*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, September 14, 2008

தொடரும்...

வானம் உடைந்ததாய்
ஒரு கனவு.
கலைந்த கனவோடு
மீண்டும் ஒரு நிமிடம்
படுக்கையோடு போராடி
கனவுக் கருவுக்குள்
இருளும் ஒளியுமாய்
பல முகங்கள்.

புன்னகை நிரவி
அழுகை துடைத்து
அடம் பிடிக்க
அமளி துமளியாய்
அடங்கும்
ஆணவ இரகசியங்கள்.

அடிமைப்பட்ட விலங்குகளின்
சத்தங்கள் இன்னும் செவிப்பறையில்
வலி கொண்டதாய்
அந்த வாசகம்.
வெளிச்சம் காணா
மஞ்சள் புற்களின் ஏக்கம் போல

வெளிறிய மனங்களாய்.
காலை மாலை ஊர்ந்து
கசிந்து பரவும் ஒளி பட்டுக்
கண்கள் வெட்கப்பட
இருந்தும் மறைந்தும்
இருந்தும் மறைந்தும்
மறைவாய் இருக்கும் அது.

மீண்டும் முயற்சி
சிறு தூக்கத்திற்காய்.
மறுப்பது கண்களா....மனமா!
குழந்தையின் பிடிச்சிராவித்தனமாய்
சீ....போ....

பொழுதை விரிக்கும்
பகலைப் பிடிக்க
இரவுப் படுக்கையை
மூலையில் நிறுத்தி
இன்றைய அலுவல்களையும்
சேர்த்து எடுத்துகொண்டு
நேற்றைய மிச்சத்திலிருந்தே
தொடங்கும் இன்றைய பயணம்!!!

ஹேமா(சுவிஸ்)

13 comments:

Unknown said...

விடியலும் பொழுது படுதலும்
எம்முடன் இணைந்து
வாழ்க்கையை நடத்துபவை!

//அடிமைப்பட்ட விலங்குகளின்
சத்தங்கள் இன்னும் செவிப்பறையில்
வலி கொண்டதாய்
அந்த வாசகம்.
வெளிச்சம் காணா
மஞ்சள் புற்களின் ஏக்கம் போல
வெளிறிய மனங்களாய்//

தமிழன் said...

புரிந்து கொள்ள ரொம்ப கடினமாக உள்ளது.

thamizhparavai said...

'தொடரும்' ...நல்ல முயற்சி...
கனவின் நீட்சிகளாய் காலைகளும்,வேலையின் அயற்சிகளாய் மாலைகளும் என்றென்றும் தொடரும்...கூடவே ஹேமாவின் கவிமனமும் பின் தொடரும்...

NILAMUKILAN said...

நிகழ்கால இயந்திர வாழ்கையில் தொலைந்து போகும் தூக்கங்கள் பற்றி சொல்லும் அருமை கவிதை.

ஹேமா said...

எங்கள் பொழுதுகள் விடிந்தாலும் வலியோடும் புண்களோடும்தானே !என்றாலும் எங்கள் பயணங்கள் தொடரும்.நன்றி களத்துமேடு.

ஹேமா said...

திலீபன் உண்மைதான் இந்தக் கவிதை எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லைதான்.நான் அண்ணா இறந்ததை வைத்துக்கொண்டு மனம் எதிலும் ஈடுபட முடியாமல் இருந்ததால் "சரி அவர் போய்விட்டார்.என்றாலும் எங்கள் வாழ்வு தொடரத்தானே வேணும்"என்றுதான் எழுதத் தொடங்கினேண்.அது இறுதியில் ஒவ்வொரு கருத்தைத் தருகிறதே!

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா எங்கே காணோம் இந்தப் பக்கம்?கணணி குழப்பமா?நானும் எழுதிக் குழப்ப நீங்களும் முயற்சி என்று என்னமோ குழப்பித் தொடரும் என்றிருக்கிறீர்கள்.
நன்றி.

ஹேமா said...

நன்றி முகிலன்.உங்கள் மனதில் தொலைகின்ற தூக்கங்களைக் கருவாகக் கொண்டு இக்கவிதை தெரிகிறதோ!

Anonymous said...

//வெளிச்சம் காணா
மஞ்சள் புற்களின் ஏக்கம் போல
வெளிறிய மனங்களாய்.
காலை மாலை ஊர்ந்து
கசிந்து பரவும் ஒளி பட்டுக்
கண்கள் வெட்கப்பட
இருந்தும் மறைந்தும்
இருந்தும் மறைந்தும்
மறைவாய் இருக்கும் அது//

அற்புதமான வரிகள் சகோதரி...

thamizhparavai said...

இல்லை சகோதரி நான் வந்து கொண்டுதானிருக்கிறேன்..என்ன அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது...அலுவலக வேலைகள் கொஞ்சம் அதிகமாகி விட்டதால் வீட்டிலேயும் அதையே பார்க்க வேண்டி இருக்கிறது. ப்ளாக் பக்கம் வந்தால் இரண்டு மூன்று மணி நேரமாகி விடுகிறது. ஆதலால் ரெகுலராக செல்லும் ஒரு சில பக்கங்களுக்கு மட்டும் இப்போது சென்று விடுகிறேன். எல்லாம் படித்து , எனக்குப் புரிந்தால் மட்டும் கமெண்ட்டுவதால் நேரம் அதிகமாகி விடுகிறது.
கணிணிக் குழப்பம் தற்போது ஓரளவு தீர்ந்து விட்டது. பார்மேட் பண்ணி விட்டேன்.(பாடல்களைத்தான் பாதுகாக்க முடியவில்லை).
//நானும் எழுதிக் குழப்ப நீங்களும் முயற்சி என்று என்னமோ குழப்பித் தொடரும் //
நான் ஒன்றும் குழப்பவில்லை.. தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.
கனவுக் குழப்பங்களை வரியில் வடிப்பதில் இக்கவிதை நல்ல முயற்சி என்றேன்.(சிறந்த கவிதை என்றோ, நல்லாயில்லை என்றோ சொல்லவில்லை) அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக எனக்குத் தோன்றியதால் பாராட்டி நல்ல முயற்சி என்றேன்.
//காலைகளும்,வேலையின் அயற்சிகளாய் மாலைகளும் என்றென்றும் தொடரும்// இவை எல்லாருக்கும் உள்ள ஒரு பொதுவான கருத்து. உங்கள் கவிதையைப் படிப்பதில் எனக்கு இக்கருத்தையே அதிகமாகப் பிரதிபலிப்பதாய்த் தோன்றியது.

Anonymous said...

17 Sep 08, 02:43
Anbu Hema..Suhama? Punnagai kavidhai and Thodarum kavidhai arumaiyaga ullathu...Ungalai Kadavul aasirvadhithu ullar enpadhil thuliyum sandhegamillai..ENdrum nalamai vaazha vaazhthuhiren.Madhu.

ஹேமா said...

சேவியர் அண்ணா உங்கள் வார்த்தைகள் என்னைத் திருத்திக்கொள்ள உதவும்.
நன்றி.

ஹேமா said...

நன்றி மது,உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் தரும் உற்சாகத்திற்கும் என் அன்பு நன்றி மது.என்றும் என்னோடு இணைந்திருங்கள்.

Post a Comment