*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, March 13, 2009

ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...

பறி போகிறது எனது ஊர்.
பதைக்கிறது என் உயிர்.
பக்கத்து வீட்டில்
புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்
காமினியும்-லாலும்.

என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?

தேவதைகள் தவழ்ந்து திரிந்த
என் மண்ணில்
தீயால் எம்மைச் சுட்ட
கொள்ளிக் கட்டைகள்.
சிங்கள ஆக்கிரமிப்பின்
அவதாரங்கள்.
சகிக்கமுடியாத அசிங்கங்கள்.

முருகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குள்
புத்தர் இருந்தாராம்
நூறு வருடங்களின் முன்பே
அதுவும் மூலஸ்தானத்தில்.
கேட்பார் யாருமே இல்லை.
கதிர்காமக் கந்தனும் தொலைந்தான்.
உப்புமடப் பிள்ளையார்
கோவிலுக்குள்ளும்
புத்தன் இருப்பான் இனி.

தலைமுறை கண்ட
கோயில்களின் கதைகளையே
தலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.
சூரியனைக்கூட
எரித்துப் புதைத்து
அதன் மேல் "பன்சல"கட்டும்
பன்னாடைகள்.

புத்தன் சொன்னதில்லை
சரித்திரங்களை வைத்து
சொக்கட்டான் விளையாடு என்று.
அவன் நிலத்திலும் இல்லை.

பயணங்களின்
இலக்குகள் இடைமுறித்து
எறிந்து யாரோ
என் சிதிலங்களை
இறுக்கி மிதித்து,
அத்தனயும் தனதாக்கும்
திட்டத்தோடு
என் ஊருக்குள் சிங்களம்.

என் ஊரோடான பிணைப்பு
எளிதில் அறுக்க முடியா
தொப்பிளின் கொடி.
என் வீட்டு முகட்டுக் கூரையில்
என் ஏணைக்கயிறு.
நான் வாழ்ந்த
அத்தனை பகல்களும் இரவுகளும்
சாட்சிகளாய்.

மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!

"பன்சல"புத்தரின் கோவில்

"கோண்டாவில்"புகைப்படம் நன்றி கானா பிரபா

ஹேமா(சுவிஸ்)

72 comments:

Muniappan Pakkangal said...

Minji irukkum en uyir kondu varuven un uyir parikka-not only u,it is every one's feeling at heart.Plz wait for the time for it.

புதியவன் said...

//பறி போகிறது எனது ஊர்.
பதைக்கிறது என் உயிர்.//

ஊர் பறி போனால் எப்படி இருக்கும்...படித்தால் எங்களுக்கும் பதைக்கத்தான் செய்கிறது ஹேமா...

புதியவன் said...

//தேவதைகள் தவழ்ந்த திரிந்த
என் மண்ணில்
தீயால் எம்மைச் சுட்ட
கொள்ளிக் கட்டைகள்.//

உண்மையில் தேவதைகள் தவழ்ந்த மண் தான் அது...இப்போது துர்தேவதையின் கைகளில் அல்லவா இருக்கிறது...

ஹேமா said...

இன்று அதிசயம்தான் இன்று முதல் பின்னூடம் முனியப்பன்.ஜமால் இன்னைக்கு தவற விட்டிட்டார்.

நன்றி முனியப்பன் கருத்துக்கும்.

புதியவன் said...

//மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!//

கவிதை முழுதும் உணர்வுக் குவியல்கள்...

நட்புடன் ஜமால் said...

அட ஆமாங்க

இப்ப தான் ஸீட்டுக்கு வந்தேன்!

நட்புடன் ஜமால் said...

\\மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!\\

நிச்சியம் நடக்கும்.

நட்புடன் ஜமால் said...

ஹேமா! எத்தனை முறை பதைத்தாலும், இப்பொழுதைக்கு ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அனைவரும் இருப்பதே உண்மை.

இப்படியே எழுதுவதை நாங்கள் படித்து படித்து எங்களுக்கும் மறத்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது.

தமிழ் மதுரம் said...

என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?//

ஹேமா எல்லாம் விடை தெரியாத விசும்பல்கள்?

இதே போல் எம்மவர்கள் யாராவது ஒரு சிங்கள நண்பனின் குடிசைக்குள் சென்று ஏதாவது இடர் செய்தால் முழு உலகமும் பொங்கிக் கொண்டு ஓடி வரும்? ஏன் அவர்கள் பெரும்பான்மையின மக்கள். நாங்கள் யார்???

எமக்காக எவரும் வந்து பதிலுரைக்கப் போவதில்லை? எமக்கானதை நாமாகத் தேடிக் கொள்ளாத வரை??

ஹேமா said...

புதியவன் வாங்க,இந்தப் புகைப்படம் என் ஊரின் புகையிரத நிலையம்.இன்று இல்லை அது.தண்டவாளத்தால் நடந்து பட்டிப் பூ பிய்த்த ஞாபகம்.என் அயல் வீட்டுச் சொந்தங்களின் பெயர்களை இணைக்கும் போது அழுதே விட்டேன்.

நட்புடன் ஜமால் said...

\\என் அயல் வீட்டுச் சொந்தங்களின் பெயர்களை இணைக்கும் போது அழுதே விட்டேன்.\\

வடித்துவிடுங்கள் தங்கள் கண்ணீரை ...

தமிழ் மதுரம் said...

முருகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குள்
புத்தர் இருந்தாராம்
நூறு வருடங்களின் முன்பே
அதுவும் மூலஸ்தானத்தில்.
கேட்பார் யாருமே இல்லை.
கதிர்காமக் கந்தனும் தொலைந்தான்.
உப்புமடப் பிள்ளையார்
கோவிலுக்குள்ளும்
புத்தன் இருப்பான் இனி.//


’முந்துபவன் வெல்லுவான்’ என்பது தலைவர் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம்.

அதே போல இப்போது அவர்கள் முந்திக் கொண்டார்கள். தமிழர்களாகிய நாங்கள் எல்லா வகையிலும் பிந்திக் கொண்டோம்?
இது தான் யதார்த்தம்??


‘’தமிழர் நாங்கள் படையெடுத்தால் தடை செய்ய உலகம் ஓடி வரும்!

தமிழர் எங்கள் குடி அழிந்தால் ஏனோ உலகம் மறந்து விடும்!

இந்த வரிகள் தான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்?


என்ன செய்ய? எல்லாமே காலவோட்ட மாற்றத்தில் கரைந்து போய் விட்ட சிதிலங்களாக மாறி விட்டன.

உண்மையைச் சொன்னால் நான் என் ஊரை நினைத்தும், மக்களை நினைத்தும் அடிக்கடி அழுவேன். ஒரு சில பாடல்களைப் பார்க்கும் போது என்னையறிம்யாமலே கண்கள் கலங்கி அழுகை வரும். ஆதலால் நான் இப்பொழுது பாடல்களைப் பார்ப்பதையும் முடிந்தவரை நிறுத்திக் கொள்கிறேன்.

எங்கள் வாழ்வின் வசந்தம் துளிர்க்குமா என்பது?????

ஹேமா said...

ஜமால் வந்தாச்சா.இன்னைக்கு நீங்க லேட்.முனியப்பன் முந்திட்டார்.சரி வந்தீங்க.மனசைப் பாரமாக்கும் கவிதை.

என்ன செய்ய ஜமால் எங்ககூட உங்க உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும் உங்களால்.
எங்களுக்கும் மனப்பாரங்களைச் சொல்ல உங்களை விட்டால் வேறு யார் !

இடையில் கொஞ்சம் நிறுத்தியிருந்தேன்.என்றாலும் மீள்வுகள் மனதைக் கொல்கிறதே !

தமிழ் மதுரம் said...

ஹேமா கவிதையைப் படிக்கையில் ‘’கால நதிக் கரையில் நீள நடந்தவன் திரும்பிப் பார்க்கையில் என்ன தெரிகிறதோ அது தெரிவதனைப் போன்ற உணர்வு தான் வருகிறது?? நாம் பழசை நினைக்கையில் எமக்கு என்று இனி எதனையும் சொந்தக் கொண்டாட முடியாத வெறுமை தான் மனதிற்குத் தெரிகிறது.

என்ன செய்வோம் நாம்??


கவிதை ஊர் நினைவு சுமந்த, உணர்வுகளுக்குள் ஒளிந்துள்ள விம்பங்களின் ஆதங்கங்கள் கலந்த ஒரு மனக் குமுறல்...

என்ன செய்ய?? எங்கள் குரல் வளைகள் நசுக்கப்பட்டுள்ளதால் அவற்றைச் செவிமடுக்க இப்போது யாருமே இல்லை??


மற்றும் படி இவ் இடத்தில் எனக்கு ஒரு வசனம் தான் நினைவிற்கு வருகிறது!

‘’போய் வருக தாய் நிலமே...!

ஹேமா said...

கமல்,கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைக்கவில்லயே தவிர நிலைமை அதுதான்.யாருக்கு யார் ஆறுதல் சொலவது என்பது போல.
எழுத்துக்களிலாவது கொட்டித் தீர்ப்போம்.பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அலுப்பு வரும்தான்.ஆனாலும் பைத்தியங்களாய் புலம்புவதை நிறுத்த முடியாமல் இருக்கிறதே !

நட்புடன் ஜமால் said...

\\பைத்தியங்களாய் புலம்புவதை நிறுத்த முடியாமல் இருக்கிறதே !\\


உண்மைதான்.

- இரவீ - said...

ஹேமா,
தலைப்பே வலிக்கிறது ...
அது போதாதென்று "தீயால் எம்மைச் சுட்ட
கொள்ளிக் கட்டைகளாய்" உங்களது ஒவ்வொரு வார்த்தையும்...

//மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.//

வலியின் உச்சக்கட்டம்.

ஹேமா said...

இரவீ வாங்கோ.வலித்த வாழ்க்கைகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் ஜென்மங்களாய் ஆகிவிட்டோம்.
பலசாலி என்னதான் அநியாயம் செய்தாலும் ஜெயிச்சுக்கொண்டேதான் இருக்கிறான்.

கீழை ராஸா said...

"விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறு முறை ஒருமுறை பார்ப்போமா..?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மற்றும் ஊர்வலம் போகின்றோம்"
என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் கண்களில் நீர் கட்டும்...
உங்கள் கவிதையோ காண்போருக்கு கண்ணில் நீர் கொட்டும்...
உருக்கமான உணர்ச்சி வரிகள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

//புத்தன் சொன்னதில்லை
சரித்திரங்களை வைத்து
சொக்கட்டான் விளையாடு என்று.
அவன் நிலத்திலும் இல்லை//

உருக்கமான கவிதை தோழி.. தவறான விஷயங்களை பிடித்துக் கொண்டு ஆடுபவர்கள் மனிதர்களே அல்ல.. காலம் மாறும் என்னும் கனவோடு காத்து இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

Unknown said...

"ஏணைக் கயிறறுக்கும் ஓநாய்கள்" அருமையாக இருக்கின்றது, பாராட்டுக்கள் ஹேமா.

கருத்துக்களைப் பதிவாக்கும் போது சர்ச்சையே எஞ்சி நிற்கின்றது, இருப்பினும் ஆக்க இலக்கியங்களைப் பதிவு செய்யும் போது இனவாத, மதவாத அழுத்தங்களை தவிர்ப்பது நல்லது.

நசரேயன் said...

வருத்தத்தமா தான் இருக்கு.. ம்ம்ம் என்ன செய்ய!!!

ஆதவா said...

எனது ஊர்... எனது நாடு.
இழத்தல் என்பது எத்தனை கொடுமை..

சாதாரணமாக ஒரு கிரிக்கெட்டில் கூட நாடு தோற்பது தொண்டை அடைக்கிறது. எங்கள் ஊருக்கும் பக்கத்து ஊர்க்கும் ஒரு போட்டி நடந்தால் எங்கள் ஊர் வெற்றிபெற பிரார்த்திக்கிரேன்.... ஆனால் ஊரே இல்லை எனும் பொழுது////???

கோவில்கள் பாழடையலாம்... கோவிலைக் காட்டிலும் உயர்ந்தது பலரின் காலடியைச் சுமந்து கொண்டிருக்கும் ஊர்...

வருத்தங்களைத் தவிர, வேறேதுமில்லை என்னிடம்...

kuma36 said...

//என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?//

ஒன்றாக இருந்த ஊர் சொந்தங்களைப்பிரிவது எந்த பெரிய இழப்பு

kuma36 said...

//என் ஊரோடான பிணைப்பு
எளிதில் அறுக்க முடியா
தொப்பிளின் கொடி.
என் வீட்டு முகட்டுக் கூரையில்
என் ஏணைக்கயிறு.
நான் வாழ்ந்த
அத்தனை பகல்களும் இரவுகளும்
சாட்சிகளாய்.//

கவலைப்பட மட்டுமே முடிகின்றது எனறு வேதனை மட்டுமே !!!!!!

ஆ.ஞானசேகரன் said...

//மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!//

என்னால் படிக்க மட்டுமே முடிகின்றது. காலத்தால் நானும் சிறை வைக்கப்பட்டுள்ளேன்...

Anonymous said...

யக்கோய்.. என்னை சோகமா எழுத வேண்டாம் எண்டுட்டு.. நீங்க எப்படியாம் எழுதலாம்...
படிக்கும் போது.. ஊரின் நினைவுகள் மனசை பிசைந்த்து..

Arasi Raj said...

ஹேமா, உங்களோட கவிதைய்ம், சகோதரர் கமலின் பின்னோட்டங்களும் மனசை ரொம்ப பாரமாக்குது..

ஒப்பாரி வைக்குறோமோ இல்லியே, இந்த பதிவும் இது மாதிரி மற்ற பதிவுகளையும் படிக்கும் போது எங்கள் கண்களில் மின்னி மறையும் கண்ணீரைச் சேர்த்தால் நிச்சயம் ஒரு சாகரம் உருவாகும்...

மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வு..நம் தாய் மக்கள் படும் துன்பத்தை எழுத்துகளால் மட்டுமே பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்குறோமே என்று...

"விடிவு நமக்கும் உண்டு" .....நம்புவோம் ....நம்பிக்கை தானே வாழ்க்கை

இன்று இரவு தூங்கினால் நாளைக்கு கண் விழிப்போமா என்பது எவ்வளவு நிச்சயம்....ஆனால் அந்த நம்பிக்கையோடு தானே கண் மூடுறோம்...

"எனவே நம்புங்கள்...நல்லதே வெகு தூரமில்லை "

Anonymous said...

Hi kuzhanthainila,
Congrats!

Your story titled 'ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th March 2009 11:30:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/40484

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

வேதனையான ஒரு நிகழ்வ்! கவிதையில் தெளிவாக விளங்குகிறது..

நிதர்சன கவிதை ஹேமா

நட்புடன் ஜமால் said...

கத்தி கத்தி தொண்டையில் வற்றிவிட்டது தண்ணீர்

அழுது அழுது தட்டுபாடாயிற்று
கண்களிலும் கண்ணீர்

எழுதி எழுதி தீர்ந்துவிட்டது பேணாவில் மை

தட்டச்சி தட்டச்சி தேய்ந்துவிட்டன் விசைபலகையின் பித்தான்கள்

கல்லுக்கும் ஈரமுண்டு

கறைப்பார் கறைத்தால் கல்லும் கரையும்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

உருக்கி அடித்தால் இரும்பும் வலையும்

1 ரூபாய் சம்பளம் வாங்கி 1 கோடியில் திருமணம்

புறம்கை நக்கி தின்றுவிட்டு புறம் பேசும் கூட்டம்

அஜீரண கோலாரு ‘ஒரு நாள் உண்ணா விரதம் - ஈழத்துக்காக’

10 மாதம் மட்டுமே கருவரையில் வைத்திருந்தார் என் தாய், ஆனால் புரட்சித்தாயே நீயோ வருடகணக்கில் உன் சிறை அரைகளை கருவரையாக்கினாய்
எனக்கு நீரழிவு நோயாம் - ஈழத்துக்காகா நடைபயண யாத்திரை

இருதய வலியாம் ஆஸ்பத்திரியில் சேர்ப்பு - ஈழ மக்கள் ஈழ் நிலை கண்டு துயரம் கொண்டு நெஞ்சு வலி வந்ததே ‘ஞரே’

தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் எங்கள் மூச்சு

தமிழீழம் கதி என்னங்கடா ஆச்சு ...!

நட்புடன் ஜமால் said...

பதிவா போட்டாச்சி

S.A. நவாஸுதீன் said...

சுகம் இழந்து, சொந்தம் இழந்து, சொத்து இழந்து சொந்த மண்ணில் அந்நியனாய், உயிரையும் இழந்து கொண்டிருக்கும் என் ஈழ மக்களுக்கு என்று பிறக்கும் விடுதலைக் குழந்தை

பூங்குழலி said...

நான் வாழ்ந்த
அத்தனை பகல்களும் இரவுகளும்
சாட்சிகளாய்.

மனம் வலிக்கச் செய்யும் கவிதை ..தொலைந்த முகங்களை தேடும் வரிகள் கண்ணீரை வரவழைத்தது .

ஹேமா said...

நன்றி கீழை ராஸா.உங்கள் பாடல் வரிகள்-பாடல் புதிதாய் வந்த காலத்தில் கேட்டு அழுதே இருக்கிறேன்.

ஹேமா said...

//கார்த்திகைப் பாண்டியன்...
உருக்கமான கவிதை தோழி.. தவறான விஷயங்களை பிடித்துக் கொண்டு ஆடுபவர்கள் மனிதர்களே அல்ல.. காலம் மாறும் என்னும் கனவோடு காத்து இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?//

காத்திருப்பின் எல்லை தாண்டிய நிலைதான் இப்போ.இனி என்ன என்பதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.

ஹேமா said...

//ஈழவன்...கருத்துக்களைப் பதிவாக்கும் போது சர்ச்சையே எஞ்சி நிற்கின்றது, இருப்பினும் ஆக்க இலக்கியங்களைப் பதிவு செய்யும் போது இனவாத, மதவாத அழுத்தங்களை தவிர்ப்பது நல்லது.//

நன்றி ஈழவன்.உங்கள் மன எண்ணம் விளங்குது.என்றாலும் அவஸதிப்படுகிறோமே.யாரைக் குறை சொல்ல ஈழவன்.நடந்து முடிந்த விஷயங்களை வைத்துக்கொண்டு இன்று பிஞ்சுக்குழந்தைகளா தண்டனை அனுபவிப்பது.அப்போ நான் யாரைத் திட்ட?

ஹேமா said...

நன்றி நசரேயன் எம்மோடு கை கோர்த்துக் கொண்டமைக்கு.

ஹேமா said...

//ஆதவா...கோவில்கள் பாழடையலாம்...கோவிலைக் காட்டிலும் உயர்ந்தது பலரின் காலடியைச் சுமந்து கொண்டிருக்கும் ஊர்...//

ஆதவா,நான் 2003 ஊருக்குப் போனபோது நின்ற இரு வாரங்களும் என் மண்ணில் என் கால் பட்டு நடக்கவே வேண்டும் என்று சாதாரணமாகப் போய் வரும் இடங்களுக்கு நடந்தே போய் வந்தேன்.இன்றைய சூழ்நிலையில் என் ஊர் பெயர் மாற்றப்பட்டு சிங்கள ஆக்கிரமிப்பில் வருமேயானால் நிச்சயம் இனி நான் என் ஊருக்குப் போகவே மாட்டேன்.அதைவிட சுவிஸ் ல் இருக்கலாம்.

ஹேமா said...

கலை,இன்னும் செய்திகள் அமைதியாக இல்லை.
என்ன செய்யப் போகிறோம்...!

ஹேமா said...

//ஆ.ஞானசேகரன் என்னால் படிக்க மட்டுமே முடிகின்றது. காலத்தால் நானும் சிறை வைக்கப்பட்டுள்ளேன்...//

சிறை ஞாயமாக இருந்தால் இருந்தேதான் ஆகவேணும்.இல்லாத வேளையில்...இன்றி என் ஊரில் குண்டு விழுந்து இறக்கும் 3 மாதப் பாலகன் என்ன தவறு செய்திருக்கும்.ஏன் சிறை..?

ஹேமா said...

கவின் ஊரை எம் மக்களை நினைச்சால் சந்தோஷமாக எழுத எதுவும் இல்லையே.கொஞ்ச நாள் எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன்.முடியவில்லையே !

ஹேமா said...

நிலா அம்மா,நம்பி நம்பியே காலம் கடக்கிறதே தவிர,அங்கு பட்டினியால் நோயால் இறக்கும் எம்மவரைப் பற்றி யோசிக்கக்கூட யாருமே இல்லாத நிலை இப்போ.

ஹேமா said...

ஷி-நிசி வாங்க.நிதர்சன உண்மைகள் என்கிறபடியால்தான் வலி அதிகம்.

ஹேமா said...

ஜமால்,அருமையான பதிவு நக்கலும் நளினமுமாய்.
யாராவது யோசிப்பார்களா?

Anonymous said...

துயரம் தான்.

ஹேமா said...

//Syed Ahamed Navasudeen said...
சுகம் இழந்து, சொந்தம் இழந்து, சொத்து இழந்து சொந்த மண்ணில் அந்நியனாய், உயிரையும் இழந்து கொண்டிருக்கும் என் ஈழ மக்களுக்கு என்று பிறக்கும் விடுதலைக் குழந்தை//

என் ஈழ மக்களுக்கு என்று பிறக்கும் விடுதலைக் குழந்தை...?

நட்புடன் ஜமால் said...

யோசிப்பவர்களா!

ஓட்டுக்காக யாசிப்பவர்கள் வேண்டுமானால் இருக்கிறார்கள்

ஹேமா said...

பூங்குழலி வாங்க.மனசுக்குச் சங்கடமான சூழ்நிலையில்தான் உங்களைச் சந்திக்கிறேன்.இனி அடிக்கடி வாங்க.உங்கள் ஆறுதலான வார்த்தைகள்கூட ஒரு அமைதிதான்.

Anonymous said...

me the 50

ஹேமா said...

ஆனந்து.....!

தமிழ் said...

/பறி போகிறது எனது ஊர்.
பதைக்கிறது என் உயிர்.
பக்கத்து வீட்டில்
புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்
காமினியும்-லாலும்.

என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?/

படிக்க படிக்க வலிக்கிறது
பயணத்தின் முடிவு தெரியாமல்

ஹேமா said...

நன்றி திகழ்.பயணித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.பாதை தெளிவில்லை.
பயணத்தில் குறிகோளும் இல்லை.

Anonymous said...

என்ன ஆளே காணும். உடம்பு சரியில்லையா சகோதிரி?

கும்மாச்சி said...

கவிதை ஈழத்தமிழர்களின் வழியை பிரதிபலிக்கிறது. கதிர்காமன் கந்தனும் தொலைந்தான், வேதனை.

Anonymous said...

ஹேமா....அழ வைக்குறீங்க அடிக்கடி...

ஹேமா said...

நன்றி ஆனந்த்.கொஞ்சம் வேலை.நேரம் என்னைக் கடந்து ஓடியபடி.அதுதான்.

நாளை "உப்புமடச் சந்தியில் கேள்விக்கு என்ன பதில்."

ஹேமா said...

வணக்கம் கும்மாஞ்சி.எங்கள் ஊர்ப் பெயர் மாதிரி இருக்கே.முதல் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.அடிக்கடி வரணும்.

ஹேமா said...

மது சுகமா?வேற என்ன செய்ய முடியும் மது.மனப்பாரம் கொஞ்சம் கண்ணீரில் கரையட்டும் அதுதான் இந்த யுக்தி.

மேவி... said...

"பறி போகிறது எனது ஊர்.
பதைக்கிறது என் உயிர்.
பக்கத்து வீட்டில்
புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்
காமினியும்-லாலும்.

என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?"

என் செய்வதுங்க .....
களவு போன சோகம் இருக்கே ...
பெரிய கொடுமை தான்

"தேவதைகள் தவழ்ந்து திரிந்த
என் மண்ணில்
தீயால் எம்மைச் சுட்ட
கொள்ளிக் கட்டைகள்.
சிங்கள ஆக்கிரமிப்பின்
அவதாரங்கள்.
சகிக்கமுடியாத அசிங்கங்கள்."

படை மக்கள் அவர்கள் செய்வது அசிங்கம் என்று தெரிந்தாலும் ....
அவர்கள் எல்லாம் கைபாவைகளே

"முருகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குள்
புத்தர் இருந்தாராம்
நூறு வருடங்களின் முன்பே
அதுவும் மூலஸ்தானத்தில்.
கேட்பார் யாருமே இல்லை.
கதிர்காமக் கந்தனும் தொலைந்தான்.
உப்புமடப் பிள்ளையார்
புத்தன் இருப்பான் இனி."

அடக்கு முறை செல்லாது ......
மனிதனுக்கு மாதம் பிடிக்கலாம்
அனால் மதம் தான் பிடிக்க கூடாது

"தலைமுறை கண்ட
கோயில்களின் கதைகளையே
தலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.
சூரியனைக்கூட
எரித்துப் புதைத்து
அதன் மேல் "பன்சல"கட்டும்
பன்னாடைகள்."

என்ன செய்ய ...
அதை தடுக்கும் வலிமை நாமிடம் இல்லையே

"புத்தன் சொன்னதில்லை
சரித்திரங்களை வைத்து
சொக்கட்டான் விளையாடு என்று.
அவன் நிலத்திலும் இல்லை."

ஆமாங்க .....அவர் பெயரால் இவர்கள் செய்வது அவருக்கு இழுக்கு தான்

"பயணங்களின்
இலக்குகள் இடைமுறித்து
எறிந்து யாரோ
என் சிதிலங்களை
இறுக்கி மிதித்து,
அத்தனயும் தனதாக்கும்
திட்டத்தோடு
என் ஊருக்குள் சிங்களம்."

தான் நாட்டு மக்களை கொலை செய்வது இந்த அரசு தான்

"என் ஊரோடான பிணைப்பு
எளிதில் அறுக்க முடியா
தொப்பிளின் கொடி.
என் வீட்டு முகட்டுக் கூரையில்
என் ஏணைக்கயிறு.
நான் வாழ்ந்த
அத்தனை பகல்களும் இரவுகளும்
சாட்சிகளாய்."

இருத்தாலும் அவர்கள் இந்த சாட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளாய் பார்கிறார்கள்...

"மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!"

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மேவி... said...

me th 60th

மேவி... said...

மனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாளம் படுத்தி கொண்டிர்களோ ஹேம(இலங்கை) என்று போட்டமால்

ஹேமா said...

மேவி 60 ல் உங்கள் நீண்ட மனம் பதித்த கருத்துக்கு நன்றி.உங்கள் மனங்களிலும் அதே வேகம்.செய்ய இயலாத நிலைமை.

//MayVee said...
மனம் வருத்தியதால் தான் நீங்கள் ஹேமா(சுவிஸ்) அடையாளம் படுத்தி கொண்டிர்களோ ஹேம(இலங்கை) என்று போட்டமால்//

எனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ போல ஒரு வெறுப்பு.ஆனாலும் அங்குதானே பிறந்தோம்.என்ன செய்யலாம் !

மேவி... said...

"ஹேமா said...
எனக்கு இலங்கை என்று சொல்லும்போதே ஏதோ போல ஒரு வெறுப்பு.ஆனாலும் அங்குதானே பிறந்தோம்.என்ன செய்யலாம் !"


naan
mayvee(nagamani hospital) nnu

pottukalamnnu parkkiren....

neengalum athai try pannalame

ஹேமா said...

மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா?

அது முந்தி ரேடியோவுக்கு பதிவுகள் எழுதுறப்போ இன்னொரு ஹேமா இருந்தாங்க.அப்ப் தொடக்கம் சுவிஸ் எனக்கே தெரியாம ஒட்டிக்கிச்சு.என்ன செய்யலாம் இப்போ !

மேவி... said...

"ஹேமா said...
மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா?"
போடுங்க ......
ஆனால் ஒரேயொரு பதிவில் மட்டும் ஹேமா(இலங்கை) என்று போட்டு இலங்கையில் இருக்கும் நாம் உடைய brothers and sisters காக ஆறுதலாய் ஒரு கவிதை எழுதுங்க ...........

"அது முந்தி ரேடியோவுக்கு பதிவுகள் எழுதுறப்போ இன்னொரு ஹேமா இருந்தாங்க.அப்ப் தொடக்கம் சுவிஸ் எனக்கே தெரியாம ஒட்டிக்கிச்சு.என்ன செய்யலாம் இப்போ !".
ஒன்னும் செய்ய முடியாதுங்க .....
இந்த பெயர் உங்க அடையாளமாக ஆகி விட்டது .....

ஹேமா said...

//மேவி...
"ஹேமா said...
மேவி, இப்போ என்ன சொல்ல வாறீங்க.சுவிஸ்ன்னு போட வேணாமா?"போடுங்க ......
ஆனால் ஒரேயொரு பதிவில் மட்டும் ஹேமா(இலங்கை) என்று போட்டு இலங்கையில் இருக்கும் நாம் உடைய brothers and sisters காக ஆறுதலாய் ஒரு கவிதை எழுதுங்க .......//

மேவி என் ஈழச் சகோதரர்களுக்காக எழுதுவேன்.எழுதியிருக்கேன்.ஏன் நிறைய எழுதியிருக்கேனே.அவர்களின் கனவில்தானே எம் வாழ்வு...!

NILAMUKILAN said...

//மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!
//
ஐயோ வன்முறை வேண்டாம்.
விடிவு வரும் காத்திருங்கள்.

ஹேமா said...

முகிலன் வேறு வழி தெரியவில்லையே.
ஆயுதம் எடுக்கத் தூண்டுபவர்கள் எங்கள் எதிரில் நிற்பவர்கள்தானே..!

மேவி... said...

நான் சொல்ல்வது ஹேமா(இலங்கை) ன்னு போட்டு ஒரு கவிதை .......

அதை படித்து விட்டு கஷ்டத்தில் இருக்கும் அவர்கள் அதை மறந்து சிரிக்க வேண்டும் .........
நகைச்சுவையாக இருக்க வேண்டும்

மேவி... said...

"நிலா முகிலன் said...
ஐயோ வன்முறை வேண்டாம்.
விடிவு வரும் காத்திருங்கள்."

முகிலன் நீங்க சொல்லுற மாதிரி காத்து கொண்டு இருந்தால் ......
விடிவு வந்தால் அதை அனுப்பவிக்க யாரும் இருக்க வாய்ப்பு இல்லை .....

VASAVAN said...

//மழைக்காகத் தலை சாய்க்கும் புற்கள் கூட
மழை முடிய முடி தூக்கும்.//

ம்ம் அருமை.

Post a Comment