*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, June 24, 2010

காற்றும் காவலும்...

யுகப் போர்
ஆசையில்லா மனம்
சமூக நெருடல்
காதல் அறுந்த தேசம்
ஆணின் அன்பு
தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு.

தேடல் ஒத்திவைப்பு
வார்த்தைப் பசி
கவிதைகளால்
விருந்து உபசரிப்பு
வெற்றிலையும்தான்.

நிலவொளிச் சேமிப்பு
இரவின் இணங்கல்
அங்கும்...
ஆராதனைப் பூக்கள்
வாசனையோடு.

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்.

நேற்று...
மீசை முளைத்த கவிதை
இன்று...
மீசையோடு செல்லக் குழந்தை.

ஒவ்வொரு இரவும் புறப்பாடு
மழை ஈசலாகி
ஏதோ தேடல்.
இன்றாவது கிடைத்துவிடும்
என்கிற ஆசை.

இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க!!!

ஹேமா(சுவிஸ்)

65 comments:

Ashok D said...

உங்கள் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறு ஸ்டெயில்... தனிதனியாக (குட்டிகுட்டியாக).. படிக்க வசதியாகவும் நன்றாகவும் இருக்குங்க :)

Ramesh said...

நல்லா இருக்கு ஹேமா. அருமை.
வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நிலவொளிச் சேமிப்பு
இரவின் இணங்கல்
அங்கும்...
ஆராதனைப் பூக்கள்
வாசனையோடு.

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்.]]

ஒவ்வொரு வரியும் படித்து இரசிக்கும் படியாக ...

பெட்ரோவ்ஸ்கி said...

நல்லாருக்குங்க, இந்த ஃபார்மட் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, ஞாவகம் வர மாட்டிங்குது, இது எதிர்க்கவிதைங்களா?

Unknown said...

எப்போதும் தேடுதலை தொலைக்கும் கவிதை ..

ஆரம்பிப்பதைபோல் இருப்பதில்லை முடிக்கும் கவிதை ...

மீசை குழந்தை ஆசை அறியாதா?

அன்புடன் நான் said...

நேற்று...
மீசை முளைத்த கவிதை
இன்று...
மீசையோடு செல்லக் குழந்தை.///

அப்படியா....

நல்லாயிருக்கு.

சௌந்தர் said...

தேடல் ஒத்திவைப்பு
வார்த்தைப் பசி
கவிதைகளால்
விருந்து உபசரிப்பு
வெற்றிலையும்தான்.
நல்ல கவிதை....

Riyas said...

//தேடல் ஒத்திவைப்பு
வார்த்தைப் பசி
கவிதைகளால்
விருந்து உபசரிப்பு
வெற்றிலையும்தான்//

ஆஹா அருமை வாழ்த்துக்கள் அக்கா..

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு ஹேமா

புது வகை எழுத்து .ம்ம் நல்ல மாற்றம் வெளிப்பாட்டில்


வாழ்த்துகள்

VELU.G said...

SUPER
//
காதல் அறுந்த தேசம்
ஆணின் அன்பு
தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு.
//

வரிகள் அருமை வாழ்த்துக்கள்

கலா said...

ஹேமா மிக அருமை
உங்கள் கவிதை

க.பாலாசி said...

அசோக் அண்ணா சொல்வதுபோல் எளிய மொழியில் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.

//நிலவொளிச் சேமிப்பு
இரவின் இணங்கல்
அங்கும்...
ஆராதனைப் பூக்கள்
வாசனையோடு.//

என்ன அழகு பாருங்க... சூப்பர் ஹேமா..

கண்ணகி said...

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்.

வரிவரியாக ரசிக்கிறேன்..

வாழ்த்துக்கள்..

Unknown said...

நேற்று...
மீசை முளைத்த கவிதை
இன்று...
மீசையோடு செல்லக் குழந்தை./

அட,ரசனையா இருக்குங்க..

வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

\\காதல் அறுந்த தேசம்
ஆணின் அன்பு
தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு.\\
அருமையா இருக்கு ஹேமா.

தமிழ் உதயம் said...

அருவியில் விழும் நீராய், அழகான வார்த்தைகள் நெஞ்சை கிள்ளியவாறு வந்து விழுகின்றன. அதில் மனம் லயிக்க ரசித்தோம்.

ஜோதிஜி said...

கவிதைகள் மனதில் இருந்து கலைந்து போனாலும் ஏதோவொரு சமயத்தில் சாரல் மட்டும் மனதில் கிளர்ச்சிகளை உருவாக்கிக் கொண்டுருக்கிறது.

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு ஹேமா...உங்கள் பாணியிலிருந்து சற்று வித்தியாசமாய் இருக்கிறது.

விஜய் said...

உங்களுக்கு பரிசு தராம போன அந்த அறிவுஜீவி நடுவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்

புது ஸ்டைல் அழகு

விஜய்

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொரு வரியையும் ரசிச்சு வாசிச்சேன். அழகுப்படம் கொஞ்சத்தூண்டுகிறது.

- இரவீ - said...

நன்றி ஹேமா , மிக அருமையான வரிகள்.

படிக்கும் போதே பகவத்கீதை படிக்கிறமாதிரி இருக்கு ... பகவத்கீதை புரியுமான்னு கேக்கபிடாது ஆமாம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஒவ்வொருவரியும் ரசிக்க ரசிக்க இனிமை. கவிதை நல்லாருக்கு ஹேமா.

ஜெயா said...

இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க!!!

காற்றும் காவலும் அழகான கவி வரிகள்....அதற்கு ஏற்ப கைவிரல் சூப்பியபடி தூங்கும் குட்டிக்குழந்தையின் படம் அருமை ஹேமா....

நசரேயன் said...

ம்ம்ம்

Chitra said...

யூத்புல் விகடனில் வெளியான இந்த கவிதைக்காக, பாராட்டுக்கள்!

சுபாங்கன் said...

அப்புகுட்டன் said...
நல்லாருக்குங்க, இந்த ஃபார்மட் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, ஞாவகம் வர மாட்டிங்குது, இது எதிர்க்கவிதைங்களா?//

நானெல்ல்லாம் சுஜாதவை cpoy அடிச்சு பெயரை மட்டும் கதையில் மாற்றி எழுதுவதை விட இந்த கவிதை எவ்வளவோ சிறந்தது அக்கா.

Muniappan Pakkangal said...

Vaarthaihal miha arumai Hema.

சிவாஜி சங்கர் said...

1** 2** 3* 4* 5*** 6* 7**

ஹேமா :)

Jeyamaran said...

நல்ல பதிவு மிகவும் அருமை தொடந்து எழுத என் வாழ்த்துகள்

தமிழ் அமுதன் said...

கவிதை வரிகள் ஆங்காங்கே நட்சத்திரங்களாய்...!

Ahamed irshad said...

தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு.///

மிக சிறப்பான வரி மெய்சிலிர்த்தது சூப்பர்ங்க ஹேமா.

meenakshi said...

வித்தியாசமாக எழுதி இருக்கிறீர்கள் ஹேமா. அருமையாக இருக்கிறது கவிதை, அழகாக இருக்கிறது தூங்கும் குழந்தை.

விஜய் said...

விருது பெற்றுகொள்ளுங்கள்

விஜய்

Ashok D said...

//உங்களுக்கு பரிசு தராம போன அந்த அறிவுஜீவி நடுவர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்//

விஜய் வன்மையாக கண்டிக்கிறேன்... அவர்கள்(நடுவர்கள்) சிறந்த இலக்கியவாதிகள்... அரைகுறையாக உளறக்கூடாது...

(முடிந்தால் அவர்களுது புத்தகங்களை வாசித்துவிட்டு கூறவும்)

Ashok D said...

followupkku

Madumitha said...

இனிது.
தொடர்க.

விஜய் said...

@ அசோக்

நான் உங்களிடத்தில் உளறவில்லை. ஹேமாவிடத்தில் கூறினேன். சம்மனில்லாமல் ஆஜராகக்கூடாது.

விஜய்

விஜய் said...

@ அசோக்

அறிவு ஜீவி நடுவர்கள் என்றுதானே கூறினேன், அறிவு சூன்ய நடுவர்கள் என்றா கூறினேன்.

விஜய்

விஜய் said...

@ அசோக்

எனக்கு விருப்பமான புத்தகங்களை படிக்க எனக்கு தெரியும். திணிப்பை விரும்பவில்லை.

விஜய்

அண்ணாமலை..!! said...

ரசனையான கவிதை....!
ரசனையைத் தூண்டுவனவாகவும்..!

சுந்தர்ஜி said...

ஒரு குழந்தையின் வரவு எத்தனை அழகான கவிதையைத் தருகிறது!வடிவமும் வார்த்தைகளும் மெருகேறும் போது கவிதையையும் குட்டிப் புன்னகையோடு உறங்கும் குழந்தையையும் எங்ஙனம் பிரிய ஹேமா?

அன்புடன் மலிக்கா said...

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்.]]//

மிக அருமையாக இருக்குதோழி.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் ஹேமா,... நல்லாயிருக்கு

Prasanna said...

இப்படிதான்.. கொஞ்ச கொஞ்சமா மாத்தி எனக்கு புரியிற மாதிரி எழுத ஆரம்பிங்க பாப்போம் :))

தமிழ் மதுரம் said...

இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க!!!//


காற்றும் காவலும்! கனத்த இரவினூடாகக் கதைகள் பேசும் கவிதையாக இருக்கிறது உங்களின் இப்படைப்பு.


காற்று இங்கே காவல் இருக்கிறதா அல்லது காற்று இங்கே வந்து கவிதை பேசுகிறதா? புரியவில்லையா. அருமையான தலைப்பு. ஆழமான சிந்தனையுள்ள கவிஞர்களிடம் இப்படியான கவர்ச்சி மிகு தலைப்புக்கள் இருக்கும் என்பது உண்மை தானே.


கவிதையில் இன்னொரு பிறவி உருவாகுவதையும் தன் ஏக்கங்கள் தீர முன்பே இன்னொரு ஏக்கம் நிறைந்த ஜீவன் உருவாகப் போவதையும் மிக மிகச் சுவையாக இலக்கிய நயத்தோடு சொல்லியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் ஹேமா. விகடனில் மட்டுமல்ல, எங்களின் ஈழத்திலுள்ள அனைத்துப் பத்திரிகைகளிலும் உங்களின் கவிதைகள் வெளிவர வேண்டும் என வாழ்த்துக்கிறோம்.

பத்மா said...

ஹேமா பல முறை வந்து படித்து விட்டு செல்கிறேன் ..
திரும்பியும் வருவேன் ..கொஞ்சம் எனக்கு புரியும் வரை..
பல வித சிந்தனைகள் தோன்றுகின்றன ... ஆனால்
நீங்கள் எதை குறித்து பேசுகிறீர்கள் என்று உங்கள் சிந்தனையும் அணுக வேண்டும் ..
அதற்கு தான்..
அருமையான கவிதாயினி நீங்கள்

Ashok D said...

//நான் உங்களிடத்தில் உளறவில்லை. ஹேமாவிடத்தில் கூறினேன். சம்மனில்லாமல் ஆஜராகக்கூடாது.//

எதுவோ.. உளறல் என்று ஒத்துக்கொண்டால் சரி

Ashok D said...

//சம்மனில்லாமல் ஆஜராகக்கூடாது//
நீங்களே உளறல் என்று ஒத்துக்கொண்ட போது.. இனி no ஆஜர்... ;)

Ashok D said...

//எனக்கு விருப்பமான புத்தகங்களை படிக்க எனக்கு தெரியும். திணிப்பை விரும்பவில்லை//

நானே அவங்க புத்தங்கள படிச்சதில்லை ... எல்லாம் சொல் கேள்விதான்... விஜய்

Ashok D said...

Hurray....... Half century... Dont claps people :)

விஜய் said...

@ அசோக்
நண்பா, உங்களுக்கு உளறலாக தெரிவது இன்னொருவருக்கு உண்மையாக தெரிகிறது, என்ன செய்ய

taste differs

விஜய்

விஜய் said...

@ அசோக்
நண்பா, அது எப்படி அவர்களது புத்தகங்கள் வாசிக்காமலேயே இலக்கியவியாதிகள் என்று சான்றிதழ் கொடுத்தீர்கள்

இவிஜய்

Ashok D said...

bloglaயே நிறைய பேர் லிங் கொடுத்துயிருக்காங்க... பகிர்ந்து இருக்காங்க... ப்ளாக்ல வாசித்துயிருக்கேன்.. அவ்வபோது பத்திரிக்கையில் யுவனை வாசித்துயிருக்கேன்..


இப்போது புத்தகங்களை படிக்க வாய்ப்பில்லை..(க்டுமையான வேளைபளு) அலுவலகத்தில் we can surf, but they dont allow to 'reading books' ;)

Ashok D said...

@பத்மா

/கொஞ்சம் எனக்கு புரியும் வரை../

எங்களுக்கு மட்டும் புரிஞ்சிதாக்கும்... சும்மா நண்பர்கள குத்துமதிப்பா கும்சா பாராட்டிவிட்டு... அப்டியே escapu ஆகவேண்டியதுதான்...

கொல்லான் said...

//ஒவ்வொரு இரவும் புறப்பாடு
மழை ஈசலாகி
ஏதோ தேடல்.
இன்றாவது கிடைத்துவிடும்
என்கிற ஆசை.//

அருமை அருமை.
கவியரசிக்கு வாழ்த்துக்கள்.

கலா said...

யுகப் போர்
ஆசையில்லா மனம்
சமூக நெருடல்
காதல் அறுந்த தேசம்
ஆணின் அன்பு
தொலைந்த தருணங்கள்
தூசு தட்டித் தேடுகையில்
ஒரு குழந்தையின் வரவு\\\\\\\

போர் கொடுத்த ...தழும்புகளால்
வெறுத்த மனம்
ஆண்களைக் கொன்று குவித்ததில்
காதலிக்கக் கூட ஆண்கள்
இல்லாத நாடு
இப்படி இருக்கையில்...
ஒரு ஆணின் அன்பு கிடைத்தும்,
கை நழுவி விட்டதை எண்ணங்களால்,பழையவைகளைத்
தட்டி மேலெழுப்பி பார்கின்ற வேளையில்....
நீ எனக்குக் கிடைத்தாய் ஒரு குழந்தையைப் போல்

தேடல் ஒத்திவைப்பு
வார்த்தைப் பசி
கவிதைகளால்
விருந்து உபசரிப்பு
வெற்றிலையும்தான்\\\\\\நீ கிடைத்தவுடன் என் பழைய வாழ்கையின்
பக்கங்கள் புரட்டாமல்....
உன்னுடன் பலவற்றை வார்த்களால்
பேசி,கவிதைகளால் பகிர்ந்து மிகவும்
களிப்புற்று இருந்தோம்

நிலவொளிச் சேமிப்பு
இரவின் இணங்கல்
அங்கும்...
ஆராதனைப் பூக்கள்
வாசனையோடு.

வார்த்தைகள்
கோர்த்த களைப்பில் தூக்கம்
கலைக்காமல்
ஜன்னலருகில் காற்று
காற்றுக்குள் புகுந்த பூபாளம்.
கடல்பெண் காவல்\\\\\\


நேரங்கள் போவதுகூடத் தெரியாமல் ...
இருவரும் இணங்கி ,அன்புடன்,புரிந்துணர்வுடன்
நாம் நிறத்தும் ,நம் உச்சக் கட்டப் பேச்சால் ...
களைத்து தூங்குகிறோம் விடிவதுகூடதக் காலைக்
காற்றின் அரவணைப்பில்தான் தெரிகிறது

நேற்று...
மீசை முளைத்த கவிதை
இன்று...
மீசையோடு செல்லக் குழந்தை

அன்று மீசையுடன் கவிதை எழுதினார் பாரதி
இன்று குழந்தைத் தனமான உன் துளிர் மீசையுடன்
கவிதை,........

இப்படியுமெடுக்கலாம்......
அன்று ஆண்மகனாய்..அன்புடன் கவிதைகள்
கொடுத்தாய்..
இன்று ஆண்மகனாய் இருந்தும் அதை மறைத்துக்
குழந்தையாய் நடக்கின்றாய்.....!


ஒவ்வொரு இரவும் புறப்பாடு
மழை ஈசலாகி
ஏதோ தேடல்.
இன்றாவது கிடைத்துவிடும்
என்கிற ஆசை.\\\\\

ஒவ்வொரு இரவும் உன்னுடன் பேசிய,பழகிய
நாட்களில் நனைந்த்தை..ஒரு நாளில் மடியும் ஈசலாய்
அதைத் தொலைத்து....திரும்பவும் கிடைக்காத என்ற
ஒரு ஏக்கத்தில் தேடுகிறேன்

இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க\\\\\\

அந்த நினைவுகளிலிருந்து எப்படி நான் வெளியேற முடியும்?
உன் சிரிப்பும்,குழந்தைத் தனமும் என்னுடன்
உன்னை ஒரு குழந்தையாய் எப்போதும் தாலாட்டுகின்றேன்
என் மனதில் நீ தூங்குகின்றாய்!!


ஹேமா சரியா தப்பா யான் அறியேன் தங்கம் என் மூளையில்
தட்டியவைகளைத் தட்டச்சில் தட்டி தந்து விட்டேன் உன்னிடம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லா இருக்குங்க, வாழ்த்துக்கள்

ஹேமா said...

//அஷோக்...எங்களுக்கு மட்டும் புரிஞ்சிதாக்கும்... சும்மா நண்பர்கள குத்துமதிப்பா கும்சா பாராட்டிவிட்டு... அப்டியே escapu ஆகவேண்டியதுதான்...//

வாங்க அஷோக்.முதல் போட்ட பின்னூட்டத்துக்கும் அப்புறம் கடைசியாப் போட்ட பின்னூட்டத்துக்கும் நிறைய வித்தியாசம்.

கவிஞர்ன்னு பலராலும் சொல்லப்படுகிற நீங்களே இப்பிடிச் சொன்னா எப்பிடி !கவிதைன்னா பார்க்கிறவர்களின் கண்ணோட்டமும் எழுதியவரின் கண்ணோட்டமும் சில சமயங்களில் ஒத்திருக்காது.புரியாது.
ஆனால் அங்கு அர்த்தமில்லை என்றில்லை.

உதாரணம் சொன்னால் நேசன் கவிதைகள் சிலருக்கு - எனக்குப் புரிவதில்லை என்பதற்காக அங்கு அர்த்தமில்லை.அவரிடம் கேட்டால் ஆழமான அழகான அர்த்தம் சொல்வார்.சும்மா புலம்பினதா அர்த்தமா ?

பின்னூட்டம் உண்மையில் உற்சாகம் தரும் ஊக்கமாக இருக்கவேணும்.
புரியாட்டி புரியல சொன்னாலும் பரவாயில்லை.கும்சா பாராட்டு என்னது ?சரில்ல !

தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.
என்னைத் திருத்துங்க.

ஹேமா said...

றமேஸ்...நன்றி வாங்கோ வரணும் .

ஜமால் நன்றி ...வார்த்தைகள் அழகோடு என் மனசும் இருக்கு அங்க.அப்புறமா சொல்றேன்.
கலாவும் கொஞ்சம்
அளந்திருக்காங்க என் மனசை!


அப்புக்குட்டன்...உங்க புது வரவுக்கு நன்றி.யார் சொன்னா எதிர்க் கவிதையெண்டு.சிலசமயம் யூத்புல் விக்டனில் 5 - 6 மாதங்களுக்கு முன்னம் பாத்திருப்பீங்களோ.


செந்தில்....வாங்கோ.பாவம் மீசைக் குழந்தையைத் திட்டாதீங்கோ !


அரசு...எங்கட கருப்புத் தங்கம் சுகமா.கதைச்சீங்களா !


சௌந்தர்...அன்புக்கு நன்றி தம்பி.


ரியாஸ்...பாராட்டுக்குச் சந்தோஷம்.


நேசன்...உங்கள் பாராட்டில் ஒரு உந்துதல் எனக்கு !


வேலு....வரிகள் தந்தது மீசைக்காரனல்லோ !


கலா...கலா... யோசிக்கிறீங்கபோல.சரி சரி.
என் மனசை அளக்கும் ஒரு கருவி கலா.இந்தக் கவிதைக்குப் பிந்து
வந்த பொழிப்புரை முழுசா இல்லாவிட்டாலும் ஓரளவு என் மனசைப் படம் பிடிச்சிருக்கு.
நன்றி தோழி.


பாலாஜி..உங்களின் தொடர்ந்த அன்புக்கு தரும் ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி நண்பா.


கண்ணகி...எங்கே எங்கே நீங்க?காணாமாப் போயிடறீங்க அடிக்கடி.
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.


ஆறுமுகம்....ரசனையான கவிதை மட்டுமில்ல.என்னை ரசிக்க வைத்த கவிதையும் கூட !


அம்பிகா...அன்பின் வரவுக்கும் வார்த்தைக்கும் நன்றி தோழி.


தமிழ்...அருவியின் கலக்க வந்த உங்களை நான் ரசிக்கிறேன் அன்போடு.


ஜோதிஜி...எம்மைப் போன்ற அழுவாச்சி வாழ்க்கையில் கொஞ்சம் குளிர வைக்க காதலின் சாரலும் தேவை.சரிதானே !


ஸ்ரீராம்....வித்தியாம்ன்னு புரிஞ்சிருக்கீங்க.
கலா பின்னூட்டம் கவனிச்சீங்களா

விஜய்...உண்மைதான் எனக்கே தெரில.வார்த்தைகள் வந்து விழுந்த விதம்.நீங்கள் தந்த விருது மிகுந்த சந்தோஷம்.அது போதும்.


அமைதிச்சாரல்...உங்கள் வருகைக்குச் ரசனைக்கும் சந்தோஷம்.


இரவீ...பகவத்கீதையையும் இதையும் ஒப்பிட்டு இருக்கீங்களே.
பகவத்கீதை படிச்சிருக்கீங்களா.
கேக்ககூடாதுன்னாலும் கேப்பேன் !


ஸ்டார்ஜன்....நீங்களும் இப்போவெல்லாம் தத்துவமான சிந்திக்க வைக்கிற கவிதைகள் எழுதுறீங்க.

ஹேமா said...

ஜெயா...ஜெயாக்குட்டி நல்லா நித்திரை கொள்றா.காத்துக் காவல் நிக்குது யன்னலோரம் !


நசர்....என்னா ம்ம்ம்....கும்மியடிக்க விடலன்னு கோவமாக்கும்.இதுவும் காதல் கவிதைதானுங்கோ.
புரியலயாக்கும்.பாவம் நீங்க.புரிய வைக்கிறேன் கடைசியா !


சித்ரா...நகைச்சுவை நாயகியே வாங்கோ..வாங்கோ.சந்தோஷம் வாழ்த்துக்கு.


சுபாங்கன்...இதுதான் எங்கட பெடியள்ன்ர பகிடியோ !எங்கயும் போய் இப்பிடிச் சொல்லாதேங்கோ.
மனசுக்குக் கஸ்டமாயிருக்கும்.
உங்களுக்கும் கூடத்தான் !


டாக்டர்....வரணும்.அடிக்கடி பார்க்கமுடியிறதில்ல இப்பல்லாம்.
ரொம்ப வேலையா.சுகமா இருந்துக்கோங்க.


சிவாஜி....1 - 7 பாலாஜி பதிவில இப்பிடித்தான் அடி விழுந்திச்சு.
அப்போ எனக்கு அடிதானா !நன்றி நண்பா.குழந்தையை இறக்கிவிடுங்க.
எந்த நேரமும் தூக்கி வச்சுப் பழக்காதீங்க.நீங்களும் பாரத்தோட இருக்கிறாப்போல ஒரு அவதி.


ஜெயமாறன்...வருகைக்கு மிக்க நன்றி தோழரே.


அமுதன்...ஜீவன் கவிதைப் பக்கத்தில உங்களை பார்க்கிறதில சந்தோஷம்.நீங்களும் ஒரு
நட்சத்திரம் போலத்தான் !


இர்ஷாத்....அன்புக்கு நன்றி சகோதரா.


மீனு...வாங்கோ வாங்கோ.என்னைப் பார்க்க வச்சிட்டு தூங்கின குழந்தை ஒண்ணுக்காக எழுதின கவிதை.
காற்றாய் இருந்து உள்ளேயும் வராமல் யன்னலோரம் நின்று காவலும் செய்தேன் அந்த மீசைக் குழந்தை தூங்க !


மது...நன்றி வரவுக்கும் ஊக்கம் தரும் வார்த்தைக்கும்.


அண்ணாமலை...அன்புக்க்கு நன்றி.


சுந்தர்ஜி...அன்றைய இரவும் எனக்கு அப்பிடித்தான்.விலகமுடியாமல் விலகினேன் அந்தக் குழந்தையை !நடுவில கொஞ்சம் சலசலப்பு.தாண்டி வந்தீங்களா.நான் ஒண்ணும்
சொல்லப் போகல.


மல்லிக்கா...இடையிடை வந்தாலும் உற்சாகம் தரும் வார்த்தைகள் தோழி உங்களது.நன்றி.


ஞானம்...சந்தோஷமாயிருக்கு கண்டது.காமெராவும் நீங்களுமா பொழுது போகுதாக்கும் !


பிரசன்னா...என்னத்தைச் சொல்ல நான்.புரியலன்னு சொல்றாங்க.
புரியுதுன்னு சொல்றீங்க.என்னை வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே !


கமல்...கனத்த இரவு இன்னும் கனத்தபடிதான்.மனதில் கனத்தை ஏற்றிவிட்டுப் போயே விட்டது !


பத்மா....கவிதை பார்க்கும் உணரும் கண்களை மனசைப் பொறுத்ததுதானே.
உங்கள் நோக்கில் பார்த்துக்
கொள்ளுங்கள்.பிடிச்சிருக்கும்.


கொல்லான்...அஷோக் கவிதையே இல்லன்னு சொல்றார்.நீங்க பட்டம் தந்திருக்கீங்க.பகிடிக்கு இல்லைத்தானே !நன்றி.

தங்கமணி...நன்றி நன்றி.

Ashok D said...

ஹேமா... முதல் பின்னூட்டம்.. எதிர்வினை...

கடைசி பின்னூட்டம் just பகடி அவ்வளவே...

:)

கொல்லான் said...

//பகிடிக்கு இல்லைத்தானே//

சத்தியமா இல்லைங்க. நம்புங்க. உண்மையத்தான் சொன்னேன்.

thamizhparavai said...

புதிய வடிவில் குழந்தையாய்க் கவிதைகள்....
புரியச் சற்றுச் சிரமமிருந்தாலும், கலாவின் பின்னூட்டத்தில் கொஞ்சம் புரிந்து கொண்டென்..

எனக்குப் பிடித்தது...
//இனி எப்படி...?
விட்டு வெளியேற
குட்டிப் புன்னகையோடு
தனிமையில்...
குழந்தை ஒன்று இங்கு தூங்க!!!//
இதைக் காதல் கவிதையாய்ப் பார்க்காமல் ரசித்தேன்..சிறந்த ஹைக்கூப் படிமம் தெரிகிறது...
விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்...

ப்ளாக் எளிதில் ஓப்பன் ஆகிவிட்டது...நன்றி...

Nathanjagk said...

ரொம்ப தாமதமாக வந்துவிட்டேன் (இதுக்கு நீ வராமலே இருக்கலாம்)

கவிதை, ரொம்ப பழகிய காற்று மாதிரி தலை கலைக்குது. எங்கிருந்தோ வருகிற காற்று எதிர்பாராத தருணத்தில் திறந்துவிடுகிற நம்வீட்டு ஜன்னல்... ஜன்னல் வழியே எப்போதும் மறக்க முடியாத ஒரு காட்சி. அப்புறம் ஜன்னல்கள் மூடிவிட்டாலும் காட்சி மனதில் கலைவதில்லை.

கவிதை அன்பின் வரிவடிவமாக இருக்கிறது!

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா...திரும்பவும் நிறைய நாளுக்குப் பிறகு பார்க்கிறதில நிறையச் சந்தோஷம்.இனி அடிக்கடி பதிவுகளோடு காணலாம்தானே !

வாங்கோ ஜே....சுகம்தானே பார்த்துப் பார்த்து களைத்த காற்று வாழ்த்து மட்டும் சொல்லி காட்சிகளை மட்டும் கவனப்படுத்திக் காத்திருக்கிறது.
தூங்க மறுத்த மீசைக் குழந்தையை மறக்கமுடியுமா என்ன !

Post a Comment