாலே பயமாயிருக்கிறது....

விஜி said...

காலம் மறக்க வைக்கும்.. விடுங்க

விஜய் said...

பிரியமானவர்களின் பிரிதலில்
கருகும் காதல் பூ

வலித்தாலும் வெல்கிறது கவிதை மனதை

விஜய்

அம்பிகா said...

\\சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !\\
பிரிவின் வலி சொல்கிறது வரிகள்.

தமிழ் உதயம் said...

லேசானவர்களுக்கு எல்லாமே லேசானது தான். அருமையான கவிதை.

ஸ்ரீராம். said...

புரியாத பிரிதலின் வலியை கண் முன்னே பார்த்துக் கொண்டு உதவ முடியாமல் இரண்டு மாதமாகத் தவிக்கிறேன். இன்று காலை கூட தொலைபேசிய அவன் அழுதது இன்னும் காதுகளில்...இப்போது உங்கள் கவிதை என் மனக் கேள்வியாய்...

நசரேயன் said...

//புரிதலில் பூக்கிறது வாழ்வு !//

பிரிதலில் பூக்கிறது பூரி

//பிரிந்து நிற்கிறது
பகிர்ந்துகொண்ட உறவு !//

உங்க கவுஜைய படிச்சி இருப்பாரு


//சொல்லவில்லை
என்னைப்
புரியவில்லையென்று...
புரியவைத்திருப்பேன் !
//

மரபுக்கவுஜ எழுதியா ?

//திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி !
//

காத்தை திருகி சொல்லனுமா ?

//சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !
//

என்னன்னு .. நீங்க ஒரு இலக்கியவாதினா ?

//
என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !
//

கவுஜ படிச்சியா .. ஓட்டு போட்டியா ன்னு தொல்லை பண்ணுனா என்ன பண்ணுவாரு மனுஷன்

//
புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!
//
ஆமா .. ஆமா

நையாண்டி நைனா said...

top class

அன்பரசன் said...

புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.

அருமைங்க ஹேமா.

elamthenral said...

கவிதை அருமை.. வாழ்த்துக்கள் நண்பரே!!! பிரிவு : உண்மை அன்பை புரிந்து கொள்ளும் வாய்ப்பு

சௌந்தர் said...

புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!///

எனக்கு தெரியாது

நிலாமதி said...

புரியாததினால் தானே பிரிந்து போனார்கள். கவிதை வலிக்கிறது.

Raja said...

ம்...காலம் எல்லாப் பிரிவுகளுக்கும் அர்த்தம் கற்பித்து மனசைத் தேற்றும்...

sakthi said...

இது வெறும் கவிதைக்கான கருன்னா ஓகே மா

sakthi said...

சொல்லவில்லை
என்னைப்
புரியவில்லையென்று...
புரியவைத்திருப்பேன் !

அருமைங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

புரிதல் - பிரிதல்.. ஊடல் இல்லாத காதல் ருசிக்காது தோழி..

இதை ஒரு பெண்ணின் கோணத்தில் எழுதப்பட்ட கவிதையாகக் கொண்டால்.. இந்தக் கவிதையின் மறுபுறத்தில் இருக்கும் ஆணின் மனநிலை எப்படி இருக்கும்? அதையும் எழுத முயலுங்கள் ஹேமா..

மோகன்ஜி said...

கனக்கும் வரிகள்...
சொல்லாமல் பிரிவது மட்டுமல்ல, சொல்லி விட்டே பிரிவது கூட தாங்கவே முடியாத சோகம்.. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.. பிரிவின் வடுக்கள் நெருடலாய் ஆயுள் பரியந்தம்...

பித்தனின் வாக்கு said...

keethaiyil krishnan sonna varikal ninaithal intha thadumarram irukkathu.
" ellavartilum nan irukkinren anal nan ethonodum ottuvathu illai"
elllam nnaane anal, nan thanithu iyanguvan"
athupola ellaraiyum nesikka vendum, anal ethan meethum muluvathumaka ottikka koodathu. nam thanithu irukka vendum. appothu mana salanam irukkathu.
kooduvathum pinpu pirivathum valkkaiyin iyalpu. ellarum ellavartaiyum oru nal pirinthuthan aaka vendum. ithu pirabhanjathin vithi.
kooduvathakkana inbathaiyum, pirium kavalaiyum oru kannottathil parkka vendum.

ஜெயா said...

திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி!

இந்த இரு வரிகள் போதும்.....

RVS said...

நல்லா இருக்கு ஹேமா..

நட்புடன் ஜமால் said...

ப்ரியமானவர்கள் அப்படித்தான் போல

க.பாலாசி said...

பிரிதல் என்பது நிச்சயம் ரணமே...இடம், பொருள், ஏவல் எதுவாயினும்..

நல்ல கவிதைங்க ஹேமா...

Unknown said...

நாம் நம் எதிரியுடன் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று நண்பர் சொல்வார், காரணம் பின்னாட்களில் நமக்கு எதிரியாக மாறுகிறவர்கள் இப்போதைய நட்புதான்..

vinthaimanithan said...

பிரிதலுக்குக் காரணம் புரிதல் குறைதல் மட்டும்தானா என்ன?! சில நேரம் புரியாதன புரியும்போதும் பிரிதலுக்கான தேவை நேருமே?!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

போதும் பிரிதல் ரணம்.விடுங்க .வலி தெரியுது ஹேமா.

கலா said...

சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன்\\\\\\

ஹேமாவின் அன்பு நெஞ்சமே!
இதைப் படித்தபின்பாவது புரியவைக்க
முயற்சியுங்கள்

வலியால் மெலியும்
வனிதைக்கு
மயிலிறகால் மையிட வேண்டாம்
வெறும்
அன்{பு}பால் புகட்டு
ஆரணங்கு இணைங்கி விடுவாள்
உன்
பிரிதலையும் ,புரியாமையையும்!!

தூது செல்ல ஒரு தோழியில்லைறென்று
துயர் கொண்டாயோ தோழி
என் பின்னோட்டம் ஒரு தூதாகட்டும்......

கலா said...

என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !\\\\
மனம் ஒரு குரங்கென்று சும்மாவா
சொன்னார்கள்

அது தன்பாட்டில் தாவிக்கொண்டேதான்
இருக்கும்.ஆனால்....
முன்பு தாவிய இடங்களை மனதால்
தடவிப் பார்த்துக் கொண்டே இருக்கும்
மறக்கவும் முடியாது,மறக்க முயற்சித்தாலும்
முடியாது
எவரும் .
மறந்தேன்,மறந்துவிட்டேன் என்றொரு
வேஷமணிந்து நடிப்பார்களே தவிர.....
நிஜமாக முடியவே முடியாது

ஆகவே: உங்கள் கதாநாயகர் நினைவில்
வாழ்ந்து கொண்டேதான் இருப்பீர்கள்.
பிரிந்தாலும்............

vinu said...

என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !
என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !


பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!


vazikkuthu

logu.. said...

Ama..ama..

Ellorum pattaiya kelappuraingale..

Semmmmmmma jorunga.

Raja said...

சொல்ல மறந்துவிட்டேன்...இந்த கவிதையை நண்பனிடம் வாசித்துக்காட்டினேன்...ரொம்பவும் சிலாகித்திருந்தான்...மீண்டும் வாசித்தபோது திருகிக் கொள்வதும் சரி...சொல்லாமல் பிரிவதும் சரி என்ற வார்த்தைகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது...

சாந்தி மாரியப்பன் said...

அருமையான வரிகள் ஹேமா.. புரிதல் இல்லாவிடினும் அன்பிற்குரியவர்களின் பிரிதல் என்றுமே வேதனை தரும்தான்..

'பரிவை' சே.குமார் said...

வலி தெரியும் வரிகள் ஹேமா....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வரிகளில் கூட வலி தெறிக்கிறது!

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா,கவிதை அருமை.எனக்குப்பிடித்த வரிகள் >>> என்னைப் புரிந்துகொண்டே
பிரிந்திருக்கிறாய் !>>>

எவ்வளவு வலி நிறந்த வார்த்தைகள்?

இந்தக் கவிதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பவும்,அட்ரஸ்

சொல்வனம்,

ஆனந்த விகடன்,

757,அண்ணா சாலை, சென்னை 600002.

மெயிலில் அனுப்ப வேண்டாம்,போஸ்ட் டில் அனுப்பவும்.பிரசுரம் ஆனால் ரூ 300 பரிசும் ,8 லட்சம் வாசகர்கள் கவனிப்பும் கிடைக்கும்.

ஹேமா said...

பாலா...புரிதலோடு ஓடி வந்தீர்கள்.நன்றி.


கண்ணழகா...எங்கே ஆளையே காணோம்.கவிதைக்கு ஒரு வரியே போதும் என்கிறீர்களோ !


மீனு...நீங்கள் சொல்வதும் சரிதான்.எதையும் இயல்போடு ஏற்றுக்கொண்டு இயங்கச் சொல்கிறீர்கள்.மனம் வேறு மூளை வேறாக இயங்குகிறதே !


கௌசி...அடிக்கடி காண்பதில் சந்தோஷம்.


வினோ...பிரிந்துதான் போய்விட்டது என்று உணர்ந்துகொண்டாலும் புலம்ப வைக்கிறது மனதைத் தாக்கிய அன்பு.


நித்திலம்...அப்போ "உன்னைப் புரிந்துகொண்டேன்" என்பது பொய்யா.
அதுதான் பிரிதல் சுலபமாக இருக்கிறதா !


தமிழரசி...எல்லாக் காதலும் இப்படியாகாது.பயம் ஏன்.சிலசமயம் புரிந்த காதல் மீண்டும் கைக்கு வரும்.அழக்கூடத் தைரியம் இருக்காது அப்போ !


விஜி...அன்பின் வரவுக்கும் ஆறுதல் வார்த்தைக்கும் நன்றிதோழி.


அம்பிகா...வலி போகும் நாட்கள் அதிக தூரமில்லை என்கிற நம்பிக்கை வாழவைக்கிறது.


தமிழ்...காதலும் காதலிக்கப்படுபவர்களும் இலேசானவர்கள்தான்.அதுதான் மென்மையானவர்கள்.பிரிந்துபோக மனம் இறுக்கமாய் இருக்கவேணுமே !


ஸ்ரீராம்...இந்தக் கவிதை உங்கள் மனதுக்குள்ளால் எங்கோ ஒரு தாக்கத்தை அதிர வைத்திருக்கிறது.
அப்போ இதுதான் இயல்பா !


நசரேயா...அட நசரேயா என்னான்னு சொல்ல உங்க அட்டகாசத்தை.சோகம் கூடக் கலைகிறது உங்க கும்மியால !


நைனா...நையாண்டி நைனா இருக்கீங்களா வலைத்தளத்தில்.பிரிவு என்கிற கவிதை கண்டவுடன் வந்தீர்களோ.சுகம்தானே நீங்கள் !


அன்பரசன்...அன்புக்குள்ளும் விஷம் இருக்குமா.சந்தேகமாவே இருக்கு !


புஷ்பா...உங்களைப் புதிதாகக் காண்கிறேன்.வருகைக்கு நன்றி.உண்மையான அன்பாயிருந்தால் போயிருக்காதோ !


சௌந்தர்...என்ன தெரியாது.
கையிலே குழந்தை.காதலே தெரியாதுன்னா நாங்க நம்பணுமா !

கண்ணகி said...

திருகிக் கொல்வதும் சரி
சொல்லாமல் பிரிந்ததும் சரி !

மனக்கொலை...

ஹேமா said...

நிலாமதி...புரிந்துகொண்டபடியால்தான் பிரிந்துபோனார்களோ !


ராஜா...காலம்போல உற்ற நண்பன் நமக்கு யார் !உங்கள் நண்பருக்கும் இந்தக் கவிதை பிடித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.காதலின் பாதிப்பு எல்லோர் மனதிலும்தானே !நன்றி அவருக்கும்.


சக்தி...சும்மா சும்மாதான் கவிதை !


கார்த்தி...என்ன இலக்கியம் பேசியே சாகடிக்கிறீங்களாம் மேவீ சொல்றார்.
கவிதை இருபாலாருக்குமே உணர்வால் ஒன்றுதானே !


மோகன்ஜி...பிரிவின் கொடுமை அனுபவிப்பது
ஆயுள் தண்டனைக்குச் சரி !


பித்தரே....சுவாமி இப்போ எந்த மலையில் தவமிருக்கிறார்.
சொல்லிட்டாவது இருங்க சுதானந்த சுவாமிகளே.தத்துவமாய் பின்னூட்டம்.
அப்போ ..எதிலயும் அளவுகடந்த அன்பு வைக்கவேணாம்ன்னு சொல்றீங்க.முடியுமா !


ஜெயா...என் உணர்வுக்கு இறப்பதும் பிரிந்தபின் உயிர் வாழ்வதும் ஒன்றுபோல இருக்கு.


ஆர்.வி.எஸ்...நன்றி நன்றி.


ஜமால்...புரிந்திருக்கிறீர்கள் நிறையவே என்னை !


பாலாஜி...பிரிவும் இழப்புக்களும் தரும் வேதனை வார்த்தைகள்
இந்தக் கவிதை போதாது !


செந்தில்...அப்போ எம் நண்பர்களெல்லாம் பிற்காலத்து எதிரிகளா.ஐயோ !


விந்தையாரே...நீங்கள் சொன்னதும் சரி.புரியாதன புரிந்ததாலும் பிரிந்து போயிருக்கலாம் !


ஜெஸி...பிரிந்தபின் தானே அதன் நினைவும் நெருக்கமும் பக்கமாய் இருக்கிறது.எப்படி விடமுடியும் !


கலா...கலகல கலா.கனநாளா இப்பிடி கலாய்க்கிற பின்னூட்டம் குறைவாய்ப்போச்சு.ரொம்ப பிஸியாயிட்டீங்களாம்.சொன்னாங்க.
நன்றி கலா.நினைவுகளை யாராலும் கொல்ல முடியாது.நிச்சயம் உயிர் உள்ளமட்டும் மனங்களோடு வாழும்!


வினு....வாங்க வாங்க.காதல் கவிதை கண்டா மட்டும்தான் வருவீங்களோ !


லோகு...காதல் எல்லாருக்கும் பொதுவான உணர்வுதானே.
என்னமோ நீங்கமட்டும் குத்தகைக்கு எடுத்தமாதிரி !


சாரல்...நன்றி நன்றி.குளிர்மையாய் தெறிக்கிறது உங்கள் வார்த்தைகள்.


குமார்...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.


ஆரண்யநிவாஸ்...நன்றி உங்களுக்கும்.


செந்தில்குமார்...உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி.அநேகமாகப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு பதிவிடாத கவிதைகளையே எதிர்பார்ப்பார்கள்.
என்றாலும் முயற்சிக்கிறேன்.


கண்ணகி...அழகான வார்த்தை சொன்னீர்கள்"மனக்கொலை"!
நன்றி தோழி.

Unknown said...

மிக நல்ல பதிவு


http://denimmohan.blogspot.com/

சின்னபாரதி said...

ஹேமா !

ஒரு நண்பரிடம் அவரின் நண்பர் சொல்லியதாக கேள்விப்பட்ட விசயம்

“நம் நட்பை இப்படியே ! விட்டுப்போக விருப்பமில்லை ” என்றதாக ....

அதற்கு விடை கொடுத்தது போல் புரிதலும் பிரிதலும் ....

நல்ல வலி .

சுந்தர்ஜி said...

என் கவிதைதான் இதற்குப் பதில் ஹேமா.

அவளோடு
வாழ முடியாது
போயிற்று.
இவளோடு
விலகமுடியாது
போயிற்று.
எளிதில்லை
வாழ்வதும்
பிரிவதும்.

//சொல்லிப் பிரிந்திருந்தால்
புரிந்திருப்பேன்...
சரி செய்திருப்பேன் !//

மெ/மேன்மையான மனது புரிகிறது ஹேமா.

கோநா said...

nallarukkunga hema...

விச்சு said...

//புரிதல்...
அவ்வளவுதானா !
பிரிதல்...
இவ்வளவு இலேசானதா!!!//

Post a Comment