*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 23, 2008

அவலம்...

மானுடம் மரித்து
மீண்டும்...
மரம் தாவுவதாய் ஒரு பதட்டம்.
நாகரீகம் எல்லை தாண்ட
யுகங்கள் கோடி தொட்டுஇ
நெருப்புத் துண்டங்களை
தன்னுள் புதைத்துக் கொண்டு
காற்றிலே சாவரி செய்பவனாய்.

முகப்புண்ணை
கைத்தடியால் விறாண்டியபடி
சீழ் வடிய வடிய.
மறந்தே போயிற்று அவனுக்கு
தாலாட்டுப் பாடலும்
அவன் வளர்ந்த திசையும்.

கூடு கட்டிப் புளு வளர்த்து
சிறகு முளைத்த சித்திரவதைகள்
தவற விட்ட கணங்கள்
புரியாத தவிப்புக்கள்.

தேவை என்பதற்காய்
மூன்றாவது காலும்!
தேவையில்லை என்பதற்காய்
சில சமயம்
காலே இல்லாமலும்!

சொர்க்கமோ...நரகமோ
வேண்டும் என்றாகிவிட்டால்
தலை கீழாகவோ
முட்டி மோதியோ
அடுத்தவனை வீழ்த்தியோ
சுதந்திரம் தரிசிப்பவனாய்.

காலம் தாழ்த்திய குரலில்
பணிவாய்...
கேட்டதெல்லாம் செய்வேன்
என்று சத்தியம் செய்தால்
நிர்வாணமே மிஞ்சுவதாய்.

வானரக் கொடியில் காய்ந்து
மனிதனாய் உலர்ந்த பின்னும்
பரம்பரை மறக்காமல்
செயல்களில்
சாயலாய் தனைக்காட்டி.

திசைகளைத் தவறவிட்டு
தொலைவு நீள
முழு நிர்வாணத்தோடு
கூச்சம் சிறிதுமற்றவனாய்.

முற்றுப்புள்ளி திட்டுமென்று
வெற்றுக் கடதாசி எங்கும்
கீறியும் எழுதியும்இ
தொடரும் என்பதால்
வெல்லவே முடியாது
சில நிரந்தரங்களை.

காற்றும் புயலும்
சுறாவளியும் வருமுன்
இறுக சாரளங்களைச்
சாத்திக்கொளவதே நல்லது.
மீண்டும் குரங்காக மாறி
மனிதனை இம்சிக்க முன்.

ஏனென்றால்...
சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது!!!

ஹேமா(சுவிஸ்)

28 comments:

தமிழ் said...

/ஏனென்றால்...
சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது!!!/

சரியாக சொன்னீர்கள்

தங்கள்
நலமா

புதியவன் said...

//முற்றுப்புள்ளி திட்டுமென்று
வெற்றுக் கடதாசி எங்கும்
கீறியும் எழுதியும்,
தொடரும் என்பதால்
வெல்லவே முடியாது
சில நிரந்தரங்களை. //

ரொம்ப உணர்வுப் பூர்வமாக இருக்கு...
கவிதை நல்லா இருக்கு...

//சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது!!!//

உண்மை...உண்மை...

பூச்சிபாண்டி said...

முதலில் என்னக்கு புரிதலில் சற்று கடினமாக இருந்தது .

பின்னர் இரண்டுமுறை படித்த பின்னர் புரிந்தது இவ்வுலகின்நிலை இந்த ஹேமாவின் அருமையான வரிகளின் வேண்டுகோளுடன் .

- இரவீ - said...

ஹேமா,
வார்த்தையில் வலி, அதையும் தாண்டி வைராக்கியம்...
//வானரக் கொடியில் காய்ந்து
மனிதனாய் உலர்ந்த பின்னும்
பரம்பரை மறக்காமல்
செயல்களில்
சாயலாய் தனைக்காட்டி//
இந்த வரிகள் - பல சிந்தனைகளை சுழற்றி விடுகிறது...

அது சரி, உங்க பூர்வஜென்ம பெயர் என்ன 'ஜான்சிராணியா'?.

தமிழ் மதுரம் said...

காற்றும் புயலும்
சுறாவளியும் வருமுன்
இறுக சாரளங்களைச்
சாத்திக்கொளவதே நல்லது.
மீண்டும் குரங்காக மாறி
மனிதனை இம்சிக்க முன்.//


ஹேமா ம்.....அருமை...தொடருங்கள்.... நீங்கள் என்னவோ எங்கட புலம்பெயர் தமிழர்களையும் கவிதைக்குள் உள்ளடக்கியிருப்பதாகப் புரிகிறது... பூடகமாக இரு பொருள் சொல்கிறீர்கள்...

நட்புடன் ஜமால் said...

\\ஏனென்றால்...
சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது!!!\\

இது மிக அருமை.

நான் இன்னும் நம்பி கொண்டிருக்கும் விடயம்.

காரூரன் said...

அவலம் ஆதரவு இல்லாதோர் நிலை.
அகிலமும் வாழ்ந்திடும் எம்மோர்
புலம்பாமல் புத்துணர்வாய்
பலம் சேர்த்திட்டால்
காலம் எங்களுக்கு கனிந்து விடும்.

மனிதம் வாழுகின்றது ஹேமா, இடைக்கிடை உலுப்பி விடவேண்டும். அதெப்படி கவி மழையாய் கொட்டுகிறீர்கள்.
கல்லூரி நாட்களில் கசக்கி எறிந்த கடதாசிகள் அதிகம் போலும். சுனாமி நினவுக்காலம், சுனாமியை பற்றி ஒரு கவிதை தாருங்கள். நாம் தவழ்கின்றோம் இப்போது, நம் காலில் நிற்கும் காலத்தில் நாமும் கவி தருகின்றோம்.

Anonymous said...

ஏனென்றால்...
சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது
//
இந்த நம்பிக்கையில் தான் வாழ்க்கை வட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதனால் இந்த கூற்று உண்மை.

Anonymous said...

\\காற்றும் புயலும்
சுறாவளியும் வருமுன்
இறுக சாரளங்களைச்
சாத்திக்கொளவதே நல்லது.
மீண்டும் குரங்காக மாறி
மனிதனை இம்சிக்க முன்.\\
பயமாகத்தானிருக்கு மீண்டும் மரம் தாவுவதால்

ஹேமா said...

திகழ் நான் மிகவும் நலம்.மனிதம் மருகி வருவதால் ஒரு பயம்.
அதுதான்.நன்றி வந்தமைக்கு.

ஹேமா said...

புதியவன் வாங்கோ.மனிதம் மலிந்த உலகத்தில்தானே வாழ்கிறோம்.
உணர்வுகள் சொல்லியா வரவேணும்.நன்றி.வாங்கோ.

ஹேமா said...

பூச்சிபாண்டி வாங்க.சிலசமயங்களில் என் கவிதைகள் எனக்கே என் உணர்வுகளைத் தாண்டி இருக்கும்.
புரிவதில்லை.அதைச் சரிப்படுத்திக் கொள்வேன்.நானே,நான் சொல்லி
யிருக்கும் விதம் சரியா என்று நினைக்கிற சமயங்கள்கூட உண்டு.

ஹேமா said...

இரவீ,பாத்தீங்களோ...உண்மையைச் சொன்னா இப்பத்தான் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறீங்க.சரி..சரி.

அதென்ன என் பூர்வ ஜென்மம்.உங்கட பூர்வ ஜென்மம் கண்டு பிடிச்சாச்சு.
அதால எங்கட பூர்வ ஜென்மத்தையும் கண்டு பிடிக்க ஆசையோ!

ஹேமா said...

கமல் எங்க சுத்தியும் எங்கப்பர் வீட்டுக்குள்ளதான் நாங்கள்.எதை எழுதவோ...கதைக்கவோ போனாலும் அந்த வலியின் உணர்வைத் தட்டாமல் போனதில்லை.என்ன செய்ய.எங்கள் தலைவிதியின் கோடுகள் மாற்றப்படும்வரை!

ஹேமா said...

ஜமால் சுகம்தானே!நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிற தத்துவத்தில்தான் எம் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது.நம்புவோம்.
நம்பினார் கை விடப்படுவது
இல்லைதானே!

ஹேமா said...

காரூரன்,என்னால் புலம்ப மட்டுமே முடிகிறது.புலம்பலும் சில
சமயங்களில் யார் காதிலாவது மாட்டும்.வேறு மாற்று வழிப் பலம் எதுவும் என்னிடம் கிடையாது.
அதுதான் இதன் வழி நான்.

ஓ... படிக்கும் காலங்களில் எழுதிக் கிழித்தவைகள் ஏராளம்.இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றும் உதவும் சிலசமயம்.நீங்களும் அருமையாக எழுதுகிறீர்களே.பிறகென்ன!

ஹேமா said...

ஆனந்த்,நீங்க இன்னும் இந்தக் கவிதையைக் கவனித்திருக்கலாமே.

ஹேமா said...

கவின்,கவனமாக இருப்பது நல்லது எம்மைப் பொறுத்தமட்டில்.பயம் வேண்டாம்.நன்றி.

Anonymous said...

\\\கவின்,கவனமாக இருப்பது நல்லது எம்மைப் பொறுத்தமட்டில்.பயம் வேண்டாம்.நன்றி.\\
அறிவுறுத்தலுக்கு ரொம்ப நண்றிங்க

நட்புடன் ஜமால் said...

\ஹேமா said...

ஜமால் சுகம்தானே!நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிற தத்துவத்தில்தான் எம் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது.நம்புவோம்.
நம்பினார் கை விடப்படுவது
இல்லைதானே!\\

மிகச்சரியே.

மே. இசக்கிமுத்து said...

திரும்ப திரும்ப படிக்க வைத்து விட்டீர்கள்! திரும்ப திரும்ப படித்த பிறகு தான் கவித்தும் வாய்ந்த உணர்வுகளை உணரமுடிந்தது!!!!

Poornima Saravana kumar said...

//முகப்புண்ணை
கைத்தடியால் விறாண்டியபடி
சீழ் வடிய வடிய.
மறந்தே போயிற்று அவனுக்கு
தாலாட்டுப் பாடலும்
அவன் வளர்ந்த திசையும்.
//

அர்த்தம் நிறைந்த அழகான வரிகள் ஹேமா!!

Poornima Saravana kumar said...

தலைப்பிலேயே அனைத்தையும் அடக்கிட்டிங்க !!

Poornima Saravana kumar said...

ஆமாம் உங்களவர் ஏதும் வாய் திறந்து கூறினாரா?

- இரவீ - said...

ஹேமா,
என்ன கோபம், எதற்கு கோபம் ??? ஏன் இப்படி...
இத தான் 'தூக்கி தொப்புன்னு' போடுறதா சொல்லுவாங்களோ !!!
சரி - சரி,
நன்றிமிக்க என்னுடைய போனஜென்மத்தை கண்டறிந்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

ஹேமா said...

வாங்க இசக்கிமுத்து.ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்தப்பக்கம்.
சுகம்தானே!கவிதை புரிந்து கருத்தும் சொன்னதுக்கு நன்றி.

ஹேமா said...

பூர்ணிமா வாங்க,வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க.அவர் பேசினா நான் ஏன் புலம்புறேன்.நன்றி கவிதைக் கருத்துக்கு.

விச்சு said...

இந்தக்கவிதையை நாலைந்து தடவை வாசித்திருப்பேன்.

Post a Comment