*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 28, 2008

அவசரம்...

சிந்தனைகள் நொண்டியடிக்க
யோசிக்கக்கூட
நொடிகள் இல்லாமல்
இன்று வாழ்வு வேகமாய்
விருவிருவென்று.

புதிய புதிய யுக்திகளுடனும்
கண்டுபிடிப்புகளுடனும்
அழிக்க ஒரு கும்பலும்
ஆக்க ஒரு கும்பலுமாய்.
கடவுளை வேண்டித்
தேடிய பயணம்
மிக விரைவாய்
விஞ்ஞானம் தேடியபடி.

சூரியனை வணங்கிப்
பணிந்த மானிடன்
விஞ்ஞானம் அறிந்தவனாய்.
நிலவில் காண்கின்றான்
நீர்க் குன்றாம்
அழகிய குமரிப்பெண்ணாம்.

எதிர்காலத்தில்
அகதிப் பதிவும் கூட
வரலாம் அங்கு.
கைத்தொலை பேசியிலும்
கணணியிலும்
வைரஸ்...கரப்பான் பூச்சியாம்.

நெடுவானிலும் ஆழ்கடலிலும்
துளை போட்டு
அவசர அவசரமாய்
விஞ்ஞான விருத்தி.
மூளை விருத்தியடைய அடைய
மனிதம் செத்தபடி.

என்றோ...
அஞ்ஞானம் சொன்னதையே
சொல்கிறது விஞ்ஞானம்
புதுமையல்ல எதுவும்.
ஞானிகளும்... தெய்வங்களும்
சித்தர்களும்... சரித்திரங்களும்
சொல்லாததையா இப்போ.

அவசர உலகில்
ஆழ்தளம் அறிவது
அழிவை நோக்கியா?
மனிதமும் சத்தியமும்
அழிந்து மெலிந்து
மருந்துக்கும் மறந்த
துர்ப்பாக்கிய உலகம்
இன்னும் இன்னும்
ஏன் அவசர அவசரமாய்!!!

ஹேமா(சுவிஸ்)

13 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு .
( ஆனால் இந்த உலகம் எதையோ நோக்கி போய் கொண்டு தான் இருக்கிறது ... அது நிச்சயமாய் அழிவை நோக்கி தான் என்பது என் கருத்து )

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்பொழுது என் தளத்தில் உங்களால் பின்னூட்டம் இட முடியும் என்று நம்புகிறேன் ..

நீங்கள் பதிவின் கீழேயே பின்னூட்டம் இட முடியும்..

( என்னுடைய வலையிலும் மற்றும் சுபாஷ் வலையிலும் இந்த முறை தான் உள்ளது.. )

Unknown said...

//அவசர உலகில்
ஆழ்தளம் அறிவது
அழிவை நோக்கியா?
மனிதமும் சத்தியமும்
அழிந்து மெலிந்து
மருந்துக்கும் மறந்த
துர்ப்பாக்கிய உலகம்
இன்னும் இன்னும்
ஏன் அவசர அவசரமாய்!!!// பிடித்தமான வரிகள் பாராட்டுக்கள் ஹேமா.

Anonymous said...

வணக்கம் ஹேமா அக்கா........
சும்மா நச்சுனு இருக்கு.

thamizhparavai said...

'அவசரம்' கவிதை நல்ல நிதானமான,நிதர்சனமான ஒன்றாக எழுதி உள்ளீர்கள் ஹேமா...
//மூளை விருத்தியடைய அடைய
மனிதம் செத்தபடி.//
சரியாகச் சொன்னீர்கள்.
கண்பட்டையும், கடிவாளமுமற்ற விஞ்ஞானக் குதிரையின் காட்டுப்பாய்ச்சலில் சிக்கியும்,சிக்காமலும் மனிதப்புற்கள்.
புகைப்படம் அருமை.எங்கிருந்து எடுக்கிறீர்கள் ஹேமா

தனிமதி.. said...

கவிதை அருமை..
வாழ்த்துக்கள் ஹேமா...

ஹேமா said...

நன்றி உருப்படாதவன். கவிதையின் கருவைச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.கருத்துக்கு நன்றி.

என் கணணி உங்கள் தளத்திற்கு பின்னூட்டம் இட ஒத்துளைக்க மாட்டேன் என்கிறது.நான் என்ன செய்ய?

ஹேமா said...

நன்றி ஈழவன்.உங்களுக்கு எங்களுக்குப் பிடித்த வரிகள் கவிதைக்குள்.

ஹேமா said...

வாங்கோ ஜெயா.உங்கள் பதிலும் "நச்".

ஹேமா said...

//கண்பட்டையும், கடிவாளமுமற்ற விஞ்ஞானக் குதிரையின் காட்டுப்பாய்ச்சலில் சிக்கியும்,சிக்காமலும் மனிதப்புற்கள்.//

தமிழ்பறவை அண்ணா கருதுக் கூட கவிநடையில்.அருமையான வரிகள் தந்திருக்கிறீர்கள்.எங்காவது ஒரு கவிதையில் சேர்துக்கொள்வேன்.
படங்கள் வலைப்பதிவுகளுக்குள்தான் தேடி எடுத்துக் கொள்கிறேன்.எனக்கும் அந்தப் படம் கவிதையோடு இணந்து பிடித்திருக்கிறது.

ஹேமா said...

"மதியின் மன வானில்"புதிய வருகைக்கும் கருத்தும் நன்றி.உங்கள் தளம் உலாவ வருவேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//அவசர உலகில்
ஆழ்தளம் அறிவது
அழிவை நோக்கியா?
மனிதமும் சத்தியமும்
அழிந்து மெலிந்து
மருந்துக்கும் மறந்த
துர்ப்பாக்கிய உலகம்
இன்னும் இன்னும்
ஏன் அவசர அவசரமாய்!!!//

அழகான வரிகள் ஹேமா.

Vishnu... said...

அவசர உலகில்
ஆழ்தளம் அறிவது
அழிவை நோக்கியா?
மனிதமும் சத்தியமும்
அழிந்து மெலிந்து
மருந்துக்கும் மறந்த
துர்ப்பாக்கிய உலகம்
இன்னும் இன்னும்
ஏன் அவசர அவசரமாய்!!!


நல்ல கவிதை ...

மனிதற்கான கண்டுபிடிப்புகள் பல மனிதத்தை தொலைத்துவிட்டு ..

நல்ல கவிதை ஹேமா ...

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு

Post a Comment