*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 08, 2008

புன்னகை...

baby,  Image Hosting
புன்னகை மறந்த
என் தேசமாய்
என் புன்னைகை
தேடியபடி நான்.
சுவரில் தொங்கிய
குழந்தைச் சித்திரம்
சிரித்தது தினமும்
பார்த்து என்னை.
கேலியாய் கூட இருக்கலாம்.

எண்ணிய நானும்
எட்டிப் பார்த்தேன்.
யன்னலினூடே
முட்டி ஆடிய
பூக்களைக் கேட்டேன்.
நித்தமும் புன்னகைக்கும்
இரகசியம்தான் என்ன?
விசாரிப்பில் இறங்கினேன்.
மாலை வர வாடினாலும்
இருக்கும் வரை புன்னகையோடு
வாழ இறைவன் தந்த வரமாய்
புன்னகை என்றன.

இறங்கி நடந்தேன் தெருவோரம்.
"மியா"என்றழைத்து
என் நடை நிறுத்திய பூனைக்குட்டி
நட்போடு பார்வையால்
புன்னகைத்தே போனது.

உழன்று புரண்டு படுத்தேன்.
ஏன் தொலைத்தேன்
என் புன்னகை மட்டும்.
மனதில் கலவரம்.
இருண்ட மேகமாய் என் முகம்.
சிரிக்கத் தெரிந்த
மர்மம் அறிந்தவன்
மனிதன்தானே!
நான் ஏன்???

சுவரில் தொங்கிய குழந்தை
"குப்"எனச் சிரித்து
இன்பமும் துன்பமும்
எம்மைச் சமைக்காமல்
நாமே அவற்றைச்
சமைத்து விட்டால்...
சந்தோஷம் குடில் கட்ட
புன்னகை தானாய் புகுந்துவிடும்.

புத்தகங்கள் படித்தென்ன லாபம்
கட்டுக் கட்டாய்.
புன்னகைக்க மறக்கிறாய் எப்போதும்.
மனதை இலேசாக்கு
மந்திரமாய் கொஞ்சம் பற.
பற்றிக்கொள் என் கரத்தையும்.
கற்றுத் தருவேன்
வாய் விட்டு
மனம் நிறைந்து சிரிக்கலாம்.

அறைந்தது முகத்தில்
ஆணியாய் ஏதோ ஒன்று
இரத்தம் வராமல்.
மெளனமாய் நன்றியோடு நான்
மறக்காத புன்னகையோடு !!!

ஹேமா(சுவிஸ்)

19 comments:

தமிழன் said...

அட உங்களுக்கு வார்தைகள் அருவியாய் கொட்டுகிறது, நிரந்தர புன்னகை விரைவில் கிட்ட வாழ்த்துக்கள் ஹேமா.

http://urupudaathathu.blogspot.com/ said...

உங்களின் கவிதைகளை படிக்கும் போது தங்களின் சோகம் முழுமையாக தாக்குகிறது..

http://urupudaathathu.blogspot.com/ said...

///புன்னகை மறந்த
என் தேசமாய்
என் புன்னைகை
தேடியபடி நான்./////

நிச்சயம் ஒரு நாள், அந்த புன்னகை உங்கள் வசப்படும் நண்பரே ..
கவலை வேண்டாம்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///சுவரில் தொங்கிய
குழந்தைச் சித்திரம்
சிரித்தது தினமும்
பார்த்து என்னை.
கேலியாய் கூட இருக்கலாம்.///

உங்களின் சோகத்தை அந்த சுவற்றில் இருக்கும் சித்திரத்தில் கூட பார்கிறீர்களே..??

http://urupudaathathu.blogspot.com/ said...

///மாலை வர வாடினாலும்
இருக்கும் வரை புன்னகையோடு
வாழ இறைவன் தந்த வரமாய்
புன்னகை என்றன.///

வாழ்கையின் நிதர்சனத்தை சுருக்கமாக சொல்லி விட்டீர்களே...
ஆம்..
இது தான் வாழ்க்கை ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//அறைந்தது முகத்தில்
ஆணியாய் ஏதோ ஒன்று
இரத்தம் வராமல்.
மெளனமாய் நன்றியோடு நான்
மறக்காத புன்னகையோடு !!!///

நானும் என்னுடைய புன்னகையும் கூட... ( என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் உங்களின் புன்னகையுடன் )

வாழ்த்துக்கள் ஹேமா...

அருமையான நடை...

http://urupudaathathu.blogspot.com/ said...

நண்பரே,
பதிவர் குரங்கின் மூலம் அறிந்தேன்..

என்னுடைய பதிவுகளில் பின்னூட்டம் போட முடியவில்லை என்று கூறியுள்ளீர்கள்..

எப்படி என்று தெரியவில்லை..

பலரும் என்னுடைய பதிவுக்கு வந்து சென்று கொண்டு தான் உள்ளார்கள்...

வேண்டுமானால், இந்த லிங்கை உபயோகித்து பாருங்குளேன்..

http://urupudaathathu.blogspot.com/2008/09/blog-post.html#respond

நண்பர் சுபாஷ் அவர்களுக்கு இன்று கூட நான் பின்னூட்டம் இட்டேன்..

தெரியவில்லை என்ன கோளாறு என்று ....

என்னுடைய பதிவுகளில் , கடைசியில்,அடியில் கருதுரைஇடுக என்று இருக்கும்.. அங்கு நீங்கள் உங்களின் கருத்துக்களை அளிக்கலாம் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//இன்பமும் துன்பமும்
எம்மைச் சமைக்காமல்
நாமே அவற்றைச்
சமைத்து விட்டால்...
சந்தோஷம் குடில் கட்ட
புன்னகை தானாய் புகுந்துவிடும்.///

சரியாக சொன்னீர்கள்

ஹேமா said...

அட வந்தீங்களா திலீபன்.அன்பான தூரத்துச் சகோதரனாய் நீங்கள்.உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.

ஹேமா said...

வாங்க உருப்படாத(வன்)து.உங்கள் தளம் வந்து பின்னூட்டம் போட்டு அலுத்துவிட்டேன்.உருப்படியான தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறிங்க.
இதையாவது உருப்படியா செய்திங்களே என்று சொல்ல வந்தேன்.முடியவே மாட்டேன் என்கிறது.என்னவென்று தெரியவில்லை.சுபாஷ் அவர்களின் பின்னூட்டமும் அப்படியே.

"புன்னகை"கவிதையை உணர்வோடு ரசித்திருக்கிறீர்கள்.நான் எனக்காக எழுதிய வரிகள் அவை.நன்றி உருப்படாத(வன்)து.

Unknown said...

சோகத்தில் செதுக்கிய கவிதைக்குப் பாராட்டுக்கள் !

ஹேமா said...

இரவு வந்தனம் களத்துமேடு.இன்னும் நித்திரைக்குப் போகவில்லையா!
சுடச் சுடச் செய்திகளுக்காகக் காத்திருங்கிங்க போல!இன்று "மாவோ"வின் நினைவு நாளும் கூட.

சுகமாகத்தான் கவிதை எழுத என்று தொடங்கி சோகமாகவே முடிகிறது.
கருத்துக்கு இந்த இரவிலும் நன்றி.

Anonymous said...

நிரந்தர புன்னகை விரைவில் கிட்ட வாழ்த்துக்கள் ஹேமா.

Anonymous said...

இந்த குழந்தை படம் நிச்சயம் மனதில் மகிழ்ச்சியை தரும். இந்த படத்தை காப்பி செய்து கொள்கிறேன்.

ஹேமா said...

வணக்கம் கடையம் ஆனந்த்.என் வாழ்வில் சோகத்தின் நிழல்தான் அதிகமாக இருக்கிறது,அதற்காக சந்தோஷம் இல்லாமல் இல்லை.
உங்கள் வாழ்த்துக்களோடு சந்தோஷம் இன்னும் நிறைந்துவிடும்.

நல்ல அழகான குழந்தைப் படம்தானே.
நான் 2 மணித்தியாலங்கள் இணையத்தில் தேடி ரசித்து எடுத்தேன்.உங்களுக்கும் பிடிச்சிருக்கா!

Unknown said...

//இன்று "மாவோ"வின் நினைவு நாளும் கூட//

தகவலுக்கு நன்றி ஹேமா,

மார்க்ஸியவாதி மா ஓ சேதுங் 1893.12.26 - 1976.09.09
சோசலிஸப் புரட்சியாளன் சே குவேரா 1928.06.14 - 1967.10.09

Anonymous said...

ஹேமா said...
நல்ல அழகான குழந்தைப் படம்தானே.
நான் 2 மணித்தியாலங்கள் இணையத்தில் தேடி ரசித்து எடுத்தேன்.உங்களுக்கும் பிடிச்சிருக்கா!
//
ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கு குழந்தைகள் என்றhல் ரொம்ப பிடிக்கும். எங்க அக்கா குழந்தையிடம் அடிக்கடி விளையாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று.

Vishnu... said...

நல்ல கவிதை ....

வாழ்த்துக்கள் ....

Vishnu... said...

புன்னைகையின் தேடல்கள் ...
வித்யாசமாக ..அருமை ...

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு ..

Post a Comment